Sri Periyava Mahimai Newsletter – 1

Jaya Jaya Sankara Hara Hara Sankara – This letter newsletter from Sri Periyava Gruham does not have the month/year associated. Anyway, as always, great incidents including the one experienced by Shri Ra Ganapathi Anna and another to a Tanjore devotee. Rama Rama

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

 

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (20-1-2014)

“எல்லாமுமாகத் திகழும் எளிய மகான்”

ஒப்பற்றமேன்மையில் சுகப்பிரம்மரிஷியின் உயர்வில் விளங்கும் மகா கருணை சொரூபமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் சாட்சாத் சங்கரர் என்றும், ஸ்ரீ காமாட்சி தேவியே என்றும், ஸ்ரீராம அவதாரமே என்றும் அம்மகானைப் பரிபூர்ணமாக பக்தி செய்து அனுபவித்தவர்கள் அறிவார்கள். சங்கீதமோ, சரித்திரமோ, சாஸ்திரமோ, விஞ்ஞானமோ எதுவானாலும் ஸ்ரீ பெரியவாளின் நுணுக்கமான விளக்கங்கள், அவர் விஷய ஞானத்தை மட்டும் வெளிப்படுத்துவது போல் அமையாது. யாருக்குமே தெரிந்திராத தோன்றாத விளக்கங்கள் அவரை சாட்சாத் நடமாடும் தெய்வமாகவே அந்தந்த சந்தர்ப்பங்களில் சுற்றியிருந்த பக்தர்களுக்கு உணர்த்தியுள்ளது.

கல்வித் தெய்வமாம் சாரதையே ஸர்வகாலமும் எழுதினாலுங்கூட ஈசனின் குணமகிமைக்கு எல்லை காண முடியாது என புஷ்பதந்தன் பாடியது  ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடும் பக்தரான ஸ்ரீ ரா.கணபதி விவரிக்கும் இந்தச் சம்பவம் அந்த ஞானசேகரனை ஒரு சாதாரண சந்யாசியாக யாரும் எண்ணிவிடத் தோன்றாது.

ஸ்ரீ மஹா பெரியவாள் சந்தவேளூர் என்ற பட்டிக்காட்டை சிவலோகமாக்கித் திருவருள் செய்து கொண்டிருந்த சமயம். திரு. ரா.கணபதி அவர்கள் தரிசனத்திற்குச் சென்றார். அந்த சாயங்காலத்தில் மாலையைத் தரித்து மனோகரமாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவாள்.

எதிரே ஒரு பக்தர் தியாகையர்வாளின் சாகித்யத்தைப் பாடி முடித்திருந்தார்.

விநாயகுநிலவெது ப்ரோவவே நிநு

விநா வேல்புலெவரம்ம

அப்பாவியாகப் பல பிழைகளோடுப் பாடி  முடித்த அந்த எளிய பக்தரிடம் கருணாமூர்த்தி பாடலை இயற்றியவர் யார், என்ன ராகம் என்று அன்பாக விசாரித்துக் கொண்டிருந்த தருணத்தில் ரா.கணபதி அங்கே இருந்தார்.

“நீ இந்தப் பாட்டுப் பாடினதுக்கு என்ன காரணம்?” என்று ஸ்ரீ பெரியவாள் அந்தப் பக்தரைக் கேட்க அவரோ,

“அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி ன்னு பாட்டுலே வரதுதான்” என்றார்.

“அதனால்” அப்பாவியாக மகானும் நடித்தார்.

“பெரியவாளுக்கு காமாக்ஷிதான் எல்லாம். பெரியவாளே காமாக்ஷிதான் என்கிறதாலே” என்று பக்தர் கபடமில்லாமல் எடுத்தியம்பினார்.

“காமாட்சி தான் எனக்கு எல்லாம். நானே காமாட்சி தான்னு சொல்றயே, நீ என்ன கண்டுபிடிச்சே” எதை வைச்சுக் கண்டுபிடிச்சே” தாமும் சகஜமாக அந்தப் பக்தரை ஸ்ரீ பெரியவா கேட்டார். நானே காமாட்சி தான்னு சொல்றயே என்பதை ஸ்ரீ பெரியவா சொல்லும் போது ரா.கணபதிக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.

“கண்டு பிடிக்க எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. பெரியவாளை ரொம்பப் பேர் இப்படித்தான் சொல்லியிருக்கா. எனக்கும் பெரியவாளைப் பார்த்தா அப்படித்தான் தோணித்து என்று அந்த அப்பாவி குழந்தையைப் போல் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

சரி! அனுபல்லவியிலே காமாட்சின்னு வந்தது. ஆனா பல்லவியிலே விநாயகுநின்னு பிள்ளையார் பேர்லே பாடினாப்போல இருக்கே. நீ பாட்டுக்கு காமாட்சி பாட்டுன்னு பாடிட்டயே என்று தன் திருவிளையாடலை சாட்சாத் சிவபிரானாய் ஆரம்பித்தார் ஸ்ரீ பெரியவா.

என்ன தப்பு இருந்தாலும் பெரியவா மன்னிக்கணும் என்று அழ இருந்த பாட்டுக்காரரை அழாதேப்பா…. தப்பு ஒண்ணும் நீ செய்யலே விநாயகன்னு ஆரம்பிச்சு காமாட்சின்னு போறேதேன்னு கேட்டேன்…….அவ்வளவுதான் போகட்டும் என்ற அந்தப் பக்தரை சமாதனப்படுத்தினார் ஸ்ரீ பெரியவா.

உடனே தயாளர் ரா. கணபதியிடம் பாட்டுக்கு அர்த்தம் உனக்குத் தெரியுமா? என்றார். பொருளென்ன என்று கேட்க ஆரம்பித்த மகான் ஏதோ ஒரு உண்மையை வெளிப்படுத்த ஆயத்தம் செய்வது போல உணர்த்தினார்.

சரி பிள்ளையார், அம்பாள் ரெண்டு பேர் சமாசாரமும் வரதே. அது என்ன?  அர்த்தம் சொல்லு என்று சொல்லிவிட்டுப் பாடலை தானே பாடியும் காண்பித்தார். சாட்சாத் சரஸ்வதிதேவியாய் காட்சியருளிய மகான்.

அநாதரக்ஷகி! ஸ்ரீ காமாக்ஷி! ஸூ

ஜநாக மோசநி! சங்கரி! ஜநநி

என்ற அனுபல்லவிக்கும் முன் கண்ட பல்லவிக்குமாக பிள்ளையாரைப் போலவே என்னையும் நினைச்சு ரட்சி. உன்னை விட்டா வேற தெய்வம் யாரம்மா! அநாதைகளை ரட்சிக்கறவளே! நல்ல ஜனங்களோட பாபங்களைக் களையறவளே! சங்கரி! தாயே! என்று  ரா.கணபதி பொருள் கூறினார்.

“காஞ்சிபுரத்திலே காமாட்சியைப் பத்தி பாடறச்சே எதுக்காக விநாயகரை ரக்ஷிக்கற மாதிரி என்னையும் னு சொல்லி ஆரம்பிக்கணும்? தியாகையர்வாள் லைஃபிலே இதைப்பத்தி ஏதாவது கதை கிதை கேட்டுருக்கியா” என்றார். பெரியவாளிடம் ஏதோ அபூர்வமான கதை இருக்கிறது. அதற்கே இந்தப் பூர்வாங்க நாடகம் என்று ரா.கணபதி நினைத்துக் கொண்டார்.

“நீ எழுத்தாளனாச்சே! ஒரு கதை ஜோடிச்சுப் பாரேன்” என்றார் ஸ்ரீ பெரியவா. ரா. கணபதியும் தனக்குத் தோன்றிய கதையைச் சொன்னார். பிறகு இதுபத்தி பெரியவா புதுசா ஏதோ சொல்லபோறது புரியறது…… சொல்லணும் என்று வணங்கி விஞ்ஞாபித்தார்.

“நீ பிரமாதமா சொல்லியிருக்கே. அந்த மாதிரியெல்லாம் எனக்கு வருமா? எனக்குத் தெரிஞ்ச மட்டும் சொல்றேன். எனக்கு என்ன தோணித்துன்னா என்று ஆரம்பித்தார் ஞானேஸ்வரர். ஸ்ரீபெரியவா ‘தோன்றுகிறது’ என சொல்றதெல்லாம் பரம சத்தியமேயாகும். ஆகவே ஸ்ரீ பெரியவா தன் வாக்கால் தியாகைய்யர் இப்படி செய்திருப்பார். செய்திருக்கலாம், செய்திருக்கக்கூடும் . ஏதோ அனுமானம் போலச் சொல்வதெல்லாம் வாஸ்தவத்தில் ஐயர்வாள் செய்ததே என்பது உறுதியாகும் என ரா.கணபதி நினைத்துக் கொண்டவராய் கேட்கலானார்.

ஸ்ரீ பெரியவா கடந்தகாலத்தில் உண்மையாகவே நடந்த ஒன்றைத் தன் கற்பனைப்போல விவரிக்கலானார்.

“ஐயர்வாள் காஞ்சிபுரம் வந்து காமாட்சி அம்பாள் தரிசனத்துக்காக கோபுரவாசல்லே நுழையறபோதே, எந்தக் கோவில்லேயும் இல்லாத மாதிரி வலது பக்கத்துலே ஒரு ஸ்தம்பத்துலே ஒரு நர்த்தன விநாயகரைப் பார்த்திருப்பார். அதோட உள்ளே நேரே சிந்தூர விநாயகரைப் பார்த்திருப்பார். (அதாவது பார்த்தார். இனி வருவனவற்றையும் இதே போல் தான் திருத்திப் பழக்க வேண்டும்) உள் பிரகார ஆரம்பத்துலே வலது பக்கம் ஆதிசேஷன்னு ஒரு சன்னதி. சுப்ரமணிய சுவாமி சன்னதிதான் அது. அங்கேயும் சின்னதா ஒரு விநாயக பிம்பம் பார்த்திருப்பார்.

“அப்படியே உள்ளே போனா த்வஜஸ்தம்பம். தாண்டின உடனேயே சுவர்லே சின்ன பிள்ளையார் புடைப்பு சிற்பம். பக்கத்திலே நன்னா முழுசாக இருக்கிற இன்னொரு பிள்ளையார். அப்புறம் பிரதட்சணம் வரச்சே பள்ளியறைக்கு நேரே நல்ல ஆக்ருதியாக இஷ்டசித்தி விநாயகர்னு ஒத்தர் உட்கார்ந்தருக்கிறதைப் பார்த்திருப்பார். உத்சவ சந்நிதி வாசல்ல ரெண்டு பக்கமும் பிள்ளையார், சுப்ரமணியர், மூல காமாட்சி சந்நிதி வெளிச்சுவர்லேயும் பிள்ளையாரைப் பார்த்திருப்பார். எங்கேயோ திருவையாத்துலேந்து வந்திருக்கார்னா அர்ச்சகாள் அவருக்கு மரியாதை பண்ணித் தானே கூட இருந்து சுத்திக் காட்டி தர்சனம் பண்ணி வைச்சிருப்பா.

அப்படிக் கூட வந்தவா உற்சவக் காமாட்சியைத் தாண்டறபோது இங்கே மௌனமாப் போகணும். ஏன்னா இங்கே துண்டீர மகாராஜ தபஸ்லே இருக்கார் னு சொல்லி அவரோட பிம்பத்தை காட்டியிருப்பா. பிள்ளையாரே மானிட ரூபத்தில் ராஜாவாக இங்கே ஆட்சி புரிந்திருக்கார். அவர்தான் துண்டீர மகாராஜா. இங்கே துண்டீர மகாராஜா புராணத்தை விவரிக்கிறார். தொடர்ந்து மேற்காலத் திரும்பிப் பிரதட்சணமா போறப்போ இவர் காலத்துக்கு முன்பாகவே தஞ்சாவூருக்குப் போய் ஸ்யாமா சாஸ்திரிகள் கிட்டேந்து நிறைய பாடல் கத்துண்ட பங்காரு காமாட்சியோட காலியான சன்னதி வாசல்லே பிள்ளையார் இருக்கிறதை கவனிச்சிருப்பார்.

கர்ப்பக்ருஹ வாசல்லேயும் இதே மாதிரி பிள்ளையார் மூலஸ்தானத்தில் அம்பாளைத் தரிசனம் பண்ணி மனசு நிறைஞ்சு போயிருப்பார். ராமர்தான் அவருக்கு இஷ்ட தெய்வமானாலும் அடுத்தாப்பலே அம்பாள்கிட்டேயும் நல்ல பக்தி. திருவையாத்துலே தர்மசம்வர்த்தினி, திருவொத்தியூர் திரிபுரசுந்தரி பேர்லேயெல்லாம் அவர் கட்டியிருக்கிற க்ருதிகளைப் பார்த்தாத் தெரியும். அவர் தொண்ணூத்தாறு கோடி ராமநாமா ஜபிச்சது கூட தர்மசம்வர்த்தினி சன்னதி பின்னாலேன்னு சொல்லக் கேட்டிருக்கேன்.

அதனாலே நம்ப அம்பாளை (காமாட்சியை) தரிசிக்கறப்பவும் உருகிப் போயிருக்கார். மனசு அப்படியே ரொம்பிப் போனதினாலே வாய்த்திறந்து பாடக்கூட முடியாம போயிருக்கும் (போய்விட்டது என்றே படித்துக் கொள்ளலாம்)

ஆனா அர்ச்சகாள், அம்பாள்மேல் சுலோகத்தை கல்யாணிராகத்திலே பாடி அர்ச்சனை பண்ணியிருப்பா. தரிசனம் ஆனதும் குங்குமப் பிரஸாதத்தை அரூபலட்சுமிக்கு அர்ப்பணம் பண்ணிட்டுத் தான் இட்டுக்கணும் என்று அர்ச்சகாள் சொல்லி அந்தப் பக்கவாட்டுக்கு அழைச்சுண்டு போயிருப்பா. அங்கேயும் கிழக்கு முகமா சௌபாக்கிய கணபதின்னு ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அங்கேயே தெற்கு முகமாக சந்தான கணபதியே வேறே பார்த்திருப்பார். அப்படியொண்ணும் பெரிய கோயிலா இல்லேன்னாலும் திரும்பற எடத்திலேயெல்லாம் எத்தனை கணபதிகள் என்று எண்ணியவராய் த்வஜஸ்தம்பத்துக்கு வந்தா முடிவாயும் வரசித்தி விநாயகர் காட்சித் தருகிறார். இவரைப் பார்த்து வேண்டிண்டாத்தான் அம்பாள் தர்சன பலன் சித்திக்கும் என்று அர்ச்சகாள் சொல்லிருப்பா……

இதெல்லாம் அவர் கோயிலுக்கு வந்த மொதல் தடவைன்னு வெச்சுக்கலாம். அது ஒரு காலை வேளைன்னும் வெச்சுக்கலாம்…….தர்சனம் முடிஞ்சு அவர் மடத்திலே ஆகாரம் பண்றபோதும் அப்புறம் விச்ராந்தி பண்ணிண்டிருக்கிற போதும் கூட அம்பாளை தரிசனம் பண்ணினதே அடி மனசுலே சுழண்டுண்டு இருந்திருக்கும். அதோட அவளோட கிருபைக்கு விசேஷமா பாத்திரமாகி, கோவில் பூரா பல ரூபத்திலே இருந்த பிள்ளையாரோட பாக்யத்தையும் நினைச்சு நினைச்சுப் பார்த்திருப்பார்.

அன்னிக்கு மத்யானம் அவர் மனசிலே காமாட்சி பத்தின சாகித்யம் பொங்கிண்டு வந்திருக்கும். அப்போ அந்த விக்னேஸ்வரரோட பாக்யத்தையும் நினைச்சுண்டு அந்தப் பிள்ளை மாதிரி என்னையும் நினச்சு கிருபை பண்ணம்மா ன்னு அர்த்தம் கொடுக்கும்படியா விநாயகுநி கீர்த்தனைப் பிறந்திருக்கும்…..என ஸ்ரீ பெரியவா விளக்கி முடித்தார்.

இப்படி எல்லா அம்சங்களையும் அலசி இன்னின்ன இப்படி இப்படி நடந்திருக்குமென தெளிவாக விளக்கி நின்ற ஸ்ரீ பெரியவாளை சாட்சாத் அந்த தியாகய்யரே எதிரே தான் காமாட்சி அம்பாள்மேல் பாடின கீர்த்தனைக்கு சூழ் நிலைகளை விளக்கம் தந்து நிற்பது போலத் தான் ரா.கணபதி பூர்ணமாக உணர்ந்தார்.

அதுதான் சத்தியமும் அன்றோ! தியாகய்யரும் அவரே, சாட்சாத் காமாட்சியும் அவரேயன்றோ!


இல்லம் தேடி வரும் அருள் உள்ளம்.

திரு. கோபால் சுவாமி எனும் ஸ்ரீ பெரியவாளின் பக்தர் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை நெகிழ்ந்து கூறுகிறார். இவருடைய பாட்டனார் ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகள் தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் டிரஸ்டியாக பணியாற்றியபோது, ஸ்ரீ பெரியவா தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தார்.

ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு ஒரு ரோஜா மாலையோடு சென்றவர். தரிசனம் முடிந்து விட்டதை அறிந்து மிகவும் மனவருத்தம் கொண்டார். மிகக் கவலையோடு வீடு திரும்பியவர் அந்த மாலையை வேறு ஏதாவது ஒரு சுவாமிக்கு சமர்ப்பித்து விடலாமா என்று மனைவியிடம் கேட்க, அவர் மனைவி அதை ஸ்ரீ பெரியவாளுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிவிட வீட்டின் பூஜையறையில் மாலையைத் தொங்கவிட்டு வைத்திருந்தனர்.

மறுநாள் காலை விடியும் நேரம் மேல வீதி சங்கர மடத்திலிருந்து ஸ்ரீ பெரியவாள் சீனிவாசபுரம் வந்து, இவர்கள் வீடு அமைந்திருக்கும் கிரி ரோடில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தரிசனம் கொடுப்பதாக ஒரே பரபரப்பு. பிள்ளையார் வீட்டிற்க்குப் பக்கத்தில் இவர்கள் வீடு.

பெரியவா வந்துண்டிருக்கா…………வாசலுக்கு வந்து தரிசனம் பண்ணுங்கோ என்று அங்கிருந்தவர்கள் பரவசமாகக் கூற இவர்கள் வாசலுக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பரம காருண்ய மூர்த்தியான ஸ்ரீ பெரியவா பிள்ளையாரைத் தரிசித்தவுடன் பக்கத்து வீடான இவர்கள் இல்லத்தில் நுழைந்து கிடுகிடுவென பூஜையறைக்கே சென்று விட்டார். ஆனந்தப் பெருக்கால் என்ன செய்வதெனத் தோன்றாமல் இவர்கள் நிற்க அந்த ஆனந்தக் கூத்தாடியோ பூஜையறையில் முன்தினம் மாட்டி வைத்திருந்த ரோஜா மலர்மாலையைத் தானே எடுத்து சூடிக்கொண்டு மலர்ந்த முகத்தில் ஒரு அர்த்தமுள்ள புன்னைகையோடு இவர்களுக்கு அருளி நின்றார்..

விக்கித்துப் போன இவர்களின் கண்களில் நீராகப் பெருக, வாசல் வரை சென்ற புண்ணியமூர்த்தி பெரியவாளுக்கு வெள்ளிக் கிண்ணம் கொடுக்கணும்னு சொன்னாயே என்று மேலும் வியப்படையவைத்தார். அன்றைய முதல் நாள் தம்பதிகள் இருவரும் ஆவலாக வெள்ளிக் கிண்ணத்தை ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். சாட்சாத் ஈஸ்வரருக்கு எப்படி தெரிந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பது மடமையன்றோ! அவசர அவசரமாக ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்பித்து ஆனந்தக் களிப்புற்றனர்.

இப்படி வீடுதேடி வந்து அருள்மழை பொழிந்து ரட்சிக்கும் பிரானை நாமும் பரிபூர்ணமாக சரணடைந்து வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வோமாக!

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

___________________________________________________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai

“The Simple Saint who is everything”

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us. We all know that each of Sri Periyava’s devotees see Him in different forms like Sri Shankara or Sri Kamakshi or Sri Rama and pray to Him. Also everyone knows that Sri Periyava’s detailed explanations in topics of music, history, Shastras and science shows that He is not only an expert in these areas, but most of the times it will be something entirely new and unknown clearly showing that Sri Periyava as “Nadamadum Deivam” to all the devotees.

This incident is narrated by Sri Ra. Ganapathy. When Pushpathanandan sang that even if Sri Saraswati, the Goddess of learning wrote continuously, she will still be unable to write everything about Lord Shiva’s qualities. Sri Ra. Ganapathy feels that the same applies to Sri Periyava. After listening to this event, one cannot visualize Sri Periyava as just a sanyasi.

Sri Periyava was camping at Chandavelur village during that time. Sri Ra. Ganapathy had gone there for Sri Periyava’s darshan and had the opportunity to be standing close to Sri Periyava. Another devotee who had come there sang a composition of the renowned Carnatic music singer Sri Thyagaraja.

“Vinayagu Nilavenu Pravave Ninu

Vina Velbulevaramma”

As the devotee sang innocently with little mistakes, Sri Periyava enquired about the singer and the raga of the song. Sri Ra. Ganapathy was standing near Sri Periyava during all this time.

“What is the reason for singing this song?” Sri Periyava asked the devotee.

“In the song there is a line – Anadha Rakshaki Sri Kamakshi” replied the devotee.

“So?” Sri Periyava asked innocently.

“For Sri Periyava everything is Sri Kamakshi, Sri Periyava and Sri Kamakshi are no different. That is why…” the devotee did not complete the sentence.

Sri Periyava replied, “Yes. Kamakshi is everything for me. But you are telling that I am Kamakshi. What or how did you find?” Sri Periyava in a casual manner asked the devotee how he came to a conclusion that He was Kamakshi. When Sri Periyava asked this question, Sri Ra. Ganapathy who was standing nearby was excited from his head to toe.

“I do not know how to find, but all the other devotees say that, and when I see Sri Periyava, I too feel the same.” The devotee started to cry as he replied.

Sri Periyava continued, “In the song’s anupallavi (second section of a composition), Kamakshi has been mentioned, but the song’s pallavi says “Vinayagu” referring to Lord Sri Ganesha. So why do you say this is Kamakshi’s song?” Sri Periyava in an innocent way started His divine play.

The devotee started to cry and asked forgiveness from Sri Periyava if he had done any mistake. Sri Periyava consoled him and asked him not to cry. Sri Periyava also said that since the song started with Kamakshi and Ganesha, He had asked that question.

Then Sri Periyava turned to Sri Ra. Ganapathy and asked if he knew the meaning of the song. Sri Ra. Ganapathy realized that Sri Periyava wants to let the world know about something new and this was the divine play that is being staged for that.

Sri Periyava asked, “Why does the song have both Ganesha and Kamakshi in it?” and then He started to sing the song’s anupallavi. It looked as if Lord Saraswathi had come down to this earth to sing the song.

“Anadharakshaki! Sri Kamakshi! Su

Janaaka Mosani! Shankari! Janani”

Sri Ra. Ganapathy explained his understanding, “Just like how you protect Ganesha (in the pallavi), please protect us also. Who else do we go to other than you? You are the one who protects all the orphaned people in this world. You are the one who clears all the sins of good people. You are Shankari and Mother to all of us.”

Sri Periyava continued, “Why should it be said that Kamakshi has to protect us like how she protects Ganesha. Do you know about any story in Sri Thyagaraja’s life related to this?” Sri Ra. Ganapathy’s doubt about Sri Periyava’s divine play was slowly getting confirmed. This was base for Sri Periyava to tell the story.

Sri Periyava said to Ra. Ganapathy, “You are a writer, can you tell a story about this?” He told a story that came to his mind. But he also requested Sri Periyava to tell the real incident.

“You told a very beautiful story. I do not think I will be able to tell something good like that. I will try to tell you whatever comes to my mind.” When Sri Periyava says something like this, it means that whatever He is going to say is absolute truth. So even though Sri Periyava was narrating it as if He is only speculating on what could have happened, Sri Ra. Ganapathy completely understood that whatever Sri Periyava is narrating now is what would have happened to Sri Thyagaraja.

Sri Periyava started narrating something that really occurred as though it was a story imagined by him.

“When Sri Thyagaraja came to Kanchipuram for Sri Kamakshi darshan, he would have seen the dancing Ganesha carved out on the right side when entering the temple near the Gopuram. This is not found in any other temple. Then he would have seen the Sindhoora Ganesha inside (Even though the lines says “he would have seen”, we need to read it as “he had seen”). On entering the praharam inside, on the right side there is Adiseshan Sannidhi which is also Lord Subramanian Sannidhi. He would have seen a small image of Ganesha there. He would have walked to the Jayasthambam and would have seen the small Ganesha carved out of the pillar and a big Ganesha sitting next to it. Then when circumambulating, he would have seen the Ishtasiddhi Ganesha sitting opposite to the Palliarai. Then there are two Ganeshas outside the Utsavar Sannidhi and one outside Lord Subramaniar and Moola Kamakshi. Since he had come from Thiruvaiyaru, the temple priest would have payed their respects and then taken him around the temple. So the priest who had accompanied would have asked him to be silent when crossing the Utsava Kamakshi Sannidhi, since Thundira Maharaja is doing penance there. It was Lord Ganesha who took the human form as Thundira Maharaja to rule the place (Sri Periyava describes the Thundira Maharaja Puranam here). Then when he continued walking and turned west he would have come across the empty Sannidhi of Bangaru Kamakshi who went to Thanjavur and had been praised by Sama Shastrigal there. Sri Thyagaraja would have seen a Ganesha outside the Bangaru Kamakshi Sannidhi. Even in front of the Karbagruha, he would have been totally fulfilled by seeing Sri Kamakshi in the Ganesha there. Even though he was very devoted to Lord Rama, his devotion to Ambal was also significant. We know it after reading his Keerthis on Thiruvaiyaru Dharmasamvarthini and Thiruvottriyur Thiripurasundari. Even I have heard that most of his 96 crores Rama Japa Nama was performed right behind Dharmasamvarthini’s Sannidhi. So when he visited our Ambal (Sri Kamakshi) he would have been filled with happiness and would not have been able to sing. But the priests would have sung in Kalyana raga to perform archana for Sri Kamakshi. Then they would have taken him to Aruba Lakshmi on the side before giving the Kumkuma prasadam. He would have seen Sowbhagya Ganesha who sits there facing south. He would have also had darshan of Santhana Ganapathy who sits there facing east. Even though it might be a small temple, he would have been wondering about the number of Ganesha in the temple. He would have reached the Jayasthambam thinking about this and would have seen Varasithi Ganesha there. The priests would have told that only if we pray to Him, we will be showered with Ambal’s blessings. We could also assume that this was his first visit to the temple and also that it was a morning time. We could also assume that when he had his food at Srimatam and during his rest, he could have always been thinking of Sri Kamakshi. Also he would have thought of Lord Ganesha who has been blessed specially by Sri Kamakshi by being in so many different forms in the temple. Around noon on the same day, he would have started to sing about Sri Kamakshi and thinking about the blessings of Lord Ganesha, he would have sung that he needs to be blessed like Ganesha and the Keerthi “Vinayaguni” would have been born.” In this way Sri Periyava completed his explanation.

As Sri Periyava explained this in a detailed manner, Sri Ra. Ganapathy felt as if Sri Thyagaraja had come and explained in detail his darshan of Sri Kamakshi. Is it not the truth? Sri Periyava is none other Sri Thyagaraja. Sri Periyava is none other than Sri Kamakshi.

He is the kind heart who comes to our home to bless us

Sri Gopalaswamy, a devotee of Sri Periyava narrates this incident. When his grandfather Sri Nataraja Shastry was the trustee of Thanjavur Bangaru Kamakshi Amman temple, Sri Periyava was camping at Thanjavur.

Sri Nataraja Shastry had gone for Sri Periyava’s darshan with a rose garland. On reaching there, he found out that Sri Periyava had completed the darshan for that day. He was feeling upset on missing the darshan that day and on reaching home asked his wife if they could offer the garland for some other God. His wife said that the garland should be only offered to Sri Periyava. She took the garland to Pooja room and hung it separately.

The next day morning, they came to know that Sri Periyava had come to Srinivasapuram from Srimatam and now Sri Periyava was giving darshan at the Ganesha temple at Giri road. Their house was right next to the Ganesha temple.

As the neighbors called them for darshan, they came out and went towards the Ganesha temple. In the meantime, Sri Periyava quickly went inside their house and walked directly towards their Pooja room. As the couple realized this and went back inside, they did not know what was supposed to be done. Sri Periyava, who went inside the Pooja room took the rose garland and wore it. He stood there with a smile on His face blessing them.

As they stood surprised with tears in their eyes, Sri Periyava who had walked back to the door turned and asked them about the silver bowl that they were planning to offer Him. The previous day the couple had been discussing about offering a silver bowl to Sri Periyava. How could Sarveshwaran Sri Periyava not hear that? They immediately got a silver bowl and offered it to Sri Periyava happily.

It is true that if we surrender at the feet of Sri Periyava, who visits our houses to bless us, we will be blessed with health, wealth, peace and happiness.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

____________________________________________________________________________________________________________________________

 


 



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. I want the book – Sri Periyava Mahimai Newsletter in boof form . Hence I require the e-mail address or mobile number of Shri Sai Srinivasan. Pl help me in this regard.

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading