பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்


Thanks to Sri Halasya Sundaram and Sri Varagooran mama for the share. We’ve definitely heard of this great soul associated with Mahaperiyava. Mahaperiyava had great regards for him for his devotion, his Tamil knowledge and his achara, anushtanams. I thought I could share this article – more importantly – his photo.

annarangacharyar.jpg

இவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளவர்கள் மிகவும் குறைவு. பெயரை பார்த்தவுடன் இவர் மிகவும் பயங்கரமானவர் என்று கற்பனை பண்ண வேண்டாம். இவரின் திறமைக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு வேதத்தை தலைகீழாகவும் சொல்லும் திறமை பெற்றவர்.

ஸ்ரீஅண்ணங்கராசாரியாரின் உரைகளை கேட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய மகத்தான பணிகளின் பலன்களை வாழ்வில் அனுபவிக்காத நாள் இல்லை. அவர் நடத்திவந்த இதழான ஸ்ரீராமாநுஜன் என்பது இதழ் வடிவில் இருக்கும் ஒரு பல்கலைக் கழகம் எனலாம். வடமொழி காவியங்கள், சாத்திரங்கள், தமிழ் மொழியின் நயங்கள், ஆழ்வார்களின் பாசுர நுட்பங்கள், வேதங்களில், வேத பாடங்களில், வேதாந்த வியாக்கியானங்களில் என்று எங்கெங்கோ மறைந்திருக்கும் மிக நுட்பமான குறிப்புகளை கடல் பொங்கினால் போல் அவருடைய நூல்களில், அந்தப் பழைய இதழ்களில் பரந்திருக்கக் காணலாம். வடமொழி, தமிழ்மொழி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் அபரிமிதமான பாண்டித்யம் மிக்கவர். அனைத்து மொழிகளிலும் அவர் இயற்றியிருக்கும் நூல்களே, அதாவது பிரதியே கிடைக்காமல் போனவை போக, கணக்குக் கிடைத்தவை 500க்கும் மேல். வடமொழி, வேதம், வேதாந்தம் என்று பெரும் பாண்டித்யம் மிக்கவராக இருந்தும் ஆழ்வார்களின் ஈரத்தமிழை அநவரதம் முழங்குவதிலேயே, கோயில்களில் விடாமல் கூடித் தமிழ் வேதங்களை முழங்குவதையே தனது ஜீவாதுவாக (உயிர்ப்பற்று) கொண்டிருந்தார் தம் கடைசி வாழ்நாள் வரையில். அவருடைய கடைசி நாளைய பிரார்த்தனை, அவரே எழுதியது, ‘அடுத்த பிறவி வேண்டும். அதுவும் அரையர் சுவாமியாகப் பிறக்க வேண்டும். கோயில்களில் ஆண்டவனின் முன்பு ஆழ்வார்களின் அமுதத் தீந்தமிழை கானம் செய்து ஆடிப்பாடித் தொண்டு செய்து, அப்படி ஒரு பிறவி தமக்குத் தந்துவிட்டுத்தான் ஆண்டவன் தமக்கு திருநாடு எனும் பேற்றை அறுதியாகத் தர வேண்டும்.’ என்னும் உளப்பூர்வமான வேண்டுதலைக் கொண்டிருந்தார் என்றால் அவருடைய பெருமையை என்னென்று சொல்வது!

நடமாடும் தெய்வம் மஹாபெரியவாளும், முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியாரும் இவர் மேல் தனி அபிமானம் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Categories: Devotee Experiences

4 replies

 1. Swami’s Works and many URaigal in Tamil are available for download from acharya.org for devotees. Mahan ThiruvadigaLukku Namaskaaram! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

 2. Please watch experience with Mahaperiava by upanyasam chakravarthi Sri Ramanarayanan, Coimbatore on you tube for an excellent info on Mahaperiavas interaction with Sri prathivathi swami
  Pranams

  • In 1940s, when I was a High school student, I have read the Valmiki Ramayanam, all the
   kaandams,in Tamizh, written by Sri Pradhivathi Bhayankaram Sri Annamkarachayar,which my father had brought……
   Andanallur Sundaram Vedanarayanan.,Pune

   • So glad to read your comment amma. My mother has editions written by Sri. Mullakkudi. Sunderesa sastrigal. Only Ramayana and Bharatha have been saving our Nation all these yugas.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: