Periyava Golden Quotes-659

காந்தி இன்னொன்று கூடப் பண்ணினார். ஒரு ஸமயம் தேசத்திலே பெரிய பஞ்சம் வந்தது. அப்போது எல்லா மாகாணத்துப் பிரதிநிதிகளும் அப்போதிருந்த டில்லி ராஜாங்கத்திடம் ஜாஸ்தி உணவுப்பண்ட உதவி வேண்டுமென்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்கள். காந்தியும் அங்கே ‘அட்வைஸ்’ பண்ணுவதற்காக இருந்தார். அப்போது அவர் சென்னை மாகாணத்திலிருந்தவர்களும் இப்படிக் கேட்கிறதைப் பார்த்து, “சுற்றி ஸமுத்ரம் இல்லாத யு.பி.க்காரர்கள், எம்.பி.க்காரர்கள்தான் அழுகிறார்களென்றால், மூன்று ஸமுத்ரங்களும் மூன்று பக்கம் சுற்றிக் கொண்டிருக்கிற, ‘மெட்ராஸ் ஸ்டேட்’டைச் சேர்ந்த நீங்களும் கூடச் சேர்ந்து அழுவதாவது?” என்றாராம்! என்ன அர்த்தமென்றால், “ஸமுத்ரத்தில்தான் நிறைய மத்ஸ்யம் கிடைக்குமே, பிடித்துத் தின்னுங்களேன்!” என்று அர்த்தம். அவர் போனவிட்டு [காலமான பிறகு] நேருவானால் “பாகிஸ்தான் ‘அக்ரஷன்’ (ஆக்கிரமிப்பு) செய்தால் நாம் படையெடுப்பதற்கு பாபுவிடமிருந்தே அநுமதி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்! எதற்கும் ‘எக்ஸெப்ஷன்’ உண்டு. இதைப் பார்க்காமல் ரொம்பவும் தீவிரமாக ஒரு ரூலை ஒருவர் சொன்னால் அப்புறம் அவரே அதற்கு மாறாகப் பண்ண வேண்டிய எக்ஸெப்ஷனலான ஸந்தர்ப்பம் வருகிறபோது என்னவோ போலாகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
|
Gandhi did another thing. Once it so happened that the country was reeling under severe famine. At that time the representatives of the various presidencies sought assistance from the Delhi government in the matter of food supplies. Gandhi was also present as an adviser. On seeing the representatives of the Madras Presidency also pleading for assistance, he wondered why they should do so, considering that they were surrounded on three sides by the sea, unlike the people from Madhya Pradesh or Uttar Pradesh. The underlying meaning is that they have enough fish in the sea to combat famine. After his death, Nehru declared that he had got permission from Bapuji for declaration of war by Indian army if Pakistan occupied the Indian Territory. Every rule has an exception. Without taking this into consideration if somebody stresses too much upon the rule, then when exceptional circumstances arise when he himself has to act contrary to the rule, then it seems odd. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading