41. Sri Sankara Charitham by Maha Periyava – In Brahmacharya Ashrama

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In the last chapter we saw why Bhagawathpadhal took avatar as a Sannyasi. Here we see Sri Periyava qualifying that statement saying that the entire avataram is not Sannyasam as the first 8 years were spent in Brahmacharya Ashram and serving as role model to the public. If we observe closely, whatever Periyava says here applies to HH own avataram as well. The situations may be slightly different but the avatara concept that is explained here directly corresponds to that.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the very cute drawing and the audio. She does bring in front of our eyes how Bhagawathpadhal as Brahmachari observed the Brahmacharya Ashrama rituals (doing  anushtanams, Guru Sevai, Bikshai, Service to mother, etc.) per the Sastras, isn’t it? Rama Rama


ப்ரம்மசர்ய ஆச்ரமத்திலும்

[சில நிமிஷங்கள் யோசனையில் இருந்தபின் : ] இந்த அவதாரத்தில் ஆயுஸ் முழுக்க உபதேசம், ஸந்நியாஸம் என்றால் முழுக்கவே இல்லை. முதலில் கொஞ்சம் வருஷம் ப்ரஹ்மசர்யம், குருகுலவாஸத்தில் பூர்த்தியாக வித்யாப்யாஸம்; அப்புறந்தான் ஸந்நியாஸமும், உபதேசம் பண்ணுவதும்.

அவதார கார்யத்திற்கு 32 வருஷம் தேவைப்பட்டதென்று நான் சொன்னது ஸரியில்லை. அதை விடவும் ஒரு எட்டு வருஷம் குறைச்சலாகவே போதுமென்றிருந்தது.

தீடீரென்று ஒரு குழந்தை உபதேசம் செய்கிறதென்றால் இது ஏதோ தெய்விகமான அற்புதம் என்று ஆகிவிடும். தெய்விகமும், மநுஷத்தன்மையும் கலந்திருப்பதான அவதார லக்ஷணத்துக்கு இது பங்கம் உண்டாகிவிடும். ஒரு தெய்வக் குழந்தையை ஜனங்கள் எப்படித் தங்களுக்கான ‘மாட’லாக நினைத்து பின்பற்ற முடியும்? அதன் உபதேசம் தங்களுக்கும் அநுஷ்டான ஸாத்யம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? ஒரேயடியாய் உச்சஸ்தானத்தில் அமர்த்தப்பட்ட அவதாரத்துக்கும் அப்போது ஜனங்களோடு கலந்து பழகும் ஆசை நிறைவேறாது. உபதேச குருவாக வருகிற போதே ஒரு உச்சஸ்தானம், ஒதுக்கம் எல்லாம் வரத்தான் செய்யும். ரொம்பவும் நியமமாயிருந்து கொண்டு ஞான வைராக்யங்களை உபதேசித்துக் கொண்டிருப்பவர் மற்ற அவதாரங்களைப் போல ஜனங்களோடு அத்தனை ‘இன்டிமஸி’யுடன் உறவு கொண்டாட முடியாதுதான். ஏதோ கொஞ்சத்தில் கொஞ்சம் முடிவதும் அவர் அற்புத லேபிள் ஒட்டிக் கொண்டே பிறந்தாரானால் அடியோடு போய்விடும்!

அதனால், “க்ருஹஸ்தாச்ரமத்தின் மூலம் மநுஷ்யனுக்கு ‘மாட’லாக எத்தனையோ பாடங்களைக் காட்டத்தான் நமக்கு அடியோடு முடியாதென்றாலும், ப்ரஹ்மசாரியாக இருந்தாவது அதில் ‘மாட’லாக இருந்து காட்டுவோம்” என்று பரமாத்மா நினைத்தார்.

ப்ரம்மசர்ய ஆச்ரமம் வஹிப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னவென்றால், வேத வழியை நிலை நாட்டுவதே அவதார நோக்கமாயிருக்க, வேதத்தின் கர்ம ஸம்பந்தம் என்பதே இல்லாத ஸந்நியாஸிகவே அவதாரம் ஆயுஸ் முழுக்க இருந்துவிட்டால் எப்படி? ஸந்நியாஸிக்கும் (உபநிஷத்துக்களின்) மஹாவாக்யங்களால் வேத ஸம்பந்தம் இருக்கிறதென்றாலும், பெரும்பாலான ஜனங்கள் பண்ணக் கூடியது அவன் பண்ணும் மஹாவாக்ய விசாரம் அல்லவே! அவர்களுக்கானது வைதிக கர்மாக்கள் தானே? அதாவது, ப்ரவ்ருத்தி மார்க்கம்தான். அதுவோ க்ருஷ்ணர் காலத்தையும்விட இப்போது கெட்டுப் போயிருந்தது. வர்ண விபாகம் வேண்டாம் என்ற மதங்கள் இப்போதுதான் பரவி, வைதிக கர்மாநுஷ்டானத்திற்கு பெரிய ஹானி உண்டாக்கி வந்தன. இந்த ஸமயத்தில் தோன்றும் ஒரு அவதாரம் நிவ்ருத்திக்கான சித்த பரிபக்வம் பெற்ற கொஞ்சம் பேருக்கு மட்டும் அத்வைதத்தைச் சொல்லி விட்டுப் போய்விட்டால் எப்படி ஸரியாயிருக்கும்? லோகத்தில் பொதுவாக எப்படி தர்ம ஸம்ஸ்தாபனம் ஏற்படும்? முடிந்த முடிவாக ஞான லக்ஷ்யத்தைக் காட்டி நிவ்ருத்தியை நிலை நாட்டுவதே இந்த அவதாரத்தின் தலையான உத்தேசமானாலும், ஆரம்பமும், மத்தியும் இல்லாமல் முடிவுக்கு எப்படிப் போவது? லோகம் பூராவுக்கும் தர்ம ஸம்ஸ்தாபனம் என்னும்போது ப்ரவ்ருத்தி தர்மத்தில், அதாவது வேதோக்தமான கர்மாநுஷ்டானத்தில் பெரும்பாலான ஜனங்களை ஊக்கி உத்ஸாஹப்படுத்தாமல் ஒரு அவதாரம் முடிந்து போவதற்கில்லை. வியவஸ்தைகள் கெட்டுப்போய் ஜனங்களெல்லாம் ரொம்பவும் அசாஸ்த்ரீயமாகக் கார்யங்களைச் செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் ஈடுபாடு ஏற்படுத்தித் தரவேண்டியது அவதாரத்தின் முக்யமான கடமையாக ஆகியிருந்தது. ஆகையால் பெருவாரியான ஜனங்களை உத்தேசித்து வைதிக கர்மாநுஷ்டானம், ஆச்ரம வ்யவஸ்தைகள் ஆகியவற்றையும் (இந்த அவதாரத்தில்) வலியுறுத்திச் சொல்லத்தான் வேண்டும் என்று ஸ்வாமி நினைத்தார்.

சொன்னால் மட்டும் போதாதே! சொன்னதை ஸொந்த வாழ்க்கையில் எக்ஸாம்பிளாக நடத்திக் காட்டினால்தானே சொல்லுக்குச் சக்தி ஏற்படும்? ஆனால் வைதிக கர்மாநுஷ்டானமில்லாத ஸந்நியாஸி எப்படி அதற்கு எக்ஸாம்பிளாக வாழ்ந்து காட்ட முடியும்?

இதை ஸமாளிக்கவுந்தான், ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தில் முதலில் இருந்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸியாவது என்று தீர்மானம் பண்ணினார். க்ருஹஸ்தன் மாதிரி அத்தனை யாக யஜ்ஞாதி கர்மாக்கள் ப்ரம்மசாரிக்கு இல்லாவிட்டாலும் இவனுக்கும் அநேக வைதிக அநுஷ்டானங்கள் உண்டு. ஆதலால், ‘வழிகாட்டியாக ப்ரம்மசர்யாச்ரமத்திலிருந்து கொண்டு செய்ய முடிந்ததையெல்லாம் செய்யலாம்-வேதாத்யயனம் பண்ணலாம்; ஸமிதாதானம் பண்ணலாம்; பிக்ஷை எடுத்து வரலாம்; இந்த ஆச்ரமத்திற்குரிய நான்கு வ்ரதங்களை அநுஷ்டிக்கலாம்; இதெல்லாம் வறட்டு வறட்டு என்று வெறும் கார்யமாகப் போய்விடாமல் ஹ்ருதயம் கலந்து ப்ரியமாக, பணிவாக குரு சுச்ரூஷை பண்ணலாம்-‘பெர்ஃபெக்டா’க இப்படி நடத்திக் காட்டிவிட்டு அப்புறம் ஸந்நியாஸத்திற்குப் போகலாம். அசாஸ்த்ரியமாக பல பிக்ஷுக்கள் இந்த நாளில் தோன்றியிருக்கிற மாதிரி இல்லாமல், ‘இந்தக் குழந்தை ஸந்நியாஸி யார் தெரியுமாவாம்? நியமமாக குருகுலவாஸம் பண்ணிவிட்டு, அப்பபுறம் சாஸ்த்ரோக்தமாக, குருமுகமாக (ஸந்நியாஸ) தீக்ஷை வாங்கிக் கொண்ட குழந்தையாம்’ என்று லோகம் பேசும்படியாக நடத்திக் காட்ட வேண்டும். க்ருஹஸ்தனாயிருந்து தார-புத்ராதிகள், அதிதிகள் ஆகியவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்து காட்ட முடியாவிட்டாலும், ப்ரஹ்மசாரியாயிருந்து ஆசார்ய ஸேவை, தாயாருக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஆகியவற்றை சுத்தமாக நடத்திக் காட்ட வேண்டும். வேத சாஸ்த்ரங்களில் லோகத்துக்கு மறுபடி பிடிப்பு ஏற்படுத்தித் தரவேண்டிய அவதாரம், ஒரு சாஸ்த்ரமும் தேவையில்லாத அதிவர்ணாச்ரம ஞானியாகப் பிறந்து விடாமல், ப்ரஹ்மசாரியாகவாவது இருந்து சாஸ்த்ரோக்தமான கர்மாக்களைச் செய்து அப்புறமும் சாஸ்த்ரோக்தமாக ஸந்நியாஸ தீக்ஷை பெற்று, அந்த ஆச்ரமத்துக்கான நியமங்களைப் பின்பற்றிக் காட்டுவதுதான் முறை” என்று பரமாத்மா நினைத்தார்.

நல்ல வேளையாக ஒருத்தனுக்கு நான்கு ஆச்ரமங்களும் ‘கம்பல்ஸரி’ தான் என்று வைக்காமல் நல்ல பக்வம் அடைந்தவனானால் ப்ரம்மசாரி க்ருஹஸ்தாச்ரமம் ஏற்காமல் அந்த ஆச்ரமத்திலேயே ஆயுஸ் முழுதும் இருக்கலாம் — ‘நைஷ்டிக’ ப்ரஹ்மசாரி என்று இருக்கலாம் — என்றும், இன்னும்கூட மனஸ் பக்வப்பட்டு விவேக வைராக்யம் நிரம்பியிருந்தால் ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ஸந்நியாஸாச்ரமத்திற்குப் போகலாமென்றும் சாஸ்த்ரங்களில் இருக்கிறது. போதாயனர், கௌதமர், வஸிஷ்டர், உசனஸ், அங்கிரஸ், யமன், காத்யாயனர், வ்யாஸர் ஆகியவர்கள் கொடுத்துள்ள ஸ்ம்ருதிகளில் (தர்ம சாஸ்த்ரங்களில்) இப்படிக் இருக்கிறது. ஜாபால ச்ருதியும் யோக்யதாம்சமுள்ள ப்ரஹ்மசாரி நேரே ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளலாம் என்கிறது. “ஆகையினால் இந்த அவதாரத்தில் அப்படித்தான் பண்ண வேண்டும். குழந்தையாகவும் ப்ரஹ்மசாரியாகவும் முதலில் ஒரு எட்டு வருஷம் இருந்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸியாகி அவதார கார்யத்தை முடிக்கலாம். க்ருஹஸ்தாச்ரமம் என்றால் இந்த யுகத்து ஜனங்களுக்கு விகல்பமான எண்ணங்கள் தோன்றுவதுபோல ப்ரஹ்மசர்யாச்ரமத்தைப் பற்றி இல்லாததால் இந்த மாதிரிப் பண்ணலாம்” என்று தீர்மானித்தார்.

___________________________________________________________________________________

In Brahmacharya Ashrama

[After being thoughtful for a few minutes:] When it is said that it was all preaching and sainthood during his entire lifetime, it was not, entirely that way.  Initially, a few years were in bachelorhood (brahmacharya), fully completing the education in the house of a Guru (Gurukulavas) and thereafter taking to hermitage (Sannyasa) and preaching.

What I said that it required 32 years to fulfil the objective of the incarnation, was not correct.  It was enough to do it with even eight years less.

If suddenly, a child starts preaching, it would amount to some kind of a divine miracle.  It would have affected the objective of the incarnation being a mixture of divine and human.  How can people treat a divine child as their ‘model’ and emulate?  How would they be able to believe that it would also be possible for them to follow the (divine child’s) teachings?  When placed in such a high pedestal, it would also not be possible for the incarnation himself to fulfil His desire of mingling with the people.  As it is, as a preaching guru, the status is high and there will be a distance (between the people and the incarnation).  Being so strictly disciplined and preaching indifference to worldly matters, it would definitely not be possible for him to enjoy that much ‘intimacy’ like any other incarnation.   Whatever little possible also would not be there, if he was born with that miracle label.

Therefore, since it would be entirely not possible for Him to demonstrate many varied lessons to the human beings, as a ‘model’, through living in household (Gruhasthashrama), He thought of living as a bachelor and be a ‘model’ at least in that.

There was another reason for adopting the bachelor life.  When the objective of the incarnation was to establish the path of Vedas, how could the incarnation’s entire life remain, as an ascetic, who does not have any connection to carrying out the rituals prescribed in the Vedas?  Even though there is a connection between an ascetic and the Vedas in so far as the supreme doctrines (Upanishad’s Maha Vaakyas) are concerned, but the majority of the people do not indulge in the inquiry into the doctrines as a hermitage who renounced everything does. Is it not that what is applicable for them is only the ritualistic practices prescribed in the Vedas?  That is, only the path of pravruthi.  Whereas that (adoption of pravruthi path) was much more degenerated presently, than it was during the days of Krishna.  In these times only, religions which were against the practice of discrimination based on class, had spread out and damaged the adherence to Vedas.  How could it be correct if an incarnation happening in such a period goes off after teaching the Adwaitha only to a few who have the maturity of mind to follow nivruthi mode?  How can Dharma be reestablished commonly in the world? Even though the ultimate aim of the incarnation was to establish nivruthi mode by highlighting the objective of obtaining Gnana (higher knowledge), how to reach the end without the beginning and middle?  When it is a matter of reestablishing the Dharma in the entire world, there is no point to end the incarnation without motivating the majority of the people to take to the Vedic path of discharging one’s duties. At a time when the general conduct had become bad and the people were indulging in activities not prescribed by the scriptures, it was incumbent on the incarnation to create an interest in performing the duties prescribed in the scriptures.  Therefore, keeping the interest of majority of the people in mind, Bhagawan decided to emphasize on following the path of discharging one’s duties as prescribed by the Vedas, system of different duties (Ashrama) etc., (in this incarnation).

It may not be enough to only preach!  Is it not that it would have the desired impact only if what is preached is demonstrated as an example in own life?  So, how could a renunciate who does not have the duty to fulfil the religious rites, live as an example?

To solve this too, he decided to be in the brahmacharya ashrama initially and then to become an ascetic later.  Although an unmarried student does not have the duties to perform sacrificial and ceremonial rites like that of a householder, still there are many Vedic duties for him.   Therefore, he wanted to do, as a model, all that was possible being in bachelorhood – he could do studying Vedas (Veda Adyayanam), do Samithadhaanam (offer  sticks/twigs) in the holy sacrificial fire, get food by begging; observe the four austerities prescribed for this (bachelorhood) ashrama; not doing all these just for the sake of it, but fully involving the heart and mind and affectionately and humbly offering the services to the Guru (teacher)-demonstrate all these perfectly and then taking to hermitage.  He wanted to demonstrate that the child was not like the so many monks of these days who do not adhere to the scriptures, but as acclaimed by the entire world as one who has followed the norm of being a student living in the house of the guru (gurukulavas) and thereafter taking initiation to hermitage as per the scriptures. Although he could not demonstrate the duties of a householder to his own and adopted children, guests, etc., he wanted to clearly demonstrate the duties enjoined on a bachelor, to be done to a teacher, services to a mother, etc.  He thought that as an incarnation which was meant to reinvigorate the interest in the Vedas among the people, should, instead of being born as a learned saint who does not have to follow any of the scriptures but it would be proper to demonstrate living as a bachelor and fulfil the duties as prescribed in the scriptures and then take initiation to hermitage as per the scriptures and follow the rules prescribed for that ashrama.

Luckily, scriptures have allowed that it is not mandatory for a person to observe all the four ashramas but if a brahmachari is well matured, he could skip taking to household and be a perpetual religious student or Brahman who observes the vow of chastity (naishtika brahmachari), throughout his entire life and if someone is still more matured and is full of wisdom (right discrimination) and is indifferent to worldly life, then he could straightaway take to hermitage from brahmacharya.   It is mentioned in this way in the scriptures given by Bhodhayana, Gouthama, Vasishta, Usanas, Angiras, Yaman, Kathyayana, Vyasa, etc.  Japala Shruti also says that a brahmachari can take to hermitage directly.  Therefore, He decided that He would live a life of a child and brahmachari during the first eight years and then become a hermit (sannyasi) and complete the task of the incarnation.  Since there were no false notions about Brahmacharya in the minds of the people of this eon (yuga) as they had in respect of Gruhasthashrama (householders), He decided to do it this way.

_________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. Only MahaPeriyava can tell in depth, the intricate decisions of the avatharam, Since he is none other than the Adhi Acharyal himself. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

  2. Awesome Sowmi, as usual! Driver gam!

  3. Great !! Very cute Adhi Sankarar !!
    Jaya jaya Sankara Hara Hara Sankara!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading