Read this article about Sri Ramagopalanji and I was really moved. If we were in that position, we would have asked several things for the family to Periyava and asking for something about Hinduism would be last in our thought. Only 1 in a million will have such a selfless attitude! Our namaskaram to him for such a selfless leader. Although he says that he doesn’t know why Periyava did a chakram around him, to me, it seems that He did that to save him from all attacks he has been getting from anti-Hindu forces.
May Mahaperiyava continue to bless him and protect him from all evil forces.
ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன், அவருடைய மறைவு என் மனதில் எவ்வித வெற்றிடத்தையும் ஏற்படுத்தவில்லை.மாறாக அவர் இப்போதும் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.
ஆஸ்பத்ரியில் டிஸ்சார்ஜ் ஆகி காஞ்சி மடத்துக்குப் போனபோது பாலப் பெரியவாளுக்கு யாக சாலையில் வைத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னை உட்காரச் சொன்னார். பாடம் முடிந்தவுடன் என் உடல் நிலை பற்றி விஜாரித்தார்.என்னைச் சுற்றி மூன்று சக்கரங்கள் போட்டார்.எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை.
ஜயேந்த்ர பெரியவாளும், பாலப் பெரியவாளும் என்னிடம் ”இதுபோல் யாரிடமும்
அக்கறை எடுத்துக் கொண்டதில்லை” என்றார்கள்.
ஏதோ உயர்ந்த நோக்கத்தில்தான் அவ்வாறு சக்ரம் போட்டிருப்பார்கள் எனத் தோன்றியது. பற்றற்ற நிலைக்கு அவர் ஓர் உதாரணம்.
அவர் சித்தியாவதற்கு முன் காஞ்சி சென்றிருந்தேன் . ஜயேந்த்ர பெரியவாளிடம் கங்கைக் கரையில் ஸஹஸ்ர காயத்ரி செய்யும் ஒருவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர்”நீதான் ஒரு கோடி காயத்ரி ஜபத்தை முடிச்சிருக்கியே” என்றார்.
நான் ”இல்லை, கொஞ்சம் குறைச்சலாகத்தான் செய்திருப்பேன்”என பதில் சொன்னேன்.
”எந்த வருஷம் முதல் செய்யிகிறாய்” என்று என்னைத் திரும்பக் கேட்டார்.
“1935லிருந்து” என்று பதில் சொன்னேன்.
“அதான் முடிச்சிட்டயே” என்று சொன்னார் ஜயேந்த்ரர்.
பிறகு பெரியவாளை அவர் சித்தியாவதற்கு முன் பார்க்கச் சென்றேன்.ஒரே கூட்டம். தடுப்புக்காக
மர பென்ச் ஒன்றைப் போட்டிருந்தார்கள்.அதைத் தாண்டி வரச் சொன்னார் பெரியவர். அருகில் போனேன்.
தொண்டர் ஒருவர் ”இவருக்கு உடம்பு சரியில்லை, அதனால் ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கார்” என்று
சொன்னார்.
என்னை நிமிர்ந்து பார்த்தார் பெரியவர்.
”நான் என் உடம்பைப் பற்றிக் கவலைப் படவில்லை, அங்கங்கே மத மாற்றங்கள் நடக்கிறது, இது பூதாகாரமாகாமல் தடுக்க அனுகரஹம் பண்ண வேண்டும்” என சொன்னேன்.
சிறிது நேரம் கண்ணை மூடியிருந்தார் ஆமாம் என்பது போல். பிறகு ஆசிர்வதித்து அனுப்பினார்,
அதுதான் கடைசி சந்திப்பு. ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன், அவருடைய மறைவு என் மனடில் எவ்வித வெற்றிடத்தையும் ஏற்படுத்தவில்லை.மாறாக அவர் இப்போதும் என்னுடன்
இருப்பதாகவே உணர்கிறேன்.
இதனைப் பகிர்ந்தவர் இந்துத் துறவி எனக் கருதப்படும் #ராம கோபாலன் அவர்கள். ஜய ஜய சங்கரா.
Thanks to Ram Prasad JI.
Categories: Devotee Experiences
Sri Ramagopalan is the epitome of courage and conviction. Despite murderous attacks, he has not moved an inch from his staunch beliefs. In one of the annual Thuglak anniversary functions, Sri. Cho Ramaswamy mentioned that many people that he [Cho] is very courageously writing the truth but Sri Cho said his courage his nothing against Sr. Ramagopalan’s. May he live long with Sr. Mahaperiavaa’s blessings
The biggest paradox in human creation. All are born with native intelligence. Yet brainwashing and exploitation is going on. When there is a nice fruit to eat, people to chose a bitter raw stuff When we have a LIFE CYCLE BASED ON CERTAIN VALUES,evolved from highest form of thought process that guarantees auspiciousness and prosperity for all, people tend to chose a system that is violent, cheating for petty material gains/