67.1 Sri Sankara Charitham by Maha Periyava – Proof given by direct disciples

Jaya Jaya Sankara Hara Hara Sankara – After barrage of proofs from Veda, Ithihasa, and Puranas that Sri BhagawathPadhal is none other than Lord Parameswara Sri Periyava goes on to explain what his direct disciples think of him.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another crackerjack drawing & audio. Rama Rama


நேர் சிஷ்யர்கள் தரும் சான்று

ஆசார்யாளைப் போற்றுவதற்கென்றே ஏற்படாமல் பொதுப்படையாக இருக்கப்பட்ட புராண இதிஹாச க்ரந்தங்களில் அவரை அவதார புருஷராகச் சொல்லியிருப்பதற்கு ஒருவிதமான முக்யத்வம் உண்டென்றால், அவரை நேரில் பார்த்து, நெருங்கிப் பழகி, அவரோடு கூடவே இருந்த சிஷ்யர்களான மஹான்கள் தங்களுடைய குருவைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களென்பதற்கும் ஒரு தனியான மதிப்பு உண்டு. யாரையுமே வெளியுலகம் எதோ கொஞ்சம் தெரிந்து கொள்வதோடு சரி. லோகத்திற்குத் தெரியும்படியாக ஒருத்தர் எப்படித் தன்னைக் காட்டிக் கொள்கிறாரோ அதை வைத்துத்தான் வெளியுலகம் அவரை எடைபோட முடியும். யாராயிருந்தாலும் லோகத்தின் பார்வையில் தங்களை நல்லவர் மாதிரியும், அறிவாளி மாதிரியும்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால் வாஸ்தவத்தில் அவர்கள் அப்படி இருக்கிறார்களா, இல்லாவிட்டால் ‘ஷோ’ பண்ணுகிறார்களா என்பது (அவர்களுக்குக்) கூடவே இருந்து நன்றாகப் பழகிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் தெரியும். தத்வ சாஸ்திரப் புஸ்தகங்களை ஒருத்தர் பரம வேதாந்தமாக நல்லமுறையில் எழுதி விடலாம். அப்படியே, படிப்பவர்கள் ‘ஆஹா’ என்னும்படியாக ஸ்தோத்ரங்களும், பக்தி நூல்களும் எழுதிவிடலாம். அதைப் பார்த்து அவர் மஹா ஞானியாக இருக்க வேண்டும், பக்த சிகாமணியாக இருக்க வேண்டும் என்று வெளி மனுஷ்யர்கள் நினைத்து விடுவார்கள். ஆனால், கூடவே இருப்பவர்களுக்குத்தான் தெரியும், வாஸ்தவத்திலேயே அவர் எழுதியபடியும், உபதேசிக்கிறபடியும் தான் வாழ்க்கையில் இருக்கிறாரா இல்லையா என்பது. அநேகமாக வெளிலோகம் நினைக்கிற அளவுக்கு ஒருவர் (பெரியவராக) இல்லை என்றே நன்றாகப் பழகுபவர்கள் நினைப்பதாக இருக்கலாம். வேடிக்கையாக இங்கிலீஷில், பெரிய ‘ஹீரோ’வாக உள்ள எவனும் தான் கூடவே இருக்கும் சேவகனைத் தவிர மற்றவர்களுக்குத்தான் அப்படி இருக்கிறான் என்று சொல்கிறார்கள்.1

ஆசார்யாளைப் போல நம்முடைய மத புருஷர்கள்வெளி வாழ்க்கை ஒரு தினுசு, உள்வாழ்க்கை ஒரு தினுசு என்று இல்லாதவர்கள் என்பது ஸர்வ நிச்சயமான விஷயம்தான். ஸ்வாநுபூதி இல்லாமல் வெறும்அறிவையும், கவி சாதுர்யத்தையும் மாத்திரம் கொண்டு அவர்கள் புஸ்தகம் மட்டும் பெரிசாக எழுதிவிடவில்லை என்பது நமக்குத் தீர்மானமான விஷயம்தான். ஆனாலும்கூட அவர்கள் கூடவே வஸித்து அத்யந்தமாக இருந்தவர்கள் அவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஒரு குதூஹலம் இருக்கவே இருக்கிறது. அதிலும் ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களாகக் கூடவே வஸித்த ஸுரேச்வராசார்யாள், பத்மபாதாசார்யாள், ஹஸ்தாமலகாசார்யாள், தோடகாசார்யாள் ஆகிய நாலு பேரும்மஹா பெரியவர்களாக, ஞான ஸித்தி பெற்ற மஹாத்மாக்களாக இருந்திருப்பதால், “தினந் தினமும் ஆசார்யாளைப் பார்த்துப் பழகிக் கொண்டிருந்த இவர்கள் அவரைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? குறிப்பாக, (அவரை) ஈச்வராவதாரம் என்று சொல்லியிருக்கிறார்களா?” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு இருக்கிறது.

இந்த நாலு சிஷ்யர்களில் ஹஸ்தாமலகாசார்யாள் பண்ணியதாக ஒரே ஒரு சின்ன ஸ்தோத்ரம்தான் “ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்” என்று இருக்கிறது2. அது பரம அத்வைதமாக ஒரே வேதாந்த தத்வ மயமாக இருப்பது. ‘மநுஷ்யர், தேவர், யக்ஷர், அந்த ஜாதி – இந்த ஜாதி என்றெல்லாம் எதுவுமில்லை. இருப்பது ஒரே ஆத்மா ஸ்வரூபம்தான், ‘ப்ரஹ்ம ஸ்வரூபம்தான்’ என்று அது சொல்லிக் கொண்டு போகிறது. அந்த நிலையில் ஆசார்ய ஸ்வரூபம் என்று ஒன்று, அவதார ஸ்வரூபம் என்று ஒன்று ஆகியவை மட்டும் இருக்க முடியுமா என்ன? அதனால் ஹஸ்தாமலகாசார்யாளின் வாக்கில் ஆசார்ய ப்ரசம்ஸையாக (புகழ்த்துதியாக) எதுவும் இல்லை. எனவே, அவர் ஈச்வராவதாரம் என்று காட்டும்படியாகவும் எதுவுமில்லை.

ஆனால் மற்ற மூன்று பேரும் ஆசார்யாளைப் பரம பக்தியோடு பரமச்வரனாகவே ஸ்தோதரித்துச் சொல்லித்தான் இருக்கிறார்கள். (ஆசார்யாளைப் போற்றி) அவர்கள் அநேகம் சொல்லியிருக்கிறார்கள். அது எல்லாவற்றையும் இப்போது தான் சொல்லப் போவதில்லை. அவர் பரமசிவ அவதாரந்தான் என்பதற்கு அவர்கள் அத்தாட்சி கொடுத்திருப்பதை மட்டுமே சொல்லப் போகிறேன். (ஞானஸூர்யனாக அவரை ஸுரேச்வராசார்யாளும், தோடகாசார்யாளும் சொன்னதை எடுத்துக் காட்டியாற்று).

தோடகாசார்யாள் தம்முடைய அஷ்டகத்தில் ஒவ்வொரு அடியையும் “பவ சங்கர தேசிக மே சரணம்” என்று முடித்திருக்கிறார்.

சங்கரர் என்பது ஆசார்யாளுக்குப் புதுசாக இட்டுக்கட்டி வைத்த பெயரில்லை. பூர்வ காலங்களிலிருந்தே பரமசிவனுக்கு இருந்து வந்துள்ள அநேக நாமாக்களில் ஒன்றுதான் அது. ‘இப்போது கண்ணுக்கு முன்னாள் தெரிகிறாரே, இந்த சங்கரர், இவர் அந்த சிவனாகிய சங்கரர்தான்’ என்று ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற வகையில்தான் ‘பவ சங்கர தேசிக மே சரணம்’ என்று போட்டிருக்கிறார். ‘பவன்’ என்பது பரமசிவனின் ப்ரஸித்தி வாயிந்த அஷ்ட நமாக்களில் (எட்டு பெயர்களில்) முதலாவதாகும். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹா(தேவ)ன் என்ற எட்டு பெயர்களும் சிவனுக்கு மிகவும் உகப்பான நாமாக்கள். ‘அந்த பவனாகிய சிவன்தான் சங்கர தேசிகராகிய சங்கராசார்யா ஸ்வாமிகள். அவர்தான் எனக்கு அடைக்கலம்’ என்பதுதான் ‘பவ சங்கர தேசிக மே சரணம்’ என்பதற்கு அர்த்தம்.

‘பவ’ என்பதை க்ரியாபதமாக (வினைச் சொல்லாக) வைத்துக் கொண்டால் ‘ஆகுக!’, ‘இருக்குமாக!’, ‘இருப்பாயாக!’ என்று அர்த்தம். தீர்க்காயுஷ்மான் பவ!’, ‘தீர்க்கஸுமங்கலி பவ!’ என்று சொல்லும்போது இதுதான் அர்த்தம்.

ஆகையால் ‘பவ’ என்பதற்கு அப்படியுங்கூட அர்த்தம் பண்ணலாம்.

ஆனால் (தோடகாஷ்டகத்தில்) நாலாவது ச்லோகத்தில் ஐயம் திரிபுக்கு இடமில்லாமல் ‘பவ’ என்பதை ‘சிவ’ என்ற அர்த்தத்திலேயே ஆசார்யாளுக்குச் சூட்டுகிறார்.

பவ ஏவ பவாந்!

‘பவாந்’ என்றால் ‘தாங்கள்’. ஆசார்யாளை நேரே பார்த்து அப்படிக் கூப்பிட்டு, “தாங்கள் ஸாக்ஷாத் சிவபெருமானே! ‘பவ ஏவ’ – பவனாகிய சிவனேதான்!” என்கிறார்.

பவ ஏவ பவாந் – இதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

‘கௌதுகம்’ என்றால் ஸந்தோஷப் பூரிப்பு. ‘நிதராம்’ என்றால் ‘முழுக்க’, ‘பரிபூரணமாக ரொம்பி’ என்று அர்த்தம். ‘சேதஸி’ – சித்தத்திலே. என்ன சொல்கிறாரென்றால், தாம் ஆசார்யாளை ஏதோ மநுஷ்ய ரூபத்திலிருகிற அநேக குருக்களில் ஒருவராக நினைக்காமல் ஸாக்ஷாத் பரமேச்வரனே என்று தெரிந்து கொண்டுவிட்டதில் தம்முடைய சித்தம் அப்படியே பரமானந்தத்தில் பூரணமாகத் திளைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்.

அப்புறம் மூன்று ச்லோகம் தள்ளி மறுபடியும்,

‘குருபுங்கவ புங்கவகேதந!”

என்கிறார். புங்கவம் என்றால் ரிஷபம். எதிலுமே உத்க்ருஷ்டமாக (மிகவும் உயர்வு பொருந்தியதாக) இருப்பதை ‘ரிஷபம்’ என்று சொல்வார்கள். ‘புருஷர்ஷப’ – ‘புருஷ ரிஷப’ என்றால் புருஷ ச்ரேஷ்டன் என்று அர்த்தம். ‘தேவரிஷப’ என்றால் தேவ ச்ரஷ்டன். தமிழிலும் இதே வழக்கு இருக்கிறது. ‘ஏறு’ என்றால் ரிஷபம். நர ச்ரேஷ்டன், தேவ ச்ரேஷ்டன் என்பதைத் தமிழிலும் மனிதரேறு தேவரேறு என்று சொல்லிக் கேட்கிறோம். புங்கவம் என்பதும் ரிஷபமே. ஆகையால் ‘குரு புங்கவ!’ என்று ஆசார்யாளைக் கூப்பிடுவதற்கு, ‘ஆசார்ய ச்ரேஷ்டரே!’ என்று அர்த்தம்.

அப்புறம் ‘புங்கவ கேதந’ என்கிற இடத்தில்தான் அவதாரத்துக்கு அத்தாட்சி வருகிறது. புங்கவ கேத்தனன் என்றால் ரிஷபத்தைக் கொடியாக உடையவன். இப்படி ரிஷபக் கொடியோனாக இருப்பது யார்? வேறே யார்? பரமேஸ்வரன்தானே?

1 “No man is a hero to his valet”.

2 அது இயற்றப்பட்ட ஸந்தர்பம் குறித்து பிற்பாடு பார்க்கலாம்

3 இச் சம்பவ விவரங்கள் பிற்பாடு காண்போம்

______________________________________________________________________________________________________________

Proof given by direct disciples

While there is a kind of significance in the mention that he is a divine incarnate, by Ithihasas and Puranas which are general in nature and not by those which have been created specifically to eulogise him, there is certainly a special value for what has been stated about him, by the great men, his disciples who have moved closely and were with him throughout.  Anyone will be known to the external world, only to some extent.  The outside world can judge a person, only on the basis of how he exhibits himself to the outside world.  Anyone would only exhibit himself to be a good and intelligent person.  But whether he is actually so or only showing off would be known only to those persons who are with him and move with him closely.  A person can write books on Truth and Sastras, properly in accordance with Upanishads.  Hymns (Sthothrams) and books on devotion could be written so well as to be in awe of people who read them.  Outsiders could conclude that he (the writer) should be very learned, great devotee, etc.  However, only those who are with him would know whether or not he is actually so in his own life, as per what he writes and advocates.  Mostly, it could be that they are not thought to be so (great), by the people who move closely with him, as the outside world thinks.  Humorously, it is said in English, that anyone who is a big ‘hero’, happens to appear to be so, to all others except his own valet1.

It is quite certain that the great men of our religion, like our Acharya, do not have a different external life and a different internal life.  It is a conclusive matter for us, that they have not written the books only with their knowledge and expertise in poetry, without having their own experience.  Still, there is certainly, a delight in knowing about what those people who have lived with them beginning to end, say about them.  There is a curiosity in us, to know, especially, what those four primary disciples, Sureshwaracharya, Padmapadhacharya, Hasthamalakacharya, and Totakacharya, who lived with the Acharya and seen him daily, have to say about him and in particular, whether they have said that he was a divine incarnate.

Among these four disciples, there is only one small hymn, known to have been written by Hasthamalakacharya, the ‘Hasthamalaka Sthothram’2.  It is purely non-dualistic (Adwaitik) and entirely a philosophy as per the Vedanta.  It goes about saying that there is nothing like humans, Devas, this religion, that religion, etc.  It goes about saying that everything is only a form of soul, the Supreme spirit.  In such a situation, could there be separately, a form of Acharya and another form of incarnation?  Therefore, there is nothing eulogising the Acharya, in the verse written by Hasthamalakacharya.  So, there is nothing to show that he was a divine incarnate also.

However, the other three have stated several things, with pure devotion, (in praise of Acharya), treating him as Parameswara himself.  I am not going to touch upon, all of those things.  I am going to tell only about the proof (testimonials) they have given that he was an incarnation of Paramashiva. (We have already shown about he (Acharya) being referred to as Gnanasurya by Sureshwaracharya and Totakacharya.

Totakacharya has ended every sentence in his Ashtaga, as “Bhava Shankara Desika Me Charanam”.

Shankarar is not a name newly imagined and given to Acharya.  It is one of the several names ascribed to Shiva, since early days.  He has written “Bhava Shankara Desika Me Charanam”, to only convey emphatically that this Shankarar, who is visible to our eyes, is the same Shankara, the Shiva.  ‘Bhavan’ is the first among the most famous eight names of Paramashiva.  The eight names, Bhavan, Sarvan, Esanan, Pasupathi, Rudhran, Ugran, Bheeman, and Maha (Deva)n are very close to Shiva.  The meaning of “Bhava Shankara Desika Me Charanam” is “the Bhavan, who is Shiva is the same Shankara Desika, Shankaracharya Swamiji, He is my refuge”.

‘Bhava’, when taken as a verb, means, ‘shall be, ‘Let it be’, Ýou shall be’.  This is the meaning when we say, ‘Dheergayushman Bhava’, ‘Dheergasumangali Bhava’.

Therefore, ‘Bhava’ can be meant that way also.

However, he is giving the name ‘Bhava’ to Acharya, to mean only ‘’Shiva”, in the fourth verse (in Totakashtaka), without an iota of doubt.

“Bhava Eva Bhavaan!”.

‘Bhavaan’, means, You.  He calls Acharya in that way, seeing him in person and says, “You are really Lord Shiva himself! ‘Bhava Eva’- Bhavaan the Shiva.

Bhava Eva Bhavaan – Ithi Me Nitharaam Samajayatha chethasi Kautukitha

‘Kautuka’, means elation out of happiness.  “Nitharaam’’ means, entirely, completely full.  “chethasi”, means, in the mind.  What he says is that since he has realised that his Acharya is not one among many gurus, who are in human form, but actually, the Lord Shiva himself, his mind is completely filled with happiness out of ecstatic joy.

Again, after three verses, he says,

‘Gurupungava Pungavakethana!”.

Pungavam means ‘Rishabham’. Anything which is excellent in its category is called as ‘Rishabham’.  ‘Purusharshabha’- ‘Purusha Rishabha’, means excellent person.  ‘Devarishabha’, means excellent Deva.  This convention is in Tamizh also.  Ëru’, means, ‘Rishabham’.  We hear that Nara Sreshta, Deva Sreshta are said as ‘Manithareru’ and ‘Devareru’ (in Tamizh).  Pungavam is also Rishabham.  Therefore, when Acharya is called, ‘Guru Pungava’, it means ‘Acharya Sreshta’.

Testimony for the incarnation is only found in the place, where it is stated, ‘Pungava Kethana’.  ‘Pungava Kethana’, means the person who has Rishabha as his flag.  Who is the one who has the rishabha flag?  Who else? It is only Parameshwara right?

1 “No man is a hero to his valet”.

2 We will see later, the circumstances in which it was written.

_____________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. I am (we are infact) blessed to read this.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading