Periyava Golden Quotes-994



பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது*. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய்விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது. இப்படிச் சொன்னால் அது எப்படி ஸாத்யம்? ஒன்று பேச்சை விட்டு மௌனமாக வேண்டும்; அல்லது மௌனத்தை விட்டுப் பேச வேண்டும். இரண்டையுமே விடுவது என்றால் எப்படி முடியும்? அந்த ஞானியின் நிலைக்குப் போனால்தான் இது புரியும். அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன வ்ரதம் என்று ஒன்று அநுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது. அது நமக்கு ரொம்ப தூரத்தில் இருக்கிற லக்ஷ்யம். நடைமுறையில் நாம் கொஞ்சம் மௌன உபவாஸத்தை அநுஷ்டிக்க ஆரம்பிக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

The Upanishads states that the Sage who has attained the status of a Brahma Gnani (a person who has experienced the Ultimate Divine Supreme) gives up both speech and silence. In the initial stages after educating himself he engages in a number of debates and arguments and eventually realizes the Ultimate Truth. Then he gives up his knowledge and speech and is all the time in a state of meditation. Then when he becomes Brahma Gnani, the Upanishads state that he gives up both speech and speechlessness. How is it possible? Either one should give up speech and be silent or one should give up silence and start speaking. How to give up both? It is possible to understand this conundrum only if one attains the state of this Gnani. He will not have any personal opinion about speech or silence. Even if some advice comes for him for the blessings of this world, he will not think he is speaking. Even if Parasakthi places him like Dakshinamoorthy to convey the greatest message through sheer silence, the Gnani will not think he is observing Mounam. This is what is meant by the state beyond silence and speech. It is a goal far away from us. In practice we should start practicing silence gradually.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: