சனிப் பெயர்ச்சி!

Given that Sani Peyarchi happened two days back, I thought of sharing this with all. I got this part of a WhatsApp share. I loved it. I dont know who wrote it but this is exactly what’s happening.

For non-Tamil readers – Saturn transitioned into Saggitarius/Capricorn starting yesterday. Thanks to social media and half-baked astrologers who want to add their value-adds to the whole thing and ended up intimidating everyone and creating panic. With this unsolicited messages in the social media, people are scared to death. We just have to remember that planetary movements and the effects because of that have been going on for centuries – nothing new. Very quality astrologers normally don’t scare people – they give certain guidelines and leave it there. Also every human at some point in time are impacted by those grahas – this includes great Mahans too – we have read so many stories from Puranas on how devas, avatara purushas were also impacted by such things. As periyava devotees, we simply need to keep the faith and bakthi on our ishta/kula deivam  and jagadguru,  put the burden on them and keep going on with our lives. One way to show that we are Periyava devotees is to to do that and not panic and give up on life, become dejected become cynical on everything.

There is nothing bigger than Nama japams – be it shiva/rama etc if chanted with bakthi and belief.

Why fear when Periyava is with us!

Aum Nama Shivaya!

Periyava-collage.jpg

 

சனிப் பெயர்ச்சி பலன் எழுதப்போறேன்னு நினைச்சுக்காதீங்க.

அதெல்லாம் நீங்க போதும்னு அலர்ற அளவு நிறைய பேர் சொல்வாங்க.. சொல்லிட்டாங்க…

இது வேற…

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க…

இதெல்லாம் வெறும் பிளானட்..சுத்தறது அதோட வேலை… இயற்கை..சயின்ஸ்… இதுக்கேன் இவ்ளோ ஆர்ப்பாட்டம்னு நினைக்கறவங்க..

ரொம்ப தன்னம்பிக்கை உள்ளவங்க…

இந்த போஸ்ட் ஸ்கிப் பண்ணிடலாம்!

இதிலெல்லாம் நம்பிக்கை உள்ளவங்க… பலன்லாம் படிச்சு பயந்து போயிருக்கவங்க மட்டும் படிங்க..

குரு, சனி, ராகு, கேதுப் பெயர்ச்சியெல்லாம் காலம் காலமா நடந்துகிட்டுதான் இருக்கு.

ஆனா அப்போல்லாம் இவ்ளோ யாருக்கும் தெரியாது.

நல்லதோ.. கெட்டதோ.. சாமி மேல பாரத்தைப் போட்டு போயிடுவாங்க.

“நல்லதே நினைங்க.. நல்லது நடக்கும்..
காரணமில்லாம எதுவும் நடக்கலை.
நடப்பது நாராயணன் செயல்..
அவனன்றி ஓர் அணுவும் அசையாது..
கர்மா….
எல்லாம் நன்மைக்கே..
இதுவும் கடந்து போகும்..
மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை…”

இப்படி சமாதானம் சொல்லி ஈஸியா கடந்து போயிடுவாங்க…

பல சமயங்கள்ல ignorance is a bliss…அதுல இதுவும் ஒண்ணு…

எதைப்பத்தியும் ரொம்ப தெரிஞ்சுக்காம இருக்கறது கூட நல்லதுதான்..

இப்போ நிலைமை மாறிப்போச்சு…

எல்லாருக்கும் எல்லாம் சொல்றாங்க…

நாம கேக்கறமோ இல்லியோ..தேடிப் போறோமோ இல்லியோ…நம்மைத் தேடி விஷயங்கள் வருது.

அதில..கொஞ்சத்துக்கு கொஞ்சம் மட்டும்தான் உண்மை…

எல்லாத்தையும் போலவே…இதுலயும் பாதி மிகைப்படுத்தல்…வியாபாரம்….பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு…

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு.

ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை…இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க…

ஆந்த அர்ச்சனை..இந்த அர்ச்சனை..பரிகார பூஜை…அந்தக் கோவில்.. இந்தக் கோவில்னு..

கண்ல பட்டது..காதுல கேட்டது… படிச்சது…பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னதுன்னு…

பைத்தியம் பிடிக்காத குறையா மக்கள் அலையறாங்க…

பரிதாபமா இருக்கு பார்க்க…

கோவிலுக்குப் போங்க…கட்டாயம் போங்க..அவசியம் போகணும்…

அர்ச்சனை பண்ணுங்க..பூஜை பண்ணுங்க…ஒரு தப்பும் இல்லை…

ஆனா..இதெல்லாம் பயத்தில பண்ணக்கூடாது. பக்தியோட பண்ணனும்… நம்பிக்கையோட போகணும்.

கோள்கள் சுழற்சியில வாழ்க்கைல ஏற்றத்தாழ்வுகள் வரலாம்…சோதனைகள் வரலாம்.

ஆனா…இப்படி ஆளாளுக்கு கிளப்பி விடறதை படிச்சுட்டு பயந்துடாதீங்கன்னு சொல்லவர்றேன்.

சினிமா விமர்சனம் மாதிரி…
“Bad, Very bad, Very very bad, Good, Fair னு போடறது…

அதுவும் ரெட்ல ஹைலைட் பண்ணி போடறது…

பரீட்சைல மார்க் போடற மாதிரி, பாஸ்/ ஃபெயில்/ டிஸ்ட்டின்க்ஷன்னு மார்க் போடறது…

நீ தொலைஞ்ச.. செத்த ..எல்லாம் போச்சுனு சொல்றது…

தெய்வமே….!!!

அந்த சனி பகவானே இறங்கி வந்து,

“நான் இப்படியெல்லாம் செய்வேன்னு உங்கள்ட்ட சொன்னனாடா..??!!” னு ஆளுக்கு ரெண்டு அறை விட்டு போயிடுவார்…

அப்படி பீதிய கிளப்புறாங்க…

படிக்கிறவங்க என்னாவாங்கன்ற மனசாட்சி கூட இல்லாத வியாாரிகள்…

நல்ல ஜோசியர்கள் நாசூக்கா சொல்வாங்க…

நீங்க ஜாதகம் பார்க்க போனாலே அது தெரியும்…படால்.. தடால்னு சொல்ல மாட்டாங்க…

இதுல அரை குறை அறிவோட பேசறவங்க வேற…

மொத்தத்தில ஜனங்கள் panic ஆகி.. “ஐயோ இனி நான் அவ்ளோதான்”னு உடைஞ்சு சுக்கு நூறாகிடுவாங்க..

இந்த அரைவேக்காட்டு பலன்லாம் படிச்சா..

வாழ்க்கையில உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடும்…

அதனாலதான் நம்ப முன்னோர்கள் எல்லாத்தையும் இலை மறை காய் மறையாவே வைச்சிருந்தாங்க…

“எல்லாம் சரியாகிடும் போ”னு தைரியம் சொல்வாங்க…

இதெல்லாம் நம்பறவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும் கண்டிப்பா இருக்கணும்…

அப்போ ஸ்ட்ராங்கா இது மனசுல வைச்சுக்கணும்…

இறை சக்தியை விட பெரிய சக்தி எதுவும் இல்லை…

கோள்கள் அனைத்தும் படைத்தவன் கட்டுப்பாட்டில் இருக்கு…

இதெல்லாம் ஒரு எச்சரிக்கை மாதிரி வைச்சுக்கணும்…

எலக்ட்ரிக் சமாசாரங்கள்ல ஒட்டிருக்க மண்டையோட்டு டேஞ்சர் சைன் மாதிரி..

வண்டியோட்றப்போ ஹெல்மெட் போடுன்ற மாதிரி…

ஒரு எச்சரிக்கை…பீ கேர்ஃபுல்னு… caution..

மத்தபடி..

“ஜாமீன் கையெழுத்து போடாத..
அளவா பேசு…
சாமான், காசு, பணம், நகை, நட்டு பத்திரமா பாத்துக்க…
வாகனத்துல போறப்போ எச்சரிக்கையா இரு..
புது பிஸினஸ்ல பாத்து இறங்கு..
பாஸ்கிட்ட வம்பிழுத்துக்காத..
சொந்தக்காரங்கள பகைச்சுக்காத..
யாரையும் நூறு பர்சன்ட் நம்பாத..”

இதெல்லாம் சனி வந்து சொல்லணும்னு அவசியம் இல்லை…

எல்லாக் காலத்துலயும் எல்லாரும் ஃபாலோ பண்ண வேண்டியதுதான்…

அதனால…பயந்துக்க வேணாம்…

உலகத்துல இருக்கற அத்தனை பேரும் இந்த பன்னிரண்டு ராசில அடங்கிருவாங்க…

அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி நடந்தா உலகம் தாங்குமா…

அப்படியா நடக்குது…

அவங்கவங்க ஜாதகம்.. கர்ம பலன்.. பிற கிரகங்கள் இருப்பு…கூட வாழறவங்களோட பலன்…இப்ப செய்ற காரியங்களோட பலன்…எல்லாத்துக்கும் மேல கடவுள்…எல்லாம் இருக்கு….

பயப்படாம சாமி மேல பாரத்தைப் போட்டு நம்ம வேலை பார்த்துட்டு இருந்தாலே போதும்….

நம்ம மனசு நல்லாயிருந்தா…அவன் கூடவேதான் இருப்பான்…

கிரகங்கள் ஆட்டி வைக்கிறபடிதான் நம்ம வாழ்க்கைன்னா.. சாமிக்கு என்ன மரியாதை…

அதனால….நம்ம பெரியவங்க சொன்ன மாதிரி..

இது ஒரு caution/ முன்னெச்சரிக்கைனு வைச்சுக்கிட்டு.. கடவுளை நம்பி நாம பாட்டு நம்ம வேலை செய்லாம்…

எப்பவும் மனசு விடாம தைரியமா இருக்கணும்…

எல்லாம் அவன் பார்த்துப்பான்…
அவனன்றி ஓர் அணுவும் அசையாது..

சர்வம் சிவார்ப்பணம்



Categories: Announcements

9 replies

  1. Jaya Jayas Sankara Hara Hara Sankara. Sri Maha periyava is there to protect us. NAAL YEN SEYYUM KOAL YEN SEYYIUM NADIVANTHA VINAY THAAN ENNA SEYYUM NATHAN NAMAM NAMACHIYAM IRRUKAIYILAY. PAhi Pahi Sri Maha Parbho. janakiraman Nagapattinam

  2. About 40-45 years ago all these ‘Peyarchi’s never had any impact on the commoners.
    This all started with the mushrooming of TV Channels and Magazines.
    As Maha Periyava once said, ‘Jothish Shastra’ is Genuine because it is in the Vedas.
    But unfortunately we do not have anyone to learn it with dedication and explain it to the common people.
    As a result quacks thrive in this field.

    Best thing is to forget all these predictions and leave everything to God.
    குரு அனுக்கிரஹம் இருந்தால் நவகிரகம் என்ன செய்யும் ?

  3. Amazingly inspiring sir! Gratitude! Om namah shivaya!

  4. ஜோசியர்:–“அட.டா ..ஏழரைச்சனி ஆரம்பம்…மொதோ இரண்டரை வருஷம் ரொம்ப படுத்தும் …
    வந்தவர்:– அப்புறம்…???
    ஜோசியர்:–(மனசுக்குள்) அது பழகி போயிடும்.

    தாங்கள் சொன்னதுபோல் சகலமும் வியாபாரம் ஆகிவிட்டது. வைதீக காரியங்கள் உட்பட…இன்ஸ்டன்ட் காபி, ரசம்,போல இவன்போய் ஒரு 25 மில்லி நல்லெண்ணெயில் விளக்கு போட்டதும்…மங்கு சனி பொங்கு சனியாக மாறும் என நினைப்பது அபத்தம்….மஹாபெரியவாளிடம் பத்து தடவை வந்து புலம்புவார்கள் 11 தடவை வந்து எல்லாம் பெரியவா அருள்..பிரச்சனையை தீர்ந்தது என்பார்களாம். அவரிடம் உள்ள தொண்டர் பெரியவா ..இவருக்கு முதல்தடவையே அருள் செய்திருக்கலாமே என கேட்டால் ..இப்போகூட நானா அருள் செய்தேன்..அவன் கர்மா தீர்ந்தது ..என்னிடம் வந்தான் என்பார் …தன்னை காட்டிக்கொள்ளாமல் …ஆனால் உண்மையில் 100 தடவை வந்தாலும் தீராத கர்மா உடைய இவனை கருணையால் 10 தடவையில் குறை தீர்த்தார். நாம் பெரியவா மீது பக்தி வைப்பது பெரிதல்ல. அவர் சொன்ன விஷயங்களை முடிந்த அளவு கடைப்பிடித்து இன்னும் கடைபிடிக்க உன்னருளை தா என வேண்டினால்….”நாள் என்செயும் ..வினைதான் என்செயும்..கோள் என் செயும்”

  5. Very well summed up for every one not to get confused or become panic in this world of umpteen exploiters. Thank you. Wish you very happy New Year 2018 blessed by Maha Periyavaa.

  6. Really a useful positive posting at this time. People run after tender coconut in summer and umbrella in rain season and fake astrolegers in graha peyarchi time
    It is quite amaxing astrologers giving appointment after April 2918.

  7. Absolutely correct. Well said.

Leave a Reply to vijayaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading