Sri Periyava Mahimai Newsletter – 7

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Three incidents and three gems showing Periyava’s Sarvagnathuvam, importance of adhering to one’s dharma, and revival of Thiruppavai and Thirvampavai.


Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Shri. B. Narayanan Mama for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama


(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய்ப் பாசுபதா ! பரஞ்சுடரே!)

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மஹிமை.

அடக்கத்தின் மேன்மை.

ஞானமேன்மையில் சுகப்பிரம்மரிஷி அவர்களையொத்த நடமாடும் தெய்வமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளென்னும் ஞானசேகரன், வேதம், சாஸ்திரம், சங்கீதம், சிற்பக்கலை என்ற எந்தக் கலை வல்லுனர்கள் வந்தாலும், அவரவர்களின் மேதாவிலாசத்தைவிடப் பன்மடங்கு நுணுக்கங்களை மிக இயல்பாக எடுத்துரைத்த சம்பவங்கள் பல உண்டு. ஒரு மடாதிபதியாய், ஒரு சன்னியாசியாய் இத்தனை நூல்களையும், வேதாந்தங்களையும் அவர் படித்தறிந்ததுதான் மிகத் துல்லியமான விசேஷ அம்சங்களைக் கூறுகிறார் என்று வியந்தால் அது நம் அறியாமையாகும். திரிகால ஞானத்தின் திரு உருவாய்த் திகழும் மஹிமையினால் மட்டுமே இவையாவும் சாத்தியமாகிறது என்பதே உண்மை என்று அதை அனுபவித்த ஸ்ரீ பெரியவாளின் பக்தரான  அப்பய்ய குப்புஸ்வாமி என்பவர் கூறுகிறார்.

1957-ஆம் ஆண்டு  ஜூன் மாதம் முதல் ஞாயிறு அன்று ஸ்ரீ பெரியவாளைக் குப்புசாமி அவர்கள் தரிசிக்கச்  சென்றார். அப்போது இவரிடம் மஹான், ஆதிசங்கர பகவத்பாதரின் திவ்ய சரித்திரத்தைப் பல சங்கர விஜய நூல்களைப் படித்துத் தமிழில் சுருக்கமாக , தெளிவாக எழுதிக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

அதன்படி சுமார் 90 பக்கங்களுக்கு இவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு, ஸ்ரீ பெரியவாளைக் காஞ்சீபுரத்தில் கொல்லாசத்திரம் என்ற இடத்தில் ஒருநாள் காலையில் குப்புசாமி தரிசித்தார். அவருக்கே உரிய பாணியில் ஸ்ரீ பெரியவா அந்தக் கையெழுத்துப் பிரதியை, முன்னிலிருந்து பின்னும், பின்னிலிருந்து முன்னுமாக சிறிது நேரம் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்,

50 பக்கங்களுக்குப்பின் ஒரு பக்கத்தின் ஓரத்தில் குப்புசாமி மாதவீய சங்கர விஜயம் என்ற நூலிலிருந்து சம்ஸ்க்ருத மொழியில் ஒரு செய்யுளை எழுதியிருந்தார்.

“கல்லாலேசம் த்ராகததோ நாதிதூரே

லக்ஷ்மீகாஸ்ம்வசந்தம் புராணம்”

—என்பது அந்தச் செய்யுள்.

இதில் முதல் சொல்லான ‘கல்லாலேசம்’ என்பதற்குப் பொருள் என்ன என்று தெரியாமல் அந்த வார்த்தையை மட்டும் கீழ்க் கோடிட்டு, தன் சந்தேகத்துக்காக நோட்டுப் புத்தகத்தின் மார்ஜினில் குப்புசாமி குறிப்பிட்டு வைத்திருந்தார். அந்த சங்கர விஜயத்திற்கு இரண்டு பேர் உரை எழுதியிருந்தார்கள். இருவர் உரையிலும், ‘கல்லாலேசம்’ என்ற பதத்திற்குப் பொருள் கூறும்போது, விஷ்ணு காஞ்சியில் கோயில் கொண்டுள்ள பெருமாளைத்தான் அச்சொல் குறிப்பதாக எழுதுயிருந்ததை குப்புசாமி படித்து அறிந்திருந்தார்.

ஆனால், குப்புசாமிக்கு அந்தப் பதம் அங்கு குறிப்பிடப்பட்டிருப்பதில் சந்தேகம் எழவே, ஒரு கேள்விக் குறியிட்டு ஒரு ஓரத்தில், அதைத் தன் குறிப்புக்காக மட்டுமே அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். மஹாதேவனான ஸ்ரீ பெரியவாளுக்குத் தெரியாதது என்று ஒன்றுமில்லை.  தான் உத்தரவிட்டு பக்தன் எழுதி வந்திருக்க அதில் ஒரு சந்தேகத்தைத் தெளிவாக்காமல் பரமேஸ்வரர் விட்டுவிடுவாரா என்ன?

அந்தப் பக்கத்தைக் காட்டிய ஸ்ரீ பெரியவா, குப்புசாமி அவர்களை, அந்தச் செய்யுளின் அடுத்த செய்யுளையும் படிக்கச்  சொன்னார். அப்படியே இவர் படித்தாலும், பிறகு சத்திரத்தின் பின்புறத்திலிருந்த அனந்தாநந்தசுவாமி என்பவரை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். சுவாமிகளும் அழைத்துவரப் பெற்றார்.

அதே சுலோகத்தை இவரையும் ஸ்ரீ பெரியவா படிக்கச் சொன்னார். சுவாமிகளை நோக்கி, “இந்த சுலோகத்திலிருந்து என்ன புரிகின்றது?” என்று கேட்டார்.

“விசேஷமாக ஒன்றுமில்லை. லக்ஷ்மீபதியான, பண்டைக்காலம் முதல் உள்ள கல்லாலேசனான, கருணாநிதியான வரதராஜரைத் தரிசித்து ஆனந்தமடைந்தார்.” என்ற அர்த்தம் தெரிகின்றதென்றார்.

அதற்குப் பெரியவா, “கல்லாலேசம் என்ற சொல் லக்ஷ்மீகாந்தம் என்று பொருள்படுகிறதா?” என்று கேட்டார்.

இரண்டு சுலோகங்களில் முதலாவது ஏகாம்பரநாதரையும், தேவி காமாக்ஷியையும் தரிசித்ததாகக் கூறுவதாலும், இந்த சுலோகத்தில், வரதராஜரைத் தரிசித்து மகிழ்ந்ததாக சொல்வதாலும் அப்படித்தான் அர்த்தம் தரும்” என்றார் அனந்தானந்த சுவாமிகள்.

ஸ்ரீ பெரியவாள் மெல்லச் சிரித்துவிட்டு, “கல்லாலேசம் என்பது சம்ஸ்க்ருத பதமாகத் தோன்றவில்லை. தக்ஷிணாமூர்த்தி, அதாவது கல்லாலீசன் என்ற சொல் லக்ஷ்மீகாந்தம் என்ற பதத்துடன் எப்படி ஒட்டும்?” என்று கேட்டார்.

அனந்தானந்த சுவாமி ஒன்றும் பதில் கூறமுடியாது என்றார். ஆனால் அவரை, பெரியவா அருகில் வந்து அமரச் சொன்னார். “இப்பொழுது இதனால் என்ன புரிகிறது?” என்று சங்கரர் அவரைக் கேட்டார்.

“ஒன்றும் புரியவில்லை” என்றார் இவர்.

ஸ்ரீ மஹாபெரியவா தொடர்ந்து பின்வருமாறு விளக்கினார்.

“அப்போ ‘தக்ஷிணாமூர்த்தியைக் குறிப்பிடும் ‘கல்லாலேசன்’ என்ற சொல் தமிழ் நாட்டவனுக்குத்தான் தெரியும்.  இதிலிருந்து மாதவி சங்கரவிஜயத்தை எழுதியவர் தமிழ்தேசத்து சம்ஸ்கிருத வித்வான் ஒருவராகத்தான் இருக்கவேண்டும், மாதவ வித்யாரண்யர் அல்ல என்று தோன்றுகிறதல்லவா? ஒருவேளை இந்த சுலோகத்திலுள்ள கல்லாலேசன்  லக்ஷ்மீகாந்தனான தேவன் வசிக்குமிடத்திற்கு நாதி தூரம் அதாவது,அருகிலுள்ள சிவாஸ்தானம் கோயிலிலுள்ள  சிரித்த முகத்துடனுள்ள தக்ஷிணாமூர்த்தியையும் தரிசனம் செய்தார் என்ற அர்த்தத்திலேயே கவி இப்படி கல்லாலேசம் என்ற பதத்தை வைத்திருக்கலாம்.

இப்படி நினைக்க இன்னொரு காரணம்கூடத் தோன்றுகிறது. சிவன் கோவில் சிவன் உற்சவமூர்த்திக்கு சோமாஸ்கந்தர் என்றுதானே பெயர் இருக்கு என்று உங்களுக்குத் தெரியுமோ?” என்று இவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்டார்.

“ஆமாம், தெரியும்” என்றார்கள் இருவரும்.

பிறகு பெரியவா “பத்மபாதாச்சார்யாள் எழுதிய பஞ்சபாதிகாவின்  மங்கள சுலோகத்தில் ‘விநா விநாயகம்’, ‘அபூர்வ சங்கரம்’ போன்ற பதங்களால் பகவத்பாதாளை வர்ணித்திருக்கிறார் என்று தெரியுமோல்லியோ?” என்று கேட்க, இவர்கள் இருவரும் தெரியுமென்றார்கள்.

பிறகு ஸ்ரீபெரியவா சிவஸ்தானம் கோயில் கர்ப்பகிருஹத்தில் சிவலிங்கத்தின் பின் சுவற்றில், பார்வதி, பரமேஸ்வரர்களின் பக்கத்தில், சிறு விநாயகர் நிற்பதையும், பகவத் பாதாச்சார்யாள் அந்த மூர்த்திகளுக்குத் தண்டவந்தனம்  செய்கிறதுபோல்  சிற்பம் இருக்கிறதையும் பார்த்திருக்கிறேளா?”  என்று வினவினார். இவர்கள் பார்த்திருப்பதாகச் சொன்னார்கள்.

மேலும், ஸ்ரீ பெரியவா அங்கே சாதாரணமாக சிவன் கோயில்களில் உள்ளதுபோல் சோமாஸ்கந்தர் இல்லை, அதற்குப் பதிலாக சோமவிநாயகர்தானே இருக்கிறார் என்ற விசேஷத்தையும் குறிப்பிட்டார்.

பிறகு சற்று தாமதித்துவிட்டு ஸ்ரீ பெரியவாள் தொடர்ந்து, “இவனுடைய சந்தேகக் குறிப்பினால் மூன்று, நான்கு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. மாதவீய சங்கர விஜயத்தை எழுதியவர் ஒரு தமிழ்நாட்டு சம்ஸ்கிருத  கவியாகத்தான் இருக்க வேண்டும். அந்த சுலோகத்திலிருக்கும் ‘கல்லாலேசம்’ என்ற பதம் சிவாஸ்தானத்தில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தியைத்தான் சொல்கிறது என்று சொல்லலாம். பத்மபாதாச்சார்யார் பஞ்சபாதிகையின் ஆரம்பத்தில் விநாவிநாயகம் என்று சொல்லியிருப்பதால், அவர் சிவாஸ்தானத்தில் இருந்து கொண்டு பஞ்சபாதிகையை எழுதியிருக்கலாம். ‘கல்லாலேசம் என்ற வார்த்தை தக்ஷிணாமூர்த்தியையும், நாதி தூரம் என்பது அருகிலிருக்கிறதையும் குறிப்பிடுகிறது. ஆகவே, பத்மபாதாச்சார்யாளின் காலத்திலேயே வரதராஜர் கோயிலும், அதனருகில் சிவாஸ்தானம் கோயிலும் இருந்துள்ளன என்று ஊகிக்கலாம்” என்று ஒரு உபன்யாசமே செய்தருளினார்.

“என்ன சுவாமிகளே சரிதானா?” என்று சிரித்துக் கொண்டே அனந்தானந்தசுவமிகளைப் பார்த்து ஈசன் கேட்டார். அந்த சிரிப்பிற்கு  அர்த்தம் என்னவாக இருக்க முடியும்? ஏதோ ஒரு பதத்திற்கு அர்த்தம் அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவா இச்சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்வது?  அப்படியே எடுத்துக் கொண்டாலும், பெரும் பண்டிதர்களுக்கும் தோன்றாத விசேஷமான ஸ்ரீ பெரியவாளின் விளக்கத்தை ஒரு பாமரத்தனமாக வியக்கலாம். ஆனால் அதனிலும் மேலான உண்மையாக எல்லாமுமறிந்த மாமுனிவர் அந்த அதிசயத்தை அணுவும் வெளிக்காட்டாமல் ஏதோ ஒரு பக்தரின் சந்தேகத்துக்கு, தானே ஊகித்து ஒன்றை சொல்வதுபோல் நம்மை ஏமாற்றி நாடகமாடும் நயம் அதிசயத்தக்கதாக அமைகிறதல்லவா?

முக்காலமும் அறிந்த அடக்கத்தின் மேன்மையல்லவா அது?

பேதமில்லா பெருங்கருணை

அவரவர்கள் தர்மப்படி அவரவர்கள் சம்பிரதாயங்களை அனுசரிக்க வேண்டுமன்பதை ஸ்ரீ மஹாபெரியவா அபேதமூர்த்தியாக எடுத்தியம்புவதைக் கேட்டுள்ளோம். ஒரு தனி மனிதரின் கொள்கைகளைக்கூட மதித்து அதை அவர் தமக்காக விட்டுக் கொடுப்பதில் இசைவில்லாத பேதமில்லாத பெருங்கருணாமூர்த்தியாக ஸ்ரீ பெரியவா திகழ்வது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்திற்கு நான்கு மைல் கிழக்கில் காவிரி நதியின் வடகரையில் திருவியலூர் என்ற கிராமம் உள்ளது. அவ்வூர் பல மஹாவித்வான்களைப் படைத்த ஊர். அவ்வூரில் பிறந்தவர் மஹாமஹோபாத்யாய ராமசுப்பா சாஸ்திரிகள். அவர் சிறுவயதிலேயே வேத அத்யயனம் செய்து, மஹா வித்வானாக விளங்கினார். அவரிடம் பல  மாணவர்கள் சாஸ்திரம் பயின்றனர். இவர் அத்வைத மதத்தைச்  சேர்ந்தவராயினும், விஷ்ணு பக்தி கொண்டவர். அறிஞர்கள் இவரை ஒரு வைணவராகவே மதித்தனர்.

இவர் யாகம் செய்வதைக் கண்டித்து ஒரு புஸ்தகம் எழுதினார். கிரஹணகாலங்களில் தர்ப்பணம் செய்யக் கூடாது, சன்யாசிகளைப் பார்க்கக்படாது, ருத்ராக்ஷம் அணியக்கூடாது என்றெல்லாம் கொள்கைகளையுடைய சம்பிரதாயத்தைச் செர்ந்தவர்,

1918-ஆம் ஆண்டு, ஸ்ரீ பெரியவா, ராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டு, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்தார். இப்படி நடமாடும் சர்வேஸ்வரர் வேப்பத்தூருக்குச் செல்லும் வழியில் திருவயலூரில் ஒரு நாள் தங்கியிருந்தார்கள்.  அப்போது அவ்வூரில் இருந்தார் ராமசுப்பா சாஸ்திரிகள். அவருக்கு அப்போது 75 வயது ஆகியிருந்தது.

தன் சீடர் ஒருவரிடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மேன்மையைப் பற்றிக் கேட்டிருந்த சாஸ்திரிகளுக்கு, சன்யாசிகளை சந்திப்பதில்லை என்ற தன் சம்பிரதாயத்தின் தீவிரத்தை மீறி சாக்ஷாத் சங்கரரான தவயோகியைத் தரிசிக்க ஆவல் ஏற்பட்டது போலும். அதனால் மஹஞானேஸ்வரைத்  தான் தரிசிக்கப் பிரியப்படுவதாக ஒரு சீடரை ஸ்ரீமடத்தின் மானேஜரிடம் முறையிட அனுப்பினார்.

இந்த விவரம் அறிந்த மஹாபெரியவாளோ அந்த சீடரை அழைத்து, “இவ்வளவு காலமாகக் கடைபிடித்து வரும் சம்பிரதாயத்தை, இந்த வயதான காலத்தில் மாற்றி கொள்ள வேண்டாம், மானசீகமாக தரிசனம் செய்தாலே போதும் என்று சாஸ்திரிகளிடம் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்று கூறியதோடு நிற்காமல் இரண்டு உயர்தர சால்வைகளை எடுத்துவரச் சொல்லி அவைகளை சாஸ்திரிகளுக்கு அந்த சீடரிடம் கொடுத்துத் தன் ஆசிகளையும் வழங்கி அருளினார்.


பாடிக் கொடுத்த புண்ணியர்.

1949-ஆம் ஆண்டு ஸ்ரீ பெரியவா திருவிடைமருதூரில் அருளிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆச்சி அம்மையார் தினமும் ஒரு புத்தகத்தை வைத்து, பெரியவாள்முன் பாடிவிட்டுச் செல்வார். ராமமூர்த்தி என்பவரிடம் ஸ்ரீ மஹாபெரியவா அந்த அம்மையார் பாடும் திருப்பாவை, திருவெம்பாவையைப் பற்றித் தெரியுமா என்று கேட்க அவருக்குத் தெரியவில்லை. உடனே ராமமூர்த்தியை தேவராஜ பாகவதர் என்பவரிடம் அனுப்பி அந்தப் பாடல்களை வெளியில் பாடச் சொன்னால் எல்லோரும் பாடுவார்களா என்று கேட்கச் சொன்னார். இவர் போய் அதை பாகவதரிடம் கேட்க அவரோ இந்தப் பாடல்கள் யாருக்குத் தெரியும் ஒருவரும் பாடமாட்டார்களென்று விட்டார்.

இதை ஸ்ரீ பெரியவாளிடம் ராமமூர்த்தி சொன்ன அன்றுதான் மஹான், திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு கூட்ட ஏற்பாடு  செய்தார். மார்கழி மாதம் பிறந்தவுடன், இவரையும் கண்ணன் என்பவரையும், யானைமீது ஏறி உட்கார்ந்து கொண்டு, மஹாலிங்க சுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும்,கையில் விளக்குடன், புத்தகத்தைப் பார்த்துப் பாடி வரும்படி ஸ்ரீ பெரியவா உத்தரவிட்டார். மஹானின் ஆக்ஞைப்படி திருப்பாவை மாநாடும் விமரிசையாக நடந்தது. அதன் பின் பெரிய வித்வான்கள் திருப்பாவை, திருவெம்பாவையைப் பெரிய கச்சேரியாகச் செய்தனர்.  கி.வா.ஜகன்னாதன் போன்றோர் சொற்பொழிவாற்றினர். அப்பொழுது அறநிலையத்துறை கமிஷனராக இருந்த உத்தண்டராமன் அவர்களிடம் மார்கழி பிறந்ததும் எல்லாக் கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யும்படி ஸ்ரீ பெரியவா கேட்டுக் கொண்டார். பின் இசைத்தட்டு மூலம் பட்டம்மாள், வசந்தகுமாரி போன்றவர்கள் பாடிப் பரப்பினர்.

சில காலங்கள் சென்றதும் ஸ்ரீ பெரியவா ராமமூர்த்தியிடம், “நீங்கள் ஒருவரும் பாடமாட்டார்கள் என்றீர்களே? இப்பொழுது யாராவது பாடுகிறார்களா?” என்று கேட்க, இவர், “ஸ்ரீ பெரியவா ஈஸ்வரன்.  அவர் நினைச்சா  நடக்காதது இல்லை” என்றார்.

பின்பு ஒரு சமயம் தஞ்சாவூரில் யாரிடமோ பேசும்போது, “இப்பொழுது, திருப்பாவை, திருவெம்பாவை எங்கும் பாடுவது இவனால்தான்” என்று ராமாமூர்த்தியைச் சுட்டிக்காட்டி  சொன்னாராம். இந்த மஹிமையைப் புரிந்தது நானே என்று மஹான் சொல்லிக் கொள்வாரா என்ன? இப்பேற்பட்ட கருணாசாகரரை, நாமும் பற்றிக் கொண்டு வாழ்வில் சகல பாக்யங்களையும், மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வினைப் பெறுவோமாக! கருணை தொடர்ந்து பெருகும்.

 

(பாடுவார் பசி தீர்ப்பாய் ! பரவுவார் பிணி களைவாய்! )

சுந்தரமூர்த்தி தேவாரம்.

___________________________________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai

The greatness of humbleness

There are innumerable incidents where Sri Periyava had in a very simple and elegant way explained the nuances of Vedas, Shastras, music or architecture to the experts in each of those arts. If we think that this knowledge is because Sri Periyava reads a lot due to being a Peetathibadhi and a sanyasi, then it will be our ignorance. Appaya Kuppuswamy, a devotee of Sri Periyava says the primary reason for this is that Sri Periyava is Sarveshwaran who knows everything in all of the three worlds.

Kuppuswamy went for Sri Periyava’s darshan on the first Sunday of June 1957. Sri Periyava asked Kuppuswamy to read multiple books on Sankara Vijayam and write Sri Adi Sankara Bhagavathpada Divya Charithram in Tamil in a short and clear format.

Kuppuswamy went for Sri Periyava’s darshan at Kollachathram near Kanchipuram with a 90 pager written by himself in his handwriting. Sri Periyava kept going through the pages from the beginning to end and from end to beginning multiple times.

After about 50 pages, Kuppuswamy had written few lines in Sanskrit taken from Madhaviya Sankara Vijayam

“Kallalesam Drakhathatho Naadhi dhoore

Lakshmikantham Samvasantham Puranam”

In these verses, without knowing the meaning of the word “Kallalesam”, Kuppuswamy had underlined the word and added a note near the margin in that page. There were two books written to explain Sankara Vijayam. In both of them, the meaning for the word has been mentioned as Perumal who resides at Vishnu Kanchi.

But Kuppuswamy was not completely convinced about it and so had underlined and marked it. What is there in this world that the Sarveshwaran did not know? Will Sri Periyava not clear the doubt of a devotee who had written the notes after His request?

Sri Periyava showed the page and asked Kuppuswamy to read that verse and the one that followed it. Even though he read it, Sri Periyava asked someone to go behind the Chathiram where they were staying and had asked Ananthananda Swami to be called. The Swami also had come.

Sri Periyava asked the Swami to read the same verses.  After Swami read the lines, Sri Periyava asked what the meaning of those lines was.

“There is nothing different about these lines. He felt happy by having darshan of Lakshmipathy, Kallalesan (who had existed for a long time) and Varadharajar.”

Sri Periyava asked, “Does the word Kallalesam mean the same as Lakshmikantham?”

“Since the first shloka talks about the darshan of Ekambaranathar and Devi Kamakshi and these lines talk about having darshan of Varadharajar and feeling happy, the word Kallalesam should be same as Lakshmikantham.” Ananthananda Swami replied.

Sri Periyava smiled and said, “Kallalesam does not sound like Sanskrit. How can Kallalesan (like Dakshinamoorthy – “Kallal Esan”) be same as Lakshmikanthan?”

Ananthananda Swami was unable to answer that question. But Sri Periyava called Swami and asked him to sit and then asked, “So what do you understand from this?”

Swami replied, “I do not understand anything.”

The Sri Periyava started to explain:

“In those times, only the people of Tamilnadu knew that Kallalesam referred to Lord Dakshinamoorthy. So it should be a Sanskrit scholar from Tamilnadu who would have authored the Madhaviya Sankara Vijayam. Do you feel it would not have been Madhava Vidyaranyar? Maybe the word ‘Kallalesan’ in these lines talks about the smiling Dakshinamoorthy at Sivasthanam which is very close to where Lakshmikanthan is. The author of these verses might have had the darshan of Dakshinamoorthy and would have wrote these verses accordingly. As I think, there is something more to this. Do you know that the Urchava moorthy (Lord taken in processions) of Lord Shiva is called Somaskandar?”

Both of them replied, “Yes.”

Then Sri Periyava asked, “Do you know that in the Mangala Shloka of Panchapathika written by Padmacharyal, Sri Adi Sankara is described as “Vina Vinayagam”, “Aboorva Sankaram” etc.?” Both of them again nodded their head in agreement.

Then Sri Periyava said, “Have you noticed the sculptures of Lord Shiva, Parvati and Ganesha with Sri Adi Sankara standing and praying behind the main Lord Shiva at the Sivasthanam temple Karbhagruham?” They said they have seen it.

After that Sri Periyava also pointed out the specialty of the Sivasthanam temple that there is no Somaskandar and instead the temple has Somavinayagar (Ganesha).

Then after a small interval, Sri Periyava continued, “After looking at Kuppuswamy’s notes, there are three or four things that are clear. Whoever wrote Madhaviya Sankara Vijayam must be a Sanskrit scholar from Tamilnadu. The word Kallalesam in the lines must be about the Dakshinamoorthy at Sivasthanam. Since Padmacharyal mentioned about Vina Vinayagam at the beginning of Panchapathika, it must have been written at Sivasthanam. “Kallalesam” indicates Dakshinamoorthy and “Naadhi dhooram” indicates being present close it. So we can also conclude that during the time of Padmacharyal, Varadharaja Perumal temple and Sivasthanam existed and close to each other.” It was as if Sri Periyava had completed a small upanyasam there.

Sri Periyava with a smile asked Ananthananda Swami, “Swami, Do you think whatever I told is correct?” What should be the meaning of the smile? Should we take this as an explanation to the verses? Even if we take it in that sense, we would still be amazed at the explanation given by Sri Periyava, which would not have been thought even by learned Pandits. But what is more amazing is the way Sri Periyava explains these things to answer a devotee’s doubt and puts them as though they were His guesses. Doesn’t that show His humbleness?


Blessings without any differences

We have heard from Sri Periyava that we are supposed to follow our traditions as per each person’s dharma. We are amazed when we hear Sri Periyava’s kindness in understanding a person’s thoughts and bless him without any expectations or changes from the person.

Thiruviyalur is a village situated at the northern banks of the river Cauvery and is around 4 miles from Kumbakonam. Lot of vidwans hail from that village. Maha Mahaupadhaya Ramasubba Shastrigal was also born in that village. He had completed his Vedic studies at a very early age and was a maha vidwan. There were a lot of students studying under him. Even though he was an Advaitha follower, he had great bhakti towards Lord Vishnu. Other scholars treated him as a Vaishnavite.

He had written a book against performing yagnas. He also believed that among other things, tharpanam should not be performed during eclipses, one should not have darshan of sanyasis, and one should not wear Rudraksham.

In 1918, Sri Periyava visited the villages of Thanjavur on His way to Rameswaram. On His way to Veppathur, Sri Periyava stayed at Thiruviyalur for a day. Ramasubba Shastrigal who was staying at the village was 75 years old at that time.

Shastrigal who had heard about Sri Periyava multiple times from one of his shishya, had a desire to have darshan of Sri Periyava. Even though the tradition followed by Shastrigal was not to have darshan of Sanyasi, but desire of Sri Periyava’s darshan was even more than that. So he sent one of his shishya and asked him to talk to Srimatam manager about his desire.

When Sri Periyava came to know about this, he called the shishya and informed him that Shastrigal need not change his traditions after so many years. Also Sri Periyava asked the Shastrigal to perform a “manaseeka” darshan. Sri Periyava did not stop here. He also gave two high quality shawls to be given as prasadam to Shastrigal.


The Saint who revived the songs

When Sri Periyava was camping at Thiruvidaimaruthur during the year 1949, a lady used to sing songs by reading from a book before Sri Periyava daily. When Sri Periyava asked Ramamurthy about the Thiruppavai and Thiruvempavai sung by the lady, he did not know about it. Then Sri Periyava sent Ramamurthy to check with Devaraja Bhagavathar, if anyone outside knew these songs and will be able to sing it. The Bhagavathar informed Ramamurthy that nobody knew these songs and there is no one who could sing these songs now.

When Ramamurthy said this to Sri Periyava, the Sarveshwaran had planned to call a meeting to discuss about Thiruppavai and Thiruvempavai. When the month of Margazhi (December – January) started Sri Periyava asked him and Kannan to sit on an elephant with a lamp and asked them to chant it by reading it from a book. They were supposed to circumambulate Sri Mahalingaswamy temple. With Sri Periyava’s blessing the meeting was a great success. After that Thiruppavai and Thiruvempavai were sung by vidwans. There were speeches from eminent personalities like Ki. Va. Jagannathan. Sri Periyava also asked the then Commissioner of the Hindu Religious and Charitable Endowment, Sri Uthandaraman to start Thiruppavai and Thiruvempavai meetings at all temples during the month of Margazhi. After that this was more popularized by CDs released by singers like Pattammal and Vasanthakumari.

After some years, Sri Periyava asked Ramamurthy, “You said nobody will sing these songs. Are there anyone singing now?” Ramamurthy replied that if Sarveshwaran Sri Periyava decides, then everything is possible.

Then at another instance at Thanjavur, Sri Periyava pointed at Ramamurthy and said that he is the reason for Thiruppavai and Thiruvempavai being sung everywhere. Will the humble Sri Periyava accept that it was Him who had made that happen? It is true that if we surrender at the feet of Sri Periyava, we will be blessed with health, wealth, peace and happiness.

Grace will continue to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Sri ‘Appayya Kuppuswamy’ is a blessed person. So far we have read three experiences involving Sri Appayya Kuppuswamy under ‘Sri Periyava Mahimai’ newsletters. One is related to Soundaryalahari book, Second incident is Rameswaram travel arrangements for Periyava and third is this incident. I pray to Mahaperiyava to read more such experiences involving Sri Appaya Kuppuswamy with Mahaperiyava.

    I’ve seen some books in archive.org written by Sri Appayya Kuppuswamy. It would be a blessing if we can get a photograph of this Mahan and shared in this blog!

    Hara Hara Sankara Jaya Jaya Sankara!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading