Periyava Golden Quotes-966


சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.
இதை ஆரம்பிக்கிற திதியையொட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை ‘கட்டெறும்பு சாந்த்ராயணம்’ என்றும், மற்றதை ‘கோதுமை சாந்த்ராயணம்’ என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம். கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்து விடுகிறது; மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிட வேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்; அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும். –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Chandrayanam is having food in measures corresponding to the day of the waning and waxing moon. Depending on the lunar day (thithi) when this is commenced, one can be comically called as ‘Katterumbu Chandrayana’ and the other as ‘Godhumai Chandrayana’ (Wheat Chandrayana).  How does a black ant look like?  Its starts with an expanded head, while its middle portion is thinner and again the end part is expanded.  Similarly in the Chandrayana which is commenced on a full moon day, food of 15 morsels should be eaten.  On the next day, Krishna paksha prathamai (first day of waning moon), 14 morsels should be taken.  Then the next day, Dwithiyai, 13 morsels, thus gradually reducing to observing complete fast on new moon day, (Amavasya).  Then on the next day of Sukla paksha prathamai (first day of the waxing moon), only one morsel should be eaten, second day, two and gradually increasing and completing to 15 morsels on full moon day (Pournami). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading