கந்தமங்கலத்தில் ஸ்ரீ காஞ்சி ம ஹா பெரியவர்!


SOURCE http://www.vikatan.com/news/tamilnadu/97286-shree-kanchi-maha-periyavar-at-kanthamangalam.html – Thanks to Sri Venkatesh for the share.

கந்தமங்கலத்தில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி-ஆடுதுறை சாலையில் பயணித்தால் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் சந்நிதி என்ற விளம்பரப் பலகையைப் பார்த்ததும் ஆச்சர்யம்.

காஞ்சி மஹா பெரியவர் சந்நிதி இங்கு எப்படி அமைந்திருக்கிறது… என்ற கேள்விக்குறியுடன் தெற்கே ஒரு ஃபர்லாங் தூரம் சென்றால், கந்தமங்கலம் கிராமம். அந்தக் கிராமத்தின் நடுவே, ஸ்ரீ பிரசன்ன மஹாகணபதி ஆலயத்தில், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் சந்நிதி அருகே ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா சந்நிதி அழகாய் அமைந்திருக்கிறது.

அய்யப்பன் என்பவரிடம் பேசியபோது, ‘தமிழ்நாட்டில் இன்னமும் கிராமத்தைச் சேர்ந்த பலர் நகரத்துக்கு இடம்பெயராமல், விவசாயம் செய்து இயற்கையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த வாழ்வுக்கு, காஞ்சி மஹா பெரியவரின்அனுக்ரஹமும் ஒருகாரணம். ஒருமுறை, எங்கள் ஊருக்கு வந்த காஞ்சி மஹா பெரியவா, உலகிற்கு உணவு படைக்கும் உன்னதமான தொழிலைக் கைவிடாது செய்துவாருங்கள். சுத்தமான காற்றும், சுகாதாரமான வாழ்க்கையும் இங்குதான் கிடைக்கும். உயிர்களுக்கு உணவு படைப்பதும் இறை பணிதான். உங்களுக்கு இறைவன் அனுக்ரஹகம் எப்போதும் இருக்கும் என்று ஆசீர்வதித்தார்.’

அவரது அருளாசிபடியே தலைமுறைகளைக் கடந்து, விவசாயத்தைக் கைவிடாது வாழ்கிறோம். அவருக்கு, இங்கேயே கோயில் அமைத்து வழிபடுவதால், அவர் எப்போதும் எங்களுடனே இருந்து, எங்களை ஆசீர்வதிப்பதுபோலவே உணர்கிறோம் என்றபோது, மஹா பெரியவரின் தீர்க்கதரிசனம் சிலிர்ப்பைத் தந்தது.Categories: Devotee Experiences

2 replies

  1. hara hara sankara jaya jaya sankara

  2. MAHAPERIVA TIRUVADIGALUKKU ANANTHA KODI NAMASKARANGAL.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: