68. Sri Sankara Charitham by Maha Periyava – Proof, he himself has given!


Jaya Jaya Sankara Hara Hara Sankara – For the past several weeks we saw our Periyava citing many evidences from Vedas, Ithihasa Puranas, and disciples that Bhagawathpadhal is none other than Eswara. In this chapter Sri Periyava tells us what Bhagawathpadhal thinks about himself being an avatar. Amidst all these we should keep an eye on the narrator who vividly explains this with so much clarity and conviction which is not possible at all unless he is an avatar himself 🙂

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another captivating drawing & audio. Rama Rama


அவரே அளிக்கும் சான்று

மற்றவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். அதெல்லாவற்றையும்விட ஆசார்யாளே எங்கேயாவது தான் ஈச்வராவதாரம் என்று சொல்லியிருந்தால் அதற்கு ரொம்ப ரொம்ப ‘வால்யூ’ அல்லவா?

ஆசார்யாள் அடக்கமே உருவமாக இருந்தவர். ஆகையால் எத்தனையோ க்ரந்தங்கள் செய்திருந்தும் தம்மைப் பற்றி ஒன்றுமே சொல்லிக் கொள்ளாதவர். மற்றவர்கள் சொல்லியே அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால்தான் அவர் பிறந்த காலம், அவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள், அவர் எழுதிய புஸ்தகங்ககள், போன ஊர்கள், ஸந்தித்த மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றி பலவாறான அபிப்ராயங்கள் உண்டாகியிருப்பது. தான் ப்ரம்மஞானம் பெற்ற ஜீவன்முக்தர் என்பதைக்கூட அவர் ரொம்பவும் லேசாக, ஒரு ஸூசனையாக மாத்ரமே ஸூத்ரபாஷ்யக் கடைசியில் கோடி காட்டியதோடு விட்டிருப்பவர்1. அதனால் அவர் வெளிப்படையாக, “நான் அவதாரம்” என்று சொல்லிக் கொள்வாரென்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனாலும் மறைமுகமாக அப்படி அவர் தெரிவிப்பதாக ஒன்று இருக்கிறது.

தங்களை அடக்கி வைத்துக்கொண்டிருந்த ஆசார்யாள், ராமர் போன்ற அவதாரங்கள் தானென்றில்லை, நன்றாக பகவத் சக்தியை காட்டிய க்ருஷ்ணர் போன்றவர்களும் நரலீலை ருசிக்க வேண்டுமென்பதற்காக அவதாரத்வத்தைச் சில சமயம் முழுக்க ஒளித்து வைப்பதாகவும், சில ஸமயம் மறைமுகமாகத் தெரிவிப்பதாகவும், சில சமயத்தில் மட்டுமே வெளிப்பட ப்ரகடனம் பண்ணுவதாகவும் பார்க்கிறோம்.

(தான்) அவதாரந்தான் என்று காட்ட வேண்டியதாக சில ஸந்தர்ப்பம் நேரிடும். அப்போதும்கூட அவதார விளையாட்டின் ருசி போகப்படாது என்பதால் உடைத்துச் சொல்லாமல் ஜாடை மாடையாகத் தெரிவித்து, குறிப்பாலுணர்த்தி விட்டு விடுவதுண்டு. இப்படியொன்று ஆசார்யாள் சரித்ரத்தில் நடந்தது.

அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதரிடம் வ்யாசாசார்யாள், “ஈச்வரனே அவதாரம் பண்ணப் போகிறான். லோக வழக்கை ஒட்டியும், லோகத்திற்கு வழிகாட்ட வேண்டியதை முன்னிட்டும் அந்த அவதார புருஷன் உன்னிடம்தான் சிஷ்யனாவதற்கு வருவான். அவனுக்கு உபதேசம் பண்ணு” என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தார். அதன்படியே அப்புறம் பாலசங்கரர் அவரிடம் போனார். ‘இதுதான் ஈச்வராவதாரமா?’ என்று நிச்சயப்படுத்திக் கொள்ள நினைத்து அவர் “நீ யார்?” என்று இவரைக் கேட்டார்.

அப்போது, அவரிடம் உண்மையைச் சொல்லித் தானாக வேண்டுமென்பதால் ‘நீ, நான், அவன், அது எல்லாம் ப்ரம்மம்தானே? இதைத் தெரிந்து கொண்டு ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவனே தாம்’ என்று ஆசார்யாள் பதில் சொன்னார். பத்து ச்லோகங்களாக அந்த பதிலைச் சொன்னார். “தசச்லோகி” என்று அதற்குப் பேர். அதில் ஒவ்வொரு அடியையும் முடிக்கும்போதுதான் ‘தாம் சிவனே’ என்றும் தெரிவித்துக் கொண்டார். கைலாஸத்தில் ஜடாதரனாக, கங்காதரனாக ஒரு ரூபத்தில் உள்ள சிவன் என்று உடைத்துச் சொன்னால், அது அழகில்லை, கௌரவமில்லை. ஆனால் ப்ரம்மத்தையே சிவம் என்று ‘சாந்தம் – சிவம் – அத்வைதம்’ என்று உபநிஷத்தில் சொல்லியிருக்கிறதே: ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்பதையே ‘சிவோஹம்’ என்று சொல்லும் வழக்கமிருக்கிறதே — அந்த விதத்தில் சொல்லிவிடுவோமேன்று நினைத்தார். ஒவ்வொரு அடியையும்,

“தத்-ஏகோ (அ)வசிஷ்ட: சிவ: கேவலோ (அ)ஹம்”

என்று முடித்தார்!

குறிப்புணர்ந்து கோவிந்த பகவத்பாதாளும், ‘(இது) வ்யாஸர் சொன்ன ஆசாமிதான்’ என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அவதார விளையாட்டு கலகலத்துப் போகாமல் தாம் குரு, அவர் சிஷ்யர் என்கிற பாவங்களை வருவித்துக் கொண்டு உபதேசம் பண்ணினாரென்று கதை போகிறது.

நாம் கதையை விட்ட இடத்துக்குப் போகலாம்.

பரமேச்வரன் தக்ஷிணாமூர்த்தியாக இருந்து கொண்டு தர்ம ஸம்ஸ்தாபனம், அத்வைத ஸ்தாபனம் செய்வதற்காக அவதாரம் பண்ணுவதென்று ஸங்கல்பம் செய்து கொண்டு, ஆனாலும் பத்ததியை அநுஸரித்து, தேவர்கள் வந்து ப்ரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று ஆலமரத்தின் கீழேயே மௌனமாகக் காத்துக் கொண்டிருந்தார்.

முன்னேயே சொன்னேன், இரண்டு ப்ரார்த்தனைகள் செய்யப்பட்ட பின்னரே அவதாரம் நிகழ்வதாக ஒரு பத்ததி என்று. ஒன்று தேவர்கள் ஸ்வாமியை அவரிருக்கும் திவ்ய லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்பாடு செய்வதற்காகச் செய்யும் ப்ரார்த்தனை; இன்னொன்று, பூலோகத்தில் அவரை அவதார புத்ரனாக வரவேற்பதற்காகத் தகுந்த யோக்யாதாம்சங்களுள்ள ஒரு ஸதிபதி பண்ணுகிற ப்ரார்த்தனை என்று சொன்னேன்.

நம் ஊரில் வெள்ளம், பஞ்சம், இப்படி ஏதோ ஒரு உத்பாதம். தலைநகரில் உள்ள ராஜாங்கத் தலைவருக்குத் தன்னாலேயே இதற்கான நிவாரணம் தர வேண்டுமென்ற கடமையும், கவலையும் இருக்கும். ஆனாலும் நம்மூர் கவர்னரோ, மந்த்ரியோ ‘ரிப்போர்ட்’ கொடுத்த அப்புறம்தான் அவர் ‘ஆக்ஷன்’ எடுப்பது என்று பத்ததி இருக்கிற தோல்வியோ? இப்படித்தான் பூலோகத்தில் ஏற்படும் அதர்ம உத்பாதம் பற்றி தேவர்கள் ‘ரிப்போர்ட்’ கொடுத்த அப்புறம்தான் ஸ்வாமி ஸரி செய்வதற்காக அவதரிப்பது.

லோக நிர்வாஹத்தில் முக்யமான அதிகாரியாக ஸ்வாமி நியமித்திருக்கிற ப்ரஹ்மா, மற்ற அதிகாரிகளான தேவர்களை அழைத்துக் கொண்டு ‘ரிப்போர்ட்’ கொடுப்பதற்காக தக்ஷிணாமூர்த்தி உட்கார்ந்து கொண்டிருந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.

________________________________________________________________________
1ஆசார்யர்களின் ப்ரஹமஸூத்ர பாஷ்யம் IV-1-15, இவ்விடத்தில் ப்ரம்ம ஞானம் ஸித்தித்த பிறகும் ஒருவர் உடலோடு உயிர் வாழ முடியுமா என்னும் விஷயம் விவாதத்தால் தீர்க்கக்கூடிய உண்மையல்ல என்று சொல்லி, உடல் தரித்துள்ளபோதே ஒருவர் தாம் ப்ரம்மஞானம் பெற்றிருப்பதை உள்ளத்தில் நிச்சயமாக உணர்கிறாரெனில் அதை ஆக்ஷேபிக்கப் பிறரொருவருக்கு எப்படி ஸாத்தியமாகும்?’ என்று வினவுகிறார். ஞான ஸித்தியே முக்தி, அதைப் பெற்ற பின்பும் உடலில் உயிர் வாழ்பவனே ஜீவன்முக்தன் என்பதற்கு ஆசார்யாளும் விவாதம் மூலமே பல காரணம் காட்டி, முடிவில் இப்படிச் சொல்வது தமது சொந்த உதாரணத்தையே அவர் குறிப்பாலுணர்த்துகிறாரென்று ஐயமறத் தெரிவிக்கிறது.

_______________________________________________________________________________________________________________

Proof, he himself has given!

Let what others say be.  More than all that, would there not be greater value if somewhere he himself had said that he was indeed Eswara incarnate?

Acharya was an epitome of humility. Therefore, even though he had written many treatises, he had never mentioned anything about himself. Because we have to know about him only from what others say, there are several opinions about when he was born, the organisations he had established, the books he had written, the places he had gone, the people he had met etc.  He is one, who has given only a slight, indirect hint even about him being a liberated soul while still alive, towards the end of the commentaries on Sutraas and left it at that1.  Therefore, it cannot be expected that he would claim openly that ‘I am an incarnation’.  Still there is one, which indicates that he has indirectly conveyed that.

We observe that it is not only in the case of incarnations like Acharya and Rama, who had suppressed themselves, but also seen in the case of incarnations like Krishna, who had displayed the divine power fully, that they had cast aside their original qualities sometimes, indirectly conveyed it sometimes and only rarely, displayed openly, in order that their human pastime should be interesting.

Situations arise when it has to be revealed that he is an incarnation.  Even in such circumstances, with a view to not losing the exciting flavour of the incarnation’s pastime, it is only mentioned indirectly, as a hint, without splitting it open.  Such a thing happened in the life of Acharya.

Vyasacharya had directed Govinda Bhagawadpada, the guru of our Acharya, saying “God himself would be incarnating.  In tune with the situation in the world and to provide guidance to the world, he would become your disciple and you should teach him”.  Accordingly the young Shankara had gone to him.  With a view to confirming whether “this was the Eswara incarnate”, he asked him, “Who are you?”

As he had to necessarily reveal the truth then, he replied to him, “Is it not that you, me, Him, that, everything is Brahmam?  I am the one who is the Brahmaswarupa, (being in the nature of supreme spirit) knowing this”.  He gave the reply in ten verses.  It is called “Dasasloki”.  At the end of every sentence, he also conveyed that “I am indeed Shiva”. Putting it bluntly that he was the Jataadhara, Gangadhara, the form of Shiva in Kailash, would not be appropriate.  So he thought that he would convey in the manner stated in Upanishads as ‘Santham-Shivam-Adwaitam’, meaning that Brahmam is Shiva and following the practice of saying Áham Brahmasmi’ as ‘Shivoham’.  He ended every sentence as,

“Tat-Eko (A)vasishta: Shiva: Kevalo (A)ham”.

The story goes on to say that sensing the indications, Govinda Bhagawatpada got it established that ‘(this) is indeed the person mentioned by Vyasa’ and in order that the drama of incarnation does not lose its charm, he assumed the role of Guru and with Sankara as the disciple, gave instructions to him.

Let us get back to where we left the story.

As Dakshminamurthy, Parameswara had resolved to take the incarnation in order to re-establish Dharma and establish Adwaita but waited silently under the Banyan tree, for the Devas to come and request Him, as per the procedure.

I have already mentioned to you before, that there is a convention to take an incarnation only after two requests are made.  One is the request from the Devas to make Eswara leave the divine world where he resides and go over to the earthly world; the second one that I had mentioned was the prayers of the meritorious parents, in the terrestrial world, who would welcome Him as their incarnate son.

Say there is some calamity like flood, drought, etc., in our State.  It is the duty and responsibility of the leader of the Government in the capital that he should himself offer relief.  However, is there not a procedure, in which he would take action only after the Governor or the Minister of our State gives a report?  In a similar manner, Swami takes an incarnation to rectify the situation only after the Devas give a ‘report’ on the rise of Adharma in the material world.

Brahma, appointed by Swami, as the important official in administering the world, reached the base of the Banyan tree, where Dakshinamurthy was sitting, taking along the Devas, the other officers, to give the ‘report’.
_________________________________________________________________________

1 Acharya’s Brahmasuthra Bhashyam IV-1-15, Here, while stating that it is not a matter which can be decided by debate whether a person can live with his body, even after attaining Brahma Gnana, he queries how would it be possible for a second person to object, if one is able to realise for sure, in his heart, having attained Brahma Gnana while being alive in this body.  It is clear without any doubt that Acharya was indirectly indicating by his own example, after citing many reasons through debates, that liberation is attainment of Gnana and that the person who continues to live in his body even after attaining it, is Jeeva muktha (being emancipated while being alive).

_______________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. ஞா, 9 டிச., 2018, 11:41க்கு, Sage of Kanchi எழுதியது:

    > Sai Srinivasan posted: ” Jaya Jaya Sankara Hara Hara Sankara – For the > past several weeks we saw our Periyava citing many evidences from Vedas, > Ithihasa Puranas, and disciples that Bhagawathpadhal is none other than > Eswara. In this chapter Sri Periyava tells us what Bhagawathpa” >

  2. Its 68 th part. Periyava is 68th Acharya of peetam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading