Periyava Golden Quotes-881


பகவத் ஸம்பந்தப்படுத்தி நாமாவோடு சமைப்பது, நிவேதனம் பண்ணுவது என்கிறபோது மாம்ஸாதிகளையும், மற்ற ராஜஸ தாமஸ ஆஹாராதிகளையும் பண்ணவே தோன்றாது. அதாவது தன்னால் வெஜிடேரியனிஸமும் இதில் வந்துவிடும். அந்நிய பதார்த்தங்கள் பக்குவமாவதற்கு நிறைய ‘டயம்’ பிடிக்குமாதலாலும், தானே சமைத்துக் கொள்கிறவனுக்கு அது வேண்டாமென்று தோன்றிவிடும். தர்ம சாஸ்திரத்தில் அஹிம்ஸை சொல்லியிருக்கிறது, யோக சாஸ்திரத்திலும் அதையே சொல்லியிருக்கிறது என்பதற்காகவெல்லாங்கூட அதைப் பின்பற்ற முடியாவிட்டாலும், ‘தனக்கு டயம் ஸேவ் ஆகிறதே, வேலை ஸேவ் ஆகிறதே’ என்பதனாலேயே ஸ்வயம்பாக நியமத்தில் வெஜிடேரியனியஸம் அநுஷ்டானத்துக்கு வந்துவிடும்! எப்படி வந்தாலென்ன? அப்புறம் இதுவே தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற புண்ணியத்தையும், யோக சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற சித்த சுத்தியையும் கொடுத்துவிடும். ஆஹார தினுஸுகள் [ஸ்வயம்பாகத்தில்] குறைந்து விடுகின்றன என்பதாலேயே செலவும் குறைந்து விடும். அதாவது எகானமிக்கு எகானமி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

When one does the cooking while chanting Bhagawan Nama and thereafter offers the cooked food as Neivadhiyam, one will never venture to cook meat and other items that stimulate Raajasa and Taamasa Gunas. Automatically vegetarianism will take precedence. Since the ‘other’ foods will take considerable time to cook, the person who does self-cooking will not feel like cooking those items. Though one may not follow Ahimsa because it is recommended by the Dharma Sastras or Yoga Sastras, he will do it just because it saves time and energy. The discipline of self cooking will certainly bring vegetarianism into practice! Does it matter how this habit comes into force? This habit will, for sure, help the person acquire the Punya mentioned in the Dharma sastras and the purity of mind mentioned in the Yoga Sastras. Since the variety of dishes cooked is less in Swayam Paakam (Self Cooking), it cuts cost which is good for the economy as well. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading