பெரியவாள் பதிகம் by Elanthai Sri Ramasami

Thanks to Elanthai Sri Ramasami mama for sharing his poems on Periyava. Will post one at a time.

Happy guruvaram!

av164_sitting_with_koubeenam

புகழ்கிŽன்ற சொல்லில் பொருளாக நிற்கும் புனித மறை
அகழ்கிŽன்ற நெஞ்சில் அருளாக மாறி அழகுதரும்
நிகழ்கின்ற கால நெளிவிலே பற்றிடும் நிம்மதியாய்த்
திகழ்கிŽன்ற காஞ்சித் திருமகன் தெய்வத் திருவடியே!

நேர்நின்ற பேச்சும் , நிறைநின்ற காப்பும், நினைவுகளின்
பேர்நின்ற வெற்றிப் பெருமிதம் பேசும் பெருமைகளும்
கூர்நின்ற பார்வை குளிர்கிŽன்ற அன்புக் குளிர்நிலவும்
கார்நின்ற காஞ்சிப் பெரியவர் தம்முள் கனிந்திடுமே!

பொன்னை உருக்Žகிப் புடம்போ’ட்டு வார்த்தநற் புண்ணியமே,
தன்னைக் கரைத்துத் தனதுளம் தன்னையே தாங்கிŽவர
மின்னைக் கரைத்து விழியமு தாக நீ வீசுŽகிறாய்
என்னே அழŽகிதை எப்படி நானும் இசைப்பதுவே!

வந்தர சாளருள் மாமணியே, மறை வாரிதியே,
தந்திர மந்திர சாகச மில்லாத் தவமணியே,
எந்திர வாழ்வில் எமக்கருள் செய்ய எழுநிதியே,
சந்திர  சேகர சங்கராச் சார்ய சரஸ்வதியே!

சிரிப்புக் Žகிடமா’ய்த் திரிந்து தினம்தினம் தின்னுபசி
அரிப்புக் Žகிடமா’ய் அலமரும் ஏழை அடுதுயரைப்
பிரிப்புக் கிŽடமாய்ப் பிணித்தவர் வாழப் பிடியரிசி
விரிப்பைத் திறந்து விடியல் அளித்தனை வித்தகனே!

விதவித மாக விரிந்திடும் பாதை விரிவுகளில்
மதமத பேத மரபுகளுக்குள் மலர் நகையாய்ப்
பதம்பத மாகப் பரிவுடன் நீயொரு பாலமிட்டாய்
நிதநிதம் நின்னடி போற்றுவோம் நெஞ்ச நிறைமலரே!

காவி உடையும்,  கரத்தில்செங் கோலும், கமண்டலமும்,
மேவிச் சிரசில் விரிமலர் மாலை விழுதுகளும்,
தாவில் தவமும், தவக்கனல் தந்த தரிசனமும்
ஆவி எடுத்த பயன்தர வாய்த்தநல் ஆலயமே!

பேசாத பேச்செழு பேரின்ப வெள்ளப் பெருக்கிŽனில
மாசாக வந்து மனந்தின்ற யாவும் மயங்கிŽவிழும்
தாசாதி  தாசராய்ச் சங்கரன் பாதங்கள் சாரவிழி
வீசா’த வீச்சில் விரிந்திடும் வேத வியப்புகளே!

நினைவே தவமாய் நினதடி சார்ந்து நெருங்Žகிவரக்
கனவாய்க் கதையாய்க் கரந்த பலப்பல காட்சியெலாம்
நனவாய் விழிகளில் நாடக மாக்கிŽடும் நாயகமே,
தனியே இலாத தனியே, தவமேநற் தண்ணருளே!

முதற்பொரு ளாகிடும் மொய்ம்பினை , வேத முழுப்பொருளை,
கதிப்பொரு ளாகிடும் காஞ்சி காம’ட்சியாம் கற்பகத்தை,
துதிப்பொரு ளாகத் தொழுதிடும் ஞானச் சுடர்மதியை
நிதிப்பொரு ளாகப் பிடித்திட நெஞ்செழும் நிம்மதியே!



Categories: Bookshelf

Tags:

4 replies

  1. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam!

  2. சந்த தமிழில்
    சந்திர சேகர குருவிற்கு
    செந்தமிழ் மாலை
    செந்தேனினும் இனிமை.

  3. parama baaghyam to read this poetry. Reading the above lines is creating interest to learn tamizh in depth.

  4. Super. Excellent korvai. Tamizh aruvi on Perunkadalam Mahaperiava.

Leave a Reply to kahanamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading