71.1 Sri Sankara Charitham by Maha Periyava – Suka Brahmam

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava explains about a great Maha Gnani, one and only Suka Brahma Maharishi. On passing, Sri Periyava also let us know a supreme secret that he and Vamadevar are the only two jeevans who are born without any karma bandham in this world.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another unparalleled drawing & audio. Rama Rama

சுக ப்ரஹ்மம்

அதற்கு முன்னாடி சுகரைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப்போல அத்வைதாநுபூதிக்கு இன்னொரு மூர்த்தி கிடையாது. அவரைக் கிஞ்சித் ஸ்மரிப்பதே பெரிய சாந்தி. ஜீவ்ய காலத்திலேயே அஞ்ஞானத்தை அடியோடு அழித்து ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தில் இருந்துகொண்டிருக்கிற ஜீவன் முக்தர்களில் ஒருத்தர் மாத்ரமில்லை, அவர். இந்த ஜீவன் முக்தர்களிலும் பெரும்பாலோர் பிறக்கும்போது பூர்வ ஸம்ஸ்கார லேசமாவது இருந்து, அதனால் கொஞ்சமாவது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டவர்களாக இருந்து, அப்புறம் தங்கள் ஜீவ்ய காலத்தில் ஸாதனா பலத்தினாலும் அநுக்ரஹ பலத்தினாலும் அந்த அஞ்ஞான மூட்டம் நீங்கப்பெற்று ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சுகரோ பூர்வ ஸம்ஸ்காரம், அதை இந்த ஜன்மாவில் கழித்துக்கொண்டு அதற்கப்புறம் ஞானம் பெறுவது என்றில்லாமல், பிறக்கிறபோதே ஜீவன் முக்தராக இருந்தவர்!

சுகர் பிறக்கும்போதே ஆத்ம ஞானியாகப் பிறந்தவர். யத்னமே கிடையாது! அநுஷ்டானம் எதுவும் பண்ணாமலே அநுபூதிமானாக இருந்தவர். கர்ம சேஷம்தான் பிறப்புக்குக் காரணமானாலும் இவரோ கர்ம சேஷமே இல்லாமல் பிறந்தவர்.

கர்மாவை அநுபவிக்கதானே பிறப்பு? சாஸ்த்ரோக்த கர்மா முதலானது பண்ணித்தானே கர்ம சேஷத்தினால் ஏற்பட்ட சித்த கலுஷத்தை (அழுக்கை)ப் போக்கிக்கொண்டு அப்புறம் ஞானம் பெறமுடியம்? அப்படியிருக்க இவர் எப்படிப் பிறக்கும்போதே ஜீவன் முக்தரான ஞானியாக இருக்க முடிந்தது? இதற்கு நாம் சொல்லக்கூடிய ஒரே காரணம், அஞ்ஞானம் என்பதே தொடாத ஒரு ஜீவனை லோகத்திற்குக் காட்ட வேண்டுமென்றே ஈச்வரன் இப்படி ஒரு ஜீவனை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான்! வேறே ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரே அஞ்ஞான பிண்டங்களாக இந்த ஜீவ லோகத்தைப் பண்ணியுள்ள அவனுக்கு அப்படியே மாறுதலாக ஒன்றிரண்டாவது பார்க்க வேண்டுமென்று இருக்காதா? அப்படிப்பட்டவர்களைக் காட்டி அஞ்ஞான பிண்டங்களுக்கும் எதோ கொஞ்சமாவது ‘இப்படியும் ஒரு பிறவி பிறப்பிலிருந்து சஞ்சலமேயில்லாத நிறைந்த நிறைவான பரிபூர்ண ஸ்திதியிலிருக்கிறது; இப்படி ஒரு ஸ்திதியும் இருக்கிறது’ என்று புரிய வைக்க வேண்டுமென்றே சுகர் மாதிரியும் ஒன்றிரண்டு ஸ்ருஷ்டித்திருக்கலாம்.

ஒன்றிரண்டுதான்! சுகர் ஒன்று. இரண்டாவது வாமதேவர் என்பவர். அல்லது அவர் (வாமதேவர்) ஒன்று, இவர் (சுகர்) இரண்டு என்று கால க்ரமத்தையோட்டிச் சொல்லலாம். ஏனென்றால் வாமதேவர்தான் சுகருக்கு முந்தி இருந்தவர். அவரைப்பற்றி ஐதரேய உபநிஷத்திலேயே சொல்லியிருக்கிறது. கர்ப்பவாஸம் செய்யும் காலத்திலேயே அவர், “ஸமஸ்த தேவதைகளுடைய கோடிக்கணக்கான ஜன்மங்களையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இதற்குமுன் எப்படி இருந்தேன் தெரியுமா? இரும்புக் கோட்டைகளைப் போலக் கணக்கில்லாத ஜன்மாக்கள் என்னைக் கட்டியிருந்தன. இப்பொழுது எனக்குச் சிறகு முளைத்துவிட்டது; ஒரு பெரிய பருந்துக்கு, கருடனுக்கு முளைத்ததுபோல் முளைத்துவிட்டது. அதனால் கட்டுக்களை மீறிப் பறந்து வந்துவிட்டேன்” என்று சொன்னதாக இருக்கிறது1. இப்படிச் சொல்வதிலிருந்து அவருக்குக்கூடப் பூர்வ ஜன்மங்களின்பந்தம் இருந்து அப்புறமே ப்ரக்ருத (நிகழ்கால) ஜன்மாவின் கர்ப்ப காலத்தில்தான் ஒரு flash மாதிரி ப்ரஹ்மஞானம் ஸித்தித்ததாகத் தெரிகிறது!

பிறப்பிலிருந்தே — கர்ப்பமாகத் தோன்றிய நாளிலிருந்தே – முக்தர்களாக இருந்தவர் சுகர், அவரைப் போலவே வாமதேவர் என்று சொல்ல வந்தேன்.

ஸமீப நூற்றாண்டுகளில் ‘ஜீவன்முக்தர்’ என்று சொன்ன மாத்ரத்தில் நினைக்கும்படியாக இருந்தவர் ‘ப்ரம்மேந்த்ராள்’ என்கிற ஸதாசிவ ப்ரம்மம். அவர் சுகப்ப்ரம்மத்தை ஸ்துதித்து ‘குரு ரத்ன மாலிகா’வில் ஒரு ச்லோகம் சொல்லியிருக்கிறார்:

ஜனனிஜடராதிவ ச்யவந் யோ
ஜகதோ நாத்ரவத்ஆத்மவித்விபத்ப்ய: |
அநஹந்தம்அஹம்தம்ஆத்மவந்தம்
பகவந்தம் சுகம்ஆச்ரயே ப்ரசாந்தம் ||

லளிதமானஅடுக்குச் சொல்லாக, “அநஹந்தமஹம் தமாத்வந்தம் பகவந்தம் சுகமாச்ரயே ப்ரசாந்தம்” என்று இருக்கிறது! ‘ அஹந்தையில்லாதவரும், ஆத்மாவை அறிந்தவரும், உத்தமமான சாந்த நிலையிலிருப்பவரும், பகவத் ஸ்வரூபமுமான அந்த சுகரை நான் ஆச்ரயிக்கிறேன்’ என்று அர்த்தம். இது பின்பாதி.

முன்பாதிக்கு என்ன அர்த்தமென்றால்: தாயாரின் வயிற்றிலிருந்து நழுவும்போதே தம்முடைய ஆத்மஞான விசேஷத்தினால் இந்த ஜகத்திலுள்ள எந்த உபத்ரவத்தைப் பார்த்தும் மனஸின் கட்டு விட்டுப் போகாதவர் என்று அர்த்தம்.

‘ஜநநீ ஜடராத்” – ‘பஜகோவிந்த’த்தில் ‘ஜநநீ ஜடரே சயநம்’ என்றே ஆசார்யாள் சொன்னதன் நினைவில் சொன்னதுபோல இருக்கிறது! .

பாகவதத்தில் சுகரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டால் அவருடைய மஹிமை முழுதையும் சொன்னதாகிவிடும்: .

யம் ப்ரவ்ரஜந்தம்அநுபேதம்அபேதக்ருத்யம்
த்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ |
புத்ரேதி தந்மயதயா தரவோ () பிநேது :
தம் ஸர்வபூதஹ்ருதயம் முநிம்ஆநதோஸ்மி || (அவதாரிகை 1-2-2)

‘யம்’ – ‘எவரை’ என்று ஆரம்பித்து, ‘தம்’-‘அவரை’, ‘ஆநதோஸ்மி’ – ‘நமஸ்காரம் பண்ணுகிறேன்’ என்று முடித்திருக்கிறது. ‘எவரை’, ‘அவரை’ என்று சொல்லியிருப்பது சுகாசார்யாளைத்தான். ஆனால் ச்லோகத்தில் தேடிப் பார்த்தால் அந்தப் பெயரையே காணோம்! ‘ஸர்வ பூத ஹ்ருதயம் முனிம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஸர்வ பூதங்களுக்கும் ஆதாரமான பரப்ரம்ம ஸ்வரூபமாத இருக்கும் ஒருவர்தானே ஸர்வ பூத ஹ்ருதயத்திலும் வஸிக்கக்கூடிய முனிவராக இருக்க முடியும்? சுகர் ஒருத்தரைதானே அப்படி முக்யமாக நினைப்பதாயிருக்கிறது? ப்ரஹ்மஞானிகள் பலபேர் இருந்தாலும் சுக ப்ரஹ்மம் என்று அவரொருத்தரைத்தானே சிறப்பித்துச் சொல்கிறோம்! ஸர்வ பூத ஹ்ருதயராக இருக்கப்பட்டவரை, ஒரே ஒரு சரீரத்தில் மட்டும் உள்ள ஜீவனாக வைத்து நாமகரணம் செய்த ‘சுகர்’ என்ற பெயரால் குறிப்பிடுவது அகண்டத்தை ரொம்பவும் குறுக்கிக் கண்டமாக்கினாற் போலத்தான் என்பதாலேயே பெயர் குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. நாம-ரூபம் கடந்தவர் என்று காட்டுவதாக நாமத்தைச் சொல்லாமல் விட்டிருக்கிறது.

ஆனாலும் அடையாளம் காட்டாமலும் விடவில்லை. (ச்லோகத்தில்) ‘த்வைபாயனம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ‘புத்ரேதி’ என்று இன்னொரு வார்த்தை இருக்கிறது. த்வைபாயனர் என்பது வ்யாஸர். தீவில் (த்விபத்தில்) பிறந்ததால் அப்படிப் பெயர். அவரால் ‘புத்ரா’ என்று (‘புத்ரேதி’) கூப்பிடப்பட்டவர். அந்த ஸர்வ பூத ஹ்ருதயர் என்று அடையாளம் காட்டியிருக்கிறது. வ்யாஸ புத்ரர் என்றால் சுகர்தான் என்று புரிந்துக்கொண்டு விடுகிறோம்.

_______________________________________________________________

1ஐதரேயோபநிஷத் II.5

_______________________________________________________________________________________________________________
Suka Brahmam

Before that, we need to know at least a little about Suka.  There is no Murti like him with knowledge on Advaita.  It will be hugely blissful even if he is remembered a little.  He was not merely, one of those who were ever in the realisation of brahmam, having removed their ignorance totally and completely liberated while still being alive.  Even among those, who were emancipated while still living, most of them would have had the influence of previous births and therefore mired in ignorance at the time of their birth and later during their lives, attained emancipation and got the ignorance removed, on account of the strength of their diligent practice and divine benevolence.  However, Suka was one who was liberated right at the time of birth and was not the one having the impressions of the previous births and getting them removed during this lifetime!

Suka was one who, at the time of birth itself, a liberated soul.  No extra effort at all.  He was having the knowledge, without doing any practice.  While the reason for births is the balance of karma, he was born without any balance of karma.

Is birth not for experiencing the karma?  Is it not that only after performing the duties enshrined in the Shastras, get the balance of dirt in the mind removed and then obtain the supreme knowledge?  When it is so, how was he able to be a Jnani, liberated right at birth?  The only reason we can cite for having made such a life to take birth is that Eswara wanted to showcase to the world, a soul who was entirely not touched by ignorance.  Can’t think of any other reason.  Would He not like to see at least one or two who are diametrically opposite to the living world created by Him, with whole lot of ignorant souls?  He could have created one or two, like Suka, just to show something to the ignorant souls and make them understand that “there is also a living being who can be totally undisturbed right from the birth and be in a state of complete fulfilment; that there is a such a state also”.

Only one or two!  Suka was one.  The second was known as Vamadeva.  We can say he (Vamadeva) was one and Suka, second, on the basis of order of time.  Because Vamadeva was only before Suka.  Mention about him is found in Aithareya Upanishad itself.  It is mentioned that right when he was in the womb itself, he had said that “I have learnt about the crores of lives of whole lot of devatas, you know how I was before this? I was bound my innumerable lifetimes like an iron fort, wings have grown for me now; like how it would grow to a huge eagle or Garuda and therefore, flown freeing from the shackles”1.    By this narrative, it is clear that he also initially had the connection to the previous births and only during the time in the womb of the present life, attained the supreme knowledge like a flash.

Suka was liberated right at birth, right from the day of conception in the womb.  I wanted to say that Vamadeva was like him.

In recent centuries, the person one thinks of instantly when we talk about emancipated souls while being alive, is only Sadashiva Brahmam, known as “Brahmendral”.   He has penned a verse of eulogy on Suka, in ‘Guru Ratna Malika’.

Janani-Jataraadiva chyavan Yo
Jagato Nadravath-Atmavith-Vipadbhya: I
Anahantham-Aham-Tham-Aathmavantham
Bhagawantham Sukam-Aashraye Prashaantham II

जननी-जठरादिव च्यवन्यो जगतो नाद्रवत्-आत्मवित्-विपद्भ्यः।
अनहन्तं-अहं तं-आत्मवन्तं भगवन्तं शुकं-आश्रये प्रशान्तम् ।|

It is written in mellifluous rhyming words, ”Anahanthamaham-Thamaathmavantham Bhagawantham Sukamaashraye Prashaantham”.   The meaning is, “I offer my respect to that Suka, who has no ego, who has realised the self, who is in the state of exalted blissful peace and who is in the divine form”.  This is the second half.

The meaning of the first half is: He is the one whose focussed mind was not disturbed by seeing any distress in this world, on account of the supreme knowledge of Self he had, right at the time of slipping out of the womb of the mother.

“Janani-Jatarath”- It looks like this has been told remembering how Acharya has said in ‘Bhaja Govindam’ as ‘Janani Jatare Sayanam’.

If we discuss about the one verse on Suka, in Bhagawatham, it is as good as conveying completely, all his greatness.

Yam Pravrajantam-Anupetam-Apetakrtyam
Dvaipaayano Virahakaatara Ajuhaava I
Putrethi Tanmayatayaa Taravo (A) bhinedu :
Tham Sarva-Bhoota-hrdayam Munim-Aanatosmi II (Avataarika 1-2-2)

यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव ।
पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि ॥

Starting with “Yam”- ‘About whom’, “Tham”- ‘About him’, and ends with “Aanatosmi”-I am offering my respect.  ‘About whom’, ‘About him’, is all about only Sukacharya.  But if you search for the name in the verse, it is not found!  It is only mentioned as ‘Sarva-Bhoota-hrdayam Munim’.  Is it not that the holy person, who is only in the form of supreme spirit, the basis for all beings, is only capable of residing in the hearts of all the beings?  Is it not that only Suka can be thought of like that?  Even when there are so many who have realised the supreme spirit, is it not that we specially mention only him, as Sukabrahmam?  It appears that referring to a person who is capable of residing in the hearts of all elements, as one soul with a name, ‘Suka’, is like constricting the whole world into a small piece.  Name is not mentioned to indicate that he is beyond names and forms.

Still, it is not that it has been left out, without identifying him.  A word, ‘Dvaipaayana’ is in the verse.  There is another word, ‘Putrethi’. Dvaipaayana is Vyasa.  Such a name is there because he was born in an island, (Dveepa). It is identified as that he is the ‘Sarva Bhoota Hrdaya’, who was called out as ‘Putraa’ (Putrethi) by him.  We get to understand that it is only Suka, when it is mentioned, ‘Vyasa Putra’.
____________________________________________________________

1 Aithareyopanishad II.5

____________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading