65.1 Sri Sankara Charitham by Maha Periyava – Shambu became Shankarar

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In the first part of this chapter Sri Periyava explains how Shambu the ‘Mouna (silent) Murthy’ came down and took Avatar as ‘Upadesa Murthy’.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for another splendid drawing & audio. Rama Rama


சம்-பு சம்-கரரானார்

அஜ்ஞா நாந்தர்- கஹந-பதிதாந்-ஆத்மவித்யோபதேசை:
த்ராதும் லோகாந் பவ-தவ-சிகா-தாப பாபச்யமாநாந் |
முக்த்வா மௌநம் வடவிடபிநோ-மூலதோ நிஷ்பதந்தீ
சம்போர்-மூர்த்தி: சரதி புவநே சங்கராசார்யா ரூபா || 1

ஆசார்யாளை நேரே பார்த்து அதிலே ஆனந்தம் பொங்கிச் சொன்ன வாக்காக (இந்த) ச்லோகம் இருக்கிறது. ‘சரதி புவநே’ – ‘உலகத்திலேயே நடமாடிக் கொண்டிருக்கிறார்’ – என்று நிகழ்காலமாக நேரே பார்த்தது பார்த்தபடிச் சொல்லியிருக்கிறது!

நடமாடுவது யார்? ‘சம்போர்-மூர்த்தி:’ – சம்புவின் மூர்த்தி; சம்பு என்கிற சிவனுடைய மூர்த்தி. பரமேஸ்வரனின் முக்யமான பெயர்களில் சம்பு என்பது ஒன்று. “சம்போ மஹாதேவா” என்றே சொல்வது வழக்கம். சிவ பக்தர்களை சைவர் என்பது போலவே சாம்பவர், பரம சாம்பவர் என்றும் சொல்வதுண்டு. ‘சம்பு’ என்ற பதத்தினடியாக உண்டானதே ‘சாம்பவ’ என்பது. சம்புபத்னியான அம்பாளை ‘சாம்பவி’ என்று சொல்வார்கள். பலவிதமான தீக்ஷைகளில் ‘சாம்பவி தீக்ஷை’ விசேஷமானது.

ஸரி, ‘சம்பு’ என்றால் என்ன? பரமசிவனுக்கு ஏன் அப்படிப் பெயர் ஏற்பட்டது?

‘சம்’ என்றால் நித்ய ஸுகம். ‘இன்பம்’ என்பது பொதுவாகச் சொல்கிற அர்த்தம். ருத்ர,சமகங்களில் ‘சம்’, ‘மயஸ்’ என்று இரண்டுவிதமாக இன்பங்களைச் சொல்லியிருக்கும். ஈஸ்வரனுக்கு ‘சம்பு’ என்பதோடு ‘மயோபு’ என்றும் ‘ருத்ர’த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. சம், மயஸ் என்ற இரண்டும் இன்பம் என்ற அர்த்தம் கொடுப்பதால் (ருத்ர, சமக) பாஷ்யகாரர்கள், (இவற்றில்) ஒன்று லௌகிக ஸுகம் என்றும், மற்றது மோக்ஷ ஸுகம் என்றும் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள். ‘சம்’ ஒன்றை மட்டும் சொல்கிறபோது அதுவேதான் மோக்ஷ ஸுகமாயுள்ள நித்ய ஸுகமாகும்.

‘சம்’முக்கு ‘பூ‘வாக இருப்பது ‘சம்பு’.

பூ என்றால் உற்பத்தியாகிற இடம். நாமெல்லாரும் உற்பத்தியாகிற இடமாக இந்த மண்ணுலகம் இருப்பதால் இதற்கு பூலோகம் என்று பெயர். நித்யானந்தமாகிற ‘சம்’ உற்பத்தியாகும் இடமே ‘சம்-பு’. பரமேஸ்வரன் அத்வைத ப்ரஹ்மமாக தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது மோக்ஷானந்த உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் அவருக்கு சம்பு என்று பெயர்.

அதைத்தான் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தைத்தான்) ‘வடவிடபிநோ மூலதோ’ என்பதும், அதற்கு முந்தி வரும் ‘மௌனம்’ என்பதும் குறிப்பிடுகிறது. ‘வடவிடபி’ என்றால் வடவ்ருக்ஷம், (அதாவது) ஆலமரம். ஆலமரத்தின் அடியில், வேரில்தான் தக்ஷிணாமூர்த்தி உட்கார்ந்து கொண்டிருப்பார். அவர் ‘வட விடபி மூல ஸ்திதர்’. மூலம் என்றால் வேர். அவர் மௌனமாக இருப்பவர். ஏன் அப்படி? பேசுவது என்றால் பேச்சைக் கேட்க இன்னொருத்தர் இருக்கணும். தனியாக உள்ளபோது பேச்சுக்கு இடமில்லை. அவர் தன்னைத் தவிர வேறே எதுவும், எவரும் இல்லை என்றுதெரிந்துகொண்டிருப்பதான பிரம்மா ஞானத்தின் ஸ்வரூபமாக இருக்கிறவர். அதனால் மௌனியாக இருக்கிறார். பேசுவதற்கு விஷயம் வேண்டும். விஷயத்தை நினைக்க மனஸ் வேண்டும். இவரோ மனஸ் என்ற மாயா பதார்த்தம் அழிந்து போய்விட்ட ஸத்ய நிலையில் இருப்பவர். மனஸ், நினைப்பு எதுவுமில்லாதபோது வார்த்தை எப்படி எழும்ப முடியும்? அப்போது மௌனமாகத்தானே இருக்கவேண்டும்? ஆத்மானந்தம் என்ற நித்யஸுகமான ‘சம்’மின் உற்பத்தி ஸ்தானமாக, அதாவது ‘சம்பு’வாக, ஒரே மௌனமாக உட்கார்ந்துகொண்டிருப்பது அவருடைய ஸ்வபாவம்.

நதிகளுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானம் என்று ஒன்று உண்டு, அந்த இடம் மலைகளில் உச்சியில் ஒரு சின்ன மடுமாதிரி இருக்கும். அதில் ஜலம் தேங்கியிருக்கும். கங்கோத்ரிக்குக் கொஞ்சம் வடக்கே இப்படித்தான் இருக்கிறது. அதிலிருந்து பசுவின் வாய்மாதிரியான ‘கோமுகி’ என்ற பாறை அமைப்புக்கள் வழியே கங்கை நதியாக விழுகிறது. காவேரியின் உற்பத்தி ஸ்தானம் கொடகு தேசத்தில் ஸஹ்யாத்ரி என்கிற மலைத் தொடரில் பிரம்மகிரி என்ற மலையில் தலைக்காவேரி என்றே சொல்லும் இடத்தில் ஒரு சின்ன மடு மாதிரிதான் இருக்கிறது.

அந்தந்த உற்பத்தி ஸ்தானங்களில் ஜலம் அது பாட்டுக்குச் சின்ன மடுவாகத் தேங்கியிருந்துவிட்டால் அதனால் லோகத்திற்கு என்ன பிரயோஜனம்? ரொம்பவும் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, மலை, காடு எல்லாம் தாண்டிப்போய் அந்த உற்பத்தி ஸ்தானத்தை அடையக்கூடிய வெகு சிலரைத் தவிர மற்ற எல்லாருக்கும் ஒரு பிரயோஜனமும் கிடைக்காது. ‘வாணாளைக் கொடுத்து வாண தீர்த்தம்’ என்பார்கள் – தாம்ரபர்ணியின் உற்பத்தி ஸ்தானமான பாண தீர்த்தத்தை அடைவது எத்தனை கஷ்டம் என்பதை இப்படிச் சொல்வார்கள். அலை அடிக்காமல், சத்தம் போடாமல், இருந்த இடத்திலேயே தேங்கியுள்ள மடு அந்த உற்பத்தி ஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டு அலை அடித்து சத்தம் போட்டுக்கொண்டு நதியாகப் பாய்ந்தால்தான் லோகத்திற்கு ப்ரயோஜனம்.

தக்ஷிணாமூர்த்தி, சம்புவாக இருந்த இடத்திலேயே சத்தமில்லாமல் மௌனமாக ஒரு மடு மாதிரி, ஊற்றின் உற்பத்தி ஸ்தானம் மாதிரி இருப்பது வழக்கம். ரொம்பக் கஷ்டப்பட்டே ஒரு நதியின் உற்பத்தி ஸ்தானத்திற்குச் சில பேர் மட்டும் போய் அந்தத் தீர்த்தத்தினால் ப்ரயோஜனம் அடைகிறதுபோல, கஷ்டமான ஸாதனைகளெல்லாம் பண்ணி முடித்த பெரியவர்களான ஸநகாதி மஹரிஷிகள் போன்றவர்கள் மட்டுமே அவரிடம் போய் ஆத்மார்த்தமான ப்ரயோஜனம் அடையமுடிந்தது. அப்படிப்பட்ட மஹரிஷிகளிடமிருந்து மற்றும் அநேக மஹான்களிடமிருந்தும் லோகம் ப்ரயோஜனம் அடைந்து வந்தது. நேராக லோக ஜனங்களால் அத்தனை ஸாதனை செய்து தக்ஷிணாமூர்த்தியிடம் போக முடியாது.

இப்போது (அதாவது சுமார் 2500 வருஷத்திற்கு முன்) லோக ஜனங்கள் மஹர்ஷிகளின் உபதேசங்களைத் தள்ளிவிட்டுத் தப்பான உபதேசங்களையே எடுத்துக் கொண்டிருந்தார்கள். சரியான வழியைவிட்டு அடர்ந்த காட்டுக்குள்ளே போய் அகப்பட்டுக்கொண்ட மாதிரி ஆகிவிட்டார்கள். அதைத்தான் அஜ்ஞாநாந்தர்-கஹந-பதிதாந்என்று ச்லோக ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறது. “அஞ்ஞானம் என்கிற அடர்ந்த காட்டின் நடுவில் மாட்டிக் கொண்ட ஜனங்களை” என்று அர்த்தம்.

காட்டு மத்தியில் மாட்டிக்கொண்டாலே கஷ்டம். அதோடு அந்தக் காடு தீப்பற்றிக்கொண்டு வேறு எரிய ஆரம்பித்து விட்டால் இன்னும் எத்தனை பெரிய கஷ்டமாகும்? அஞ்ஞானம் என்ற காட்டு மத்தியில் போனால் மோக்ஷத்தின் வழிக்கு ரொம்பவும் தள்ளிப் போய்விட்டதாகும். மோக்ஷ வழிக்கு நேர்மாறானது அது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? பந்த – மோக்ஷம் என்பவற்றை எதிரெதிர் விஷயங்களாகச் சொல்கிறோம். பந்தம் என்றால் தளை. விலங்கு போட்டுக் காட்டி வைத்திருக்கிற ஜனன மரணச் சுழலான ஸம்ஸார பந்தத்தை அது குறிக்கிறது. மோக்ஷம் என்றால் தளை போய்விட்ட கட்டற்ற ஸ்வதந்த்ர நிலை. தானே பரமாத்மா என்ற அத்வாதாநுபவத்தைத் தரும் ஞானம்தான் அப்படிப்பட்ட மோக்ஷத்தைத் தரும் ராஜபாட்டை. அஞ்ஞானம் என்பது காட்டு மத்தி. அதில் ஸம்ஸாரம் என்ற காட்டுத் தீ பிடித்துக்கொண்டு, ஜனங்கள் அதன் ஜ்வாலையில் வெந்து வறுபட்டுக் கொண்டிருந்தார்கள். பவ-தவ-சிகா-தாப பாபச்யமாநாந் என்று இதைத்தான் சொல்லியிருக்கிறது. “பவ-தவ-சிகா” என்றால் “ஸம்ஸாரமாகிய காட்டுத் தீ.”

நதியின் ஆரம்ப ஸ்தானமான ஊற்றுமாதிரி சம்புவான தக்ஷிணாமூர்த்தி கைலாஸ லோகத்தில் வட வ்ருக்ஷத்தடியில், இருந்த இடத்தைவிட்டு அசையாமல் உட்கார்ந்துகொண்டிருப்பதாகச் சொன்னேன். அது என்ன ஊற்று? ‘சம்’ என்று வேதம் சொல்லும் ‘நித்ய ஸுக’மாகிற தீர்த்தம் ஊறுகிற ஊற்று. ‘நித்ய ஸுகம்’ என்னவென்றால் ஞானமயமான அத்வைத மோக்ஷம்தான். அது தவிர பாக்கி எல்லா இன்பங்களும் அநித்ய ஸுகங்களே! அந்த “சம்”மின் உற்பத்தி ஸ்தானமான “பூ“வாக இருப்பவர்தான் “சம்பு”. சம்பு என்றால் ஸம்ஸாரத்திலிருந்து விடுவிக்கும் ஞானமாகிய நித்ய ஸுக தீர்த்தத்தின் உற்பத்தி ஸ்தானமாகிய ஊற்று.

இப்போது இரண்டையும் இணைத்துப் பார்க்கலாம். இங்கேஜனங்களானால் அஞ்ஞானக் காட்டில் ஸம்ஸாராக்னியின் தாபத்தில் வெந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே தக்ஷிணாமூர்த்தியோ ஞான தீர்த்தமாகிய மோக்ஷ ஸுகத்தின் ஊற்றாக ஜில்லென்று இருக்கிறார். இந்த நெருப்பை அணைக்க வேண்டுமானால் அந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதானே பண்ணமுடியும்.

ஆனால் அந்த “சம்பு ஊற்று” ஏதோ உச்சி ஸ்தானத்தில் ஸனகர் போன்றவர்களால் மட்டுமே அடையக்கூடியதாக அல்லவா இருக்கிறது? அதைஎப்படி இந்த உலக மட்டத்திற்கு, அஞ்ஞான ஜீவஸமூஹத்தின் மட்டத்திற்குக் கொண்டு வருவது?

பகீரதன் ஆகாசத்திலிருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த மாதிரி சம்புவை யாரும் கொண்டுவர முடியாது. கங்கையின் சக்தியையும் தாங்கிக்கொண்டு, அளவாகக் கட்டுபடுத்தி பூமிக்கு அனுப்பிய அவரையே இறக்கிக் கொண்டு வர யாருக்கு சக்தி உண்டு? வெளி மநுஷ்யர்கள் யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஏனென்றால் அவர் தமக்கு வெளியாக, வேறாக எதுவுமே இல்லாத அத்வைத ஸமாதியிலேயே இருந்து கொண்டிருப்பவர். அந்த ஸமாதியிலிருந்து அவரை யாரும் அசைக்க முடியாது.

அப்படியானால் இங்கே அஞ்ஞானக் காட்டில் ஸம்ஸாரத் தீ பற்றி எரியும்போதுஞான மோக்ஷ ஊற்றாக அவர் இருந்துங்கூட அந்தத் தீர்த்தத்தால் இந்த அக்னியை அணைப்பதற்கில்லாமல் இதில் ஜனங்கள் வெந்து மடிய வேண்டியதுதானா?

________________________________________________________________________________________________________________________________

 Shambu became Shankarar

AjnA NAndhar-Gahana-PathidhAn-Aathmavidhyopadesai:
ThrAdhum LOkAn Bhava-Thava-SikA-ThApa PApchyamAnAn|
MukthvA Mounam Vadavidapino-Mooladho Nishpadhanthee
Shambhor-Moorthy: Saradhi Bhuvane SankarAcharya rupA1.

This verse has been written in the ecstasy of having seen the Acharya, in person.  ‘Saradhi Bhuvane’ – He is moving about in this world – described in the present tense, having witnessed directly.

Who is moving about?  ‘Shambhor-Murthy:’ – Shambhu’s murthy; The murthy of Shiva, known as Shambhu.  One of the important names of Parameshwara, is Shambhu.  It is convention to say, “Shambho Mahadeva”.  Some devotees are also referred to as Sambhavar, Parama Sambhavar, just like Saivar.  ‘Sambhava’ has its origin from the term ‘Shambhu’.  Ambal, the wife of Shambhu, is called as ‘Sambhavi’.  ‘Sambhavi Dheeksha’ is a special one among many types of initiation.

Ok, what is the meaning of Shambhu?  Why did Parameswara get this name?

‘Sham’ means, eternal joy. ‘Happiness’ is the general meaning. In Rudram and Chamakas, two types of happiness, namely, ‘Sam’, ‘Mayas’, are mentioned.  Eswara, apart from ‘Shambhu’, has a name, ‘Mayobhu’ mentioned in ‘Rudram’. Since ‘Sam’, ‘Mayas’, both give the meaning of happiness, commentators (of Rudram, Chamakam), refer one (of them) as materialistic happiness and the other as happiness of liberation.  When ‘Sham’ alone is mentioned, it is the happiness of liberation, which is eternal joy.

‘Shambu’ is Bhoo for ‘Sham’.

Bhoo means the place of creation.  Since this earthly world is the place where we are all created, its name is, Bhoolokam.  The place where eternal happiness is produced, is ‘Sham-bhu’.  When Parameswara, in the form of Dhakshinamurthy, the embodiment of non-dualistic Brahmam, is as the fountainhead for producing the liberated bliss, he is called Shambhu.

That only (the form of Dhakshinamurthy) is referred to as ‘VadaVidapino Moolatho’ and also as the ‘silence’ which precedes it. ‘Vadavidapi’ means, Vada vriksham, (that is), Banyan tree.  Dakshinamurthy is seated only at the base of the Banyan tree.  He is ‘Vada Vidapi Moola Sthidhar’, moola means root.  He is a person who observes silence.  Why so?  To talk means, there must be someone else to listen to.  When alone, there is no place for conversation.  He is the form of spiritual wisdom, which has realized that there is no one else or no other thing, other than himself.  That is why he is silent.  To talk, there must be some matter.  To think about a matter, there should be a mind.  Whereas, He is in the true state, where the matter of illusion does not exist.  When there is no mind and thought, how can words come forth?  Shouldn’t one remain silent then?  His nature is to be seated remaining in silence, as ‘Sham’, the source of production of eternal happiness, the soulful rejoicing, which is as ‘Shambhu’.

There is a place of origin for all rivers.  That place would be in the peak of mountains, like a small lake.  Water will be stagnating there.  This is how it is to the north of Gangotri.  From there, Ganges emanates, from ‘Gomukhi’, a structure of rocks, which resembles the mouth of a Cow.  The origin of Cauvery, known as Thala Cauvery itself, is like only a lake, in Brahmagiri, a mountain, part of the mountainous chain of Sahyadri in Kodagu.

If water continues to remain as a small puddle at the place of origin, what is its use to the world?  There is no use to anyone, except to a few who may reach the source, bearing lot of difficulties, crossing mountains and forests.  It is said, ‘Vanalai koduthu Vaana Theertham’, to describe how difficult it is to reach Bhanatheerth, the source of river Tamraparani.  The water which remains still wherever it is, without swelling of waves, making noise will become useful to the world only if it leaves its place of origin, making waves and noise and flows as a river.

Dhakshinamurthy is used to be sitting as Shambhu, wherever He is, without any noise, like a still lake, origin of a spring.  Similar to only a few getting the benefit, reaching the source of a river, after undergoing lot of difficulties, only people like Sanakadhi Maharishis, who had completed very tough diligent practices, could obtain the benefit of rejoicing in the soul, reaching Him.  The world was deriving the benefit from such great sages and other great souls.  It is not possible for the common people of the world to do such observances and reach Dhakshinamurthy directly.

Now, (that is about 2500 years before), people were following wrong guidance, discarding the teachings of the great sages.  They had become like having been caught inside a dense forest, missing the right path.  This is what is mentioned in the beginning of the sloka, ‘AjnA NAndhar-Gahana-PathidhAn’.  It means people who are caught in the middle of the dense forest of ignorance.

To be caught in the middle of a forest itself is difficult.  How severe the difficulty would be if that forest also starts burning, catching fire?  If one gets into the middle of the forest of ignorance, it means he has gone far away from the path towards emancipation.  It is directly opposite to the path of liberation (Moksha).  What does that mean?  We refer attachment (Bhandam) and liberation (Moksha) as matters of opposites.  Attachment (Bhandam) is a rein.  It refers to the rein fastened due to worldly life, the birth death cycle.  Liberation (Moksha) means the state where the rein is not there, free from any restraints.  It is the royal path of liberation which gives the realization of rejoicing in the soul that Self itself is the Supreme spirit (Paramatma).   Ignorance is the centre of the forest.  The fire of worldly life (Samsara) had engulfed the forest and people were getting roasted and burnt in its flames.  This is what is referred to as Bhava-Thava-SikA-ThApa PApchyamAnAn.  Bhava-Thava-SikA, means the forest fire of wordly life.

I mentioned that Dhakshinamurthy, was sitting in the Kailasa world, under the Banyan tree, without moving, remaining in the same place, like the spring at the origin of the river.  What is that spring?  It is the spring which sprouts the ‘Sam’ mentioned by the Vedas, the ‘nithya sukam’ eternal bliss.  ‘Nithya sukam’ means the superior knowledge of non-dualistic Liberation. Other than that, all others are temporary happiness.  The person who is the ‘Bhoo’, the place of origin for the ‘Sham’ is Shambhu.  ‘Shambhu’ means the spring of superior knowledge of eternal happiness, which frees one from the wordly life.

Now, let us look at both, joining them together.  Whereas, here, people are getting fried in the forest fire of worldly life.  Whereas, there, Dakshinamurthy is sitting cool as the fountainhead of spring of liberated happiness, the superior knowledge.  If this fire has to be put out, is it not that it could be done only with that water?

However, is it not that the ‘Shambhu spring’ is capable of being reached only by a few like Sanakas, who are in very high pedestal?  How to bring it to the level of this world, to the level of the ignorant human society?

It is not possible for anyone to bring Shambhu like how Bhageeradha brought Ganges from the sky to the earth.  Who has the strength to bring down the very person who was able to bear the force of Ganges, controlled it within limits and sent it to earth?  No outsider has that strength.  Because, he is always in the non-dualistic trance (Samadhi).  Nobody can stir him out of that trance.

Is it, therefore, that when the worldly life fire is burning in the forest of ignorance and in spite of He being there as the fountainhead of liberation, but not available for dousing the fire, should the people only burn and die?

______________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading