Periyava Golden Quotes-610

“கங்கா, கங்கா என்று இந்த ஹிந்துக்கள் நமஸ்காரம் பண்ணுகிறார்களே, அப்படி இதில் என்னதான் இருக்கிறதென்று ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தால் எங்களுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காலராக்காரன் ஒருத்தன் பிணத்தை கங்கையில் எங்கே இழுத்து விட்டிருந்ததோ அந்த இடத்திலிருந்தே ஜலத்தை எடுத்துப் பரிசோதனைப் பண்ணிப் பார்த்தோம். மாய மந்திரம் மாதிரி அந்த ஜலத்தில் ஒரு காலராக் கிருமி கூட இல்லை” என்று ரிஸர்ச் செய்தவர்கள் ரொம்ப வருஷம் முந்தி ரிபோர்ட் கொடுத்திருந்தார்கள். ஸந்தோஷமான விஷயந்தான். ஆனாலும் நாம் ‘கங்கா, கங்கா’ என்று நமஸ்காரம் பண்ணுவது அவள் வியாதிநாசினி என்பதற்காக இல்லை. பாபநாசினி, ஸம்ஸார நாசினி என்பதற்காகத்தான். பாக்டீரியா-வைரஸ் மாதிரி பாப-புண்யமோ, ஸம்ஸாரம்-மோக்ஷம்-நரகம் இவையோ ஸயன்டிஸ்டின் ‘தியரி’க்குள்ளும், ‘டெஸ்ட் ட்யூபு’க்குள்ளும் என்றைக்குமே வராது. இதைப் புரிந்து கொண்டால், விஞ்ஞான ரீதியில் பரிஹாரம் பண்ணிவிட்டதால் ஒரு வஸ்துவுக்கு தோஷம் போய்விட்டது என்று நினைக்க மாட்டோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Long back a group of researchers had written that they tested the waters of Ganges collected from the place where the dead body of a cholera victim had been dragged into. They wanted to know the reasons why the Hindus eulogize Ganga. They were stunned to find that the waters did not contain any cholera virus! One is glad to read this report. But we worship Ganga not merely because She is destroyer of diseases but also a slayer of sins and the earthly bond of samsara. Paapa-Punya (sin and goodwill) and Samsaram-Moksham-Naragam (earthly bondage-enlightenment-hell) cannot be measured by scientific theory or test tubes. If we understand this, we will not assume that we have expiated the negativity or dosham of an object by performing any scientific process as atonement (pariharam). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading