Thamirabarani Pushkaram – Puranic Background

Many Jaya Jaya Sankara to Smt. Mahalakshmi Mami for the share. Rama Rama

https://thamirabaranipushkaram.webs.com/

இந்தி
யாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தெற்கே தாமிரபரணி ஆற்றிலும்,வடக்கே  பீமா நதியிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

குரு பகவான் விருச்சிக ராசியில் வரும் அக்டோபர் 12 2018 அன்று  பிரவேசிப்பதால் தெற்கே தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தாமிரபரணி மகா புஷ்கரம் ஆகும்.

இந்த தாமிரபரணி புஷ்கரம் வரும் 2018 அக்டோபர் 12 அன்று தொடங்கி 23 அக்டோபர் 2018 வரை கொண்டாடப்படுகிறது.
_____________________________________________________________________________________________________________________________

                                                                                                                                                                             

Importance of Pushkaram – Translation of the above article

In Bharatham, Pushkaram is being celebrated as a big festival. A Purana story is also narrated regarding this.

Guru Bhagavan, one of the Navagrahas (nine planets), undertook a hard penance towards Lord Brahma. Pleased by his penance, Brahma appeared before him. He asked Guru Bhagavan, “What do you want?” Replying His query, Guru Bhagavan answered, “I want only your Pushkaram”. As per his wish, Brahma agreed to offer His Pushkaram to Guru Bhagavan. But Pushkaram refused to part with Brahma and go to Guru Bhagavan. Feeling embarrassed by this, Brahma made a Truce of Peace between Pushakaram and Guru Bhagavan. According to it, Pushkaram, when in Mesha Rasi (in the river Ganga), in Rishabha Rasi (in the river Narmada), in Mithuna Rasi (in Saraswathi river), in Kataka Rasi (in the river Yamuna), in Simha Rasi (in Godavari), in Kanni Rasi ( in Krishna river), in Thula Rasi (in the river Cauvery), in Vrischiga Rasi (in Tamirabarani in the south and in Beema river in the north), during Dhanusu Rasi (in Sindhu river), In Makhara Rasi (in Thungabatra river), in Kumbha Rasi ( in Brahma river) and in Meena Rasi ( in Praneetha river) as and when Guru Bhagavan undertakes a Peyarchi (move) to a particular Rasi, the Pushkaram will also stay there during that time. An agreement was made that at this time, Muppathu Mukkodi Devas including Brahma, Vishnu, Shiva and Indra will come and reside in that particular river.

It is believed that to take a holy dip in the twelve rivers mentioned above during the time of Guru Bhagavan entering the particular Rasi is equivalent to taking bath in all the holy rivers of India.

As Guru Bhagavan is entering Vrischiga Rasi on the forthcoming October 12, 2018, Pushkaram is being celebrated in the River Tamirabarani in the south. Also, the Tamirabarani Pushkaram that is going to be celebrated this year is the Tamirabarani Maha Pushkaram which happens once in One hundred and forty four years.

This Tamirabarani Maha Pushkaram is being celebrated this year beginning from 2018 October 12, till 23 October 2018.



Categories: Announcements

2 replies

  1. ப்ராண ஹிதா நதீ ( ப்ராணனுக்கு ஹிதமானது)..

    குரு மீன ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் …

    வார்தா (wardha) + வாய் (wai) கங்கா = ப்ராணஹிதா…காலேஶ்வர க்ஷேத்ரத்திற்கு அருகே கோதாவரியில் கலக்கிறது.

    இரு நதிகளின் மூலம் ஜனித்து
    தக்ஷிணமுகமாகவே ஓடி…
    ஒரு நதியில் ஸங்கமிக்கிற ப்ராணஹிதா

  2. ராம ராம

    மேற்கண்ட புஷ்கர் ஜாபிதாவில்
    கீழ்கண்ட திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
    (1) குரு தநுர் ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் ப்ரஹ்ம புத்ர புஷ்கரம் மற்றும் தப்தி நதி.
    தப்தி நதியை புஷ்கர வாஹிநீ என்பதும் உண்டு.

    (2) குரு கும்ப ராஶியில் ஸஞ்சரிக்கும் ஸமயத்தில் ஸிந்து புஷ்கரம்.

Leave a Reply to ArunindusonCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading