211. Kamakshi’s Splendour by Maha Periyava (Part 2)


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continues the splendor of Kamakshi in full glory. Explains how her physical attributes are the same as Eswara and how she and Eswara are no different.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama

காமாக்ஷியின் பெருமை (Part 2)

காலத்தின் போக்கில் மனிதன் மாறுகிறான்; ஜீவராசிகள் மாறுகின்றன; மரம் செடி, கொடி எல்லாம் மாறுகின்றன; லோகங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாம் மாறுகின்றன. இத்தனைக்கும், ஆதாரமான பிரம்மம்தான் மாறாமலே இருக்கிறது. எக்காலமும் ஒரேபோல் இருக்கிற பிரம்மமாகிற சத்தியத்தையே ‘ஸத்’ என்கிறோம்.

ஒன்று இருந்தால் மட்டும் பிரயோஜனம் இல்லை. தான் இருக்கிறோம் என்று அறிந்தால்தான் பிரயோஜனம் உண்டு. தான் உள்ளதாகவே உணராத ஒன்று இருந்தும் இல்லாதது மாதிரிதான். ‘ஸத்’ தாகிய பிரம்மத்துக்கு, தான் இருப்பதாக அறிவு இருப்பதால்தான் தன் சக்தியை இத்தனை தோற்றங்களாகக் காட்ட முடிகிறது. இப்படியாக ‘ஸத்’ தன்னைத்தானே அறிந்து கொள்வதைத்தான் ‘சித்’ என்கிறோம். ஞானம் என்றும் அறிவு என்றும் சொல்வது அதைத்தான். ‘ஸத்’ என்பது ஈசுவரன். ‘சித்’என்பதே அம்பிகை. தன்னையே அறிந்து கொள்ளும்போதுதான் ஆனந்தம் என்கிற உணர்வு உண்டாகிறது. ஈசுவரனும் அம்பாளும் – காமேசுவரனும் காமாக்ஷியும் சேர்ந்து – ‘ஸத்சித்’ஆனந்த பிரம்மமாக இருக்கிறார்கள்.

பிரம்மத்தையும் பிரம்ம சக்தியையும் பிரிக்க முடியாது. பாலும் வெண்மையும், புஷ்பமும் அதன் சுகந்தமும், தேனும் மாதுரியமும், அக்னியும் பிரகாசமும் போல் ஈசுவரனும் அம்பாளும் பிரிக்கவொண்ணாமல் அபின்னமாக இருப்பவர்கள். இதனால்தான், அர்த்தநாரீசுவரராகச் சொல்கிறோம். ஒரே ஸ்வரூபத்தில் ஈசுவரன் ஒரு பாதி, அம்பாள் மறு பாதி.

‘ஆனால் இதுவும்கூட முழுக்கச் சரியில்லை போலிருக்கிறதே!’ என்கிற மாதிரி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகம் ஒன்றில் (த்வயா ஹ்ருத்வா வாமம்) என்று சொல்கிறார்:

“அம்பிகே! நிர்குணப் பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈசுவரனாக இருக்கிறது. அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாயாம். அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு பாதி உடம்புதானே இருக்க வேண்டும்? ஆனால் பதியின் பாதி சரீரத்தைதத் திருடிக் கொண்டதிலும் உனக்குத் திருப்தி உண்டாவில்லை. பாக்கி பாதி தேகத்தையும் நீயே ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாகக் காண்கிறது. அதனால்தான் பூரண ஸ்வரூபமாகச் செக்கச் செவேலென்று காமேசுவரியாக இருக்கிறாய். பரமேசுவரனுக்கு உரிய நெற்றிக்கண், சந்திர கலை எல்லாவற்றையும் நீயே ச்வீகாரம் செய்து கொண்டு விட்டாய்!” என்கிறார்.

செயலற்ற பிரம்மம் அநுக்கிரஹம் செய்வதற்கென்றே பூரண ரூபமும் கொண்டுவிட்டது என்பதை இப்படிச் சொல்கிறார் போலிருக்கிறது.

‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்று ஆரம்பமாகும் சுலோகத்தில், அம்பாள் ஐந்தொழிலும் செய்வதாகச் சொல்லும்போது, “பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் (மாயைக்கு அதிபதியான) ஈசுவரன் இவர்களைக் கட்டில் கால்களாகக் கொண்ட மஞ்சத்தின் மீது நீ பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனோடு அநுக்கிரஹ ரூபிணியாக, காமேசுவரியாக விளங்குகிறாய். ஆனாலும் அந்தக் காமேசுவரன் ஒருத்தன் தனியாக இருப்பதே தெரியவில்லை. உன்னுடைய ஜோதிச் சிவப்பு அவனுடைய ஸ்படிக நிறத்திலும் பளீரென்று வீசி, அவனையும் ஒரே சிவப்பாக்கி சிருங்கார ரஸத்தின் வடிவமாக்கிவிட்டது” என்கிறார். காமாக்ஷியின் அநுக்கிரஹ சக்தி அத்தனை வலுவானது!

முதலில் சொன்ன சுலோகப்படி அம்பாளுக்கும் முக்கண் உண்டு; சிரஸில் சந்திரகலை உண்டு; நெற்றிக் கண் அக்னி வடிவானது; வலக்கண் சூரிய வடிவம்; இடக்கண் சந்திர வடிவம். உலகத்தை வாழ்விக்கிற மூன்று ஜோதிகளும் பராசக்தியிடமிருந்து வந்தவை. இதைக் கவித்வ அழகோடு ஸெளந்தர்ய லஹரியின் இன்னொரு சுலோகம் சொல்கிறது. அது, ‘உன் வலது கண் பகலைப் படைக்கிறது. இடது கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள நெற்றிக் கண் சந்தியா காலத்தைப் படைக்கிறது. அதனால்தான் அது சிவந்து விளங்குகிறது’ என்கிறது. காலஸ்வரூபிணி அவளே என்பது இதன் தாத்பரியம்.

காமாக்ஷி தன் சிரஸில் சந்திரகலை வைத்துக் கொண்டிருப்பதை மூகரும் தமது ‘பஞ்ச சதீ’யில் சொல்கிறார். மூகபஞ்சதீயில் முதலில், ‘ஆர்யா சதகம்’ என்று நூறு சுலோகங்கள் இருக்கின்றன. இந்த சுலோகங்களின் விருத்தத்துக்கு ‘ஆர்யா’ என்று பேர். ஸ்தோத்திரிக்கப்படும் அம்பாளும் ஆர்யா. அதாவது, பரம உத்தமமானவள். இரண்டு விதத்திலும் இதற்கு ‘ஆர்யா சதகம்’ என்ற பெயர் பொருந்தியிருக்கிறது. இதில் ‘ஐசுவரியம் இந்துமௌளே’ என்கிற ஸ்லோகத்தில் இவ்விஷயத்தை சொல்லுகிறார். ‘இந்துமௌளி எனப்படும் சந்திரசேகரின் ஐசுவரியமே நீதான் அம்மா’ என்கிறார். ஈசுவரனின் தன்மை எதுவோ அதுவே ‘ஐச்வரியம்’. ஈசுவரனுக்கே ஈசுவரத் தன்மை பராசக்தியால்தான் வந்தது என்கிறார். ஸெளந்தர்ய லஹரியில் முதல் சுலோகமும் இதையேதான், ‘அம்பிகையின் சக்தி இல்லாவிட்டால் சிவன் அசைந்து கொடுக்கக்கூட முடியாது’ என்கிறது. பரமேசுவரன் தன்னைத் தானே அறிந்து கொள்கிற அறிவாகிய அசைவு அவள்தான். எங்கும் நிறைந்திருக்கிற அந்தப் பரமேசுவர தத்துவம் அவள் கிருபை இருந்தால்தான் நமக்கும் தெரியும்.

இவளால்தான் அவனை அவனே அறிய முடியும். அதே சமயத்தில் அவன்தான் அவளுக்கு ஆதாரமாக இருக்கிறான். ‘பிரகிருதி’ என்கிற இவள் இயற்கையாக இருக்கிறாள்; அது ஜடம்போலத் தோன்றுகிறது; அதற்கு உயிராக அவனே புருஷனாக இருக்கிறான். பிரகிருதியை மாயை என்றும், ஈசுவரனை மாயி என்றும் சொல்வார்கள். ஈசுவரனின் செல்வமான காமாக்ஷி, ‘பிரகிருதியோடு ஒன்றாகக் கரைந்து காஞ்சிபுரத்தின் மத்தியில் சந்திரப் பிஞ்சைச் சிரஸில் சூட்டிக் கொண்டு, வேதங்களின் பரம தாத்பரியமாகப் பிரகாசிக்கிறது’ என்கிறார் ஸ்ரீ மூகர். “ஐந்தவ கிசோர சேகரம்” – குழந்தையான பிறைமதியைச் சிரஸில் உடையது – என்று வெகு லலிதமான வாக்கினால் சொல்கிறார். ‘முற்றா வெண்திங்கள்’ என்று ஞானசம்பந்தக் குழந்தை சொன்னது போலவே!

அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.

___________________________________________________________________________________________________________________________

Kamakshi’s Splendour by Maha Periyava (Part 2)

Over time people change; so do living things, trees, plants, the world, stars, and planets. The one thing that is the base for all these – the Brahmam – remains unchanged. The static, unchanging Brahmam – the eternal truth – is called ‘Sat’. There is no use if something just exists; it has to realize that it exists. If it is not aware of its existence, it is as good as not existing. The Brahmam that is ‘Sat’, is aware of its existence and is exhibiting itself as various forms in this world. The ‘Sat’, when aware of itself, is called ‘Chit’ – also referred to as knowledge and intelligence. ‘Sat’ is Eswara; ‘Chit’ is Ambal. There is happiness in self awareness. So Eswara and Ambal – Kameshwara and Kameshwari – together form the ‘Satchit’ Ananda Brahmam.

Brahmam and its force cannot be separated. Like milk and its whiteness, flower and its fragrance, honey and its sweetness, fire and its brightness, Eswara and Ambal are inseparable. This is why we worship them as Arthanareeswara. In the same form, Eswara occupies one half and Ambal the other.

“But this may not be the complete truth” says Sri Adi Sankara, in one of the slokas in Soundarya Lahari. (tvaya hrutva vamam – Slokha 23). ‘Mother! The Brahmam that has no attached gunas exists as the colourless crystal – as Eswara. It is said that you snatched away the left part of that form. So only one half of his form should belong to you. It seems you were not happy occupying one half and have taken the other half too. That is why the full form appears red in colour – as Kameshwari. You have also got hold of Parameshwara’s third eye and the crescent moon on his head!’ Sri Adi Sankara seems to say that the unmoving Brahmam has entirely taken up the form of Kameshwari only to grant Anugraham.

In the slokha ‘gathasthe manchatvam’ (Soundarya Lahari – 92) while mentioning that Ambal performs all the five tasks, Sri Adi Sankara says: ‘You are seated on the cot along with Kameshwara – the Brahma Swaroopa, as Kameshwari – the Anugraha Roopini. Brahma, Vishnu, Rudra, and Eswara (the authority for maya) form the four legs of this cot. But Kameshwara’s form is not seen separately. Your bright hue is reflected by the colourless spatika form of Kameshwara. Now, he too appears bright red in colour – his red form representing the ‘shringara rasa’. Kameshwari’s power to grant anugraham is that powerful.

As mentioned in the earlier sloka, Ambal has three eyes; She has a crescent moon on the head. The third eye is Agni; the right eye is the sun; the left eye is the moon. Thus, all the three lamps that brighten up this world originated from Ambal. This is mentioned with poetic beauty in another sloka of the Soundarya Lahari (sloka – 48):’ Your right eye creates the day; your left eye creates the night; The third eye (on the forehead), which is between these two, creates the twilight hours. That’s the reason the third eye is red in colour’. This sloka sums up the fact that She is time.

Mooka Kavi, in his composition Mooka Pancha Shati, makes a mention of the presence of crescent moon on Kamkshi’s head. The first hundred slokas of Mooka Pancha Shati are titled ‘Araya Shatakam’. The metre (छन्दस्) of these slokas is ‘Arya’. Ambal who is worshipped in these slokas is also ‘Arya’ – very noble. Thus, in both ways the title ‘Arya Shatakam’ is very appropriate. He mentions about the crescent moon in the sloka beginning ‘aishwaryam indumoule’( ऐश्वर्यम् इन्दुमौऴे–sloka 7). ‘You are the aishwaryam (treasure) of the Chandrasekhara – the Indumouli’. The inherent property of Eswara is Aishwaryam. Mooka Kavi says that Eswara acquired this property only because of Parashakti. The first verse of Soundarya Lahari endorses the same: ‘Siva cannot even move but for the power of Ambika’. She is the movement and the intellect by which Eshwara realizes His self. We will become aware of Parameshwara only through Her blessings.

He is able to realize himself only because of Her. At the same time, He is the base for Her. She is Prakruthi – nature. It appears to be static. He is the life behind it – He is the Purusha. Prakruthi is called Maya and Eshwara is called Mayi. Eshwara’s treasure – ‘Kamakshi has merged with Prakruthi and is present at the centre of Kanchipuram, with the crescent moon adorning Her head’ says Mooka Kavi. ‘aindava kishora sekharam’ (ऐंदवकिशोरशेखरम्) – She has the young crescent moon on her head – says he, making use of beautiful phrases. Thirugnana Sambandar, as a child, referred to the same crescent moon as ‘muttraa ven thingal’ – the young white moon!

Mooka Kavi does not stop with his reference to Ambal as maya. The Purusha – the force behind the maya is also Kamakshi. They are not differentiable and are inseparable. They are one. They exist as Adwaita (dwaita refers to two; adwaita is ‘one’). Adwaita is the essence of the Vedas. In Kanchipuram, ‘Kamakshi’s ‘adwaita form’ shines bright’: ‘aidamparyam chakaasthi nigamaanaam’ (ऐदम्पर्यं चकास्ति निगमानाम्) – says Mooka Kavi.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading