Periyava Golden Quotes-854


எப்போது பார்த்தாலும் ‘குடிக்கணும்’, ‘ஊதணும்’ என்று இருப்பதுபோல வெற்றிலை போட்டுக் கொள்வதும் ஒரு ‘ஹாபிட்’ ஆகி, அதற்கு அநேகம் பேர் ‘அடிக்ட்’ ஆகிறார்கள். இதனால் நாக்குத் தடித்து, பசி மந்தித்துப் போய்விடுகிறது. இப்படி விடக்கூடாது. பார்க்கவே பிடிக்காமல், வாய் நிறைய வெற்றிலைச் சாற்றை வைத்துக் கொண்டு பேசுவது, நம் மேலே அது தெறிப்பது, தங்கள் மேலேயே ஒழுகுவது என்றெல்லாம் பண்ணுவது கௌரவமும் இல்லை; ஆசாரமும் இல்லை. பொடியும் இப்படித்தான். போகிற இடமெல்லாம் [வெற்றிலை] துப்புவதும், [பொடி] சிந்துவதும் ஸிவிக் ஸென்ஸுக்கே [நாகரிகக் குடிமை உணர்வுக்கே] விரோதம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Like the habits of drinking and smoking, eating of betel leaves [chewing of paan] has also become a habit and an addiction. Frequent chewing of paan results in the stiffening of the tongue and subdues hunger. This addiction should not be ignored. It is loathsome to see people with a mouthful of paan, saliva spraying on others and on themselves when they speak. This neither agrees with the principles of Aachara nor does it add to the status of the person. Podi (nasal snuff powder) also falls in the same category. It is severe lack of civic sense to keep spitting and clearing one’s nostrils because of consumption of these items. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. அவர் சொன்னதை நினைத்துப்பார்த்தேன். சிரிப்புத்தான் வந்தது.. இதை சொல்லும்போது அவரும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்.

Leave a Reply to S.CHANDRASEKARCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading