17. Sri Sankara Charitham by Maha Periyava – Not for castigating other religions but only to prevent criticism of our own religion (Complete)


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Here is the complete chapter of Sri Sankara Charitham with translation and audio. Over the last two weeks, for reading and convenience, this chapter was split and posted as two separate parts. Rama Rama

பிறமத கண்டனத்திற்காக அல்ல: ஸ்வயமத கண்டனம் கூடாது என்றே!

அந்த மதங்களை நான் ‘க்ரிடிஸைஸ்’ பண்ணவரவேயில்லை. எந்த மதத்தையுமே சும்மாவுக்காக க்ரிடிஸைஸ் பண்ணவேண்டியதில்லை. ஒவ்வொரு மதத்திலும் பல காலமாக ஒவ்வொரு ஜனக்கூட்டம் இருந்து வந்திருக்கிறது என்றால், அந்த மதங்களில் அவர்கள் ஒரு நிறைவைக் கண்டுதானே அப்படி இருந்திருக்கவேண்டும்? எந்த மதமானாலும் ஸ்வய நலமாகப் போகப்படாது, ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும், அன்பாக இருக்கணும் ஸத்யமாக நடக்கணும் என்று சொல்லி, இந்த உடம்பு அநுபவிக்கும் உலக இன்பங்களுக்கு மேலாக ஒன்றைக் காட்டிக் கொடுக்கத்தானே செய்கின்றன? சீலமும், ப்ரேமையும், த்யாகமும், தங்கள் கொள்கைக்கும் அநுஷ்டானத்துக்கும் உரிய ஒரு ஸொந்த அநுபவமும் பெற்ற மஹான்களாக எல்லா மதங்களிலுந்தான் பலர் வந்திருக்கிறார்கள். தத்வ சோதனமும் தீர்க்கமாகப் பண்ணிக் கொண்டு போகும் அறிவாளிகளான ஃபிலாஸஃபர்களும் பௌத்தம், மீமாம்ஸை, ந்யாயம், ஸாங்க்யம் போன்ற மதங்களில் இருந்திருக்கிறார்கள். (பௌத்தரான) நாகார்ஜுனர் புஸ்தகங்களில் எனக்கே ஒரு ஈடுபாடு உண்டு.

ஆனால் எந்த மதமும் தப்பில்லை என்னும்போது நம்முடைய மதத்தை மட்டும் அப்படி (தப்பானது என்று) சொல்லலாமா என்பதுதான் கேள்வி. ‘நம்முடையது’ என்ற ஸ்வய அபிமானத்தில் fad -ஆக (அபிமான வெறியாகப்) போகாமல், நிஷ்பக்ஷபாதமாகப் பார்த்தாலே, இப்போது நான் காட்டின மாதிரி, எந்த மதத்தையும்விட இதில்தான் தலைமுறை தத்வமாக அதிக மாஹான்கள், அதாவது இந்த மதாநுஷ்டனத்தால் ஸ்வாநுபூதி பெற்ற பெரியவர்கள், தோன்றியிருக்கிறார்கள்; எந்த மதத்தை விடவும் வெகு நீண்ட காலமாக இது ஒன்றுதான் ஒப்பற்ற ஒரு நாகரிக ஸமுதாயத்தை ஜீவசக்தியுடன் காப்பாற்றி வந்திருக்கிறது என்று தெரிகிறது. எல்லாருக்கும் ஒரே ஏற்பாடாகப் பண்ணி வைக்காமல், பல தரப்பட்டவர்களுக்கும் அவரவருக்கேற்ற கார்யம், ஆசாரம் (அதாவது வாழ்க்கையழுக்கம்), அவரவருக்குப் பிடித்த இஷ்ட மூர்த்தி என்று இடம் கொடுத்துள்ள நம்முடைய மதத்திலேதான் ஸகல லெவல்களிலும் அதற்கான உயர்ந்த அநுபவங்களைப் பெற்று, ஒரு லெவலிலிருந்து ஸெளக்யமாக அடுத்த லெவலுக்கு போய்க் கடைசியில் பரமாத்மாவே ஜீவாத்மா என்று ஆகிவிடும் பரம ஸத்ய நிலை வரையில் ஜீவனுக்குச் சீராக வழியமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை எப்படிச் சொல்லாமலிருப்பது? ஸாதாரணமான லௌகிக அநுபவங்களுக்கு மேலே எதையோ ஒன்றை எல்லா மதங்களும் அடைவிக்கின்றன என்று அவற்றைக் கொண்டாட வேண்டுமென்றால், அவை அடைவிக்கிறவற்றுக்கும் மேலே உத்தமோத்தமமான ஜீவ-ப்ரஹ்ம ஐக்யம் என்ற முடிவான நிறைவை நம் மதந்தான் அடைவிக்கிறது என்பதற்காக இதையும் அவற்றுக்கு மேலே கொண்டாடுவது ஸரிதானே? இப்படி இதன் தனி விசேஷங்கள் இருக்கிறபோது, இதன் பெரிய நிறைவான பரம தாத்பர்யத்தையோ, அதற்குப் போகிற வழியிலுள்ள இடை நிலையில் அவ்வப்போது ஒரு நிறைவைத் தரும் ஸம்ப்ரதாயங்களையோ புரிந்துகொள்ளாமல் மற்ற மதங்கள் இதைக் கண்டிக்கும்போது, ‘எல்லா மதமும் உசத்திதான்; ஆனால் எல்லாவற்றிலும் உசந்த நம் மதம் மட்டும் அவை எல்லாவற்றின் கண்டனத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்’ என்று சும்மாயிருக்கலாமா?

ஜீவனுக்கும் ப்ரஹ்மத்திற்குமே வித்யாஸமில்லை என்று முடிக்கிற மதத்தில் இத்தனை வர்ணாச்ரம வித்யாஸமிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்று நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்காமல், ‘வித்யாஸம் பண்ணும் மதம்’ என்று மற்றவர்கள் கண்டிக்கும் போது நாம் உண்மையை அலசிப் புரிந்து கொண்டு அவர்களுக்கும் எடுத்துச் சொல்லாமல் சும்மா இருந்து விடுவதா?

புத்தர் பெரியவர், ஜினர் பெரியவர். ஆனால் அவர்களும் ‘எதிலும் நல்லதிருக்கிறது. நாம் பாட்டுக்கு ஸமரஸமாக இருந்துவிட்டுப் போவோம். வைதிக மதத்தை நாம் ஏன் கண்டனம் செய்யவேண்டும்?’ என்று இருந்துவிடவில்லையோல்லியோ? அப்படியானால், அவர்கள் இதை ‘க்ரிடிஸைஸ்’ செய்தது ஸரியில்லை என்று நமக்கு நன்றாகக் காரணம் தெரியும்போது நாமும் அவர்களுடைய ‘க்ரிடிஸிஸ’த்தை ‘க்ரிடிஸைஸ்’ செய்து ஸத்யத்தை நிலைநாட்டுவதற்கு நம்மாலான முயற்சி பண்ணுவது ஸரிதானே?

ஸரியான ஆதி மத ஸித்தாந்தம் எதுவும் இல்லாமலிருக்கிற வெளி தேசங்களில், அந்த தேசத்து ஜனங்களின் பக்குவ நிலை, கலாசாரம் முதலியவற்றுக்கு ஏற்றனவாக ஒருவித உள் நிறைவைக் கொடுக்க உபகாரம் செய்வதாக பௌத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் முதலியன அங்கே இருக்கின்றன. அப்படியே இருக்கட்டும். அதை நாம் ஆக்ஷேபிக்கவே வேண்டாம். ஆனால் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும் ஏற்றபடி வழி போட்டுக் கொடுத்து, உச்சியான நிறைவு வரையில் அழைத்துக் கொண்டு போகும் ஒரு மதம் நமக்கு இருக்கிறபோது இங்கே அந்த மதங்கள் இடம் பிடிக்க வரும் போதும் நாம் ஒண்ணும் ஆக்ஷேபிக்கக்கூடாது என்றால் எப்படி?

ஆசார்யாள் கதை கேட்க உட்கார்ந்திருக்கிறோம். அவரைப் பெரியவர் என்று லோகம் பூரா கொண்டாடுகிறது. அவர் சொன்னவற்றில் அபிப்ராய பேதமுள்ளவர்கள்கூட அவர் மஹா புத்திமானென்றும், ஜனங்களுக்குத் தாம் செய்ய வேண்டிய ஒரு ‘மிஷன்’ இருக்கிறது என்ற ‘டெடிகேஷனோடு ராப் பகல் பாடுபட்ட த்யாகி என்றும், இன்னும் இப்படிப் பல தினுஸாகவும் போற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர் முக்யமாகப் பண்ணியது என்ன? அவர் காலத்தில் இங்கே இருந்த மற்ற மதங்களையெல்லாம் கண்டனம் பண்ணி, வைதிகமான ஸநாதன தர்மத்தை மறுபடி ஜீவனோடு ப்ரகாசிக்கச் செய்ததுதானே? அதற்காகத்தானே அந்த அவதாரம் ஏற்பட்டதே? அப்படியிருக்கும்போது எந்த மதத்தையும் எதுவும் க்ரிடிஸைஸ் பண்ணாமல் ஆசார்யாளைப் பற்றி உபந்யாஸம் செய்வதென்றால் எப்படி?

ஸரியான காரணம் காட்டி க்ரிடிஸைஸ் செய்கிறதில் தப்பேயில்லை. விதண்டாவாதமாகப் பண்ணினால்தான் தப்பு. ந்யாயமான காரணங்கள், பாயின்ட்கள் தோன்றும்போது நாமும் மற்றவர்களை க்ரிடிஸைஸ் செய்ய வேண்டியதுதான். அதே மாதிரி அவர்களும் நம்மைச் செய்ய வேண்டியதுதான். (கண்டனம் செய்வதில்) தப்பு இரண்டு விதத்தில்தான் இருக்கிறது. ஒன்று, ஸரியாகக் காரணம் காட்டாமல் விதண்டை பண்ணவது. இன்னொன்று, நம் மனஸில் த்வேஷத்தோடு க்ரிடிஸைஸ் பண்ணப்போவது, மாற்று அபிப்ராயமுள்ளவர்களிடமும் த்வேஷம் என்பதேயில்லாமல் ப்ரேமையோடு அபிப்ராயங்களை மட்டும் க்ரிடிஸைஸ் செய்ய வேண்டும். ‘அவர்கள் புத்திக்கு அப்படித் தோன்றுகிறது. நமக்குத் தோன்றுவதை அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். அவர்களுக்குத் தோன்றுவதையும் கேட்டுக் கொள்வோம். இரண்டு பேரும் இரண்டையும் அலசி ஆலோசித்துப் பார்ப்போம்’ என்ற மனோபாவத்தோடு நடக்க வேண்டும். இந்த ப்ரேமையில்தான் ஸமரஸம் இருக்க வேண்டுமே தவிரக் கொள்கையில் இல்லை. கொள்கையில் அப்படி (ஸமரஸம்) என்று சும்மாயிருந்தால், மற்றவர்கள் நம் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை ஏமாந்த சோணகிரிகளாக்குவதில் தான் முடியும். மனஸில் அன்போடு, நமக்கு ஸத்யமாகத் தெரியும் கொள்கைகளுக்காகப் போராட வேண்டுமென்பதே முறை.

ஸகல ஸித்தாந்தங்களும் உள்ளடங்கியதாக உள்ள வேத தர்மத்தை ஆக்ஷேபித்து, அல்லது அதில் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதுவே பூர்ண தர்மம் என்று ஸாதித்து, அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த சிலரும் கலியிலே ஸித்தாந்தங்களைப் பரப்பினார்களென்பதை நம்முடைய சாஸ்த்ர – புராணங்களில் கலிபுருஷன் பண்ணின க்ருத்ரிமமாகத்தான் சொல்லியிருக்கிறது. இது நல்லதற்கில்லாததே நல்லதாக வேஷம் போட்டுக் கொண்டுவந்து ஜனங்களை மயக்கி, அவர்கள் வேத விருத்தமான (வேதத்துக்கு முரணான) அம்சங்களையும் அநுஷ்டானங்களையும் கொள்கைகளையும் வாழ்முறைகளையும் பின்பற்றப் பண்ணியதுதான் என்று சொல்லியிருக்கிறது.

புத்தர், ஜினர் போன்றவர்களை, ஜனங்கள் நல்ல வழிக்குப் போகப்படாது என்று தடுப்பதற்காகவே மனஸறிந்து மாற்றுவழி போட்டுக் கொடுத்தவர்களென்று சொல்வது கஷ்டமாயிருந்தால் அப்படிச் சொல்ல வேண்டாம். அவர்களைப் பொருத்தமட்டில், அவர்களைப் போன்ற நிலைக்குப் போனவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் சொன்னவற்றை நல்லதற்கில்லாதவை என்று சொல்ல வேண்டியதில்லை. ஒரே அஹிம்ஸை, அன்பு, ஒழுக்கம் என்று இருந்து கொண்டு அவர்களைப்போல, ‘சரீரம் போனாலும் போகட்டும். லக்ஷ்ய ஸித்தி அடையாமல் எழுந்திருப்பதில்லை’ என்று, புலனையடக்கி அப்படியே ஒரு தபஸில் உட்கார்ந்துவிடக் கூடியவர்களுக்கு வேதமும் வைதிகாநுஷ்டானங்களும் நிஜமாகவே தேவையில்லைதான். இப்படி அந்த வேதமே சொல்லியிருக்கிறது. ‘ஞானியாய்ப் போனவனுக்கு அப்பா அப்பா இல்லை; அம்மா அம்மா இல்லை; லோகம் லோகமில்லை; தேவர்கள் தேவரில்லை; வேதமும் வேதமில்லை’ என்று இப்படி ச்ருதி சிரஸாக இருக்கப்பட்ட ஒரு உபநிஷத்திலேயே இருக்கிறது1. ஆனால் இப்படிப்பட்ட உபநிஷத்துக்களிலேயே ‘தத்வமஸி’ என்கிற தலைசிறந்த ஞான லக்ஷ்யத்தைச் சொல்லுகிற சாந்தோக்யத்தில், முடிக்கிற இடத்தில்2 எவன் இம்மைக்குத் திரும்பி வராத ஸ்தானத்தை அடைகிறான் என்று சொல்லும்போது, அவன் விதிப்படி வேத அத்யயன – அநுஷ்டானங்களைச் செய்து, குடும்ப வாழ்க்கை நடத்தி, இந்திரியங்களைச் சலனமில்லாமல் நிலை நிறுத்தி, வேத கர்மாக்களில் வருவதைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் அஹிம்ஸையக் கடைப்பிடித்துத்தான் அந்த உத்தம ஸ்தானத்தை அடையத் தகுதி பெறுகிறான் என்று சொல்லியிருக்கிறது. அதாவது ஒரு புத்தருக்கோ, ஜினருக்கோ, மற்ற ஞானிகளுக்கோ ஏற்பட்ட தர்மங்களை ஸகலருக்கும் நம் மதம் வைத்து விடவில்லை. அப்படி ஒருவன் முடிவிலே ஞானியாய்ப் போவதற்காகவே அவனுக்கு அடியிலிருந்து வெவ்வேறு தர்மங்களை ஸ்டேஜ், ஸ்டேஜாக மாற்றிக் கொடுத்துக் கொண்டு போவதில்தான் நம் தர்மத்தின் பெருமையே இருக்கிறது. இதிலே இன்னும் பெருமை, அடி நிலையிலே இருக்கிறவனையும் அணைத்துப் போக வேண்டும், அவரவர் இருக்கும் இடத்திலிந்து கையைப் பிடித்து அழைத்துப் போகவேண்டும் என்பதற்காக, ஞானியும்கூட அந்த அடிநிலைக்காரன் மாதிரியே செய்துகாட்ட வேண்டுமென்று நம் மதத்தில் சொல்லியிருக்கிறது. குறிப்பாக கீதையில் பகவான் இதை ரொம்பவும் வற்புறுத்திருயிருக்கிறார்3. நடைமுறைக்கு ஏற்றதாகவும், மனோதத்வ ரீதியில் பொருத்தமுடையதாகவும் இப்படி நம் மதத்தில் ஞானியைக்கூட ஸாமான்ய ஜனங்களுக்கு வழிகாட்டியாக அவர்களுடைய தர்மத்தைச் செய்துகாட்ட வேண்டுமென்று சொல்லியிருக்க, இதற்கு நேர்மாறாக ஸாமான்ய ஜனங்களுக்கும் ஞானியின் தர்மத்தையே வைப்பது என்று ஒருத்தர் ஸித்தாந்தம் செய்தால், அவர் தனி வாழ்க்கையில் எத்தனை பெரியவராயிருந்தாலும் அந்த ஸித்தாந்தத்தால் மக்களின் ஆத்ம க்ஷேமம் குழறும்படியாகப் போகிறதே என்பதை உத்தேசித்து அதை நிராகரணம் செய்யத்தானே (நிராகரிக்கத்தானே) வேண்டியிருக்கிறது?

இதற்காகத்தான் நம்முடைய ஸ்ரீசங்கர பகவத்பாதாளின் அவதாரமானதால், அவரும், அவருக்கு முன்னேயும் பின்னேயும் வந்த வேதாந்த ஸம்ப்ரதயப் பெரியவர்களும் ஏனைய ஸித்தாந்தங்களில் எடுத்துக் காட்டியிருக்கும் தோஷங்களைச் சொல்லாமல் விடமுடியவில்லை. முன்னேயே சொன்ன மாதிரி, தோஷம் தெரிகிற இடத்தில் அதைச் சொல்வதில் தப்பில்லை; சொல்லத்தான் வேண்டும். ஆனால் தோஷத்தைச் சொன்னாலும் த்வேஷம் இருக்கப்படாது என்பதுதான் முக்யம்.

அந்த மதங்களைக் கண்டிக்க வேண்டுமென்பதற்காக அல்ல; அந்த மதங்கள் நம் மதத்தைக் கண்டிப்பது ஸரியல்ல என்று எடுத்துக்காட்டி, நம்முடைய தாய்மதத்தை உள்ளபடி புரியவைப்பதற்காகவே இதெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது.

வேத தர்மத்திற்கு முரண்பாடான மத ஸ்தாபகர்கள், ஸித்தாந்த ப்ரவர்த்தகர்கள் என்று சில பேரை மட்டும் கலியுகத்தின் போக்குக்குக் காரணமாகச் சொல்லி விட்டுவிடுவதற்கில்லை. ஒரு முள்ளு மரம் முளைக்கிறதென்றால் அதற்கு விதை இருக்கணுமென்பதுபோலவே, அந்த விதை முளைத்து வளரத் தக்கதாக பூமியும் இருந்தால்தானே முடியும்? மதஸ்தாபகர்களும் ப்ரசாரகர்களும் என்னதான் ஸித்தாந்த விதைகளை ஊன்றினாலும் ஜன ஸமூஹத்தின் மனநிலை என்கிற பூமி அவற்றை பூஸாரமூட்டிப் போஷித்தால்தானே அவை அந்த ஸமூஹத்தில் தழைத்து வளரமுடியும்? இப்படி, வேத தர்மத்துக்கு விரோதமான போக்குகளிலேயே அப்போது ஜெனரலாக ஜனங்களுக்கு ருசி ஏற்பட்டு, அதனாலேயே அவைதிக மதங்களை நன்றாகப் பரவும்படிச் செய்வதாக ஆயிற்று. அஸுர, ராக்ஷஸர்கள் ஜனங்களின் புத்தியிலேயே ப்ரவேசித்ததாகச் சொன்னது இதைத்தான். கலிபுருஷன் ரொம்ப ஸாமர்த்யமாக இந்த மதங்களும் தார்மிகமான வழிகளைச் சொல்கிற மாதிரியும், அதை உபதேசிக்கிறவர்கள் பின்பற்றுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரும் தர்மமாகவே போகிற மாதிரியும் ‘ஷோ’ பண்ணியிருந்தான்.

கலி பிறந்தபின்னும் க்ருஷ்ண பரமாத்மா, வ்யாஸாசார்யாள் ஆகியவர்கள் கொடுத்திருந்த பலத்தினால் சுமார் இரண்டாயிரத்தைநூறு வருஷம் ரொம்பவும் சீரழிவு ஏற்படாமலே வைதிக தர்மாசரணை நடந்துவந்ததற்கப்புறம் இப்படி இடைக்காலத்தில் அசதி மறதியாக இருந்ததற்கும் சேர்த்து வைத்துக் கலி புருஷன் தன்னுடைய ஆதிக்யத்தை ஒரே முரட்டுதனமாகக் காட்ட ஆரம்பித்தான். ரொம்ப நேரம் தூங்கிப் போய்விட்டால், ‘ஐயோ, இப்படித் தூங்கிப் போய்விட்டோமே, கார்யத்தைப் பண்ணியாகணுமே!’ என்று ஒரே தடால் புடாலென்று ஆரம்பிக்கிற மாதிரிக் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தான். இன்னொரு உதாரணம் சொல்லணுமானால், ‘அடைத்து வைத்த ஸோடா பாட்டிலை உடைத்த மாதிரி’ ஆயிற்று! அந்த வேகத்தில் எழுபத்திரண்டு மதங்கள் ஸநாதன தர்மத்திற்கு மாறாகத் தோன்றின என்று புஸ்தகங்களில் போட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ரொம்ப உத்தண்டமாகக் கிளம்பிற்று என்றும் போட்டிருக்கிறது. அஸந்தர்ப்பமானவை எல்லாமே தடபுடலாகத்தான் கிளம்பும். வாஸ்தவத்திலேயே ஹிதமாகவும் ஸத்யமாகவும் இருப்பவை ஸாத்விகமாக, சாந்தமாகத்தான் தோன்றிச் செயலுக்கு வரும். அப்படியில்லாதவை அதம்பிக்கொண்டு அடாவடியாகத்தான் ஆரம்பிக்கும். கலி அதர்மயுகம் என்று நிரூபித்துக் காட்டுகிறமாதிரி அப்போது இப்படி 72 மதங்கள் தோன்றின என்று புஸ்தகங்களில் இருக்கிறது.

1 ப்ருஹதாரண்யகம் IV.3.22

2 VIII.15.1

3 “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதியில் “ஆசாரம்” என்ற உரையில் “கீதையின் கட்டளை“, “தலைவர் கடமை: கீதை உபதேசம்“, “அறிந்தவனும் அறியாதாரும்” ஆகிய பிரிவுகள் பார்க்க.

_________________________________________________________________________________

Not for castigating other religions but only to prevent criticism of our own religion

I am not at all trying to criticize other religions.  No religion should be criticized just for the sake of it.  If each religion has a set of people following it for many years, is it not because they have been able to get some mental satisfaction from that? Is it not that whatever be the religion, they prescribe that one should not be selfish, should reduce one’s desires, love others, be truthful etc., and also point out that there is something more superior to the pleasures of this human body?  All religions have produced several great people who have been disciplined, loving, and austere and who have had self-experiences in accordance with the principles and prescriptions of their religion.  Many have been there as scholarly philosophers, continuously engaged in validating their philosophies, in religions like Buddhism, Meemamsai, Nyayam, Sankhyam, etc.  I myself have interest in the books written by Nagarjunar (a Buddhist).

However, when we say that there is no fault with any religion, the question is, should we say only our religion is wrong?  If you look at it impartially, without being proud on account of being ‘ours’ as a fad, as I just now pointed out, only this religion has produced more number of great people, as a legacy over generations, i.e., people who have self-experienced, observing the principles of this religion. It is observed that compared to all other religions, only this has preserved a vibrant, incomparable civilized society for a very long time. How do we not say, the fact that without prescribing the same code for all types of people, only our religion has prescribed a smooth path permitting different activities, code of conduct, (that is, discipline) for different types of people, permitting worshipping one’s own preferred deity etc., and enables one to move from one level to the higher level comfortably and ultimately reach the supreme level of merger of Jeevathma with Paramathma?  If other religions are to be appreciated just for helping to reach something more than the ordinary materialistic life, is it not correct to be appreciating our religion more, when it is helping to reach much more, the ultimate Jeeva-Brahma merger? Having such superior features (in our religion), when other religions condemn ours without understanding the ultimate, great, fulfilling concepts and the satisfaction given now and then by the traditions en route (to reaching the superior level), should we keep quiet thinking that all religions are great and our religion which is superior to everything else should digest the condemnation of all others?

If a religion, which despite saying that there is no difference between Jeevathma and Brahmam but has prescribed so many different classes and order, should we not analyze the reasons for the same and understand ourselves and then convey to others the truth or should we keep quiet, when others condemn our religion as a discriminating one?

Buddha was great.  Jaina (Mahavira) was great.  However, did they refrain from condemning the vedic religion appreciating that there will be goodness in all religions and so why should we condemn them and rather keep peace?  In that case, when we reason out clearly that their criticism is not justified, is it not correct to criticize their criticism and try our best to establish the truth?

In countries where there is no anciently established religious philosophy, religions like Buddhism, Christianity, Islam, etc., are trying to help in providing a sense of inner satisfaction to the people, taking into account their maturity levels and culture.  Let it be.  We may not object to that.  However, how is it that we should not object when these other religions try to interfere here when we have a religion, which is able to prescribe a path to the people of all levels and also take them to the highest level?

We have assembled to listen to the story of our Acharya.  Entire world glorifies him as a great person.  Even those who differ from his opinions, praise him as very intelligent, that he was selfless, worked day and night with a dedication to serve the people as a mission and in so many other ways.  What is the important thing that such a person has done? Is it not that he rejected the other religions which were in existence here during his period and re-established the Sanathana Dharma to shine again with vitality?  Is it not, for that purpose only, the incarnation took place? If that is so, how can a lecture be given about Aacharya, without criticizing anything about the other religions?

There is nothing wrong in criticizing quoting valid reasons.  It is wrong only if it is done as an adamant, unjustifiable argument.  When there are justifiable reasons and points, we also need to criticize them. Similarly, they can also do (criticize) against us.  Only two mistakes can happen while criticizing.  One, unreasonably arguing without showing valid reasons.  Two, criticizing with hatred (animosity) in the heart.  Only the opinions should be criticized, lovingly without any malice to the people who hold contrary opinions.  It is their perception as per their mindset.  We will explain to them.  We will also listen to what they feel.  Both should conduct themselves with the attitude to analyse both the opinions.  Equality should be there only in this loving feeling and not in principles.  If we keep quiet observing equality in principles, others will seize control and make a fool of us, reducing us to be a disappointing naive lot.  It is quite right to fight for the principles we believe to be true, with love in our heart.

The action of a few people who were endowed with intelligence and discipline in spreading philosophies in the Kaliyuga, condemning the vedic religion which encompasses all philosophies or taking only a portion of it and establishing as the complete dharma, is said in our sasthras and epics as a result of the deeds of the Kali purusha. It is stated that the evil (non-righteous) disguised as right, mesmerized the people to follow practices, aspects, procedures, principles and lifestyles, contrary to vedas.

If it is felt difficult to say that people like Buddha and Jaina showed a different route, deliberately to wean people from following the righteous path, let it not be said.  As far as they are concerned and the people who have reached the stage like theirs, what they said may not be termed as not for good.  For people like them who followed solely, ahimsa, love, and austerity and who are capable of sitting with single minded focus, controlling their senses, not stirring up without achieving their principled goal, even at the cost of (damage to) the physical body, vedas and vedic prescriptions may, truly be not necessary.  Vedas, themselves have said in the Upanishads, which are the crowning glory in vedic texts, that for a realized soul, mother is no mother, father is no father, world is not a world, devas are not devas and vedas are not vedas.  However, in that Upanishads only, in the verse, which mentions the great principle of knowledge, “Thathvamasi” in the concluding part describing the person who does not return to the material world, it is said that one should have observed the practices and prescriptions of the vedas, led a householder’s life, controlled the sensory organs without any wavering, followed ahimsa (non-violence) in all aspects except prescribed in the vedas, to become eligible to attain that highest state.  That is, our religion has not prescribed the same dharma which was followed by Buddha, Jaina or such realized persons, to all the people.  The beauty of our religion lies in the prescription of moving forward stage by stage, following different dharmas, so as to ensure that one reaches that exalted status in the end.  Another greatness about our religion is that in order that we should support the man who is at the bottom and to lead the people ahead from whichever stage, it is said that the Gnani (realized soul) also should demonstrate like the person at the bottom.  This is specifically emphasized by Lord Krishna, in the Gita.  When, in our religion, such a pragmatic and psychologically appropriate approach has been prescribed, where even the Gnani should also be a guide and demonstrate the dharma a common man should follow, how can we not reject, keeping in view that the welfare of the people is ruined, notwithstanding however great he may be in his individual life, when someone advocates a totally contradictory philosophy in which common man is forced to follow the dharma of a Gnani?

As the incarnation (Avathara) of Shri Sankara took place for this reason only, we cannot but talk about the great people who were there before and after him and the deficiencies of their philosophies.  As said earlier, there is nothing wrong in pointing out when we see a deficiency.  We should point out.  What is important is that there should not be malice even if we are pointing out deficiency.

It is not for condemning other religions.  All these are being said just to point out that condemnation of our religion by others is wrong and to make our mother religion understood for actually what it is.

We cannot give up exclusively blaming, only a few anti-Vedic religious heads, philosophers for the (worsening) ways of Kali Yuga. If a bramble (prickly shrub) is growing, just as there should have been a seed to make it grow, should not the land also be conducive for it to grow?  However much these religious heads and propagators implanted their philosophies, could it have grown so richly had not the attitude of the people, as the land, also stoked worshipping them? Generally, it is this development of the taste of the people towards ways contradictory to Vedic dharma, which helped in the non-Vedic religions to spread.   This is what I said about Asuras and Rakshasas getting into the minds of the people.  Kali Purusha very smartly showcased as though these religions were advocating dharmic ways and that both the propagators and followers were also following dharma.

Kali Purusha showed his full vehemence compensating for his inaction during the interim period of about 2500 years after the advent of Kali Yuga, when people like Krishna, Vyasa, etc., had lent their strength to sustain the Vedic dharma.  He started displaying his skills, as someone would hurry up to attend to the jobs after having overslept. To quote another example, it was like opening up a sealed soda bottle.  It is written in the literatures that in that force, 72 religions had arisen against the sanathana dharma.  It is also mentioned that each one had risen upwards very vigorously.  It is always that undesirable things start with lot of fanfare.  Those which are really well-disposed and truthful, would always arise virtuous and calm and begin to act.  The ones which are contrary to this, would start off vigorously and violently.  It is written in the texts that these 72 religions arose in that period, in a way to prove that the kaliyuga was indeed unrighteous (adharma).

1 Brihadhaarangaygam IV.3.22
2 VIII.15.1
3 Refer to “Deivathin Kural” Vol 3 “Aacharam” section, see chapters “Gita’s Order“, “Leaders Duty: Gita Upadesam“, “Knowledgable and Ignorant” ஆகிய பிரிவுகள் பார்க்க.

__________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

2 replies

  1. Very nice!

Trackbacks

  1. 17. Sri Sankara Charitham by Maha Periyava – Not for castigating other religions but only to prevent criticism of our own religion (Complete) | srk379

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading