155. Maha Periyava’s Skanda Puranam-He Nourishes the Principles of Vedas


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The references and evidences in our ancient scriptures singing the glories of Lord Subramanya, Is Muruga only worshipped in South, the historic evidences of this great Lord found across our country and Pakistan, is Tamizh and Vedic culture separate, why does Subramaya avatara happen, and what does one of his six faces signify? All of this has been explained by Lord Subramanya Swamy himself in the form of Sri Periyava.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama

 

வேத நெறியை வாழ்விப்பவன்

ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளேயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம். இப்படிப்பட்ட ஸ்காந்தம், இன்னம் வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் எல்லாம் ஸுப்ரம்மண்யர் பெருமையைச் சொல்கின்றன. ‘குமாரகுப்தன்’ என்கிற மாதிரி, பழைய ஆரியாவர்த்த ராஜாக்களின் பேர் சுப்ரம்மண்ய பரமாக இருக்கிறது. ரொம்பப் பழங்கால நாணயங்களில்கூட – வட இந்தியாவின் மூலைக் கோடிகளில் கண்டெடுக்கப்பட்டவற்றில் – மயூர வாகனராகக் குமாரஸ்வாமி இருக்கிறார். இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்ட எல்லை மாகாணத்தில் (North – West Frontier) கண்டெடுத்த குஷானர் நாணயங்களில் குமாரஸ்வாமி உருவம் பொறித்திருந்தது. வடபுலத்தின் பல ராஜ வம்ஸங்கள் அவரை ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று குலதெய்வமாகக் கொண்டிருக்கின்றன. அந்த ராஜாக்கள் தங்களையும் ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தைத் தள்ளினால் ‘ப்ரம்மண்யம்’ தானே நிற்கிறது? இங்கே நம் தமிழ் நாட்டில் வேதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் ரொம்பத் தொண்டு செய்திருக்கிற காஞ்சிப் பல்லவ ராஜாக்களும், தங்களை சிவ பக்தியில் சிறந்த ‘பரம மாஹேசுவரர்களாகவும்’ விஷ்ணு பக்தியில் சிறந்த ‘பரம பாகவதர்’களாகவும் சொல்லிக் கொள்வதோடு, ஸ்கந்த உபாஸனையை விசேஷமாகச் செய்த ‘பரம ப்ராம்மண்யர்’களாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். சாஸனங்களில் இவற்றைப் பார்க்கிறோம்.

எல்லாவற்றுக்கும் முற்பட்ட வேதத்தில் போற்றப்பட்ட ஸ்வாமியாக அவர் இருக்கிறார். ரிக்வேத பஞ்ச சூத்திரத்தில் “தகப்பன் சாமி” யைப் பற்றிய பிரஸ்தாவம் வருகிறது. பரமேசுவரனைப் போற்ற வந்த இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் ‘குமாரனை வணங்குகிற பிதா’ என்று அவரைக் கொண்டாடுவது அதிவிசேஷம். சாந்தோக்ய உபநிஷத்தில் ஸனத்குமார – ஸ்கந்தரைப் பற்றி வருகிறது. பாணினியின் வியாகரணம், அதற்குப் பதஞ்சலி செய்த மஹா பாஷ்யம் எல்லாவற்றிலும் ஸ்கந்தன், விசாகன் என்ற பெயர்களில் முருகனைப் பற்றிப் பிரஸ்தாவம் உண்டு.

போதாயன தர்ம சூத்திரத்தில் தினமும் செய்ய வேண்டிய வேத தர்பணங்களில் ஸ்கந்தனும், அவனது பார்ஷதரும் (பரிவாரங்களும்) இடம் பெறுகிறார்கள்.

தமிழபிமானம் உள்ளவர்களுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் மொழிக்கே முருகன்தான் அதிஷ்டான தெய்வம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்! ‘முருகன்’ என்று அலாதி அன்பு சொட்டச் சொல்வது தமிழர்களுக்கே உரிய பெருமை. ஆதிகாலம் தொட்டு இங்கு குறிஞ்சி நிலக்கடவுளாக அவரை வழிபட்டு வருகிறோம். தொன்மையிலும் தொன்மையான தொல்காப்பியம் இதை ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்கிறது. ஆறுபடை வீடுகள் என்று பிரசித்தமான சுப்ரம்மணிய க்ஷேத்திரங்கள் தமிழ் தேசத்தில்தான் இருக்கின்றன. அவர் தமிழை உண்டாக்கியவர், வளர்த்தவர். சங்கப்புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அகஸ்தியருக்குத் தமிழிலக்கணம் உபதேசிக்கிறார். மிகப் பழைய சங்க காலத்திலேயே நக்கீரர் இவர் மீது ‘திருமுருகாற்றுப்படை’யைப் பாடியிருக்கிறார். பலர் அதைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலன் அடைந்திருக்கிறார்கள். முன்னொரு முறை நம் மடத்துத் துவாரா மூலமாக ஒரு வைகாசி விசாகத்தின்போது இந்தத் திருமுருகாற்றுப்படையும், விநாயகர் அகவலையும் நிறைய அச்சுப் போட்டு எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினோம் – விநாயக சதுர்த்திக்குள் இவற்றை மனப்பாடம் செய்ய ஒப்புக் கொண்டவர்களுக்கு. காவடி எடுப்பது, கிருத்திகா விரதம், சஷ்டி உபவாஸம் இருப்பதெல்லாம் தமிழ் நாட்டுக்கே விசேஷமானவை.

இதனாலெல்லாம் முருகனைத் ‘தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு, வேதநெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது. இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களை பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு. வேத மதம்தான் என்றைக்கும் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். குமாரஸ்வாமி ஒருத்தரை எடுத்துக் கொண்டால், ‘இவர் தமிழ் தெய்வம்’ என்கிற போது, ‘வேதத்திலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இவர் ஆதியில் கிடையாது’ என்ற தப்பபிப்ராயம் ஏற்படக்கூடாது என்பதற்கே, ரிக்வேத காலத்திலிருந்து ராமாயணம், அப்புறம் புராண காலம், காளிதாஸன் காலம், குப்தர்கள் முதலிய ராஜாக்களின் காலம் எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவர் பெருமை பரவியிருந்திருக்கிறது என்று காட்ட வந்தேன்.

வைதிக நெறியை வளர்க்கவே ஏற்பட்ட ஸ்வாமி அவர் என்பதற்கு “ஸுப்ரம்மண்யர்” என்ற பெயரே போதும் என்று சமநிலையிலிருந்து (Un – biassed) பார்த்தால் தெரியும். பிரம்மண்யத்தை – அந்தணர்கள் பற்றி ஒழுகுகிற வேத நெறியை – வளர்க்கிறவர் சுப்ரம்மண்யர் என்பது வெளிப்படை.

வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு. ஆகாச ஸ்வரூபமான ஈசுவரனின் கண்களிலிருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி,வாயுவும், அக்னியும் அவரைச் சுமந்து கங்கையிலே சரவணப் பொய்கை என்ற நீர் நிலையில் விட, அவர் அங்கே ஷண்முகராகி, பிறகுபூமி உச்சமாக எழுப்புகிற மலைச்சிகரங்களிலெல்லாம் கோயில் கொண்டிருக்கிறார். இப்படிப் பஞ்சபூத சம்பந்தமிருந்தாலும் அவர் அக்னிச் சுடராகவே பிறந்தவர். அக்னியில் பிறந்தவர் – “அக்னி பூ – என்றும் அவருடைய பெயர் வரிசையில் அமரகோசம் சொல்லிக் கொண்டு போகிறது.

ஸேநானீ: அக்னி: பூ குஹ:

குகையில், நம் இருதய குகையில் ஆத்ம ஸ்வரூபமாக அரூபமாக இருக்கிற குகன், இப்படி வெளிப்பட்ட பஞ்சபூதங்களில் இருந்தாலும், முக்கியமான அக்னி ஸ்வரூபியாக இருப்பதால் அவர் அக்னியாராதனையை மையமாகக் கொண்ட வேதப் பிரதிபாத்யமான தேவதையே ஆவார்.

வேதநெறி க்ஷீணித்தால் அதைப் புணருத்தாரணம் பண்ணுவதே சுப்ரம்மண்ய ஸ்வாமிக்கு முக்கியமான காரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு முறையும், வட தேசத்தில் ஒரு முறையும் இப்படிப் புறச் சமயங்களை வென்று வைதிகத்தை ஸ்தாபிக்கவே அவர் இரு அவதாரங்கள் செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட அவதாரம் ஞானசம்பந்தர். பரமேசுவரனோ, முருகனோ அவதாரம் செய்ததாகச் சொன்னால் இழுக்கு என்று நினைக்கிற சித்தாந்திகள் இருக்கிறார்கள். கர்ப்பவாஸம் செய்தால் நிஷித்தம் என்பது அவர்கள் கருத்து. ‘விஷ்ணுதான் அவதரிப்பவர், எங்கள் ஸ்வாமியான சிவபெருமான் பிறவாயாக்கை’ என்பார்கள். ஆனால், அத்வைதிகளுக்கு எல்லா ஸ்வாமியும் ஒன்றுதான். ஜீவாத்மாவும் பரமாத்மாவும்கூட ஒன்றுதான். இத்தனை ஜீவர்களாக அந்தப் பரமாத்மா கர்ப்பவாஸம் பண்ணி வெளி வந்திருப்பதையே இழுக்காக நினைக்காமல் இவனிடம்கூட ‘நீயும் பிரம்மம் தானப்பா’ என்று சொல்வது நம் கொள்கை. தப்புப் பண்ணுகிற ஜீவர்களை ரக்ஷிப்பதற்காக, ஒரு பாபமும் தொடமுடியாத ஸ்வாமி அவர்களில் ஒருத்தராகப் பரம கருணையுடன் அவதரிப்பதாகச் சொல்வது அவருக்குப் பெருமை தருவதாகவே நமக்குத் தெரிகிறது. அருணகிரிநாதரைவிடப் பெரிய முருகனடியார் இருக்க முடியாது. அவரே திருப்புகழில் முருகனை உறை புகலியூரில் அன்று வருவோனே என்கிறார். புகலியூர் என்பது சீர்காழி. ஞான சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் சீர்காழியில்தான் அவதாரம் செய்தார்.

ஞானசம்பந்தர் எதற்கு அவதரித்தார் என்பதைச் சேக்கிழார், “வேதநெறி தழைத்தோங்க” என்று சொல்கிறார். சமணர்களை வாதில் வென்று பிரம்மண்யத்தை நிலைநாட்டினவர் ஞானசம்பந்தர். தமிழ் வேதமான தேவாரம் பாடிய அவரும் தம்மை “நான்மறை ஞானசம்பந்தன்” என்றே சொல்லிக் கொள்கிறார். இந்த மறைகளை, மறை கூறும் யாகாதி கர்மாக்களை வாழ்த்தி வளர்ப்பது முருகனுக்கே ஏற்பட்ட ஒரு விசேஷமான காரியம் என்று, ‘திருமுருகாற்றுப்படை’யும் சொல்கிறது.

தொன்மை வாய்ந்த பத்துப்பாடலில் முதலாவதாக இருக்கிற நூல் அது. தமிழ்நாட்டில் குறவரினத்திலிருந்து சகல சமுதாயத்தினரும் சுப்ரம்மண்யரை எப்படி எப்படி வழிபட்டார்கள் என்பதை அது சொல்கிறது. நக்கீரர் அதில் ஷண்முக நாதனின் ஆறுமுகங்களில், ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு விசேஷமான காரியத்தைச் சொல்கிறபோது,

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழா அது
அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே

(மந்திர விதி தப்பாமல், வைதிக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கிற யாகங்களைக் கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே முருகனுக்கு ஒரு முகம் இருக்கிறது) என்றார்.

____________________________________________________________________________
He Nourishes the Principles of Vedas

Skanda Maha Purana is the longest of all the Puranas. It has about 1,50,000 slokas. We can say this is the longest text in the world. Skanda Puranam, Valmiki Ramayanam, and Kalidasa’s Kumara Sambhavam all speak of the glory of Lord Subramanya. Like the king ‘Kumara Gupta’, many of the kings of the Aryavarta have the name of Subramanya. Even in some of the very ancient coins found in remote corners of North India, Kumara Swamy is seen, seated on the peacock. In the Kushana coins found in the North West Frontier – which is now a part of Pakistan – the image of Kumaraswamy is printed. Many royal families of North India have him as the family god (Kula Deivam) – as Brahmanya Kumara. Those kings used to call themselves Brahmanya. If we remove the first syllable from Subrahmanya, it is Brahmanya that is left isn’t it? Here in the South, the Pallava kings of Kanchi who have done a lot of service to Sanskrit and Vedas, have described themselves as ardent Siva Bhaktas – ‘Parama Maheswara’, as ardent Vishnu Bhaktas –  ‘Parama Bhagawatha’ and also as ‘Parama Brahmanya’ – those who were devoted Bhaktas of Subramanya. We see these details in the inscriptions.

He is worshipped in the oldest known text – the Vedas. In the Pancha Sutra of the Rig Veda, there is a mention of him – Tagappan Sami – ‘son who did upadesam to his father’. In this Veda Suktam which speaks of the glory of Siva, there is a mantra which glorifies Siva as ‘the father who worships his son’ – which is very special. In the Chandogya Upanishad there is a mention of Sanath kumara-Skanda. Panini’s grammar, Patanjali’s Maha Bhashyam (commentary) on this grammar, all contain references to Muruga under the names Skanda, Visaka, etc.

In the Bodhayana Sutram, Skanda and his Parivara Devatas (Devatas associated with him) find a mention in the daily Veda tarpanams.

All these things should be told to people who love the Tamizh language. More so because we call Murugan the main deity of the Tamizh language! It is the privilege of the Tamizh people to lovingly utter the name ‘Murugan’. Since ancient times he is worshipped here as the lord of Kurinji Nilam (mountainous land). The ‘Tholkappiam’ which is a very ancient Tamizh literature text, makes a mention of this. The six famous temples of Murugan – Arupadai Veedu – are present only in Tamizh Nadu. He created and nourished the Tamizh language. He was a poet of the Sangam period. He taught grammar to Agasthya Maharishi. Even during the ancient Sangam period, poet Nakkeerar has composed the Tirumurugattruppadai on him. Many have benefited fro doing the parayanam of Tirumurugattruppadai. Some time back, our Sri Matam had printed many copies of Tirumurugattruppadai and the Vinayakar Agaval and distributed them to those who agreed to memorize them before Vinayaka Chaturthi.  Offering Kavadi, observing Krithikai vratham, and Shashti upavasam are unique to Tamizh Nadu.

The above reasons put together make us consider him as the deity of Tamizh people. But these days, people tend to insist that the Tamizh way of life is different from the Vedic way of life. This tendency is the result of the effort by Westerners to divide us. They have done it under the guise of doing research. My opinion is that the Vedic way of life and the Tamizh way of life are no different from each other. They are one and the same. Let us not get into that argument now. When we say Kumara Swamy is a deity of the Tamizh people, we should not be under this wrong impression: ‘he was not known in the Vedas or outside Tamizh Nadu’. I quoted the Rig Veda, Ramayanam, ancient texts, Kalidasa’s work, names of the Gupta kings etc. only to show that his fame extends across the country.

An unbiased view of his name ‘Subramanya’ will tell us that he is the deity who nourishes the Vedic life. It is obvious that he nourishes Brahmanyam – the Vedic path that Brahmins follow.

Yagams are very important for the Vedas. Agni is very important for Yagam. Among the Gods, Subramanya is Agni Swaroopam. In fact, he is connected to all five elements. He came out as a spark of fire from the eyes of Eswara, who is Akasha swaroopam. Vayu and Agni carried him and deposited him in the Water body called ‘Saravana Poigai’ in the Ganga. He acquired his six faces there and dwells in temples on hill tops where the Earth rises above ground level. Even though he is connected to all five elements, he was originally born as a spark of fire. Amara Kosha gives one of his names as ‘agni bhoo’ – ‘born out of agni’. ‘senaneeh agni bhoo guhah’ ( सेनानीः अग्निः भू गुहः ).

Guha lives in a cave – within our heart – as Athma swaroopa, without a form. Though he is present in the five elements outside, he is mainly agni; hence he is the deity for the Vedas which consider the worship of fire as the main trait.

One main task for Subramanya has been the revival of the Vedas whenever there was degradation setting in. He has taken avatar once in Tamizh Nadu and once in the North to establish the Vedic way of life by defeating the philosophies of other religions.

His avataram in Tamizh Nadu was as Thiru Gnanasambandhar. Some people feel it is disrespectful to say that Parameswara or Muruga came to this earth as an avatar.  They are of the opinion that being carried in the womb is deprecating. They say ‘Vishnu is the one who is born as an avatar. Our Siva’s form is without birth’. But for Adwaithis [those who follow adwaita philosophy], all Gods are the same. Even the Jeevatma and Paramatma are one. Adwaithis do not look down on life forms who are born after a gestation period; he considers all of them as different forms of the same Paramatma and goes on to tell the living form ‘you too are a form of Brahman’. The fact that God, who is beyond all good and bad, comes to be born as one among the living to protect them from wrong doing, adds to his credit. Arunagirinathar was one of the foremost devotees of Muruga. In one of his Tirupppugazh, he gives a reference ‘urai pugaliyooril anru varuvonae’. Pugaliyur is another name for Sirgazhi. Gnanasambadhamurthy swamigal was born in Sirgazhi.

Sekkizhar gives the reason for Gnanasambandhar’s avataram thus: ‘to nourish the Vedas’. Gnanasambandhar defeated the Jains in discussions and re-established Brahmanyam. He composed the Dhevaram which is considered to be the ‘Tamizh Vedam’ wherein he refers to himself as ‘Naanmarai Gnanasambandhan’ meaning ‘Gnanasambandha of the Vedas’. Nourishing the Vedas and the yaga karmas prescribed therein is a special task of Muruga says the Tirumurugattruppadai.

Tirumurugattruppadai belongs to ancient literature period; it is the foremost among ‘pathuppaadal’ – ‘the ten songs’. It describes how people of all communities, including the community of ‘kuravas’ [a community native to the mountain regions of South India] worshipped Subramanya. While ascribing a special task to each of the six faces of Shanmukhanatha, Nakkeerar says that one face of Muruga is present only to enjoy the yagams that Brahmins do in accordance with the Vaideeka Sampradaya and Vedas, chanting the mantras in the correct order and to nourish the Brahmins.

Oru Mugam
Mandira Vidhiyin Marabuli Vazha Adhu
Andhanar Velvi Orkkum Me



Categories: Deivathin Kural

Tags:

3 replies

  1. Jai Ma

    Soon after reading this piece, a thought arose with immense force. As far as i know, there is no shrine on a mountain top to Bhagavan Sri Subrahmanya in North America, in such a sheltered location, where a naked flame may be lit to cast light far and wide.

    It seems that Mahaswamigal is gently suggesting that it is not a bad idea if such shrines are to be constructed and that His [ and though Him, Divine] blessings will surely support such endeavor. Someone was inspired to bring to a single site, by the sea near Chennai, all 6 famous holy temples dedicated to Sri Bhagavan Kumaraswami, so that devotees unable to make the pilgrimages would be able to offer worship and devotion at one site. Sri Mahaswamigal was pleased at the idea and said that a site near the ocean was auspicious; eventually the complex got built through His kRpAdRSTi.

    It may be the case that all auspicious intentions are impelled only by Sri Mahaswamigal Himself, for His own holy purposes. If that is the case, and there are no other motives, such as gain of wealth or personal fame, and it is SOLELY motivated by the thought of Sri Mahaswamigal’s words to place on high mountaintops, shrines to Sri Bhagavan Muruga, who sustains the Vedas, blesses all with immediate grace, then the effort should be made where EMINENTLY FEASIBLE.

    Sri Mahaswamigal has placed great stress on Veda Samrakshana and on Loka Kalyana, and both are served by the “arut perum jyoti” of Sri Bhagavan Muruga shining on as many as possible on as many an auspicious tithi from a high mountaintop.

    Where I live, near ithaca, NY, there is a mountain top, Mt. Pleasant, beautifully served by good roads, and owned by Cornell University, and ultimately by the State of New York. Amidst a very large plot where dry farming experiments are conducted, perhaps several hundred acres comprising a sloping table top to the mountain, is a small area on which rests a small domed observatory formery used by Cornell for a telescope.

    Today, that telescope has become outmoded, a plaything only occasionally used by the university astronomy club a couple of times a year; no longer the serious instrument it had been at the beginning of the 20th century. The so-called Observatory continues to exist as University property by the force of inertia, as in most bureaucratic regimes. Removing or changing it creates more problems than just letting it be as it is.

    That exact same problem dogs a former US Army base in the town of Watkins Glen, about 25 miles from Ithaca. The government is anxious to sell or lease it out and the local town even more anxious to find someone who will convert it to something that will regenerate economic activity for the town, once crucial to that area. THe reason that I mention this abandoned base is that it is well supplied with all the infrastructure like plumbing, sewers, drainage, powerlines, roads, and every facility pertaining to a self-contained, self-sufficient mini-township, and all meeting all local building and municipal codes. It is thus ideal for an Indian temple community, ashram, and gurukul type of school for children and family to spend summers in a most beautiful environment.

    The most attractive part of this former base is that there is an extensive, fenced-off portion of wild land, that contains the ONLY know herd of WHITE COATED white-tailed deer, a common species of this region. Any WHITE coated animal in the wild is speedily eliminated for obvious reasons. However, during the existence of the army base, some white deer were kept protected and their numbers have grown to a herd, and they enjoy the protection of this fenced in mini-forest, possible only because the base had the luxury of owning so much land. A temple, being a not-for-profit, 501 [c] [3] corporation, also gets to keep that land permanently free of all taxes, federal, state, and local, and yet provide needed local economic activity and growth.

    The relevance of the WHITE DEER to any shrine dedicated to Sri Bhagavan Muruga would be obvious. Such facilities would be attractive to other religious groups for retreats, including Buddhists, for whom the deer are also a sacred religious emblem. This means that there are additional sources of income via rental of parts of that large property, that includes housing, etc. to other compatible spiritually-inclined groups for occasional retreats, weddings, etc.

    Both the US Army Base and the small plot of land within the larger experimental plot on top of Mt. Pleasant near Ithaca can best be acquired if the necessary political influence is carefully applied in Washington by Indian individuals, groups, or those having respect for Sanatana Dharma. Sri Mahaswamigal enjoins us to not use the term “Sanatana” or “Hindu” for our DHARMA, but for the sake of communication and intelligibility by the world, some useful term is necessary. Hence, depending on WHO one is trying to convince, both of these terms may be necessary, unless Sri Mahaswamigal takes a direct hand in the issue, and makes things easier through some unforseen means.

    It would be interesting to learn if there is any interest in this proposal from the readers of this blog. Or, if this proposal needs to be modified into 2 parts, one for the mountaintop telescope site and the other for the US Army base.

    Thanking you,

    gautam

    Hare Srinivasa

    • Looks to be a great idea. Best wishes for success. Jaya Jaya Shankara. Hara Hara Shankara.

      • Jai Ma Namaskar Thank you for your good wishes. As you realize, mere good wishes will never lead anywhere, unless there are those like you who feel FAR more strongly about this project!!!!!! And make it your own!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading