216. The Story of Kamakshi by Maha Periyava (Part 2)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How did Ambal get the name Kamakshi? The master director continues the engrossing screenplay.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama

காமாக்ஷியின் சரிதை (Part 2)

தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் மூன்று லோகங்களையும் ஹிம்ஸித்து வந்த சந்தர்ப்பம் அது. இவர்கள் நிரம்பத் தபஸ் பண்ணி எல்லையில்லாத பலம் பெற்றிருந்தார்கள். சாக்ஷாத் பரமேசுவர தேஜஸிலிருந்து உண்டாகும் குமாரர்தான் தங்களை வதம் செய்ய முடியுமென்று இவர்கள் வரம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பரமேசுவரனோ இப்போது பரம ஞான மூர்த்தியாக, எந்தக் காரியமும் இல்லாமல், ஆத்மானந்தத்தில் முழுகி, தக்ஷிணாமூர்த்தியாக உட்கார்ந்து விட்டார்.

இவரை எப்படிப் புத்திரோத்பத்தி செய்ய வைப்பது? அசுரர்களால் ஹிம்ஸிக்கப்பட்ட தேவர்களுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. அப்போது ஹிமயபர்வத ராஜனுக்குப் புத்திரியாகப் பிறந்திருந்த பார்வதி தேவி, இந்த தக்ஷிணா மூர்த்திக்குக் கைங்கரியம் செய்து வந்தாள். காமத்துக்கு அதிதேவதையான மன்மதன், பார்வதியிடம் பரமேசுவரனின் மனஸைத் திருப்பிவிட்டால், பிறகு சிவகுமார ஜனனம் ஏற்பட்டுவிடும் என்று தேவர்கள் எண்ணினார்கள். மன்மதனிடம், ‘உன் சக்தியைப் பரமேசுவரனிடம் காட்டு’ என்று ஏவி விட்டார்கள்.

லோகம் முழுக்க ஸ்வாதீனம் பண்ணிக் கொள்கிற ஆற்றலை, மன்மதனுக்குத் தந்ததே பரமேசுவர சக்திதான். இவன் அந்தப் பரமேசுவரனிடம் பக்தியோடு போய்த் தன் சக்தியை அவரிடம் அர்ப்பணம் பண்ணியிருந்தாலே போதும். கருணா மூர்த்தியான அவர் காரியத்தை முடித்துத் தந்திருப்பார். ஆனால் இவனோ அப்படிப்பட்ட சமர்ப்பண புத்தி இல்லாமல், அகங்காரத்தோடு போனான். பரமேசுவரனையே தன்னால் வசப்படுத்தி பார்வதியிடம் மோகிக்கச் செய்ய முடியும் என்று அகம்பாவப்பட்டுக் கொண்டு போனான். பெற்ற தாயிடமே கற்ற வித்தையைக் காட்டுவதுபோல் பரமேசுவரன் மேல் மலர் அம்புகளை விட்டான்.

சட்டென்று ஸ்வாமிக்கு ஒரு சலனம் உண்டாகிறாற்போலிருந்தது. கண்களைத் திறந்தார். அவருக்கு மூன்று கண்கள். ஆனால் இப்போது மூன்றுக்கும் வேலை வைக்கவில்லை. அக்கினி மயமான நெற்றிக் கண்ணை மட்டும்தான் துளித் துளி திறந்தார். அவ்வளவுதான்! மன்மதன் அக்னி ஜ்வாலையான அந்தத் திருஷ்டியில் அப்படியே எரிந்து பஸ்பமாகிவிட்டான். ‘தான் மகா அழகன்’ என்ற கர்வம் அவனுக்கு உண்டு. சரீர ஸெளந்தர்யம் ஞானாக்னியின் முன்னால் நிற்க முடியாது என்று காட்டுகிற மாதிரி, இப்போது பரமேசுவரன் முன்னால் சாம்பல் குவியலாகி விட்டான். எவன் சர்வாங்கசுந்தரன் என்று பேர் பெற்றிருந்தானோ, அவனுக்கு இப்போது அங்கமே இல்லாததால் ‘அனங்கன்’ என்ற பேர் ஏற்பட்டது.

மன்மதனின் பத்தினியான ரதி புலம்பினாள். பார்வதி தேவி அவளுக்கு அபயம் தந்து, அவள் கண்ணுக்கு மாத்திரம் மன்மதன் தெரியும்படியாக அநுக்கிரகித்தாள். மன்மதனைப் பார்த்து, “நான்தான் உனக்கு இந்த வில்லையும் அம்பையும் தந்து சகல ஜீவராசிகளையும் காம வசப்படுத்தும்படி அநுக்கிரஹம் செய்கிறேன். இப்போது இருக்கிற ஜனங்கள் எல்லாரும் ஸநகாதி முனிவர்களைப்போல் ஞானிகளாக இருந்துவிட்டால், ஏராளமான கர்மா பாக்கியோடு மரணம் அடைந்து இன்னமும் ஜனனம் எடுக்காமல் இருக்கிற ஜீவாத்மாக்கள் மறுபடி பிறக்க முடியாமல் ஆகி, பெரிய கஷ்டம் உண்டாகும். அவர்கள் மறுபடியும் ஜன்மா எடுத்தால்தான் சித்தசுத்தி செய்து கொண்டு, கர்மாவை தீர்த்துவிட்டு ஜனன நிவிருத்தி பெறமுடியும். இதற்காகத்தான் லோகத்தில் பிரஜா உற்பத்தி நடக்க வேண்டுமென்று உனக்குச் சக்தி தந்து உன்னை ஒர் அதிகாரியாக வைத்தேன். ஆனால் நீ இப்போது மேலதிகாரியிடமே உன் கை வரிசையைக் காட்டிவிட்டாய். சக்தியைக் காட்டிப் பிரயோஜனம் இல்லை; பக்திக்குத்தான் அவர் வசப்படுவார். அவரிடம் எப்படிக் காரியம் நடத்திக் கொள்வது என்று இப்போது பார்” என்று அம்பாள் சொல்லிவிட்டு, அவனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் தானே கையில் எடுத்துக் கொண்டாள். ஈஸ்வரனிடத்தில் போய் நின்றாள். அன்புமயமாக அவரைப் பார்த்தாள். கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது. காம – அன்பு; அக்ஷி – கண்; அன்பு பொங்கும் கண்ணை உடையவள் காமாக்ஷி. “காமாக்ஷி” என்பதற்கு வேறு தத்வார்த்தங்களும் சொல்வதுண்டு. அது இருக்கட்டும். நேர் அர்த்தம் ‘காமக்கண்ணி’.

“காமக்கண்ணி” என்ற இந்த காமாக்ஷி நாமம் தமிழில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. சங்க காலப் பெண் புலவர் ஒருத்தருக்குத் ‘காமக் கண்ணியர் நப்பசலையார்’ என்று பெயர். காமாக்ஷி வழிபாடு தமிழ்நாட்டில் ஆதிகாலத்திலேயே இருந்ததினால்தான், அந்தப் பெண்மணிக்கு இப்படி பெயர் இருந்திருக்கிறது. இது இருக்கட்டும். கதைக்குப் போகலாம்.

___________________________________________________________________________________________________________________________

The Story of Kamakshi (Part 2)

That was also the time when asuras like Tarakasura and Surapadma were troubling the inhabitants of the three worlds. They had performed extensive penance and had acquired unbounded strength. They had secured a boon that only the person who originated from the tejas of Parameshwara would kill them. But Parameshwara was now in a state of meditation, immersed in the ultimate bliss, as Dakshinamurthy.

How could He be made to create a son? The Devas who were troubled by the Asuras could think of only one solution. Parvati who was born as the daughter of Himaparvatha Raja was serving Dakshinamurthy then. The Devas planned to utilize the services of Manmatha to divert the attention of Parameshwara towards Parvati, so that the birth of Siva’s son is ensured. They persuaded Manmatha to try his influence over Parameshwara.

It was the force behind Parameshwara that had granted Manmatha the power to influence the world. Had Manmatha surrendered his power at the feet of Parameshwara, the desired outcome would have been achieved. But Manmatha approached Parameshwara with arrogance and not with humility. He was proud of his power which would influence Parameshwara get attracted towards Parvati. He shot the arrows made of flowers on Parameshwara. This was something like showing off one’s cleverness to one’s own mother!

Eswara felt a sudden disturbance. He opened His eye. He has three eyes. But He did not open all three of them. He gradually opened the third eye which is Agni itself. That’s all! The fire from the eye burnt Manmatha and reduced him to ashes! Manmatha was always proud of his beauty. As if to say that physical beauty is insignificant in front of the fire of knowledge, Manmatha became just a heap of ash. Manmatha who was known as ‘Sarva Anga Sundara’, (the most beautiful), had no physical body now; hence he came to be known as ‘Ananga’ (one without physical body).

Manmatha’s wife Rati wailed in grief. Parvati Devi consoled her and blessed that Manmatha would become visible, but only to Rati’s eyes. She then told Manmatha ‘I have given you this bow and arrow with the power to cause passion in all living things. If all the people were to be dispassionate like Sanaka and other munis, many who are dead but need to be born again to redeem their karmas, will not have the chance to be born. They will be in trouble. Only if they are born will they pay back for all their karmas, develop  purity of mind and transcend beyond the cycle of birth and death. You were given powers only for this reason. But you have shown your powers to your own superior. There is no use exhibiting your powers. You can bind Him only with Bhakti. Let me show you how to get things done”. Saying this, Ambal took Manmatha’s bow and arrow into Her hands. She went and stood in front of Eswara. She looked at him with love. When She carried the sugarcane bow and the arrows of flowers and looked at him with eyes filled with love, She acquired the name ‘Kamakshi’. Kama means love; akshi means eye. She whose eyes are love laden – is Kamakshi. Her name has other meanings too. The direct meaning is ‘She with love laden eyes’- known as Kamakkanni (in Tamizh).

The name Kamakkanni has been in use in Tamizh since ancient times. ‘Kamak kanniyar Nappasalaiyar was a poetess of the Sangam period. This name indicates that worship of Kamakshi has been prevalent in Tamizh Nadu since very olden times. Let this be! Let us get back to the story.  



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Can anybody explain the meaning behind having too many Gnanis which may affect the birth of others?

Leave a Reply to AnonCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading