158. Maha Periyava’s Skanda Puranam-Lord Subramanya’s Incarnation in North India (Part 2)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continues the story of Sri Kumarila Bhatta, an avatar of Lord Subramanya. Unshakeable faith in Vedas, punishment for cheating a Guru, differences between Buddhism, Poorva Meemamsa, and Adwaitham has all been explained in this chapter.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri.R. Sridhar for the translation. Rama Rama

முருகனின் வடநாட்டு அவதாரம் (Part 2)

அஹிம்ஸைத் தத்வம் போன இடம் தெரியவில்லை. ஹிதவஞ்சனையாக அவரை ஏதோ பேச்சுக் காட்டி விஹாரத்தின் ஏழாவது மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கேயிருந்து அவர் எதிர் பாராத சமயத்தில் அங்கிருந்து அவரை அப்படியே கீழே தள்ளி விட்டார்கள்.

அந்த ஆபத்து சமயத்தில்கூட அவருக்கு வேதத்தில்தான் ஸ்மரணை. எனவே, “வேதம் பிரமாணமாக இருந்தால் நான் ஏழாம் மாடியிலிருந்து விழுந்தும் எனக்குக் கெடுதல் ஏற்படாமலிருக்கட்டும்” என்று ஆணை வைத்துக் கொண்டே விழுந்தார்.

அதேபோல் அத்தனை உச்சத்திலிருந்து விழுந்தும் அவருக்கு மண்டை நொறுங்கவில்லை. கைகால்கூட முறியவில்லை. கண்ணில் மட்டும் ஒரு கல் பொத்துக் கொண்டு கொஞ்சம் புண்ணாகி விட்டது. நமக்கு அவர் எப்படிப் பிழைத்தார் என்று ஆச்சரியமாயிருக்கிறது. அவருக்கோ, ‘வேதப் பிரமாணத்தின்மேல் நான் ஆணை வைத்திருக்க எனக்கு ஏன் இந்தச் சின்ன உபாதைகூட ஏற்பட வேண்டும்?’ என்று வேதத்தின் மேல் ஸ்வாதீனமாகக் கோபமே வந்தது.

அப்போது அசரீரி கேட்டது. அது, “நீ என்ன சொன்னாய்? வேதம் பிரமாணமாதலால் எனக்குக் கெடுதல் ஏற்படாது, என்று சொல்லவில்லையே! இப்படிச் சொன்னாலல்லவா பூர்ண நமபிக்கை என்றாகும்? நீ ‘வேதம் பிராமணமாக இருந்தால்’என்று சொன்னதில் கொஞ்சம் சந்தேகம் தொக்கி நிற்கத்தானே செய்கிறது? அதன் பலன்தான் கண்ணுக்கு வந்த கஷ்டம்” என்றது.

குமாரிலபட்டர் முன்னைவிடத் தீவிரமாக வேத கர்மங்களில் விசுவாசம் வைத்து, பாட்ட மதத்தை ஸ்தாபித்து, பௌத்தத்தை நிராகரணம் செய்யத் தொடங்கினார். தன் மதம் (சித்தாந்தம்) எதிராளி மதம் (பூர்வபக்ஷம்) இரண்டையும் கரைத்துக் குடித்த மகாமேதையாதலால், சுலபத்தில் பௌத்தர்களை வாதத்தில் வென்றார்.

‘சங்கர பகவத் பாதர் புத்த மதத்தை விரட்டினார்’ என்று நீங்கள் சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறீர்கள். இது தப்பு! ரொம்பவும் மிகை (Exaggeration) என்று அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற நானே சொல்கிறேன். ஆசாரிய பாஷ்யங்களைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். அதிலே பௌத்த மத கண்டனம் ரொம்பவும் குறைச்சல்தான். பௌத்தர்களை ஏற்கெனவே குமாரிலபட்டர் அடக்கி விட்டார். ஆசார்யாள் அதிகம் கண்டனம் செய்தது, வைதிகத்தையே சேர்ந்த இந்தக் கர்ம மீமாம்ஸகர்களையும், இன்னொரு வைதிக மதமான சாங்கியத்தையும்தான். அவருடைய பாஷ்யங்களில் பார்த்தால், இவற்றில் நூற்றிலொரு பங்கு தான் பௌத்தமத கண்டனம் இருக்கும்.

இதென்ன ஸ்வாமிகள் இப்படிச் சொல்கிறார் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஸுப்ரம்மண்யரின் அவதாரம் என்று குமாரிலப்பட்டரைச் சொல்லி, அவரே நம் ஆசாரியாருக்கு விரோதமான பௌத்தத்தைக் கண்டனம் பண்ணிவிட்டார் என்றும் சொல்லிவிட்டு, இப்போது ஆசார்யாள் பட்டரின் கர்ம மீமாம்ஸ மதத்தையே கண்டித்ததாகச் சொல்கிறேனே என்று குழப்பமாயிருக்கலாம். அப்படியானால், ஆசார்யாளின் மதத்துக்கு வேத கர்மநுஷ்டானமே இல்லாத பௌத்தம் விரோதமா, கர்மாநுஷ்டானம் மட்டுமே உள்ள மீமாம்ஸை விரோதமா என்று கேட்பீர்கள்.

இவை இரண்டுமே ஆசார்யாளுக்கு விரோதம் இல்லை. அத்வைதத்துக்கு எதுவுமே விரோதம் இல்லை. அதற்குள்ளே சகல சித்தாந்தங்களும் அடக்கம். படிப்படியாக கர்மம், பக்தி, ஞானம் என்று அது போகும். ஆரம்பத்தில் ஞானமேயில்லாமல் கர்மா செய்தாலும் போதும். முடிவிலே கர்மாவே இல்லாத ஞானம் வந்துவிடும். முதலில் சித்த சுத்திக்கு கர்மாதான் முக்கியம்; முடிவில் ஞானம்தான் முக்கியம். அங்கே கர்மா எல்லாம் நின்றுவிடலாம். இவற்றின் ஒருபடி லக்ஷியம் மட்டும் என்று நிற்கிறபோதுதான் அவற்றிடம் சண்டைக்குப் போக வேண்டும் என்று நம் ஆசாரியாள் நினைத்து வாதம், கண்டனம் செய்தார். அல்லது எந்தப் படி எந்த நிலையில் வருவது என்கிற தெளிவு இல்லாமல், அதை எல்லோருக்கும் பொதுவாக்கினால், அப்போது அதை வேத நிராகரணம் செய்தார். பக்திக்கும் ஞானத்துக்கும் வராமல் வெறும் கர்மாவோடு நிற்கிறார்களே என்றுதான் மீமாம்ஸகர்களைக் கண்டித்தார். பரம ஞானத்தைத் துளிக்கூட அநுபவத்தில் கொண்டுவர முடியாத சாமானிய ஜனங்களுக்கெல்லாம் மாயை, சூனியம், நிர்வாணம் என்று உபதேசம் பண்ணிக் கொண்டு லோக க்ஷேமத்துக்காக அவர்கள் அநுசரிக்க வேண்டிய வேத கர்மங்களைப் புறக்கணிக்க வைக்கிறதே என்பதால், பௌத்தத்தோடு சண்டைக்குப் போனார். பௌத்தம் ‘எப்போதும் – ஆரம்ப நிலையில்கூட கர்மா வேண்டாம்’ என்றதாலேயே, அதை ஆசாரியாள் நிராகரணம் செய்தார். ‘எப்போதும் கர்மாதான்; முடிகிற நிலையில்கூட ஞானம் வேண்டாம்’ என்றதால் பூர்வ மீமாம்ஸையை நிராகரித்தார். அவை இரண்டும் தங்கள் மட்டத்தை – லெவலை – அறியாதபோது சண்டை போட்டார். ஆனால், அவற்றை ஒவ்வொரு மட்டத்தில் தன்னிலேயே கொண்டதுதான் அத்வைதம். இதில் பௌத்தர்களுடன் இவர் போட வேண்டிய வாதப் போரைப் பெரும்பாலும் குமாரிலப்பட்டரே போட்டு அவர்களை நிராகரணம் செய்துவிட்டார். ‘ஸ்வாமியும் இல்லை, கர்மமும் இல்லை’ என்ற பௌத்தர்களை ‘ஸ்வாமி இல்லை, கர்மம் உண்டு’ என்ற மீமாம்ஸகர்கள் பெருமளவுக்கு ஜயித்த சமயத்தில், ‘ஸ்வாமியும் உண்டு, கர்மமும் உண்டு; கடைசியில் ஆத்ம சாந்தத்தில் கர்மமும் இல்லை; ஸ்வாமியும் தனியே இல்லை’ என்று சொன்ன ஆசாரியாள் அவதரித்தார்.

பரமேசுவரன் நம் ஆசார்யாளாக அவதரிப்பதற்கு முந்தியே, குமாரஸ்வாமி பட்டராக அவதாரம் செய்து பௌத்தத்தை நிராகரித்து, இவர் காரியத்தில் பாதியைச் செய்துவிட்டார்.

ஆசாரியாள் காசியிலிருந்து திக்விஜயம் புறப்பட்டார். அவருக்கு குமாரிலரைக் கண்டு தம் வழிக்குத் திருப்ப வேண்டும் என்பதிலேயே முனைப்பு. குமாரிலர் ஒருத்தர் அத்வைத வேதாந்தத்துக்குத் திரும்பி விட்டால், அத்தனை கர்ம மார்க்கக்காரர்களும் இதே வழிக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முனைப்பு.

இச்சமயத்தில் குமாரிலபட்டர் தம்மைச் சுற்றி உமியைக் கொட்டி அதை அக்னியில் கருக்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தாமும் அதில் கருகிக் கருகிப் பிராணத்தியாகம் செய்துகொள்கிறார் என்கிற சமாச்சாரம் தெரிந்தது. இதைக் கேட்ட ஆசாரியாள் பதறிப்போய் பிரயாகைக்கு விரைந்தார்.

குமார ஸ்வாமியின் அவதாரமான பட்டர் ஏன் இப்படி கோரமான முறையில் ஜீவனைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றால், மநுஷ்யர் மாதிரி செய்கிற காரியங்களில் தர்ம சங்கடமான ஒன்றைச் செய்து விட்டால், அதற்காகத் தண்டனையும் பெற்றேயாக வேண்டும் என்று அவதாரங்கள் தாமாகத் தீர்மானிப்பதேயாகும். ‘பௌத்த குருமார் என்னை அவர்களில் ஒருவராக நம்புமாறு ஏமாற்றி அவர்களிடமிருந்து வித்தையை ஸ்வீகரித்தேனே! குரு த்ரோகம் செய்துவிட்டேனே! ஈசுவரன் என்று ஒருத்தனை எதிர்ப்பார்க்காமல் புண்ணிய, பாப கர்மங்கள் தாமே பலன் தரும் என்று ஸ்தாபித்த நான், இப்போது குருத்ரோக பாபத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று ரொம்பவும் மனசு நொந்து தர்ம சாஸ்திரங்களைப் பார்த்தார். அதில் மனமறிந்து செய்த குரு த்ரோகம் உடம்பைச் சித்ரவதை செய்துகொண்டாலொழியப் போகாது என்று இருந்தது. ‘சரி அப்படியே செய்வோம்’ என்று அஞ்சாநெஞ்சராக முடிவு செய்தார் குமாரிலபட்டர். ‘துஷாக்னிப் பிரவேசம்’ என்று உமிக்காந்தல் நெருப்பில் வறுபட்டுச் சாவதுதான் மிகப் பெரிய சித்ரவதை என்பதால் அப்படியே சங்கற்பம் செய்துகொண்டு காரியத்தில் அதை செய்தார். நமக்கு இப்படி ஒரு பிராயச்சித்தம் போட்டிருக்கிற புஸ்தகம் அகப்பட்டால், அந்தப் புஸ்தகத்தை நெருப்பில் போடுவோம். குமாரிலரோ, பிராயச்சித்தம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு, தாம் தீயில் இறங்கினார்.

வேதகர்மாக்களை எல்லாம் மறுபடி நிலைநாட்டிய மகா பெரியவர், கொஞ்சம்கூட மனம் கலங்காமல் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உமிக்காந்தலில் வெந்து கொண்டிருக்கும்போது, பகவத்பாதாள் அவரிடம் ஒடோடி வந்தார்.

குரு த்ரோகத்துக்குத் தண்டனையாக (நிஜமான குருகூட இல்லை; போலி குருத் துரோகத்துக்காக) உமிக்காந்தல் அக்கினியில் வெந்துகொண்டிருந்த குமாரிலப்பட்டருக்கு முன் நம் ஆசார்யாள் வந்து நின்றார்.

ஆசாரிய தரிசனத்தால் குமாரிலப்பட்டருக்குத் துஷாக்கினியின் தகிப்புத் தெரியவே இல்லை.

தரிசன அமிருதத்தோடு ஆசாரியாள் அவருக்குத் தத்வ உபதேச அமிருதத்தையும் கொடுத்தார்.

இது வரை கதை சொன்னேன். இப்போது கொஞ்சம் கொஞ்சம் தத்வம் சொல்கிறேன். எல்லாக் கதையும் தத்வத்தில் நிறைந்து போவதற்குத்தான்.

________________________________________________________________________________
Lord Subrahmanya’s incarnation in North India (Part 2)

Their ‘Principle of Non-Violence’ had just vanished. They took him to the seventh floor of the Monastery with some deceptive sweet words. Then they suddenly pushed Kumarila Bhatta, who was totally unaware, down from the seventh floor.

Even in that time of danger he was thinking only about the Vedas. So he vowed, while falling down, ‘If the Vedas are true, then I should not be harmed in this fall’.

Likewise, he did not suffer any serious injuries, to his head or limbs, though he fell from such a height. Just one of his eye was injured as a stone had pierced into it. For us, it is surprise how he survived such a fall. But Kumarila Bhatta, was justifiably perturbed with the Vedas with the thought, ‘When I had Vowed on the Supremacy of the Vedas, why even this small injury should happen to me?’.

At that time, he heard an oracle which said, ‘What did you say? You did not say Since Vedas are supreme, no harm should happen to me. That would have shown your complete faith in the Vedas. But you said If Vedas were supreme…, which shows an iota of doubt in your mind. That (Doubt) resulted in the injury to your eyes’.

Now Kumarlia Bhatta, plunged into Vedic Ritual, with more seriousness and faith and established the ‘Bhattam’ sect and started negating the Buddhist Religious Tenets. Since he was a great genius, well versed in his own ideology (Karma-Meemaamsa) and also that of his opponents (Buddhism), he could defeat the Buddhists in the debates, with much ease.

You have read in history books that ‘Acharya Shankara’ had driven out Buddhism from this land. But this is wrong. I, who bear His name, confirm that it is an exaggeration. Those who have studied the works of Acharya Shankara, will agree. In His works, ‘criticism of Buddhist tenets’ form a very small portion. Kumarila Bhatta had already subdued the Buddhists. Acharya Shankara confronted and condemned the ‘Karma-Meemaamsa’ followers and those who followed the Sankhya philosophy, both of which were part of the Vedic traditions. If you carefully go through the commentaries of Acharya Shankara you will find that the condemnation of the Buddhist Religion will be a very small part of it.

You may wonder why Swamiji is telling like this. I told that Kumarila Bhatta was an incarnation of Lord Subrahmanya; I also told that Kumarlia Bhatta had subdued the Buddhists who were also inimical to Acharya Shankara; then I told that Acharya Shankara condemned the ‘Karma Meemaamsa’ sect of Kumarila Bhatta. These three statements would have confused you all. Now you may ask ‘Whether the philosophy propounded by Acharya Shankara was inimical to Buddhism which defied Vedic Rituals or the ‘Karma Meemaamsa’ sect which believed only in Vedic Rituals?’

Acharya Shankara did not consider either of them as his opponents. For Adwaitha there is no animosity with anyone. Adwaitha Philosophy encompasses all philosophies and tenets. Adwaitha will facilitate step-by-step progress from Karma (Action) to Bhakthi (Devotion) and finally Gnana (Knowledge). Initially it is enough if one does Karma-Yoga (Action) alone without the knowledge of Gnana-Yoga. That will finally lead to a state of Action-Less Realisation. Initially for cleansing the mind, the ‘Path of Action’ (Karma) is very important and in the final stage ‘the Path of Knowledge’ (Gnana) is Very Important and at that stage ‘Action’ (automatically) drops off.

Acharya Shankara condemned these philosophies only when they claimed that their philosophy alone was true and all others were false. And when the Buddhists claimed to preach equality without taking into account the individual capability then He condemned this act. He also condemned the sect of Karma-Meemaamsa, as they stopped with mere Rituals (Karma) without progressing into the Path of Knowledge (Gnana).

The Buddhists, who claimed that all are equal, had preached about Maya, Soonya, Nirvana, etc. to the common people, who could have never followed any of these (abstract) theories. They also preached for the abandonment of all Vedic Rituals which were meant for Universal Welfare, It was for this reason that Acharya Shankara condemned them. Buddhism declared that there is no need for the Vedic-Rituals even in the initial stages of a person. Karma-Meemaamsa’ said that there is no need for Knowledge even at the final stage and it is enough if we keep performing the Karma alone. When these two Sects failed to gauge their own levels, Acharya Shankara condemned them.

Adwaitha philosophy, at a particular level, contains a portion of both these religions. Here Kumarila Bhatta had debated and subdued the Buddhists to a very great extent.

Buddhism declared ‘There is No God. There is No Karma’.

Karma Meemaamsa, which subdued Buddhism, said ‘There is No God. But only Karma exists’.

But Acharya Shankara, who incarnated at that time, declared ’God exists and the Karma also exists. In the final stage of Self-Realisation, there is no Karma and there is no separate God’.

Even before Lord Shiva incarnated as Acharya Shankara, Lord Subrahmanya incarnated as Kumarila Bhatta and had subdued Buddhism to a very great extent, thus completing half the work (for Acharya Shankara).

Acharya Shankara started his victorious march from Kasi (Varanasi).  He wanted to convert Kumarila Bhatta to His (Adwaitha) Path because He thought that if Kumarila Bhatta is converted to the path of Adwaitha Vedanta, then it would be easy to convert the other ‘Karma-Meemaamsa’ followers.

At that time, news came that Kumarila Bhatta had entered the pyre created out of the burning of the husk and was giving up his body by slowly scorching his body in that heat. Hearing the news, Acharya Shankara immediately hastened to Prayag.

Why would Kumaarila Bhatta, who is an incarnation of Lord Subrahmanya, decide to end his life in such a horrible manner? All the Divine Incarnations when they transgress the Dharma (Righteousness), like ordinary humans, also take on the punishment for that action. Kumarila Bhatta cheated on the Buddhist Teachers saying that He was one among them, and then learnt all the tenets of Buddhism and thus committed a sin against His preceptors.

He had established and preached that every action (Good or Bad) will give the relevant result, on its own independantly, without the intervention of the Divine.  So he himself had to atone for the sin he committed against His preceptors. With a heavy heart (for his sin), he searched the scriptures for a procedure of atonement and found that the atonement for knowingly sinning against one’s preceptors’ is to torture one’s own body. Courageously He decided to do it.

Kumarila Bhatta decided, that since getting burnt slowly on the pyre of husk’ (Dushaagni) is the severest form of self-torture, He solemnly vowed to undergo it. If we happen to get that scripture (which advices such atonement), we will only throw that book into the pyre. But Kumarila Bhatta was happy that He was able to find atonement, and hence lied down on the pyre.

Kumarila Bhatta the great soul who re-established the Vedic Rituals, bravely entered the Pyre-of-Husk and was being slowly roasted on the pyre. It was at that time Acharya Shankara came running to him. He came and stood before Kumarila Bhatta who was undergoing a self-imposed punishment as an atonement for his sin of cheating His preceptors (not even real preceptors).

On seeing Acharya Shankara, Kumarila Bhatta’s burning-pain vanished completely. Apart from giving Kumarlia Bhatta His Darshan, Acharya Shankara started giving him His nectarine philosophical discourse.

Till now I was narrating the story. Now I shall discuss some philosophy. Ultimately all stories merge in philosophy.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading