I bet you haven’t seen this before!

Thanks Suresh for FB share….

We all know that Sri Jayendra Periyava was an avid learner and not just that – He excelled in every field – be it music, languages etc. Mahaperiyava made Him learn as many languages as possible during His training days. Here He is testing out His photographic skills!

Hara Hara Sankara Jaya Jaya Shankara!

jp-photographer.jpg

ஒரு நொடி மட்டிலும் தான்
உந்தன்
புகைப்படத்தினை
உற்று நோக்கினேன்…

நீரூற்றின் சிதறுதலில்
நிலமெல்லாம்
காண மறைவது போலே,
கண்களிலே பொங்கிய நீரூற்று
நின் நிழற்படத்தை மறைத்தாலும்
எந்தன்
நெஞ்சந்தனில் நிறைந்துள்ள
நின் பிம்பம்
நீங்காதிருப்பதற்காய்
நல்லருள் புரிவாயே
குரு நாதா!

ஸ்ரீசுப்ரமண்யோம்!
ஜய ஜய ஜயேந்திர ஸ்ரீகுருவே போற்றி!
குருவே சரணம்!

நன்கறிந்த இறைவனோ
நம்.பாரத நாட்டுக்கென
நற்குழந்தை ஒன்றை
நல்கினானே!

நானிலம் போற்றுமட்டும்
நம் சனாதனப் பெருமைதனை
நல்லபடியாக
நல்மனங்கள் உணர வேண்டி
நற்தவமாய் நல்கினனே
நம் நாயகன்!

நந்திக் கொடி வல்லமைபோல்
நம் காமகோடிக் கொடிப்புகழை
நகரமெலாம் நகர்ந்தபடி
நன்குறைத்த செம்மலவன்
நிழற்தேடி அலைகிறதாம்
நமது நெஞ்சம்…
நிழற்படமும் தாமெடுத்த
நிலத்திறையாம் குருபரனை
நமுற தியானிக்கும்
நொடிப்பொழுதிலெல்லாமே!

நலமாய் வாழ்வீரே
நார்குரு நாயகனே
நற்றமிழாள் நிலத்தின்கண்
நிமிர்ந்தபடி இருக்கும்வரையில்!

நடிக்காத ஓர் உள்ளம்
நிலமிதிலே உண்டென்கின்
நின் ஒருவன் நாமம் மட்டும்
நிறைவாய் நெஞ்சந்தனிலே!

நாடுறை ஜீவனெல்லாம்
நலமுற வாழ்வதற்காய்
நடைராசன் இடப்புறமாய்
நீளுறக்கம் பொருந்தியவா…
நின் உறக்கம் தவமெனவே
நன்குணர்ந்த நெஞ்சமெலாம்
நின்னடி சேவித்தே
நாட்பொழுதைக் கடக்குமன்றோ!

நமோ நமஹ ஸ்ரீகுருபாதுகாப்யாம்!

எங்கிலும் இறைமையும் தருமமும் தழைத்தோங்கிட உழைத்த நின் நொடிப்பொழுதளின் ஈரம் எமைச் சத்தியமாய் காக்குமே எங்கள் குருதேவா!

எல்லாமே ஸ்ரீமஹாபெரியவா கருணை தான் என்பதை இந்த நாயேனுக்கும் புரியவைத்த நாடுயர் சீர்குருவே!

நமஸ்காரம்! நமஸ்காரம்! சாஷ்டாங்க நமஸ்காரம்!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.



Categories: Photos

6 replies

  1. Pl add my contact phone in whatsapp…. 9940670673

  2. Please ,what is the whatsapp group number of Sage of Kanchi .I would be interested to join

Leave a Reply to RamenCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading