67.2 Sri Sankara Charitham by Maha Periyava – Proof given by direct disciples

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What exactly does each of the four primary disciples of Bhagawathpadhal tell about him? Sri Periyava continues.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another pertinent drawing & audio. Rama Rama


நேர் சிஷ்யர்கள் தரும் சான்று

தோடகாசார்யாள் புத்தி பிரகாசமே இல்லாத மாதிரி பரம எளிமையாக அடங்கியிருந்து கொண்டு நிறைந்த பக்தியுடன் ஆசார்யாளுக்கு சரீர ஸேவை செய்து வந்தவர். அப்படிப்பட்டவர் உணர்ச்சிப் பெருக்கில் தம்முடைய குருவையே பகவதவதாரமாகக் கொண்டாடுவது இயற்கைதான். ஸுரேச்வராசார்யாள் அவர் மாதிரி இல்லை. அவர் மஹா பண்டிதராக ப்ரகாசித்தவர். பூர்வத்தில் நிறைய யாக, யஜ்ஞாதிகள் செய்த கர்ம மீமாம்ஸகராக இருந்து கொண்டு அந்த மதத்தை ஆதரித்துக் காரஸாரமாக வாதங்கள் பண்ணியவர். ஆசார்யாளின் ஞான மார்க்கத்தைக் கட்டோடு ஆக்ஷேபித்தவர். முதல் முதலில் அவர் ஆசார்யாளைக் கண்டபோது3 ஆசார்யாளுடைய ஞான காந்தியோ, காருண்யா மாதுர்யமோ அவரைக் கொஞ்சங்கூடத் தொடவில்லை. ரொம்பவும் அவமரிதையாக, சண்டை பிடிப்பதாகத்தான் (அவர் ஆசார்யாளிடம்) பேச ஆரம்பித்தார் என்று சங்கர விஜயங்களில் இருக்கிறது. அப்புறம் அவரே ஆசார்யாளிடம் (வாதத்தில்) தோற்றுப் போய், ஆசார்யாளின் ஸித்தாந்தமே ஸித்தாந்தம் என்று ஏற்றுக் கொண்டு, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு அவருடைய சிஷ்யராக ஆனார். முன்னே ஒரே கர்மாநுஷ்டானம், அதற்காக வாதச் சண்டை போடுவது என்று இருந்ததற்கு நேர்மாறாக இப்போது ஒரே ஞானம், வேதாந்தம் என்று தத்வார்த்தமாகவே போனார். கார்யமே இல்லாமலிருக்கிறதுதான் முடிவான லக்ஷ்யம் என்பதை விளக்கி ‘நைஷ்கர்ம்ய ஸித்தி’ என்று புஸ்தகம் எழுதினார். ஆக பூர்வத்தில் தீவரமான கர்ம மீமாம்ஸகராக இருந்த போதும் ஸரி, அப்புறம் ஆசார்யாளின் சிஷ்யராகி அடியோடி மாறிய பிறகும் ஸரி, அவர் உணர்ச்சி வசப்படுவது என்று இல்லாமலிருந்தவர். முதலில் ஒரே காரியமும், அறிவுச் சண்டையுமாக இருந்தார். அப்புறம் மனஸின் உணர்ச்சிகளே இல்லாத ஞானம், சாந்தம் என்பதில் ஈடுபட்டு விட்டார். தத்வ ரீதியில் விஷயங்களை எடுத்துச் சொல்லி நிலைநாட்டுவதில்தான் இப்படியானவர்களுக்கு கவனம் இருக்கும். குருவை அவதாரமாக ஸ்துதித்து, ‘ஸமஜாயத சேதஸி கௌதிகதா’ என்று தோடகாசார்யாள் சொன்னாற்போல் சித்தம் ஸந்தோஷத்தில் பூரித்து நிறைவாக இவர்கள் சொல்லுவதற்கில்லை. இப்படி எல்லாமிருந்தும் அவர் (ஸுரேச்வரர்) ஆசார்யாளைத் தமோந்தகாரத்தை விரட்டும் ஞான ஸுர்யனாகக் கொண்டாடிச் சொன்னாரென்று பார்த்தோம். அது ப்ருஹதாரண்யக வார்த்திகத்தில், தைத்திரீயோபனிஷத்திற்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யத்திற்கும் ஸுரேச்வராசார்யாள் வார்த்திகம் எழுதியிருக்கிறார். அதிலே ஆசார்யாள் பரமசிவ அவதாரம் என்றே த்வனிக்கும்படியாக ஒரு வாக்கியம் சொல்லியிருக்கிறார்.

முமுக்ஷு – ஸார்த்தவாஹ்ஸ்ய பவ- நாம- ப்ருதோ யதே:

‘முமுக்ஷுக்களின் கோஷ்டிக்கேல்லாம் தலைவர், பவனுடைய பெயரைத் தாங்கும் யதி (‘ஸந்நியாஸி)’ என்று அர்த்தம். முமுக்ஷு என்றால் மோக்ஷ காங்க்ஷிகள், அதாவது மோக்ஷம் அடையவேண்டும் என்று விரும்பி அதற்காக முயற்சி செய்பவர்கள். ஸார்த்தவாஹன் என்றால் பொதுவாக ஒரு பெரிய வியாபாரிகளின் கோஷ்டிக்குத் தலைவன் என்று அர்த்தம். படகுகளில் திரை கடல் ஓடி, அல்லது பாலைவனத்தில் ஒட்டகங்களின் மேல் ஏறிக் கொண்டு — இப்படியெல்லாம் வியாபாரிகள் caravan என்று போகும்போது ஏற்கெனவே அந்த வழிகளெல்லாம் நன்றாக அற்றுப்படி பண்ணிக் கொண்டு, இப்போது மற்றவர்களுக்கு ஜாக்ரதையாக வழிகாட்டி அழைத்துப் போகும் லீடராக ஒரு பெரிய வ்யாபாரி இருப்பானல்லவா? அவன்தான் ஸார்த்தவாஹன். இம்மாதிரி ஸம்ஸாரக் கடலில், அல்லது ஸம்ஸாரப் பாலை வனத்தில் வழிகாட்டியாக முமுக்ஷுக்களை அழைத்துக் கொண்டு போகிற ஆத்மிக ஸார்த்தவாஹராக ஆசார்யாளைச் சொல்லியிருக்கிறார். இந்த வியாபாரியிடமுள்ள’ சரக்கு, அவருடைய செல்வம் என்னவென்றால் ஞானம்தான்! இதைச் சொல்லும்போது பத்மபாதாசார்யார் அவரை (அவருடைய ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்குச் செய்துள்ள ‘பஞ்சபாதிகா’ என்ற வ்யாக்யானத்தில்) ‘பாஷ்யவித்தக குரு’, அதாவது தாம் எழுதிய பாஷ்யங்களையே தம்முடைய செல்வமாகக் கொண்ட குரு என்று சொல்லியிருப்பது நினைவு வருகிறது. ஸந்நியாஸியின் லக்ஷணப்படி பொருட் செல்வம் அவரிடம் இல்லாவிட்டாலும் ஞானச் செல்வத்தில் பெரிய வியாபாரித் தலைவராயிருந்திருக்கிறார்!

அதிருக்கட்டும். அவதார ஸமாசாரமல்லவா பார்த்துக் கொண்டிருந்தோம்? அதற்கு ஆதரவாக (ஸுரேச்வரர்) ‘பவ – நாம- ப்ருத்’ என்கிறார். ‘பவன் என்கிற, அதாவது சிவன் என்கிற நாமத்தை தரித்துக் கொண்டிருப்பவர்’ என்கிறார். இப்படி எதற்காகச் சொல்ல வேண்டும்? சிவாவதாரம்தான் இவர் என்று hint பண்ணுவது தவிர இதற்குக் காரணமில்லை!

இப்போது பத்மபாதாசார்யாளை விட்ட இடத்தில் எடுத்துக் கொள்வோம். ஸூத்ர பாஷ்யத்திற்கு வ்யாக்யானம் செய்திருப்பதில் அவருடைய ஞானமும் வித்வத்தும் தெரிகிறதென்றால் ஆசார்ய சரித்ரத்தைப் பார்க்கும்போது அவருடைய உசந்த பக்தியுள்ளம் பல கட்டங்களில் தெரியும். தோடகாசார்யர் ஞான பாண்டித்யத்தை அடக்கி வைத்துக் கொண்டு பக்தராக மட்டும் தெரிந்தார். பக்தி உணர்ச்சியை அப்படியே கொட்டினார். ஹஸ்தாமலகரோ கிட்டத்தட்ட தக்ஷிணாமூர்த்தி மாதிரியே ஞானப் புஸ்தகம், ஞான வாதம் என்றுகூடப் பண்ணாமல் ஒரேயடியாக ஞானத்தில் தோய்ந்து போனவர். உணர்ச்சி என்பதே அங்கே கிட்டேவராது. ஸுரேச்வராசார்யாள் வேறே தினுசில் உணர்ச்சி வசப்படாமலிருந்தார் என்று பார்த்தோம். பத்மபாதாசார்யார்தான் ஞானியாக இருந்ததோடு emotional, intellectual என்று சொல்கிற இரண்டாகவும் இருந்து கொண்டு பக்தராகவும் இருந்தார், தத்வார்த்தங்களை விவரித்துச் சொல்லும் வித்வானாகவும் இருந்தார்.

அவர் பஞ்சபாதிகாவில் அசார்யாளை ரொம்பவும் ரஸமான விதத்தில் சிவாவதாரமாக ஸதோத்ரித்திருக்கிறார். பரமேச்வரனுக்கு ஆப்போஸிட் குணங்கள் மாதிரியே ஆசார்யாளுக்கு இருப்பதாக வேடிக்கையாக வார்த்தை விளையாட்டு பண்ணி, ‘ஒரிஜினல் சிவன் அப்படி; அவதார சிவன் இப்படி’ என்று சொல்லியிருக்கிறார்! இப்போது நாம் ஆசார்யாளை ‘ஆதி சங்கரர்’ என்கிறோம். அவருக்குப் பிற்பாடு அவர் ஏற்படுத்திய அநேக ஆசார்யபீடங்களில் வரிசையாக வந்துள்ள அத்தனை ஸ்வாமிகளுக்கும் ‘சங்கராசார்யார்’ என்றே பேர் இருப்பதால், இவர்களுக்கெல்லாம் மூல புருஷராக இருந்தவரை ‘ஆதி’ சங்கரர் என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆசார்யாளின் காலத்திலேயே இருந்தவர்கள் அவரை ‘ஆதி’ சங்கரர் என்று சொல்லியிருக்க முடியாது. அவருக்கு ஸமகாலத்தவர்களாக இருந்து கொண்டே அவரை அவதார புருஷர்தான் என்று தெரிந்து கொண்டவர்கள் கைலாஸநாதனான சங்கரனையே ஆதி சங்கரன் என்றும், அவர்களுக்கு மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த ஆசார்யாளை அவதார சங்கரர், அல்லது அபிநவ (புதிய) சங்கரர் என்றும்தான் சொல்லி வந்திருப்பார்கள். இந்த ரீதியில் பத்மபாதாசார்யாள் அவரை “அபூர்வ சங்கரர்” என்று சொல்கிறார். பூர்வ காலத்திலிருந்து சங்கர நாமம் தாங்கியிருப்பது கைலாஸ நாதனான பரமேச்வரன். அவனே புதிதாக நிகழ்காலத்தில் வந்துள்ளபோது அபூர்வ சங்கரராகி விடுகிறான்!

இப்படி ‘அபூர்வ சங்கரர்’ என்று பேர் கொடுத்ததில் ஒரு சிலேடையும் பண்ணியிருக்கிறது. அந்த ச்லோகம் முழுக்க ஏகப்பட்ட சிலேடைகள். அதில் இதுவும் ஒன்று. “அபூர்வ” என்றால் அதிசயமான, விசித்ரமான என்றும் அர்த்தம் இருக்கிறது. “ரொம்ப அபூர்வமாயிருந்தது” என்று நாம் ஒன்றைச் சொல்லும்போது இந்த அர்த்தத்தில்தான் சொல்கிறோம். கைலாஸ சங்கரருக்கு நேர்மாறாக அநேக விஷயங்கள் அவதார சங்கரரிடம் இருப்பதாக ச்லோகத்தில் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் ‘அபூர்வ சங்கரர்’ என்று முடித்திருப்பதால், ‘இப்படி ஒரு அதிசயமான, விசித்ரமான பரமசிவனாக இவர் இருக்கிறார் பார்த்தீர்களா?’ என்று காட்டுகிற மாதிரி இருக்கிறது.

3 இச் சம்பவ விவரங்கள் பிற்பாடு காண்போம்.

__________________________________________________________________________________________________________

Proof given by direct disciples

As though he was not mentally bright, Totakacharya was one who had been very simple and obedient and had rendered physical service to Acharya with great devotion.  It is quite natural for such a person to celebrate his own guru as divine incarnation.  Sureshwaracharya was not like him.  He had shone as a very great scholar.  He was previously, a Karma Meemamsa (follower of Meemamsa religion) and done several holy sacrifices and offerings and has engaged in bitter arguments in support of his religion.  He had staunchly objected to the Gnana path of Acharya3.  When he had met Acharya the first time, effulgence of Acharya’s knowledge or compassion or charm did not affect him even a bit.  It is mentioned in Shankara Vijayam that he had started talking to Acharya very insultingly and contentiously.  Later, he lost in his debate with Acharya, acknowledged that only Acharya’s doctrines were indeed true, took to renunciation and became his disciple.  From being totally devoted to only practising one’s own duties and arguing in favour of that, he changed to the diametrically opposite, to all Gnana, Vedanta and became very philosophical.  He wrote a book, ‘Naishkarmya Siddhi’, explaining that being inactive is the ultimate goal.  In sum, whether he was as a Karma Meemamsa previously or totally changed after becoming the disciple of Acharya, he was not the one to get emotionally excited.  Initially, he was totally into engaging in activities and fights of knowledge.  Later, he engaged in Gnana and peaceful composure, totally devoid of emotions.  These kind of people would be only concentrating on explaining and establishing matters based on truth.  They are the type who would not eulogise their guru as an incarnation, with their heart filled with happiness and say with contentment, like how Totakacharya had stated “Samajaayatha Sedhasi Kauthikathaa”.  Despite he being so, we had seen that he had revered Acharya as the sun which would drive away the ignorance.  Sureshwaracharya has written explanatory notes (varthikam) to the Bhashyam written by Acharya for Thaithiriopanishad in Brihadharanya varthika.  In that he has made a sentence which sounds that Acharya was indeed the incarnation of Lord Paramashiva.

Mumukshu-Saarthavaahsya Bhava-Naama-Brutho Yathe:

It means, this Sanyasi who bears the name of Bhavan, is the leader of all the groups of Mumukshus.  Mumukshu means Moksha Kangshikas, that is, people who are desirous of attaining liberation and taking efforts towards that.  Sarthavahan means, generally, a leader of a group of big traders.  When traders go to different places, crossing the ocean on vessels, or across the desert on camels, in a caravan, would there not be a trader who is well versed with the route owing to prior experience and lead the pack carefully, he is called Saarthavaahan.  On similar lines, he has described Acharya as the spiritual Saarthavaaha, who is guiding the Mumukshus across the desert or the ocean of worldly existence.  The goods and wealth of this trader is only Gnana.  When we talk about this, we are reminded about what Padmapadacharya has described Acharya as (in the explanations by name, ‘Panchpadhika’ to the commentary on Brahma Sutra) ‘Bhaashyavithaga Guru’, that is, he is the one who has the commentaries written by himself, as his wealth.  While, not having any material wealth with him as per the characteristics of a Sanyasi, he was a leader-trader in the wealth of knowledge.

Let that be.  Were we not looking into the matter of incarnation?  In support of this, Sureshwaracharya says “Bhava Naama-Bruth”.  He says, Bhavan, that is, the person who possesses the name of Shiva. Why should it be stated like this?  There is no reason other than to hint that it is an incarnation of Shiva!

Now, we will continue from where we left (talking about) Padmapadacharya.  While his knowledge and scholarly nature is seen in his having written explanation to Suthra Bhasya, his great devoted heart is observed in many places, when reading the biography of Acharya.  Totakacharya, suppressed his scholarly knowledge and remained, only a devotee.  He poured his expressions of devotion completely.  Whereas, we had seen that Hasthamalakara, not even doing anything like writing books on Superior knowledge or engaging in debates and almost like Dhakshinamurthy, remained completely immersed in Gnana.  Feelings will not come anywhere near.  We had seen that Sureshwaracharya remained emotionally not affected in a different way. Only Padmapadhacharya, along with being a man of superior knowledge, was also what is called second nature, being intellectual and emotional and also remained a devotee.  He was also, a scholar who could explain the truths.

He has sung paeans on Acharya as the incarnation of Shiva himself, in a very delightful way, in Panchapatika.  He has stated that Acharya was also having qualities similar to Parameswara having qualities of opposite nature and in a play of words, described that the ‘Original Shiva was like that’ and ‘the Incarnate Shiva is like this’!  We call Acharya as ‘Adhi Shankara’, now.  As all the Swamijis who have come in line following him as the head in the various seats of spiritual precept he had established are called, Shankaracharya, a convention has come to refer to Acharya as ‘Adi’, as he was the primary one.  But those who lived during the life of Acharya, could not have called him as ‘Adi Shankarar’.  While being his contemporaries and realising that he was indeed an incarnate, would have referred to only the Shankara, the Kailasanatha as Adi Shankara and the Acharya who was moving in their midst as the incarnated Shankara or Abhinava (new) Shankara.  In this way, Padmanabhacharya refers to him as ‘Apurva Shankara’.  The person who is adorning the name, Shankara, since early times is the Parameswara, the Kailashanath.  He only becomes the Apurva Shankara, when he comes in the present day.  In having given the name, ‘Apurva Shankara’, it gives rise to a figure of speech, providing two meanings (Sledai).  That verse contains several such dual meaning words.  This is also one of them.  ‘Apurva’, means, wonderful, peculiar.  When we say something was very ‘Apurva’, we say that to only mean this way.  Since it has been ended with ‘Apurva Shankara’, after listing out several things found in this Acharya, which are diametrically opposite to the Kailashanatha Shankara, it appears to be pointing out ‘Do you see, how he is, as a wonderful and peculiar Paramashiva?’.

3 We will see later, the details of these events.

___________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading