இரட்டை மஸ்தான்

Thanks to Sri Hariharasubramanian for this share.

தஞ்சாவூரில் இரண்டு முஸ்லீம்கள் ஸ்ரீ ஸதாசிவ பிரும்மேந்திராளை வணங்கி அனுக்கிரகம் பெற்று உன்னத நிலையை அடைந்தது பற்றி சத்குரு ஸ்ரீ சிவன் சார் தெரிவித்துள்ளார்.

இரண்டு முஸ்லீம்கள் நமது ஞானியின் மகத்வத்தைக் கேள்வியுற்று அவரை நபியின் அவதாரமாக நினைத்து தரிசிக்கவும் மனம் கொண்டு விட்டனர்.

இந்த சமயத்தில் ஞானி அவ்வப்போது தஞ்சாவூர் பிராந்தியத்தில் தோன்றி வந்தார். ” நிர்வாண சாமியார் வந்திருக்காரு ” என்று கேள்விப்படும் பொழுதெல்லாம் இந்த இருவரும் ஓடித் தேடிப் போகும் ஊக்கத்தை ஏற்று வந்தனர். முடிவாக ஞானியை இவர்கள் காணவும் நேர்ந்து விட்டது. அல்லாவை வணங்குவதை போல் ஞானியை வணங்கி நின்றார்கள்.

சென்ற ஜென்மத்தில் புரிந்த ஓர் மகத்தான புண்ணியத்தின் பலனையொட்டி ஞானியின் வீக்ஷண்யத்தை இவர்கள் ஏற்றார்கள். இதன் பலனாக அந்த இரு பாமரர்களும் பழுத்த விவேகிகளைப் போல் உள்ள ஓர் நிலையை அடைந்து விட்டனர். ஞானியின் அனுக்கிரகத்தை இவர்கள் பெற்றதில் இருந்து உலக பாசங்கள் அனைத்தும் விலகி விட்டன. அதாவது பசி, தாகம், நித்திரை, ஆடை போன்றவைகளை மட்டும் இவர்கள் ஏற்று வந்தனரே தவிர, உலக ஈடுபாடுகளில் இருந்து விடுவித்துக் கொண்டனர். மேலும் ஞானியின் தியானத்தில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். இவர்களுடைய வைராக்கியத்தைக் கண்ணுற்ற எல்லா மதத்தினர்களும் இவர்களைப் போற்றி வந்ததுடன் சிலர் தரிசித்தும் வந்தார்கள். இவர்கள் இறந்தவுடன் அதே இடத்தில் இவர்களுக்கு சமாதிகள் கட்டப் பட்டன. தஞ்சாவூரில் இன்றைக்கும் ” இரட்டை மஸ்தான் ” என்று கூறப்பட்டு வரும் இரு சமாதிகளும் இவர்கள் அடக்கமான இடங்களாகும்.

Our namaskaram to Sri Brahmendral and Sri Sivan Sar!

——சத்குரு ஸ்ரீ சிவன் சார்
ஏணிப் படிகளில் மாந்தர்கள் !
ஸ்ரீ சிவன் சாரின் பொக்கிஷம் !Categories: Devotee Experiences

10 replies

 1. When we were children, We ( my immediate younger brother and myself) used to go there on behalf our grandmother who used to give moneys for doing “pathiya odhu vidu” . After it is finshed the priests there used to give prasad of (jaggery sugar mixed with pori or pattani) and we used to take then.
  She was a devotee of nagur andavar also.

 2. What is understood from the above event. Guru’s Kadaksham can deliver the ultimate experience (Mukti). Jaya Jaya Shankara Hara Hara Shankara.

 3. Thanks a lot for the quick reply by giving translation

 4. Namaskaram,

  English translation please for non-tamil readers

  • Sathguru Sri Sivan Saar explained about two muslims who got the blessings of our sadhasiva
   Brahmmendhrar in his EnippadikaLin maantharkal book. These two muslims on hearing
   About our mahaan longing to meet Sadhasiva Brahmmendhra swamigal. During that
   Period shri swamigal also visited many places in Tanjore District. Whenever the twins
   Heard about the visit of our swamijis they try to meet him and on one ausipscious day
   They were able to met him. Due to their purva jenma baagya they got the blissful vision of shri brahmendra and from then onwards they started behaving as a matured vivekas. Though they had food and dressed basically they separated themselves from likes and dislikes. After a period they started stayin in dhyana for long. Many people worshipped the twins and once they attained mukthi they were kept in the same place which is still available in Tanjore Gandhiji road by name Rettai Masthaan dhurga.. Still many people worshipping the twin samathis.
   — Please forgive mistakes if any.

 5. Sar’s YPM is a treasure trove!!

 6. Thanks for this info. Where is the Rettai Mastan samadhi in Thanjavur?

 7. Even today irrespective of religion, people visit the ssamadhi of Rettai Mastaan to seek their blessings when they are in trouble.

 8. Saranam Saranam Sri Sivan Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: