71.2 Sri Sankara Charitham by Maha Periyava – Suka Brahmam

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava continues to explain about the prominence of Suka Brahma Maharishi and the highest level of detachment he had even when compared to the great rishis like Vyasaachaaryal.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for a divine drawing & audio. Rama Rama


சுக ப்ரஹ்மம்

‘யம்’ என்றதற்கப்புறம் ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று இருக்கிறது. அப்படி என்றால் இருந்த இடத்திலில்லாமல் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டே இருப்பவர் – வீடு, வாசல் என்பதாக ஸ்வக்ருஹம் என்று ஒன்று இல்லாமல் அதைவிட்டு ஓடுபவர் என்று அர்த்தம். அதனால்தான் ஸந்நியாஸத்தில் உசந்த வகையை ‘ப்ரவ்ரஜ்யை’ என்றும் அப்படிப்பட்ட சந்நியாசியை  ‘பரிவ்ராஜகர்’ என்றும் சொல்வது. இப்படி சுகர் வீட்டை, வாசலைவிட்டு ஓடுகிறார் என்று ச்லோகம் சொல்கிறது. அப்புறம் அவருக்கு ‘அநுபேதம்’, ‘அபேத க்ருத்யம்’ என்று இரண்டு அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘அநுபேதம்’ என்றால் உபநயனம் ஆகாதவர். ‘அபேத க்ருத்யம்’ என்றால் சாஸ்த்ரோக்த கர்மா மற்ற கார்யங்கள் ஆகிய எல்லாவற்றிலிருந்து விடுபட்டவர். பூணூல் போடுவதற்கு முந்தியே ஸகல கர்மானுஷ்டானத்தையும் கடந்த ஞானியாகிவிட்டவர்.

மற்றவர்கள் யாரையாவது பற்றி இப்படிச் சொல்லியிருந்தால் ரொம்பவும் உயர்வாக நினைப்போம். ஆனால் சுகர்’ விஷயத்திலோ இப்படிச் சொல்வது சித்தே முந்தி (சிறிது முன்பு) நாம் அவரை தெரிந்து கொண்ட உயர்ந்த நிலையிலிருந்து இறக்கிவிட்டதாகவே தோன்றுகிறது! ‘ குரு ரத்னமாலிகா’வில் என்ன பார்த்தோம்? தாயார் கர்ப்பத்திலிருந்தே நழுவும்போதே, அதாவது குழந்தையின் சரீரம் பூமியில் படுவதற்கு முன்பே அது பூலோக இன்ப துன்பங்கள் எதனாலும் கலக்கப்படாத ஞானத்தைப் பெற்றிருந்தது என்று பார்த்தோம். அப்படியிருந்த குழந்தை சில வருஷங்கள் வளர்ந்தபிறகுதான் ‘அநுபேதம்’ – பூணூல் போடப்படாத பாலன் – என்று குறிப்பிடப்படும். பச்சைக் குழந்தைக்கும்கூடப் பூணூல் போடாததால் ‘அநுபேதம்’தான். ஆனாலும் குறிப்பிட்டு அப்படிச் சொன்னால், ‘கிட்டத்தட்ட பூணூல் போடுகிற வயஸு; ஆனாலும் போடவில்லை’ என்றே அர்த்தம் கொடுக்கும். ‘இன்னும் ரிடையர் ஆகாதவர்’ என்று ஒருத்தரைப் பற்றிச் சொல்கிறோம். அப்போது அவர் கிட்டத்தட்ட ரிடையர் ஆகிய வயஸுக்காரர் என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்? ஸமீபத்தில்தான் ஸர்வீஸில் சேர்ந்தவர், முப்பது நாற்பது வயஸானவர் ஆகியோரும் ரிடையராகதவர்கள்தான் என்றாலும் அப்படிச் சொல்வதில்லையல்லவா? ‘உபநயன ஸம்ஸ்காரமாகாதவர்’ என்றால் கிட்டத்தட்ட அந்த வயஸுக் கட்டத்திலிருப்பவர் என்றே அர்த்தம். அந்த நாளில் கர்ப்பத்தைக் கூட்டி எட்டு வயஸிலேயே ப்ராம்மணப் பிள்ளைகளுக்குப் பூணூல் போட்டிருப்பார்கள். ரொம்பவும் மேதா விலாஸம் தெரிகிற குழந்தையாயிருந்தால் ஐந்து வயஸியேகூடப் போட்டுவிடலாம் என்று சாஸ்த்ரம். வ்யாஸாசார்யாள் அப்படித்தான் போட உத்தேசித்திருப்பாரென்றால்கூட அநுபேதர் எனப்படும் சுகருக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயஸிருக்க வேண்டும். பிறக்கும் பொழுதே ஞானியாயிருந்தவரை, ஐந்து வருஷம் தள்ளியே ஞானி என்று குறிப்பிட்டால் அது அவரை இறக்கிச் சொல்வது போலத்தானே?

அப்படியில்லை என்று காட்டத்தான் ‘அநுபேதம்’ என்று சொல்வதற்கு முன்னாடியே ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று சொல்லியிருக்கிறது. வ்யாஸாசார்யாளின் ஆச்ரமத்தையும், அது இருந்த அரண்யத்தையும் விட்டுவிட்டு சுகர் ஓடியதை ‘ப்ரவ்ரஜந்தம்’ என்ற வார்த்தை தெரிவிக்கிறது. பின்னால் வருவதிலிருந்து அவருக்கு ஸரியாக ஓட முடியாமல் வ்யாஸாசார்யாள், “புத்ரா, புத்ரா!” என்று கதறிக் கொண்டு பின்தங்கிப் போனதாகவும் தெரிகிறது. ஒரு குழந்தை இந்த அளவுக்குக் கைகால் வளர்ந்து ஓடும் சக்தி பெறுவதற்கு நாலைந்து வயஸாவது ஆக வேண்டாமா? கர்ப்பத்திலிருந்து விழும்போது அப்படி ஓடமுடியுமா? அதனால்தான், பிறந்ததிலிருந்தே பரிவ்ராஜகராக ஓடுகிற எண்ணம் கொண்ட ஞானியாகத்தான் சுகர் இருந்தாரென்றாலும், அந்த எண்ணத்தைக் கார்யமாக்கி அவர் புறப்பட்ட ஸமயத்தைக் குறிப்பிடும்போது அவரை “உபநயனமாகாதவர்” என்று சொல்லியிருக்கிறது.

எல்லாம் மாயை, இதையே இன்னொரு தினுஸில் சொன்னால், எல்லாம் ப்ரம்மம் என்று தெரிந்து கொண்டுள்ள ஞானி எந்த இடத்தையும் விட்டு எங்கேயும் போக வேண்டாம்தான். ஆனாலும் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே வஸிப்பவர்கள் அந்த இடத்துக்கே அவர் சேர்ந்தவர், அந்த இடம் அவருக்குச் சேர்ந்தது, அவர் தங்களைச் சேர்ந்தவர், தாங்கள் அவரைச் சேர்ந்தவர்கள் என்று தப்பான அட்டாச்மென்ட்களைக் கல்பித்துக் கொள்வார்கள். அப்படி கூடாது என்று தான் ஞானி பரிவ்ராஜகனாத் திரிவது.

கால், கை முளைக்கும்வரை சுகர் பொறுத்துப் பார்த்தார். அப்புறம், புறப்பட்டுவிட்டார். தகப்பனாரான வ்யாஸாசார்யாள் மஹா பெரியவர்தான் என்றாலும் இன்னும் பிள்ளையைப் போல ப்ராஹ்மீ ஸ்திதியிலேயே ஆணியறைந்த மாதிரி நிற்கவில்லை. புத்திர வாத்ஸல்யம் என்ற மாயை அவரைத் தொட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை வளரவிடப்படாது என்று புத்ரர் நினைத்தார். ‘உபநயனம் பண்ணுவதற்கு அனுமதித்து விட்டோமோ, அப்புறம் (ப்ரஹ்மசர்ய) ஆச்ரம தர்மப்படி நடக்கத்தான் வேண்டிவரும். கர்மாவில் பற்றேயில்லாத நாம் அத்யயனம், ஸமிதாதானம், பிக்ஷாசர்யம் எல்லாம் பண்ணியாக வேண்டிவரும். இப்படி நம்முடைய ஸஹவாஸத்தை நீடிக்கவிட்டால் தகப்பனாரின் பாசமும் ஜாஸ்தியாகிக் கொண்டேதான் வரும். நம்மை எதுவும் கட்டமுடியாவிட்டாலும், அவர் கட்டில் நன்றாக அகப்பட்டுக் கொள்வார். அதனால் இப்போதே வீட்டைவிட்டு ஓடிவிட வேண்டும். தகப்பனார் ரொம்ப துக்கபடத்தான் செய்வார். ஆனால் இன்னம் தள்ளிப் போட்டுக் கொண்டு போகப்போக (அவருக்கு) பந்தமும் வலுவாகி, (நம்மைப் பிரிகிற) துக்கமும் ஜாஸ்தியாகிக் கொண்டுதானே போகும்? அதனால் இப்போதே ஓடிப் போயிடணும்’ என்று ஓட ஆரம்பித்தார்: “யம் ப்ரவ்ரஜந்தமநுபேதமபேதக்ருத்யம்”.

நாம் ஒரு இடத்திற்குப் போகிறோமென்றால் , அங்கே நமக்கு ஏதாவது கார்யம் இருக்க வேண்டும்.

அந்தக் கார்யம் முடிந்து விட்டால் அங்கேயிருந்து புறப்பட்டு விடுவோம். உபந்யாஸம் கேட்பதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். நான் பேசி முடித்தபின் உட்கார்ந்த்திருப்பீர்களா? புறப்பட்டு விடுவீர்கள். ஒரு ப்ரஹ்ம ஞானியைப் புத்ரனாகப் பெற்று லாலனம் (சீராட்டல்) செய்ய வேண்டுமென்ற பாக்கியம் வ்யாஸருக்கு இருந்தது. சுகரை அப்படிப் பெற்று நிறைய லாலனம் பண்ணியாயிற்று. இனிமேலேயும் அவர் அங்கேயே இருந்தால் பாக்யம் போய், பாச பந்தம்தான் உண்டாகும். அதனால் வந்த கார்யம் ஆகிவிட்டதென்று வ்யாஸாச்ரமத்தை விட்டு சுகர் புறப்பட்டுவிட்டார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள், ஸத்துக்கள், ஸாதகர்கள் அவரை தர்சனம் பண்ணிப் பயனடைய வேண்டுமென்று திவ்ய ஸங்கல்பமிருந்தது. அதனால், கால் போன போக்கில் ஸஞ்சாரம் பண்ணக் கிளம்பினார். ‘லோகத்துக்கு தர்சனம் கொடுக்கிற கார்யம் தனக்கிருக்கிறது’ என்று நினைத்துக் கர்த்தாவாக அவர் புறப்படவில்லை! ஒரு எண்ணமுமில்லாமல் தான் புறப்பட்டார். ஆனால் அதிலேயே திவ்ய ஸங்கல்பத்தின் நிறைவேற்றமும் அமைந்தது.

_________________________________________________________________________________________________________
Suka Brahmam

 

After saying ‘Yam’, ‘Pravrajantam’ [प्रव्रजन्तं] is mentioned.  It means that he is the one who is always on the move, without remaining in one place.  It means that he is the one who runs away without having own residence, like, a house, home, etc.  That is why the highest type of renunciation is also referred to as “Pravraajyaa” [प्रव्रज्या] and the Sanyasi who does that is called “Parivraajakar”.  In this way, the verse says that Suka is running away from house, home etc.  Further, he has been given two adjectives, ‘Anupeta’ and ‘Apetakrtya’.  ‘Anupeta’, means the one who has not had Upanayana.  ‘Apetakrtyam’, means a person who has transcended the restrictions like performing duties as per scriptures and other duties.  He was the one who had become the Gnani, beyond the need to observe duties, even before the ceremony of investiture with sacred thread could be performed.

If someone else is described in this manner, we would consider that very great.  However, in the matter of ‘Suka’, describing him in this manner, appears to be a letdown from the status we have learnt about him (a little before).  What did we see in ‘Guru Ratna Malika’? We had seen that even while slipping out of the womb, that is, even before the physical body of the child touched the ground, it had obtained the supreme knowledge which was not affected by the joys and sorrows of the world.  A child like that would be called ‘Anupeta’ – boy for whom the Upanayana (ceremony of investiture with the sacred thread) has not been performed, only after growing up a few years.  Since even an infant does not wear the sacred thread, it is indeed ‘Anupeta’.  Still, if it is mentioned specifically, it only means that the ceremony of investiture with the sacred thread has not been performed, even though the appropriate age is reached.

When we say about someone, that he is not yet retired, don’t we understand that he is approximately of retiring age?  Do we mention the same way about persons who have just joined the service or who are in the age group of 30s and 40s, although they are also not yet retired? When someone is referred to as not yet initiated into ceremony of investiture with the sacred thread, it only means that he is, approximately, of that age.  Those days, Brahmin boys used to be given the sacred thread at the age of eight, including the time in the womb.  As per Sastras, if the child is very intelligent, it can be performed even at the age of five.  Presuming that Vyasa would have decided that way, Suka, who is referred to as ‘Anupeta’, should have been approximately of five years of age.  Is it not a letdown to refer to a person who was a Gnani at the time of birth itself, as a Gnani only after five years?

To show that it is not so, it has been mentioned as ‘Pravrajantam’ [प्रव्रजन्तं] even before saying, ‘Anupeta’.  The word ‘Pravrajantam’, conveys the running away of Suka from the Ashram of Vyasa and the forest where it was located.  From what follows, it is understood that Vyasa, who was not able to cope up with his [Suka’s] speed of running, lagged behind and was crying out aloud, “Putra”, “Putra”.  Should not the child be at least four or five years of age if it has to have the grown up limbs and is capable of running like this? Is it possible to run like that at the time of slipping out of the womb?  That is why, even though Suka was a Gnani with the intent of running away as a ‘Parivraajaka, right at the time of birth, he has been described as ‘One who has not had the Upanayana’, to indicate the time when he decided to put the intent into action.

It is indeed true that a Gnani who has realised that everything is just an illusion, or to put it differently, everything is Brahmam, need not leave any place and go elsewhere.  However, if one remains in the same place, people who live there would wrongly imagine attachments like, he belongs to that place, that place belongs to him, he belongs to them and they belong to him etc.  Only because such a thing should not happen, Gnanis wander as a ‘Parivraajakas’ [परिव्राजक].

Suka waited patiently till his hands and legs grew.  Then he started off.  Even though, Vyasa, the father, was great, he was not yet in the entrenched state of realisation (Braahmi sthiti), like his son.  The illusion of love for son, was still left in him.  The son thought that this should not be allowed to grow.  He thought, “If I allow Upanayana to be performed, then there would be a compulsion to adhere to the rules of bachelorhood.  I,who am not interested in performing the worldly duties, may have to do Adhyayana, Samitaadhaana, Bhikshaacharya etc.  If I allow the companionship to grow longer, father’s love also would only increase. Even though nothing can bind me, father will get entangled fully.  Therefore, I have to run away from home, immediately.  Father, will certainly feel sad.  If this is delayed further and further, would not the bondage (for him) become stronger and the sorrow (of losing me) also become more and more? Therefore, I have to run away now itself”, and began to run: “Yam Pravarajantam-Anupetam-Apetakrtyam”. [यं प्रव्रजन्त मनु पेतमपेत कृत्यं]

If we are going to some place, there must be some purpose, for us there.  If that work is done, we will leave from there. You have also come here to listen to the discourse.  Will you be sitting here even after I conclude speaking?  You will be going away.  Vyasa had the fortune of getting a Brahma Gnani as a son and taking affectionate care of him.  He had Suka like that and indulged enough.  If he continued to remain there, the good fortune will cease and would only result in love and bondage.  Therefore, the purpose of coming having been fulfilled, Suka started off from the ashram of Vyasacharya.  It was a divine ordain that people, honest and pure ones, (Veda) practitioners everywhere should have a darshan of him and get benefitted.  So he started off wandering wherever his legs would take him.  He did not go as a doer (karta), thinking “there is a work for him, of giving darshan to the world”!  He started without any specific thought.  But the divine ordain also got fulfilled in that.

_______________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading