Periyava Golden Quotes-875

அடுப்பிலே உலை வைத்துவிட்டு அன்னம் பக்வமாகிறவரை அதன் பக்கத்திலேயே நின்று பார்த்துக் கொண்டுதான் நாமாவோ ஸ்லோகமோ சொல்லிக் கொண்டிருக்கணும் என்பதில்லை! அரிசியைக் களைந்து போட்டுவிட்டு நாம் பாட்டுக்கு ஜபமோ பாராயணமோ பண்ணிக் கொண்டிருக்கலாம். இந்த ரஸம் தானே அன்னரஸத்தில் சேரும். அப்புறம் கால்மணியோ, அரைமணியோ எப்போது அது பக்குவமாகுமோ அப்போது போய் இறக்கி வைத்துக் கொள்ளலாம். ஆனால் ‘வெந்திருக்குமோ, வெந்திருக்குமோ?’ என்று அதுவே ஜபமாக உட்கார்ந்திருக்கக் கூடாது! ஆரம்பத்தில் அந்த எண்ணம் வந்து கொண்டுதானிருந்தாலும், நாளாவட்டத்தில் தானாக ஒரு ‘டயம் ஸென்ஸ்’ உண்டாகி, அந்த நினைவு இல்லாமல் கால்மணியோ அரைமணியோ ஜபத்திலேயே கான்ஸென்ட்ரேஷனோடு இருக்க முடியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is not necessary to stand by the side of the stove while the food is cooking and chant Bhagawan Nama or Sloka! We can clean the rice and set it for cooking; while it is getting cooked on the stove, we can chant Bhagawan Nama Japam or do Parayanam. This divine essence will merge with the food we prepare. Once the rice is cooked we can take it off the stove. In the intervening time we should not keep worrying whether the rice is properly cooked or not and make this our ‘japam’! Though these thoughts will cross initially, over a period of time we will acquire a ‘time sense’ and can focus with concentration on our divine japam for 15 or 30 minutes. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading