Periyava Golden Quotes-606

ஆரோக்யம் முதலான காரணங்களுக்காகத்தான் ஆசாரம் என்றால், ஒரு ஆசாரம் அநாரோக்யத்தை உண்டு பண்ண ஹேது இருப்பதாகத் தோன்றினால் அதை விட்டுவிடத் தோன்றும். தொத்து நோயுள்ளவர் உள்படப் பலர் கசகசவென்று கூடும் இடங்களுக்குப் போய்விட்டு வந்தால் ஸ்நானம் செய்வது ஆரோக்ய ரீதியில் நல்லது என்பதை நினைத்தோ ஸ்நான ஆசாரத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோமென்றால், இதற்கு விலக்காக ரதோத்ஸவத்தில் எத்தனை கூட்டத்தோடு இடித்துக் கொண்டு தேரிழுத்து விட்டுத் திரும்பினாலும் ஸ்நானம் பண்ணக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பது நம் ஹைஜீன் ஸயன்யோடு உதைத்துக் கொள்ளும். எத்தனை பாசி பிடித்திருந்தாலும் திருக்குளத்தில் ஸ்நானம் பண்ணணும், எத்தனை அழுக்கானாலும் ஒரு மஹானின் பாத தீர்த்தத்தைப் புரோக்ஷணம் பண்ணிக்கணும், பாகவதர்கள் சாப்பிட்டு எழுந்த எச்சில் இலையில் விழுந்து புரளணும் என்பது போன்ற ஆசாரங்களை ஆரோக்யத்துக்காகவே ஆசாரம் என்றால் விட்டு விடும்படி ஆகும். அதனால், ‘புண்யத்துக்குத்தான் ஆசாரம், அந்தப் புண்யம் நம் புத்திக்கும் ஸயன்ஸுக்கும் பிடிபடாது’ என்பதை நன்றாக மனஸில் வாங்கிக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

If we start assuming that Aacharam is to be followed only to ensure good health then we may be tempted to give up certain acts of Aacharam which may run contrary to this fact and which, at first glance, may seem to affect good health. If we accept the Aacharam of having a bath after going to places which are crowded or where infectious diseases are prevalent for reasons of good health, we may feel that the instructions not to have a bath after attending crowded festivals like Rathothsavam are contradictory and contrary to good hygiene. We may be tempted to give up acts of Aacharam like having a bath in a temple tank even if it is covered with lichen, drinking the water used to bathe the feet of a Mahan however dirty it may be and rolling on the leaves from which Bhagawathas had their food for reasons of hygiene. So we should be clear in our minds that Aacharam is for obtaining punnya and that punnya may not be logically clear to science and our intellects.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading