74. Sri Sankara Charitham by Maha Periyava – Ajapa-Hamsa Dance

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What is Ajapa and Hamsa dance? How is this performed by Thiruvarur Thiagaraja and Maha Vishnu? Sri Periyava’s luminous explanation continues.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another ace drawing and audio. Rama Rama

 

அஜபா-ஹம்ஸ நடனம்

தாண்டவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவ நடனத்திலேயே பல விதங்கள் உண்டு. சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வ தாண்டவம், இப்படி இது தவிர சோழ ஸீமையிலேயே ஏழு த்யாகராஜாக்கள் ஏழுவிதமான தாண்டவங்களைச் செய்கிறார்கள். ஸப்தவிடங்க க்ஷேத்ரம் என்று அந்த ஏழு க்ஷேத்ரங்களுக்குப் பேர். அவற்றில் ப்ரதானமானது திருவாரூர். அங்கேயுள்ளவர்தான் ஏழு பேரிலும் மூல த்யாகராஜா. அவர் ஆடும் நடனத்திற்கு ஹம்ஸ நடனம் என்று பெயர். அஜபா நடனம் என்றும் அதற்கு இன்னொரு பெயர்.

ஜபமாக இல்லாதது ‘அஜபா’. மற்ற எல்லா மந்த்ரங்களையும் நாம் புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு ஜபிக்கிறோம். அந்த மந்த்ர சப்தங்களின் அதிர்வினால் நாடியில் ஏற்படும் சலனங்களிலிருந்து அபூர்வமான தர்சனம், சக்தி, ஸித்தி, மனத்தெளிவு ஆகியன உண்டாகின்றன. இவை பூர்ணமாக ஏற்படுவதற்கு அந்த மந்த்ரங்களை ப்ரணாயாம பூர்வமாக, அதாவது தீர்க்கமாக மூச்சை இழுத்து, அடக்கி, வெளியிடுவதோடு சேர்த்துப் பண்ண வேண்டும். இப்படி மந்த்ரம் என்று நாம் உத்தேசித்து புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு பண்ணுவதென்றும், மூச்சையும் அவ்வாறே நாமாக உத்தேசித்து அளவாக ஒழுங்குபடுத்தி விடுவதென்றும் இல்லாமல், சித்தத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு, ச்வாஸமானது தானாக எப்படி அமைகிறது என்று, விலகியிருந்து, கவனித்துக் கொண்டிருந்தால் உள்-வெளி மூச்சுக்கள் ரொம்ப ரொம்ப தீர்க்கமாகிக் கொண்டே போகும்; மூச்சு அடங்கியிருக்கிற காலமும் ஜாஸ்தியாய்க் கொண்டே போகும். ஆரம்பத்தில் ஏதோ நமக்குத் தெரிந்த மட்டும் சித்தத்தைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக் கொண்டு பண்ணினாலும் போகப் போகத் தானாக நிஜமான பரம சாந்தம் உண்டாகும். ப்ராணாயாமம் என்று அடக்கி, கிடக்கிச் செய்யும்போது இருக்கிற ‘ஸ்ட்ரெயின்’ கொஞ்சங்கூட இல்லாமல் அநாயாஸமாக இப்படி ஏற்பட்டுப் பரம சாந்தமாக மூச்சும், எண்ணமும் புறப்படுகிற ஆத்ம ஸ்தானத்தில் கொண்டு போய் சேர்க்கும். இதிலே ஒரு மந்த்ர ஜபமுமில்லையல்லவா? அதனால் ‘அஜபா’ என்று பெயர்.

ஔபசாரிகமாக (உபசாரமாக) இதையும் ஒரு ஜபம் என்று சொல்வதுண்டு. அதுதான் “ஹம்ஸ” மந்த்ர ஜபம் என்பது. மூச்சு உச்வாஸ நிச்வாஸமாக (உள்ளுக்கு இழுப்பதும் வெளியில் விடுவதும்) உள்ளபோது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும். அதனால்தான் “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:” என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்து கொள்ளலாமல்லவா? அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்றும் சேர்த்துச் சொன்னால்தான் முழுசாகச் சொன்னதாகும். “அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்றாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்த்ரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்த்ரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்த்ரத்தையும் சொல்லிக் கொண்டே போனால்கூட, அதாவது ஜபித்துக் கொண்டே போனால்கூட, அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த ஸமாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், அந்த natural state-ல் சேர இதுவும் induce பண்ணும் (செயற்கையாகத் தூண்டிவிடும்). ஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த ஸாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; ச்வாஸம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று ஔபசாரிகமாகச் சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப் போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்யப்படுத்திவிடும்.

“யோக” நித்ரை என்று மஹாவிஷ்ணு குண்டலினிப் பாம்பை வெளியில் ஆதிசேஷ பர்யங்கமாகக் காட்டிக் கொண்டு தூங்குவதுபோல த்யானிக்கும் போது இந்த அஜபா ஸாதனைதான் பண்ணிப் பரமாத்வான பரமேச்வர ஸ்வரூபத்தில் ஐக்யப்பட்டிருக்கிறார். அப்போது அவரது ப்ராண ஸஞ்சாரத்துக்குக்கேற்றபடி பரமேச்வரன் ஆடுவதுதான் த்யாகராஜாவின் அஜபா நடனம், அல்லது ஹம்ஸ நடனம்.

இதை ஒரு பிம்பமாக விஷ்ணுவின் ஹ்ருதயத்தின் மேலே ஈச்வரன் நாட்டியம் பண்ணுவது போலக் காட்டினால், ஜனங்களில் பெரும்பாலோராகவுள்ள விஷயம் தெரியாதவர்கள் தப்பாக நினைக்கும்படியாகும். முயலகனின் மீது நடராஜா ஆடுவது, பரமசிவனின் மார் மேலேயே காளி ஆடுவது ஆகியவை எப்படி சத்ரு ஸம்ஹாரமாகத் தெரிகின்றனவோ அப்படியே இதையும் நினைத்துவிடக்கூடும்! பேதமேயில்லை என்று ஒன்றாகப் போய்விடுகிற பரம மித்ரர்களான சிவ – விஷ்ணுக்களைப் பரம சத்ருக்களாக நினைப்பதாகிவிடும்!

இதனால்தான் திருவாரூர் பிம்பத்தில் எல்லாவற்றையும் நன்றாக மூடி, தியாகராஜாவின் முகத்தை மாத்திரம் காட்டுவது.

_______________________________________________________________________________________________________

Ajapa-Hamsa Dance

The dance of Siva, commonly termed as ‘Tandavam’, has several forms.  Apart from Ananda Tandavam [आनन्द ताण्डव] in Chidambaram and Urdhva Tandavam [ऊर्ध्व ताण्डव] in Tiruvaalangaadu, seven Tyagarajas [त्यागराजा] perform seven types of Tandavam in the Chozha region.  These seven places are called, ‘Saptavidanga Kshetrams’ [सप्तविडंग क्षेत्राः].  The most important among them is Tiruvarur. The one who is there – Tyagaraja – is the main of all seven.  The dance He is doing is called, ‘Hamsa [हंस] dance’.  It also has another name, ‘Ajapa dance’ [अजपा].

What is not Japa, is Ajapa.  We chant mantras with devotion, using their individual letters.  On account of the vibrations caused to the nerves by the sound of these mantras, rare visions, strength, realisation, clarity of mind, etc. develop.  In order that these develop fully, the mantras have to be recited in the form of Pranayama, that is, along with deep inhalation, holding of breath and exhalation.  Instead of chanting them with devotion because they are mantras and instead of intentionally regulating the breath, if we keep our mind peaceful, detached and observe how the breathing happens on its own, the inhalation and exhalation of breath will get deeper and deeper.  The duration for which the breath is under control will also increase. In the beginning we may make efforts to keep the mind peaceful; over a period of time, peace of mind will occur on its own.  It will, without even the little strain that is experienced when we inhale and exhale in the name of doing ‘Pranayama’, reach us to the state of the ‘Innermost Self’, in a very peaceful manner, from where both the thought and breath emanate.  In this state, there is no need to chant mantras. Hence, it is called, ‘Ajapa’.

Respectfully, this too is considered to be a Japa. It is the ‘Hamsa’ mantra Japa.  When the breath is inhaled and exhaled, the vibrations will form the sounds of “ham” and “ss”.  That is why it is called “Hamsa” mantra.  Moreover, “aham sa:” [अहं सः] means, “I am Him”; that is – ‘I, the Jeevatma, am also the Eswara – the Paramatma’. If it is stopped with only saying, “I am Him”, would it is possible to misinterpret it to mean that ‘Jeevatma only is Eswara’.  It would amount to be completely stated if and only when it is also stated “He (Paramatma) is me”.  “He is me”, is “sa: aham” [सः अहम्]. Due to the combination of letters [sandhi – सन्धि], the word becomes “soham” [सोहम्].

Hamsa mantra is when “Hamsa:” is said along with “soham”.  Even if we consciously keep chanting this Hamsa mantra just like other mantras, they will induce us to reach the natural state, as these vibrations are conducive for the movement of breath, capable of taking one to that peaceful state.  When this exercise takes us to the state where Jeevatma becomes one with Paramatma, this Japa will cease and become ‘Ajapa’.  Breathing will happen automatically along with chanting of the Hamsa mantra.  The ‘sa’ and ‘ha’, in ‘soham’, will get blurred and shrink, and only the Pranava, ‘Om’, will remain.  That will enable one reach the highest state and merge with the atma – the exalted state of tureeyam [तुरीयम्].

When Mahavishnu is meditating in the ‘Yoga Nidra’ [योग निद्रा], appearing outwardly to be resting on the bed of Adisesha who is the Kundalini snake, He is merged with Paramatma, in the Parameswara form, and is actually engrossed in this Ajapa exercise.  The movement of Parameswara at that moment, which is in sync with the movement of His (Vishnu’s) breathing, is Tyagaraja’s Ajapa dance or Hamsa dance.

If this – Siva dancing on the heart of Vishnu – is depicted as a deity, the ignorant, who form the majority of people, would think erroneously.  It could be considered to be similar to Nataraja dancing on Muyalagan, or Kali dancing on the chest of Paramasiva, etc., which are perceived as annihilation of the enemy!  Siva and Vishnu, who go as one without any differences, could be thought of as worst enemies!

This is why, everything is covered fully and only the face is made visible in the deity of Tyagaraja, in Tiruvarur.

______________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. Where do i get the full image of above Vishnu seeing shiva’s ajapa tandavam .? Above pic is magnificient but i could see only half portion of image,
    Please send me full image

  2. பெரியவாவின் அஜபா நடன விளக்கத்திற்கு சௌம்யாவின் தூரிகை கிஞ்சித்தும் பிறழாமல் தத்ரூபமாக உயிர் அருளியிருக்கிறது. 👌👏👏👏🙏🙏🙏

  3. Awesome work!👏👏👏🙏🙏🙏

Leave a Reply to Uma SomayajiluCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading