Periyava Golden Quotes-859


தங்களுடைய அஹிம்ஸா அநுஷ்டானத்தினாலேயே அநேக மஹான்கள் தாங்களிருக்கிற சுற்றுப்புறம் முழுதையும் அன்பு மயமாக்கியிருக்கிறார்கள்; அவர்களுடைய ஆச்ரமத்திலே பார்த்தால் ‘பெண் சிங்கம் யானை குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும்; கன்று குட்டிக்குப் புலி வழிகாட்டி அழைத்துக் கொண்டு போகும். எலிக் குஞ்சை பூனை ரக்ஷித்துக் கொண்டிருக்கும். பாம்புக் குட்டி மேலே வெயில் படாமல் மயில் தோகையை விரித்துக் குடை பிடித்துக் கொண்டிருக்கும்’ என்றெல்லாம் காவ்ய, நாடகங்களில் படிக்கிறோம். இப்படிப் பிறத்தியாரின் பரஸ்பர விரோதத்தையும் போக்கடிக்கிற அளவுக்கு சாந்தத்தைப் பரப்பின பாரம்பர்யத்தை நாம் பாழாக்கி விடாமல் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமானால் மரக்கறி உணவில் நம் பற்றை வளர்த்துக் கொண்டால்தான் முடியும். மரக்கறி உணவிலுங்கூட காரம், புளிப்பு முதலியன ராஜஸம்தான்; பழையது போன்றவை தாமஸம். இப்படியே பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போல் பல ஸத்வத்துக்கு விரோதமானவை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Many Mahans followed the principle of Ahimsa in total, making their surroundings filled with harmony and love. We read in poems and plays that a lioness fed a baby elephant, a calf was guided by a tiger, a mouse was protected by a cat, a peacock gave shelter to snakes under its tail etc. If we wish to maintain this tradition of overcoming hatred by love, it is possible only with vegetarian food. Even in vegetarian food, sour, and hot food items are supposed to enhance Raajasa Guna. Likewise, garlic, onion, radish, drumstick, etc. are not favourable for developing Satva Guna. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading