நீ அதை எடுத்துண்டு வா பார்க்கணும்

PeriyavaVilvamSide-645x960

Thanks to Smt Saraswathi Thyagarajan mami for the share…

திரு அனந்தன் அவர்கள் ஆங்கில சுருக்கெழுத்தாளர். ஸ்ரீ மஹாபெரியவாளின் உத்தரவின் பேரில் 1966ல் நடைபெற்ற மடாதிபதிகளின் மாநாட்டில் பேசப்பட்டவைகளை சுருக்கெழுத்தில் பதிவு செய்தவர்.

ஊரு முறை மஹா பெரியவா ராஜாஅண்ணாமலைபுரம் விஜயம் செய்தார்.. அங்கே குடியிருந்த அனந்தன் அவர்கள் இரண்டு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் மற்ற பக்தர்களுடன் பெரியவாளுக்கு பூர்ண கும்பம் கொடுக்க நின்றார்.

பெரியவா அங்கே வந்ததும்,இவரை குறிப்பாக கிட்டே வரச்சொல்லி ”நீ எங்கே இருக்கே” என்று வினவினார். இவர் வசிப்பது நல்லப்பன் தெரு என்று சொன்னதும் அந்தத் தெருவை நோக்கி விடு விடென் நடந்தார்.

இவர் வருவதை எதிபாராத அனந்தன் ஓடிச் சென்று வீட்டில் விளக்கேற்ற ஸ்ரீபெரியவா மேனா அங்கு வந்து நின்றாயிற்று.!

”தமிழ்லே சுருக்குப் புஸ்தகம் எழுதறயாமே. நீ அதை எடுத்துண்டு வா பார்க்கணும்”

அனந்தனுக்கு பரம சந்தோஷம். அதன் கை ப்ரதியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அவசரமே இல்லாமல் அந்த ப்ரதியின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு புன்சிரிப்புடன் கடைசி பக்கம்
வரை படித்து முடித்தார்.அத்தனை ஆவல் தமிழ் மேல்!

”இங்கிலீஷ் பிட்ஸ்ேனில் P யை’ ‘ப’ ன்னு போட்டிருக்கும் Mஐ ‘ம ன்னு போட்டிருக்கும்..அப்படியே தமிழுக்கு ஏத்தாற்போல் போட்டிருக்கே”தான் முழுமையாகப் படித்ததன் சாஷியாக சொன்னார்.

பக்தருக்கு மெய் சிலிர்த்தது.

”இது அச்சாயிடுத்தோ?” பெரியவா வலிய ஆசி தரக் கேட்டார்..

”இல்லை” என்றதும் தன் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து, அதன் பிரதியின் மேல்
வைத்து அனுக்ரஹித்தார்.

தமிழக அரசே 1964ல் அந்தனூலை வெளியிட்டு அதன் பின் 1998ல் 4 ஆம் பதிப்பு வந்ததாக அநந்தன் சொல்லி ஆனந்திக்கிறார்.

சமயம் மதம் கடந்து தமிழ் மொழிக்காகவே அத்தெய்வம் செய்த அனுக்ரஹமல்லவா?
தமிழ்தெய்வம் என்பதும் சாலப்பொருந்தும் அல்லவா?Categories: Devotee Experiences

2 replies

  1. I think this book is not available..but the entire book was cylostyled and bought this book from Madurai…with the help of this book I passed Tamil shorthand high speed (120 words per minute)I am saying everyone who used this book are no doubt blessed.

  2. Amazing! What a blessing that was..! Could you tell me the name of the book? Is it available now?

Leave a Reply

%d bloggers like this: