ஸ்ரீ வீரமித்ரோதயம்-ஸ்ரீ வாராணஸீ க்ஷேத்ரமாஹாத்ம்யம்


by Bramhasri Puliyur Raghava Dheekshitar

ஸ்ரீ மித்ரமிஸ்ரர் தனது வீரமித்ரோதயம் எனும் தர்மஸாஸ்த்ர நிபந்தநூலின்,ஏழாம் பாகமான தீர்த்தப்ரகாஷத்தில்,ஸ்ரீ வாராணஸீ க்ஷேத்ரத்தின் பெருமைகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். அவர் சைவபுராணங்களிலிருந்தும்,உபபுராணங்களிலிருந்தும் ஏராளமான மேற்கோள்கள் காட்டுகிறார்.

முதலில் அவர் வாராணஸீ க்ஷேத்ரம் பற்றி இவ்வாறு கூறுகிறார்,

“லோகஸ்ய ஷோகவஸதே: கலிகாலரூடம் கூடம் ப்ரகாஷமபி சாகமலம் நிரோத்தும்|
முக்த்வா ஷிவைகஸதனம் ஷிவராஜதானீம் ஜானீமஹே ஜகதி நாபரமஸ்தி வஸ்து||

தீரம் ப்ரவீரம் பதிதம் ப்ரவீணம் ஷ்வானம் யுவானம் தருபி: ஸமானம்|
ராஷீக்ருதா காபி க்ருபேவ நூனம் காஷீ மஹாஷீவிஷபூஷணஸ்ய||”

அடுத்ததாக ஸ்ரீ கூர்மமஹாபுராணத்திலிருந்து வாராணஸீ க்ஷேத்ரமாஹாத்ம்யம் கூறும் 31ஆம் அத்யாயத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“கூர்மபுராணே,
தேவ்யுவாச|

தேவதேவ மஹாதேவ பக்தானாமார்த்திநாஷன|
கதம் த்வாம் புருஷோ தேவமசிராதேவ பஷ்யதி||
ஸாங்க்யம் யோகஸ்ததா த்யானம் கர்மயோகோஅத வைதிக:|
ஆயாஸபஹுலா லோகே யானி சான்யானி ஷங்கர||
யேன விப்ரான்தசித்தானாம் யோகினாம் கர்மினாமபி|
த்ருஷ்யோ ஹி பகவன் ஸூக்ஷ்ம: ஸர்வேஷாமத தேஹினாம்||
ஏதத்குஹ்யதமம் ஜ்ஞானம் கூடப்ரஹ்மாதிஸேவிதம்|
ஹிதாய ஸர்வபக்தானாம் ப்ரூஹி காமாங்கநாஷன||”

ஸ்ரீ பார்வதீ தேவி கேட்கிறார்,
ஹே தேவதேவ! ஹே மஹாதேவ! பக்தர்களின் துயரங்களைப் போக்குபவரே!பகவானான தங்களை குறுகிய காலத்தில் மனிதர்கள் காண்பதற்கான வழி என்ன.

ஹே ஷங்கர!ஸாங்க்யம்,யோகம்,த்யானம்,கர்மயோகம்,வேதங்கள் கூறியுள்ள வழிமுறைகள் முதலானவை உலகில் கடைப்பிடிக்க மிகவும் கடினமானவையாக உள்ளன.

காமனை அழித்தவரே!பக்தர்கள் நன்மையடையும் பொருட்டு தாம் ப்ரஹ்மா முதலானவர்களால் கடைப்பிடிக்கப்படும் அந்த பரமரஹஸ்யமான ஞானத்தை உபதேசித்தருளுங்கள்.அதனால் ஸ்தூலமும்,ஸூக்ஷ்மமுமாக இருக்கும் தங்களை அறிந்து யோகிகள் மட்டுமின்றி சாதாரண பாமரர்களும் நன்மையடைவார்கள்.

என்று தொடங்கும் கூர்மமஹாபுராணத்தின் முழு அத்யாயத்தையும் மேற்கோள் காட்டுகிறார் மித்ர மிஸ்ரர்.

அடுத்ததாக ஸ்ரீ மத்ஸ்யபுராணத்திலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுகின்றன.ஸ்ரீ க்ருத்யகல்பதருவில் பட்டலக்ஷ்மீதரர் மேற்கோள் காட்டிய ஸ்லோகங்கள் இங்கும் மேற்கோள் காட்டப்படுகின்றன.

“கல்பதரௌ மத்ஸ்யபுராணே,
ஈஷ்வர உவாச,

வாராணஸீதி புவனத்ரயஸாரபூதா ரம்யா ஸதா மம புரீ கிரிராஜபுத்ரி|
அத்ராகதா விவிததுஷ்க்ருதிகாரிணோஅபி பாபக்ஷயாத்விரஜஸ: ப்ரதிபான்தி மர்த்யா:||

ஏவம் ஸ்ம்ருதம் ப்ரியதமம் மம தேவி நித்யம் க்ஷேத்ரம் விசித்ரதருகுல்மலதாஸுபுஷ்பம்|
அஸ்மின்ம்ருதாஸ்தனுப்ரத: பதமாப்னுவன்தி மோக்ஷாக்யமேவ மனஸாபி ந ஸம்ஷயோஅத்ர||

“இந்த வாராணஸீயானது மூவுலகங்களின் ஸாரமாகத் திகழ்வது ஆகும். ஹே தேவீ!எனது இந்த நகரமானது அழகானதும்,மனதைக் கொள்ளைகொள்வதும் ஆகும்.பலவிதமான பாபங்களைச் செய்தவர்கள் இங்கு வந்து அவர்களின் பாபங்கள் தொலைக்கின்றனர்.ஹே தேவீ!இந்த நகரமானது எனக்கு எப்போதும் ப்ரியமானதாகும்.இது பலவிதமான செடிகள்,கொடிகள்,பூக்கள் நிறைந்ததாக அழகாக விளங்குவது.இங்கு மரணமடையும் மக்கள் பிறப்பிறப்பு எனும் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுதலை அடைந்தவர்களாக மோக்ஷத்தை அடைகின்றனர்.இதில் எந்த சந்தேகமும் இல்லை.”

“ததா,
இதம் குஹ்யதமம் க்ஷேத்ரம் ஸதா வாராணஸீ மம|
ஸர்வேஷாமேவ ஜந்தூனாம் ஹேதுர்மோக்ஷஸ்ய ஸர்வதா||
அஸ்மின் ஸித்தா: ஸதா தேவி மதீயவ்ரதமாஸ்ரிதா:|
நானாலிங்கதரா நித்யம் மம லோகாபிகாங்க்ஷிண:||
அப்யஸ்யன்தி பரம் யோகம் முக்தாத்மானோ ஜிதேந்த்ரியா:|”

“இந்த வாராணஸீ க்ஷேத்ரம் எனது பரமரஹஸ்யம் நிறைந்த நகரமாகும். இதுவே உயிர்களின் மோக்ஷத்துக்கு காரணமாக விளங்குவது.ஹே தேவீ!இங்கு பல்வேறு வ்ரதங்கள் கொண்ட பல ஸித்தர்களும்,லிங்கம் தரித்த பல முனிவர்களும் எனது பதமான மோக்ஷத்தை அடையவேண்டி வஸிக்கின்றனர்.பெரும் மஹாத்மாக்களான யோகிகள் தங்களது புலன்களை அடக்கியவர்களாகத் தவம் செய்கின்றனர்.”

“ததா,
மன்மனா மம பக்தஸ்ச மயி ஸர்வார்பிதக்ரிய:|
யதா மோக்ஷமிஹாப்னோதி அன்யத்ர ந ததா க்கசித்||”

“என்னையே எப்போதும் த்யானிப்பவர்களாகவும்,தங்களது செயல்கள் அனைத்தயும் எனக்கே அர்ப்பணம் செய்பவர்களாகவும் இருக்கும் எனது பக்தர்கள்,வேறு எங்கும் அடைய முடியாத மோக்ஷத்தை அங்கு அடைகின்றனர்.

“ததா,
விமுக்தம் ந மயா யஸ்மான்மோக்ஷ்யதே வா கதாசன|
மஹத்க்ஷேத்ரமிதம் தஸ்மாதவிமுக்தமிதி ஸ்ம்ருதம்||
நைமிஷே ச குருக்ஷேத்ரே கங்காத்வாரே ச புஷ்கரே|
ஸ்நானாத்ஸம்ஸேவனாத்வாபி ந மோக்ஷ: ப்ராப்யதே யத:||
இஹ ஸம்ப்ராப்யதே யேன தத ஏவ விஷிஷ்யதே|
ப்ரயாகே வா பவேன்மோக்ஷோ மஹாகாலேஅத வா ப்ரியே||
அமரகண்டகே தத்வத்ததா காயாவரோஹணே|
காலஞ்ஜரே மஹாபாக இஹ வா மத்பரிக்ரஹாத்||
ப்ரயாகாதபி தீர்த்தாக்ரயாதிதமேவ மஹத்ஸ்ம்ருதம்|”

“நான் எப்போதும் இந்த காஷீ நகரைவிட்டு நீங்குவதில்லை,எப்போதும் நீங்கவும் மாட்டேன்.எனவே இந்த உயர்ந்த க்ஷேத்ரமானது அவிமுக்தம் என்று அழைக்கப்படுகிறது.கங்காத்வாரம்,குருக்ஷேத்ரம்,ப்ரயாகை,நைமிஷாரண்யம் முதலான இடங்களில் புனித நீராடுவதோடு,தங்கள் ஆத்மாவையும் அங்கு அர்ப்பணிப்பவர்கள் என்னை அடைவதில்லை.ஆனால் இங்கு அவர்கள் என்னை அடைகிறார்கள். எனவே இதுவே அனைத்து க்ஷேத்ரங்களிலும் சிறந்தது ஆகும்.இதில் எந்த சந்தேகமும் இல்லை.ப்ரயாகையிலும்,மஹாகாலவனத்திலும்,அமரகண்டகத்திலும்,காயாவரோஹணத்திலும்,காலஞ்ஜரத்திலும் மக்கள் எனது அனுக்ரஹத்தால் மோக்ஷமடைகின்றனர்.வாராணஸீ போல ப்ரயாகையும் ஒரு சிறந்த க்ஷேத்ரம் ஆகும்.”Categories: Bookshelf

2 replies

  1. Jaya Jaya Gange! Very informative and divine. Hara Hara Shankara,Jaya Jaya Shankara!

  2. Thank you for sharing. An English / Sanskrit translation would be appreciated 🙂

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: