என்ன பெரியவா எதிரில் இருக்கிறாற்போலவே பேசறாளே இவா!


Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for this extraordinary great article. This happened to mami’s friend.

I have been in this situation before…It takes a long time to get understand things properly. Any Mahan’s adishtanam/brindavanam has the same aakarshanam that it used to have when those Mahans were in sthula sareeram….

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Periyava_Adishtanam

எங்கள் பெண் CA பரீக்ஷை ஹால் டிக்கட் பெரியவா ஸன்னிதானத்தில் வைத்து நல்லபடியாக பரீக்ஷை
எழுத ப்ரார்த்தித்து வர அடிஷ்டானம் சென்றிருந்தோம். அங்கிருந்த பெரியவா கைங்கர்ய பரர் ஒருவர் பெரியவா அருகே ஹால்ல் டிக்கட்டை வைத்து”பெரியவா..இவா குழந்தை பரீக்ஷையில் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சி அடைய பெரியவா ஆசி வழங்கணும்” என்று வழக்கம் போல் உரத்த குரலில் ப்ரார்த்தனையை
பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.

இதைக் கண்ட என் கணவர் ”என்ன பெரியவா எதிரில் இருக்கிறாற்போலவே பேசறாளே இவா!” என
ஆச்சர்யம் மேலிட என்னிடம் கேட்டார்!

நான்”இதில் ஆச்சர்யம் என்ன இருக்கு? பெரியவா ப்ரத்யக்ஷமா அங்கே இருக்காளே! இவாள்ளெல்லாம்
பெரியவா கூடவே இருந்து சேவை செய்தவா அதனால் அவாள் சொல்றதை பெரியவா கேட்டுண்டுதான் இருப்பா, நம் ஊனக்கண்களுக்கு நம் அஞ்ஞானத்தால் தெரியல்லை,அவ்வளவுதான் ” என்று சொல்லவும் சும்மா இருந்துவிட்டார்.

வீடு திருன்பிவிட்டோம். அன்று இரவே என் கணவருக்குக் கனவு!

ப்ருந்தாவனம் இரண்டாகப் பிளக்கிறது!

பெரியவா அதனின்றும் வெளிப்படுகிறார்!

பிளக்கும்போது தூசி கல், மண் எல்லாம் என் கணவர் மேல் வந்து விழுகிறது!

ஆவ்வளவுதான் இவருக்கு முழிப்பு வந்துவிடுகிறது!

காலை எழுந்தவுடன் என்னிடம் ”நான் அங்குதான் இருக்கேன் உனக்கு நம்பிக்கை வந்துடுத்தா”என்று
கேட்பதுபோல் என் கனவில் வந்தார் பெரியவா என்று ஆச்சர்யமும் பக்தியும் கலந்த குரலில் அவ்ர் சொன்னது
கேட்டு மெய் சிலிர்த்தது!

பெரியவா பெரியவாதான்!

இந்த சம்பவம் என் சினேகிதி இளம் வயதினளின் அனுபவம்! பெரியவாளிடம் தீராத பக்தி கொண்டவள்!

ஜய ஜய சங்கரா……Categories: Devotee Experiences

2 replies

  1. இவளின் நம்பிக்கை , பெரியவா மேல் வைத்திருக்கும் பக்தி எனக்கே இருக்குமா என்ற சந்தேகம் அடிக்கடி எனக்குள் எழுவது உண்மையான விஷயம்! ஒவ்வொரு முறையும் பெரியவா பற்றிப் பேசும்போது அவள் கண்களில் நீர் ..தழுதழுத்த குரல்! என்னெவென்பேன் அவள் பக்தியை!
    இது போல் நிறைய இளைய வயதுடையவர்கள் பெரியவா மேல் பரம பக்தி பூண்டவர்களை நான் சமீப காலத்தில் நிறையவே பார்க்கிறேன். ஆடம்பரமில்லா அத்யந்த பக்தி! பெரியவா சித்தி ஆனபோதும் இவள் கனவில் வந்து அந்தச் சடங்குகளை சினிமா படம் போல் இவள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்! Great soul to the core! Bow my head towards her bhakthi!! jaya jaya Shankara….

  2. jwya jaya sankara hara hara sankara janakiraman nagapattinam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: