ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை


 

Periyava-drawing-BN

Thanks to Sri Suresh for the wonderful stuthi…

I fell in love with Sri BN Mama’s drawing – found this in FB – don’t recall seeing it here….Amazing work!!!

பெரியவா சரணம்.

ஸ்ரீலலிதா நவரத்தின மாலையை அறியாதார் யாருளர்?

சில வருடங்கள் முன்பாக மேற்கு மாம்பலம் போஸ்டல்காலனி ரோடிலே வந்து கொண்டிருந்தவனை இடிப்பதுபோலே நெருங்கி வந்த வண்டியிலிருந்து அடிபடாமல் காப்பாற்றினார் ஸ்ரீசரணாள். அதுமட்டுமா அந்த வண்டியுள் இருந்தவர்கள் வண்டியை நிறுத்தி கதவைத் திறந்து என்னிடம் மன்னிப்புக் கோருகையில் அந்த வண்டியில் இருந்து கேட்ட கானம்… மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே என்பது தாம்.

அடிபடாமல் தப்பிய அயர்ச்சியிலே அந்த பாடல் வரிகள் என்னை ஏதோ ஒரு விதமான பரவசத்திற்குனிட்டுச் சென்றது. அந்த கார் என்னைத் தாண்டிச் சென்றும் கூட அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அருகிலே இருந்த என் மனைவி என்னைத் தட்டி
“என்ன ஆச்சு… கிளம்புங்க, போகலாம்” என்றபோது என் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது… “சந்திரசேகர சரணம்.. சரணம்…”.

திரும்பி அவளிடம் சற்று இரு என்றவன். வண்டியை நிறுத்தி பாடல் வரிகளைப் பதிய ஆரம்பித்தேன் எந்தன் கைபேசியில்…! சங்கரா… மறக்கவியலாத பொழுது. பாடலை அங்கேயே நின்று தான் எழுதி பகிர்ந்தேன்.

லலிதை என்றாலே மிகவும் அழகானவள் என்பதாகத் தானே அர்த்தம் சொல்கின்றனர்.

பிரத்யக்ஷ பரமேஸ்வரரான சசிசேகர சங்கரனின் புன்சிரிப்பைப் பஸ்ரீக்கையிலே லலிதை தானே ஞாபகம் வருகிறாள். அவளும் மஹாபட்டாரிகா… சிவசக்த்யைக்ய ஸ்வரூபம்.

எந்தன் ஹ்ருஹயத்தில் இருந்து ஒழுகிவந்த கீதத்தின் நெய்யூற்றி அற்புதனாம், ஆச்சார்யனாம், அழகுரதமாம், அலகிலாத்தூயவனாம் ஸ்ரீசரணாளுக்கு ஓர் இசைத் தீபமேற்றித் தொழுவோமே என்பதாக செல்வி Lohitha swaminathan- ன் பக்தி ப்ரவாகத்திலே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக இன்றைய பகிர்வு.

#ஸ்ரீகுருகானம்.

ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை
+++++++++++++++++++++++++++++++

ஞாலங் காக்கும் உமையாள் பதியோன்
ஞானக் குழந்தை வடிவா னழகன்
ஞாலம் உடைசால் தொந்தியன் அருளில்
ஞானக் குருவை போற்றிடு வோமே! (1)

“சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்”

பூக்கும் புலர் காலையில் தினமும்
நோக்கும் விழி யாலருளும் பதியாம்
வாக்கில் அறமும் உடைசால் குருவாய்
காக்கும் கருணா நிதியே சரணம்! (2)

“சந்திர சேகர குருவே சரணம்…”

தேறா தெதுவும் தேறித் தெளிய
தாரா வரமும் தந்தெமைக் காக்க
நாரா யணனாய் நரணெனக் கருளும்
பாதாம் புயமுடை பதியே சரணம்! (3)

“சந்திர சேகர குருவே சரணம்…”

மூவாப் பிணியும் வெகுண்ட துமோட
காணா தெதுவும் தீண்டா தருள
தீராத் துயரும் தீர்த்தருள் பெறவே
கோணா வாழ்வின் நிதியே சரணம்! (4)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சாடா வாழ்வில் நாணமும் பேதமும்
நாடா தருள்வாய் நலம்பல தருவாய்
கூடா நட்பின் குறையும் களைந்தே
வாடா வாழ்வருள் கதியே சரணம் ! (5)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூரர் வினையும் சூழா தருளும்
தீரர் திருத்தாள் பணிந்தேத் துவமே
வீரத் தெழிலாய் வதனந் தருவாய்
வீழா வாழ்வருள் திருவே சரணம்! (6)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூலம் கொண்டருள் சுந்தரி எந்தரி
தூலம் காத்திடும் தூயநற் சங்கரி
நாளும் எமைகாத் தருளும் பதமும்
நல்கும் காஞ்சிநற் குருவே சரணம்! (7)

“சந்திர சேகர குருவே சரணம்…”

நேயம் கொண்டிட நெறிதந் தவராய்
காயம் திரித்தே தவமேற் பதியாய்
மாயம் எதுவென மதிதந் தருள்வாய்
தாயம் தந்தருட் தருவே சரணம்! (8)

“சந்திர சேகர குருவே சரணம்…”

காலம் எல்லாம் கதியாய் நின்னருட்
கோலம் மனதுள் தியானித் தனமே
நாளும் இனியாம் நல்லன கொண்டிட
தாளும் பணிந்தோம் சசி சேகரனே! (9)

“சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்”.

எல்லாம் வல்லதொரு பேரிறையாய் நமக்கெல்லாம் அருள்பாளித்து வரும் ஸ்ரீசரணாளின் க்ருபைதனிலே எல்லோரும் இன்புற்று வாழ அனுதினமும் அவரது கமலபாதங்களில் தண்டமென வீழ்ந்து நமஸ்கரித்து ப்ரார்த்திப்போமாக!

குருவருள் நம்மை குறையின்றி காக்கும் சத்தியம் உணர்வோம்!

குருவுண்டு – பயமில்லை; குரையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்‌ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.Categories: Audio Content, Bookshelf, Photos

Tags: ,

12 replies

 1. Jaya jaya sankara hara hara sankara

 2. Maha Periyawa anugraham paripoornam

 3. Jaya Jaya sankara Hara Hara sankara. Ananthakodi namaskarams to Sri charanal. Beautiful sketch of Mahaperiva and a wonderful Navarathna Mala on HH Mahaperiva

 4. Periyava navarathinamalayai punaindhor padiyor kettor ananaivarkkum guruvurul thinnam thinnam

 5. Fantastic Sketch. Beautiful slokam. Fits perfectly in the “mata jaya om lalithaambigaye” tune.
  Just one clarification. Please don’t mistake me. Shouldn’t it be குறையேதும் instead of குரையேதும் in the very end?

 6. Beautiful slokam.. Great sketch

 7. Dhanyosmi. Ellorukkum Namaskaram

 8. Excellent…Blessed to hear this song. Thanks for sharing. Jaya Jaya Shankara, Hara Hara Shankara

 9. Nice to hear the slogam. Guruvea Charanam.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: