போயிட்டு வந்தேன்…பார்த்தேன்!


Thank you Sri Madambakkam Shankar for FB share….Amazing incident! Important thing to note here is not the mystic experience the devotee had – the unparalleled devotion she had for Mahaperiyava! Periyava chose an unique way to bless that devotee….Let us pray Mahaswami to bless us for such a bakthi. Whatever the outcome comes is up to Him but let us have that unshaken bakthi.

Periyava Sharanam!

periyava_balu_mama_rare

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா
தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தேனம்பாக்கம் பக்கத்தில் வெள்ளிக்குளம் என்று ஒன்று இருக்கு. அங்கு ஒரு நாயுடு அம்மா இருந்தார்கள். அவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். அவர் தினமும் ஸ்ரீ மகாபெரியவாளை நமஸ்காரம் செய்ய வருவார்.

ஸ்ரீமகாபெரியவாளிடம் ரொம்ப பக்தி. ஒரு நாள் அவர் என்னை (பாலு) தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நான் வரவில்லை என்றேன். இதை ஸ்ரீ மகா பெரியவா பார்த்துக் கொண்டே இருந்தார்.

என்னிடம் “ஏன் அவள் வீட்டிற்கு போனால் என்ன? உன்னை கூப்பிடறா” என்றார்.

“இல்லை, பெரியவா சொன்னா சென்று வருகிறேன்” என்றேன்.

‘போய்ட்டு வா’ என்றார்.

அந்த அம்மா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். என்னை ஒரு பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டு வீட்டை
சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு ஒரு பலகாயை கொண்டு வந்து வைத்தார். பலகாயிலும் கோலம் போட்டு வைத்து விட்டு ஸ்ரீ பகவானே,குருநாதா என்று சொல்லிக் கொண்டு பால்,தயிர்,நெய்,வெண்ணெய் இவற்றை கொண்டு வந்து பலகாயின் பக்கத்தில் வைத்தார். வீட்டில் பூத்த பூக்களை கொண்டு வந்து பலகாய் மேல் போட்டு பின் அதில் பால்,தயிர்,நெய், வெண்ணெய் கிண்ணங்களை வைத்தார்.

மெதுவாக நமஸ்காரம் செய்தார்.ஒரு ஐந்து நிமிடம் சென்றது.

பிறகு என்னிடம் ‘சாமி ஸ்ரீ பெரியவாளை பார்த்தீகளா?’ என்றார்.

“இல்லையேம்மா” என்றேன்.

“ஸ்ரீ பெரியவா வந்து சாப்பிட்டார்’ என்றார்.

பின் கிண்ணங்களை பார்த்தால் எல்லா கிண்ணங்களும் காலியாகஇருந்தது. ஸ்ரீ பெரியவா அந்த அம்மாளுக்கு காட்சி கொடுத்திருக்கா.எனக்கு காட்சி கொடுக்கவில்லை திரும்பி மடம் வந்தேன்.

ஸ்ரீ பெரியவா, ‘என்ன அவாத்துக்கு போயிட்டு வந்தாயா? என்றார்.

“போயிட்டு வந்தேன்.பார்த்தேன்” என்றேன்.

“சரி இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்.

“பாலு பொய் சொல்கிறான் என்ற பேச்சு வரும். வீணாக விஷயம் பரவும், வேண்டாம்” என்றார்.

ஸ்ரீ பெரியவா தெய்வம்.Categories: Devotee Experiences

2 replies

  1. hara hara sankara jaya jaya sankara

  2. Ehtharo Mahanu Bhavulu anthariki vandanam” Blessed are those who got the grace of Sri Sri Maha Periyava, Pahi Pahi Sri Maha Prabho. Jaya Jaya sankara hara Hara Sankara. Janakiraman, Nagapattinam.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: