இந்தப் படத்தைப் போடணும்னு நினைச்சவுடனே, எப்படி ‘compose’பண்றதுன்னு யோசிச்சேன். “பிரத்யட்ச தெய்வமா அவதரிச்சு சகல ஜீவராசிகளுக்கும் அனுக்ரஹம் பண்ணின மஹா பெரியவாளைத் தரிசனம் பண்ணிக்காம, வாழ்க்கையே வெறுமன போயிடுத்தே! நம்மைப் போல ஒரு துரதிருஷ்டம் பிடித்தவன் ஒருவரும் இல்லை….” அப்படீங்கற தாபம், எம் மனசில எப்பவும் நீறுபூத்த நெருப்பு போல கனன்று கொண்டிருக்கும்.
–“பெரியவா என் கனவில வந்தா…….”
–“பெரியவா காரைத் தானே ஓட்டி என்னைக் காப்பாத்தினா…..”
–“பெரியவா எனக்கு பிரசாதம் குடுத்தா!……”
இப்படிப் பல பேர் தம் தம் அனுபவங்களைக் கூறும்பொழுது, மனசின் தாபம் கூடிக்கொண்டே போகும்.
‘சரி! பெரியவா என் கனவில் வரலேன்னா பரவாயில்ல.. நான் அவரை எங்காத்துத் தோட்டத்துல ஓக்காத்தி வெச்சுடறேன்!’ என்று முடிவெடுத்து, தோட்டத்துல ஒரு பகுதியை போட்டோ எடுத்தேன். பெரிய தென்னை, அதன் வலப்புறத்தில் ஒரு சிறிய தென்னை, அடுத்து ஒரு வில்வச் செடி, சுற்றிலும் துளசிச் செடிகள். எல்லாம் உள்ளடங்கிய போட்டோ ஒன்று எடுத்து, பெரிய தென்னையின் அடியில் பெரியவாளை ஒக்காத்தி வெச்சுட்டேன்”
இப்படி வந்ததுதான் இந்த சித்திரம்.
“ஓம்! கருணாரஸ கல்லோல கடாக்ஷாய நமோ நம: | “
“ஓம் தரஹாஸ ஸ்புரத் திவ்ய முகாப்ஜாய நமோ நம: |”.
B.N
Fantastic narration mama. So what if He has not come in our dream, we will be in His smaranai all the time with His blessings! That pure bakthi is enough for
Categories: Photos
Me too did not have the opportunity to see Periyava. But he is everything for our family. He is the guiding power for our family for years. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.
கவலையே வேண்டாம். இன்னும் ஒரு ஐந்து வருஷம் கழித்து ஓரிக்கை சென்று பாருங்கள்.போட்டோவில் உள்ளபடி , வ்ருக்ஷங்களுக்கும்,மலர் செடிகளுக்கும் நடுவில் நம் மஹாபெரியவா இருப்பார்.ஆமாம் …அவரின் அருளால் 108 வில்வ கன்றுகள்,27 நக்ஷத்திர மரம்,ருத்திராக்ஷம்,செண்பகம் மஹாவில்வம் என மூன்று நாட்களுக்கு முன் நடுவதற்கு அவன் கிருபை செய்தான்…இந்த கிழவன் பொல்லாதவன்…பல வருஷ கனவு..இப்போதான் நிறைவேற்றி கொடுத்தான்..இன்னும் முடியலே ..மணிமண்டபத்திற்காக அறுக்கப்பட்ட கருங்கற்கள் பூமியில் புதைந்து இருப்பதால்..குழி எடுக்க முடியவில்லை…40 வில்வ கன்றுகள் நடவே குழி எடுக்க முடிந்தது…மற்ற செடிகளுக்கு குழிகள் எடுத்து வைத்துவிட்டேன்…அத்தோடு முடியவில்லை..”மரம் வைத்தவன்தானே தண்ணீர் ஊற்றனும்”?..மூன்று நாட்களாக ஊற்றி கொண்டு இருக்கேன்..தொடர்ந்து ஊற்றுவேன்…இது எனது பணி அன்று….மஹாபெரியவா வழி நடத்துகிறார்…நான் செய்யவில்லை…அவர் விரும்பியதால் நான் ஒரு சிறு கருவி…அவ்வளவே..அவரின் விருப்பமும்..அனுகிரஹமும் இல்லாவிட்டால் ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த முடியாது…அவருக்கு யாரிடம் என்ன பெறவேண்டும் என நினைக்கிறாரோ அதனை பெற்றுக்கொள்வார்..இதிலும் இடைஞ்சல் …கழ்டம் வந்தது…அதை தருவதும் அவரே…அதை நிவர்த்தி செய்வதும் அவரே…இந்த மூன்று நாளில் சில அற்புத அனுபவம்…அதை பிறகு சொல்கிறேன் ..
SAKUNTHALA RAGHURAM
Virus-free.
http://www.avast.com
2017-12-14 7:30 GMT+05:30 Sage of Kanchi :
> Mahesh posted: ” இந்தப் படத்தைப் போடணும்னு நினைச்சவுடனே, எப்படி
> ‘compose’பண்றதுன்னு யோசிச்சேன். “பிரத்யட்ச தெய்வமா அவதரிச்சு சகல
> ஜீவராசிகளுக்கும் அனுக்ரஹம் பண்ணின மஹா பெரியவாளைத் தரிசனம் பண்ணிக்காம,
> வாழ்க்கையே வெறுமன போயிடுத்தே! நம்மைப் போல ஒரு துரதிருஷ்டம் பிடித்தவன் ஒர”
>
Even I also has the same thought i never spoke to Periyava.