Maha Periyava As Shri Ra. Ganapathy Saw Him-Series 3-Part 5

Jaya Jaya Sankara Hara Hara Sankara – “No dowry and simple marriage” has been one of key Periyava upadesams to his devotees. The repercussion of dowry that affected a girl moved Periyava to tears. As Periyava devotees let’s shun dowry (in various forms) and pompous marriage celebrations. Let’s give that money for people in need which will please our Periyava more than anything.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan mama for the great compiling, translation, and drawing.

ஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—Series 3—Chapter5

அந்த 1957-59 சென்னை விஜயத்தின் போது நுங்கம்பாக்கத்தில் முகாமிட்டிருந்த ஒரு சமயம்.

ஒரு பெண் ஸ்ரீசரணரின் சரணத்தருகே விழுந்து நமஸ்கரித்தவள் நெடுநேரம் எழுந்திருக்கவே இல்லை. அங்க அசைவிலிருந்து குலுங்கக் குலுங்க அழுகிறாள் என்பது மட்டும் தெரிந்தது.

பெரியவாள் இரக்க இளக்கத்தின் உருவாய் நின்றார்.

ஸமஸ்கிருதக் கல்லூரியில் மாது முறையிட்டது ஏறக்குறைய ஏகாந்தமான சுழ்நிலையில். இப்போது இப்பெண் அழுவதோ பக்தர் பலர் கூடிய கூட்டத்தில்.

தரிசனத்துக்கு ஏராளமானவர் காத்திருந்ததால் பெண்மணியை எழுந்திருக்குமாறு சொல்லப் பாரிஷதர் முன் வந்தார்.

பெரியவாள் சிறிய, ஆனால் வலிய, கையசைப்பால் அவரைத் தடுத்தார். மங்கை அடைத்து வைத்த கண்ணீர் அத்தனையையும் கொட்டி லேசாவதற்கு அவகாசமளித்தார் போலும்.

ஓரிரு நிமிஷங்களில், ஆம், அவரது அருள் விழிகளிலிருந்துமே அருவி பெருகத் தொடங்கிவிட்டது!

பொதுச் சபையில் ஸந்நியாஸ திலகமான ஒரு ஜகதாசாரியார் கண்ணீர் பெருக்கிக் கொண்டு நிற்கிறார்!

ஜகத்தின் தாப –- பாபங்களும் தமக்கே என்பதால்!

ஜகத்தில் ஒரு பிரஜையான அப் பெண் அவளது கர்மத்தை அவள் மட்டும் அழுது தீர்க்க முடியாதெனக் கண்டு அதனை ஆலமுண்ட நீலகண்டனாக அவருமே ஏற்றிருக்கிறார்! இந்த நீல கண்டனிடமிருந்து பெருகிய கங்கைதான் அந்த அநுதாபக் கண்ணீர்.

அவள் தெளிந்தெழுந்தாள்.

“எல்லாம் நன்னா ஆகும்” என்று ஆவியார –- அவளது ஆவி பறக்கும் ஆவி ஆற -– அவர் ஆசி கூற நன்னம்பிக்கையுடன் புறப்பட்டாள் நொய்ந்து நொடித்து வந்தவள்.

அந்த “எல்லாம்” என்ன? திருமணம்தான். வறுமை காரணமாக அவளுக்குக் கலியாணப் பருவம் தாண்டி ஆண்டு பல ஆகியும் அவளை ஒரு வாழ்க்கைத் துணைவனுடன் சேர்த்து வைக்க இயலவில்லை.

‘ஓர் ஆடவன் வைதிக தர்ம வாழ்வுக்குத் துணை புரிய ஒரு பெண் கூட்டாளியைச் சேர்த்துக் கொள்ளும் உயர் வேள்வியாக நமது சாஸ்திரங்கள் திருமணத்தை அமைத்துத் தந்திருப்பதென்ன? இன்றோ அதைச் சந்தை விஷயமாக்கி வரதக்ஷிணை, சீர்–செனத்தி என்று பேரம் பேசியும், அதோடு ஆடம்பரக் காட்சியாக ஆக்கியும் பெண்ணைப் பெற்றோரின் வயிற்றலடித்துப் பிடுங்கும் கொடுமை என்ன? நாம் இன்பமாகவே வைத்திருக்க வேண்டிய கன்னிகைகளை உள்ளம் கலங்கி, கண் கலங்கி நிற்க வைக்கும் இந்த ஈன நிலை என்ன?’ – பெரியவாளின் சிந்தனை தீர்க்கமாக இதிலேயே வேர் விட்டது.

பல காலமாக இது பற்றி நினைத்து வருந்தியிருப்பவர்தான் அவர். 1926-ல் கானாடுகாத்தானில் அவரைச் சந்தித்த ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார், அந்நாளில் குறிப்பாக பிராம்மண சமூகம் மட்டுமே வரதக்ஷிணைக் கொடுமையால் உற்றுள்ள பாதிப்பை எடுத்துக் காட்டி, அது நீக்கப் பெரியவாள்தான் வழி காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்ததிலிருந்து அவர் இவ்விஷயத்தில் மிக்க விசாரம் கொண்டுதான் இருந்தார். தமது நெருங்கிய சீடர்களிடம் வரதக்ஷிணை இத்யாதியும், ஓர் அளவுக்கு அதிகமான ஆடம்பரக் கோலஹலமும் இல்லாமல் சிக்கனத் திருமணம் நடத்துமாறு வலியுறுத்தித்தான் வந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக, பெரும்பாலும் அச் சிஷ்யர்கள் ‘வலி’யும் தெரியாமல், ‘உறுத்த’லும் இல்லாமல், புராதன சாஸ்திர வழிக்கு முற்றிலும் மாறாக இடைக்காலத்தில் வந்து புகுந்துவிட்ட வரதக்ஷிணை – cum – டாம்பீகத் திருமண முறையையேதான் தொடர்ந்து வந்தனர்.

இன்று திருமணமாகாது ஏங்கி ஏங்கித் தவித்த ஒரு கன்னிப்பெண்ணே பொதுச் சபையில் கண்ணீர் விட்டு அழுததைக் கண்டதும் பெரியவாளின் உணர்வு தீவிரம் பெற்றது. ஏதோ சில சீடரிடம் சொல்வது மாத்திரமின்றிப் பொதுமக்கள் அனைவருக்குமே தாம் உள்ளம் திறந்து உறுதியாக உத்தரவிடத்தான் வேண்டும் என்று கருதினார்.

____________________________________________________________________________________________________________________________

Maha Periyava As Shri Ra. Ganapathy Saw Him-Series 3-Part 5

During  His  visit  to  Chennai  between  1957  and  1959,  He  was  camping  in  Nungambakkam.

A lady   who   prostrated  before   Sree  Saranar,  did  not  get  up  for  a  long  time.  We  could  see  from  her  body  movements,  that  she  was  crying  uncontrollably.

Periava  was  standing  as  an  epitome  of  compassion.

When  the  other  lady  prayed  to  Periava  in  the  Sanskrit  college,  it  was  not  crowded;  but  now,  this  lady  was  crying  in  the  presence  of  a  large  gathering.

As  many  devotees  were  waiting  for  Dharsan,  the  attendant  came  to  tell  her  to  get  up.

Periava   stopped  him  with  a  big  wave  of  His  small  hand.  He  was  probably  giving  sufficient  time  for  the  lady  to  pour  out  all  her  grief  and  thus  get  relieved.  Within  a  minute  or  two,  tears  started  welling  up  in  His  eyes  also.

A  ‘JagatAchAryAr’  was  standing  in  front  of  a  big  audience,    shedding  tears!

Because  the  sins  of  the  world  are  for  Him (to  absorb).

He,  being  the  Neelakantan  who  swallowed  the  deadly  poison  that  rose  from  the  ocean  of  milk,  took  up   her  ‘Karma’  on  Himself  as  she  alone  could  not  get  rid  of  it  single–handed.  The  river  Ganga  which  flowed  from  ‘this’  Neelakantan   are  the  tears  of  compassion.

She  got  up,  her  mind  clear  now.

“Everything  will  go  well”—-  He  blessed  her.  The  lady  who  came  with  a  heavy  broken  heart,  returned  with  a  lot  of   self   confidence.

What  is  that  ‘Everything’?  Yes,  marriage.  Because  of  poverty,  no  one  came  forward  to  marry  her,  although  she  was  past  marriageable  age  by  many  years.

‘Why  this  cruel  trend?  Our  SAstrAs  have  established  the  system  of  marriage  as  a   superior  ‘Yagnam’,  where  a  man  takes  a  woman  as  his  life partner  to  assist  him  in  his  Dharmic  life.  Today,  that  has  been  made  into  a  matter  of  bargain  in  the  market  for  ‘Varadhakshinai’ (money  demanded  by  the   groom’s  party  from  the  bride’s  party),  and  an   array  of  gifts  to  the  groom;   converting  a  simple Vedic  ritual  into  a  carnival  like  celebration  and  torturing  the  parents  of  the  bride  with  their  demands.  Why  this  moral  degradation  where  the  young  girls  who should  have  been  kept  happy,  are  made  to  shed  tears?’—Periava’s  thought  took  root  in  this  matter.

He  has  been  perturbed  since  a  very  long  time,  thinking  about  this  matter.  In  1926,  when  Raja  Sir  Annamalai  Chettiar  met  Him  in  KAnAdukAthAn,  he  had  pointed  out  the  damaging  influence  this  issue  (of  Varadhakshinai)  had,  in  particular,  on  the  Brahmin  community  and  had  requested  that  Periava  only  should  solve  this  issue.  From  that  time  onwards  He  had  been  worrying  about  it.  He  had  reiterated  to  His  sisyA  devotees,  that  they  should  perform  the  marriage  without  ‘Varadhakshinai’  and  extravaganza.  Unfortunately,  those  ‘sishyas’  neither  realized  the  pain,  nor  had  the  compunction  but  continued  with  the  system  of  ‘Varadhakshinai—cum  extravaganza’    totally  contrary  to  the  ancient  SAstric  ways.

Today,  when  Periava  witnessed  the   lady  herself  crying in  the  public  audience because  of   her  anxiety  and  the  resultant  grief,  His  thoughts  and  feelings  intensified.  He  thought  that  He  should  not  stop  with  telling  His  disciples  only  but   also   should  open  His  mind  to  the  general  public  and give  an   order   to  them.

TO  BE  CONTINUED…….



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading