காலடி தந்த கற்பக விருட்சம்

A beautiful write-up by Sri T V Varadharajan (a.k.a Varadhu)..He recently performed the drama “Thyagayar” and invited HH Balaperiyava and for the first time, a Sankaracharya has seen a drama and blessed the team for taking the media and entertainment to spread our values and culture.

Salute to you Sri Varadhu Sir!

வைணவன் நான். ஆனால் துறவிகள் பால் தீராத அன்புண்டு. சகலமும் துறந்தவர்களை திறந்த மனதோடு ஆராதிப்பேன்.

ஒரு நாடகக் குழுவாக காஞ்சி முனிவரை நான் தரிசித்ததுண்டு.
ஜெயேந்திரர் அருகில் போய் ஆசிர்வாதம் வாங்கிய பெருமையும் எனக்குண்டு.

இன்று விஜயேந்திரர் எனும் மகான் சுவாசிக்கும் காற்று என் மீது வீசி, அதை நானும் சுவாசித்து சீர்நிலை பெற்றது ஶ்ரீ தியாகய்யரின் அருளால் தான். எளிமையே தர்மம். பகட்டற்றதே பரம்பொருளின் பார்வை! ஒரு முனிவரின் வாத்சல்யத்தோடு புன்னகை மாறாத குழ்ந்தையாக காஞ்சி மட ஆச்சாரியர் வருகை புரிந்தது பேரானந்தம்.

பூரண கும்ப மரியாதையை கூட அவர் பெரிதாக எண்ணவில்லை. வரது கொடுத்த மூங்கில் தட்டு பழங்களை உவகையோடு ஏற்றுக் கொண்டார். பழங்கள் எல்லாம் பிரசாதமாக அவரால் ஆசிர்வதிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட போது கிடைத்த மகிழ்வும் நெகிழ்வும் பூரணமாக ஒளி வீசியது அனைவர் முகத்திலும்.
காமாட்சி அம்மன் போட்ட வெள்ளி டாலர் எல்லோர் கைகளிலும் மின்னியது. இனி உமை, எமை காப்பாள் என்று சொல்லாமல் சொல்லியது.

மடத்திலிருந்து கூடவே வந்த பாதக் குறடுகள். யோக பாவனையில் பெரியவா. எப்பக்கமும் சாயாத தோற்றம்! நேர் கொண்ட பார்வை. விநாடியும் விலகாத புன்னகை. பெரியவா தோற்றம் ரவிவர்மா ஓவியம்.
குழுவினர் பெயர் அறிந்து ஆசிர்வதித்து பிரசாதம் நல்கி பின் மேடைக்கும் வந்து எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஒலி வாங்கியை தவிர்த்து பிரசன்னமாக ஆத்மார்த்தமாக அளவளாவியது இன்னமும் ஜென்மம் உள்ள வரை நிலைக்கும் செப்பேடு.

“பழைய விஷயங்களை டெக்னாலஜியோடு சேர்த்து நல்லா பண்ணி இருக்கீங்க. இப்படித்தான் செய்யணும். நல்லாருக்கு நல்லாருக்கு”

கேட்ட அனைவரும் பார்த்தனாகி விட்டனர். ஞான ரதத்தில் ஏற தயாராகி விட்டனர்.
இதுவரை சங்கர மட ஆச்சார்யர்கள் எந்த நாடகத்தையும் பார்த்ததில்லை. இதுவே முதல் முறை ஒரு காஞ்சி மட ஆச்சார்யர் நாடகம் பார்ப்பது.

ரகுபதியை சிலாகித்த சபாபதி!

தியாகய்யர் இருந்திருந்தால் இன்னும் ஒரு ஆயிரம் கீர்த்தனைகள் பாடியிருப்பார் வாணி மகாலில்.
ஆன்மீகத்திற்கு அழிவில்லை. அதை இசை இன்னும் நூறாண்டுக்கு இட்டுச் செல்லும். அதற்கு கட்டியம் கூறும் ஶ்ரீ தியாகராஜர் இசை நாடகத்தின் கீர்த்தனைகள்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!



Categories: Announcements, Devotee Experiences

1 reply

  1. jaya jaya sankara hara hara sankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading