Periyava drawings by Sudhan

Thanks to Sudhan for his wonderful drawings. I have combined few of his recent drawings to share it with you….

First one was hand-picked by Mahaperiyava Himsself. He came in Sudhan’s dream yesterday and asked him to draw this!

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Periyava-chosen-guruvaram.JPG

Periyava-garland-on-siras-sudhanPeriyava-sitting-drawing



Categories: Photos

12 replies

  1. Wonderful drawings. Blessed to see them.

  2. Beautiful sketches Sudhan

  3. Dear Mahesh Namaskaram. Pl.post this comment as a seperate heading.

    (Courtesy: London Sri Swaminathan, http://www.Tamilvedam.com

    உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

    அது என்ன பழைய சடங்கு?

    சந்தியாவதந்தனம்!

    அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)

    சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

    அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர். இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

    திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு

    சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.

    நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர். சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது

    பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன. சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள். முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன் சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

    பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின. அப்படி ஒரு குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்

    பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர். இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.

    (சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)

    சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது. உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது. சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

    இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

    இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர். நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை வழிபடுவர்.

    கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது; ( எனது பழைய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

    நான் லண்டன் மாநகரில் தேம்ஸ் நதி தீரத்தில் தினமும் இரு முறை மட்டுமே சந்தியா வந்தனம் செய்கிறேன். மதிய வேளைகளில் வெளியே இருப்பதால் செய்ய இயலவில்லை. ஒருநாள், நாம் எவ்வளவு பெயர்களை இதில் சொல்கிறோம் என்று கூட்டல், கழித்தல் கணக்குப் போட்ட போதுதான் 100 பேருக்கும் மேலாக வந்தது தெரிந்தது. அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை அடைந்தேன்.

    சில ஆண்டுகளுக்கு முன்னர் “பிராமணர் இல்லையேல் தமிழ் இல்லை” (No Brahmins, No Tamil) என்று சங்க காலம் பற்றி ஒரு கட்டுரையும், பிராமணர்களை கின்னஸ் நூல் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஒன்பது கட்டுரைகளையும் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இதையும் படிக்க வேண்டுகிறேன்.

    சிலர் நர்மதை நதி பற்றிய மந்திரம் சொல்லுவதில்லை; வடக்கத்தியர் நகக்கிரஹ தர்ப்பணம் செய்வதில்லை. ஆகாயால்தான் கூட்டல் கழித்தலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேலான பெயர்கள் என்று சொன்னேன். யமனுக்கு மட்டுமே பத்து பெயர்கள் வரை சொல்லுகிறோம்.

    சந்தியாவந்தனம் பற்றிய இன்னொரு வியப்பான செய்தி– காயத்ரி தேவியை “உன்னுடைய மலை உச்சியில் உள்ள வீட்டுக்குப் போகலாம்” என்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த “சிகர” என்ற வார்த்தையை (ZIGGURAT) ஜிக்குராட் என்று அழைத்தனர். சுமேரியர்களும் மலை உச்சியில் தெய்வத்தை வைத்தனர். ஆனால் அது எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. மோசசும் ஜீசசும் தோன்றும் முன்னர் துவங்கிய சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.

    தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.

    நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-

    ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,

    கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)

    ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்

    காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது

    பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.

    ஆப: (நீர்), சூர்யன், அக்னி,

    பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது

    பிரம்மா, பரமாத்மா,

    சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்

    யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி

    ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:

    வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி

    அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)

    சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:

    (சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)

    4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்

    மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,

    யமன்

    (யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)

    எடுத்து க்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:

    யமன், தரமராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

    பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)

    நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-

    சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்

    நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்

    சவித்ரு தேவன்

    ஓம் தத் சத்

    90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!

    வாழ்க பிராமணர்! வளர்க சந்தியாவந்தனம்!!

  4. I humbly request all the devotees to see the following link…..greatest assets for all.
    https://tamilandvedas.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/

  5. Excellent sketches of Periyava 👌

  6. First drawing eyes full of compassion, second drawing the piercing eyes and the third one a mischievous look and smile .. all captured live… Great drawings! Paripoorna Periyava’s blessings.

  7. Excellent drawings by Sri Sudhan. Maha periyava anugraham. Sincere Appreciations Sri Sudhan and for Sri Makesh for posting. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.

  8. Hara hara sankara jaya jaya sankara.

  9. Periyava saranam…..

  10. Shakshath and Thathroopam! are the apt adjectives for these drawings.

  11. Beautiful sketches of Mahaperiyava by Sudhan !

Leave a Reply to Jayalakshmi GaneshCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading