ஞான குருவே நின் திருவடி சரணம்  


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Our sathsang volunteer Shri S. Ravisankar has penned this beautiful poem on Sri Periyava. Enjoy! Rama Rama

                                                              ஞான குருவே நின் திருவடி சரணம்

 நின்  இரு  கண்களிலும்  ஒளி கருணையாய் வழிய ,
உன் திருவாய் மலர்ந்தருளி காருண்யம்  பொழிய;
பௌர்ணமி நிலவின் அழகு முகத்திலும்  தெரிய ,
வந்தேன் தரிசனம் காண,கடைக்கோடி பக்தன் ;
எம் “ஞான குருவே, நின் திருவடி சரணம்”


உன் தண்டத்திலே இந்த அண்டத்தையும் அடக்கி ,
அண்டிவரும் பக்தர்களின் வேண்டுதலுக்கு ஆசி கூறி;
உண்டியும் கொடுத்து உபசரித்து, அன்னபூரணியாய் அமர்ந்து,
ஒளிப்பிழம்பாய் , லிங்கஸ்வரூபமாய் ,காமாக்ஷியாய் காட்சி தரும் ,
எம் ” ஞான குருவே, நின் திருவடி சரணம்”


உன் மலர் திருப்பாதங்களும் எம் மண்ணில் பதியாதாவென ,
பாரததேசமெங்கும் மக்கள் ஏக்கமுடன் பரிதவிக்க ;
உற்சவமூர்த்தியாய் வந்தேன் உன் குறை தீர்க்கவென ,
தள்ளாத வயதிலும் ,நடைப்பயணமாய் திக்கெட்டும் சென்று ,
சாரல் மழை  மென்மையுடன் அருளாசியும் பொழிந்தாய்,
எம் “ஞானகுருவே, நின் திருவடி சரணம்”

வேதங்களும்,தர்மங்களும் புராணங்களும் இந்து மதத்தின் அச்சாணியென,
கண்டறிந்து, அழிந்து போகாமல் தனியொருவனாய்  அயராதுஉழைத்து;
பாரெங்கும் பலநூறு மாமேதை பண்டிதர்களை  கருணையுடன் உருவாக்கி ,
இன்று  படர்ந்த கிளைகளைக் கொண்ட மரமாக ,ஆழமான வேரோடு ,
ந்த  பூமியில் ,சுவையான கனி கிடைக்க சகலரும் சுவைக்க அருள் பாலித்த 
எம் ” ஞான குருவே , நின் திருவடி சரணம் ”

நான்கு தலைமுறைகள் தாங்களே தெய்வமென தரிசித்து உய்வுபெற ,
இனிவருவோர்க்கு நானில்லை என்ற ஏக்கம் தீர ,தெய்வத்தின் குரலிலும் ;
பாரெங்கும் பக்தர்கள் ஆலயங்கள் உருவாக்கி பதுமையாய்அமரவைக்க
சத்தியத்தைப் பின்பற்றும் என் பல்லாயிரம் கண்மணிகளைக் காப்பாற்ற ,
 யாமே

உன் நிழலாய் முன் சென்று வழிநடத்தி , சிலநேரம் பின்னின்று  உந்து சக்தியாய் பலமளித்து வாழ்க்கையில் , தர்ம நெறியில் வெற்றி பெற வழி  காட்டி ,
இறைவனடி சேர வழிகாட்டும் எம் “ஞானகுருவே நின்திருவடிசரணம் ”

எப்போதும் எம்முடன் வாழும்  குருவே சுவாமிநாதா , நடமாடும் தெய்வமே,
எம் “ஞான குருவே, நின் திருவடி சரணம், சரணம், சரணம்”

(எதுகை ,மோனை , இலக்கணப்பிழை முதலியவைகளை மன்னித்து அருளவும்)

 எஸ் .ரவிசங்கர்    (18   ஜூலை 2017)


Categories: Krithis

Tags:

1 reply

Trackbacks

  1. ஞான குருவே நின் திருவடி சரணம்   — Sage of Kanchi – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net

Leave a Reply

%d bloggers like this: