தமிழ்க் கவி பாடறவாளுக்கு இன்னும் விசேஷமா தரணும்!

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for the share….

Mahaperiyava-drawing-sk.jpgதமிழுக்கும் தமிழ்க் கவிதைகளுக்கும் நம் ஸ்ரீ மடம்மு க்யத்வம் கொடுக்காதவர்கள் என சமீபத்தில் ஓர்
சர்ச்சை நிகழ்ந்தது ஞாபகம் இருக்கலாம்.

அது தவறு என்று சுட்டிக் காட்டும் இந்த நிகழ்ச்சி!

”தமிழ்க் கவி பாடறவாளுக்கு இன்னும் விசேஷமா தரணும்!”

இதை யார் சொன்னது? நம் மஹாபெரியவாதான்!!!

1987ல் இந்து தமிழ் மன்றம் என்ற அமைப்பின் மாநில பொறுப்பாளராக இருந்த புலவர் மா.வெங்கடேசன் என்பவர் அந்த அமைப்பின் பத்தாம் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டு,க் கவிதைப் போட்டிக்கு உயர்ந்த பரிசாக ஒரு தங்க நாணயம் ஒன்றைப் பரிசாக அளிக்க முடிவு செய்து அப்போது வட இந்தியாவில் முகாமிருந்த புதுப்பெரியவாளிடம் விண்ணப்பம் செய்தார்.

புதுப்பெரியவா ஸ்ரீமடத்திலிருந்து தங்கக்காசு பெற்றுக் கொள்ளுமாறும் ஆண்டு விழா நடைமுறை விதிகளை எல்லாம் மஹாபெரியவாளிடம் விண்ணப்பித்து அவருடைய பூர்ண ஆசியுடன் நடத்திக் கொள்ளுமாறு வெங்கடேசனிடம்சொன்னார்.

அதன்படி சிறப்புப் பரிசு பற்றிய தகவல்களைப் பத்திரிக்கைக்கு அனுப்புமுன் பெரியவாளின் திருப் பார்வையில் வைத்தார்.

அப்போதுதான் தெய்வமான பெரியவா தமிழின் மேல் வைத்திருந்த பற்று வெளிப்பட்டது.

”தமிழ்க்கவி பாடறவாளுக்கு இன்னும் விசேஷமா பரிசு தரணும்…அதனாலே ரத்னம் பதிச்ச இன்னொரு காசும் பரிசா கொடுத்துடறதா பத்திரிக்கைக்கு சேதி அனுப்பிடு” என்று உத்தரவிட்டார்.

அந்த வருடம் ஏராளமான தமிழ்க்கவிகள் போட்டியில் பங்கு பெற்றனர்.
கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிப்புவிழா ஆண்டு விழா நிகழ்ச்சியோடு சேர்க்கப்பட்டது.
நிகழ்ச்சி நிரலில் மஹாபெரியவாளிடம் ஆசி பெற்று, பால பெரியவா திருக்கரங்களால் பரிசு அளிப்பது வரை நிகழ்ச்சி நிரலை எழுதி பெரியவா பார்வைக்கு வைத்தார்.

நிகழ்ச்சி நிரலை முற்றிலும் பார்த்த பெரியவா

”தொண்டை மண்டலாதீன சன்னிதானத்தை விழாவுக்கு அழைக்கலையா?”என்று கேட்டார்கள்.

அப்போதுபெரியவா தமிழாதீன மடாதிபதிகளுக்குக் கொடுத்த முக்யத்வம் தெள்ளெனத் தெரிந்தது.

”நிகழ்ச்சியில் அதற்கு நேரம் இல்லை ”என்று சொன்னபோது,

பெரியவா ”அவரும் வரட்டும் நீ போய் அவரைக் கேட்டுப் பத்திரிக்கையில் சேர்த்துடு” என்றார்.

அவரும் பெரியவா விருப்பப்படி போய்க் கேட்க மடாதிபதியும் உடனே சம்மதம் அளித்தார். விழாவிற்கு வந்த கலைஞர்கள் எல்லாம் பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தனர்.

அந்த சமயம் பெரியவா உபன்யாஸம் ஒன்று நிகழ்த்தினார்.

”நீங்கள் எல்லரும் இன்றையிலிருந்து நம்ம பழைமை சமயாசாரங்களைக் கடைப்பிடிக்கிறதா உறுதி எடுத்துக்கணும்.வெளி நாட்டவரெல்லாம் நம் ஆசார அனுஷ்டானங்களை ரொம்ப உசத்தியா எண்ணிப் பின்பற்றி வரும்போது, நம் தமிழ்க் கலாசாரத்தை நாமும் விடாமல் கடை பிடிக்கணும்”என்றார்.

மேலும் சொன்னார்…

“நீங்கள் ஆளுக்கு வெவ்வேறு விஷயம் பற்றி ஒரு கவிபாடப் போறேள்…அதுக்கு முந்தி எல்லாரும் சிவ பெருமான் பற்றி ஆளுக்கொரு கவி பாடணும்…நான் உங்களை டெஸ்ட் பண்றதா நினைக்க வேண்டாம், என் சந்தோஷத்துக்குத்தான்” என்றார்.

பத்தே நிமிஷங்களில் எல்லாரும் எழுதி அந்த நாலு முதல் எட்டுவரிகளான கவிதைகளை பாடிக்காட்டினர். பெரியவாளும் பொறுமையாக அவற்றை ரசித்துக்கேட்டார்.

”தேவாரம் திருவாசகம் மாதிரி உங்க பாடல்கள் கேட்க மிக நன்னா இருந்தது”…’இப்படியேஸ்வாமி பேர்லே பாடி வந்தால் உங்களுக்கெல்லாம் அவரோட அனுக்ரஹம் நிறைய கிடைக்கும் சௌக்யமா இருப்பேள்’ என்று ஆசி கூறினார்.

இது முடிந்து சிவராத்ரி தினம் வெங்கடேசன் அவர்கள் பெரியவாளை தரிசிக்கச் சென்றார்

பெரியவா அவரைப் பார்த்து” அன்னைக்கு அவாள்ளாம் சிவபெருமானைப் பத்தி ஸ்தோத்ரம் பாடினாளே அதெல்லாம் எடுத்து வெச்சுருக்கியோ?” எனக் கேட்டு இவரை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

ஏதோ ஒப்புக்காக அவர்களை கவி பாடச் சொல்லவில்லை என்று புரிந்தது.

”அதையெல்லாம் ஒரு சின்ன புஸ்தகமா போட்டு இன்னைக்கு சிவராத்ரிக்கு வர பக்தர்களுக்கு விநியோகம் செய்யணும் செய்வியா?” என்றார்.

”பெரியவா உத்தரவு…ஆனால் இன்னைக்குள்ளே ப்ரிண்ட் போட முடியுமா?.’…’

”எல்லாம் முடியும் போய்க் கேளு, செய்வான்”…

பெரியவா உத்தரவு என்றவுடன் அந்த அச்சகத்தார் அதை சிரமேற்கொண்டு 16 பக்க புஸ்தகமாக 2000 காபிகள் போட்டு இரவு 11 மணிக்குக் கொடுத்தனர்.

பெரியவா உத்தரவின்படி கைலாஸ நாதர் கோவில்,ஏகாம்ரஸ்வரர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் ஸ்ரீ மடம் எங்கும் வினியோக ஆயிற்று!

சொன்ன சொல்லைக் காப்பாத்திட்டே!”

தமிழையும் ஆன்மீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்த மஹான் தன் செயலை வெகுவாகப் பாராட்டியதைத் தன் பாக்யமாக நினைக்கிறார் வெங்கடேசன் அவர்கள்.

தகவல் அகிலா கார்த்திகேயன்



Categories: Devotee Experiences

7 replies

  1. It is a fantastic article. This article should be published by the media at that time, when some fringe groups were creating unwanted commotion against our matam. Jaya Jaya Shankara Hara Hara Shankara

  2. very nice. Can we have a copy of this compilation please ?

  3. The drawing of Mahaperiyava with the elephant is by my beloved niece, Kum S. Kirtana.

  4. So nice to read this. All the more so when many youngsters today in TN can’t read, let alone write, Tamil. For how many more years we are going to get Tamil poets. I would like my pessimism to be proved wrong.

  5. I wish I could do that. By sitting here in Chicago, it is quite impossible to do that. Local volunteers should volunteer to search this. Besides, it is hard to go back to those years….

  6. Hello Mahesh,

    Maha Periavaa Blessings will always be with you.

    I have a small request. In the below mail, it is stated that a small
    book was printed and distributed to all present on that day per Periavaa
    Utharavu.

    It is a compilation of the Tamil Kavithas written by the Tamil Poets
    on that day on Siva Peruman.

    Can you find out if any of them have a copy of the same and you can
    publish it, for our happiness and to read and appreciate the Tamil Poems on
    Siva.

    Let HIM give you his full blessings to continue your yomen service to
    Periavaa and the Kanchi Madam.

    Regards and Thanks

    S. Ramachandran
    Bangalore​

    2018-05-04 19:26 GMT+05:30 Sage of Kanchi :

    > Mahesh posted: “Thanks to Smt Saraswathi Thyagarajan mami for the
    > share…. தமிழுக்கும் தமிழ்க் கவிதைகளுக்கும் நம் ஸ்ரீ மடம்மு க்யத்வம்
    > கொடுக்காதவர்கள் என சமீபத்தில் ஓர் சர்ச்சை நிகழ்ந்தது ஞாபகம் இருக்கலாம். அது
    > தவறு என்று சுட்டிக் காட்டும் இந்த நிகழ்ச்சி! ”தமிழ்க் க”
    >

Leave a Reply

%d bloggers like this: