Periyava Golden Quotes-972


Jaya Jaya Sankara Hara Hara Sankara – A very important quote to follow. Rama Rama

ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.

இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

On days of observance of fast, other than Ekadasi, light refreshments (not referring to the Shastriya phal ahar but to idly dosa etc) can be taken one time.  During the other time, Sastriya Phal ahar, i.e., fruits and milk can be taken.  People who are weak, can take meals once and refreshments like idly, the other time.  But should continue to strive towards observing the restriction fully.

It is best to observe Ekadasi without taking even water.  It is also quite difficult.  To have only natural juices is the next level.  A still lower level would be to have fruits and milk as actual Phal aharam.  The next level is to have one time, snacks, like poori, nutrient mix etc., and to have fruits and milk the other time.  Still one step lower would be to consume cooked food items like Idly, Dosa, Pongal, Uppuma, etc., one time and to have fruits and milk the other time.

One should not descend to lower levels than this.  That is, should not happen to consume rice even once.  We should not lower the standard of Ekadasi to the same level as the other days of observances of fasting when rice is eaten one time and Idly, Dosa, etc., the other time.  It is said that if rice is eaten on Ekadasi, there is no expiation (prayaschit – redemption) at all. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Our Maha Periava is always known for His pragmatism. He always persuade people to fall in line with Dharma Shastras. He always carry all with Him. A Jagat Guru in every sense of the title. Lal

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading