Periyava Golden Quotes-953

கிருஷ்ண பரமாத்மாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார். ‘நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத: … யுக்தாஹார … ஸ்ய யோகோ பவதி து:கஹா – பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாகப் பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாய் சாப்பிடுகிறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும்” என்கிறார்*. ஒரேயடியாகப் பல நாள் சேர்ந்தாற்போல் உண்ணாவிரதம் கிடப்பது நம் சாஸ்த்ர ஸம்மதமல்ல. அது ஒரே ஓய்ச்சலில் கொண்டுவிட்டு, மனஸையும் சுத்தி பண்ணுவதற்குப் பதில் ஒரேயடியாகப் பலஹீனமாக்கிப் பைத்தியத்திலோ ஸ்மரணை தப்புவதிலோதான் கொண்டுவிடும். பகவத் ஸ்மரணையில் ஸ்டெடியாக நிற்கப் பண்ணாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Lord Krishna also says that such extremities are not required. He says, ‘Nathyasnathasthu Yogosthi Na chaikantham Anasnatha:….Yukthahara….Sya Yogo Bhavathi Dukhaha’ – ‘It will not be possible for a person who eats excessively, to do yoga.  Person who is starving all the time, also cannot do yoga.  Yoga will be possible and relieve him of his sorrows, only to the person who eats moderately’.  Our sastras do not approve of fasting for days together.  It will only lead to tiredness and instead of purifying the mind, will weaken it and lead to either lunacy or losing memory.  It will not help in fixing the mind steadily on Bhagawan. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading