Periyava Golden Quotes-602

எலக்ட்ரோ-மாக்னடிஸ தியரி உள்பட எல்லாம் நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருந்ததை நினைத்து ஆச்சர்யமாயிருக்கிறது. லோகம் முழுக்க எலக்ட்ரிஸிடி நிறைந்திருக்கிறது; மநுஷ்ய சரீரம் எண்ணம் இதுகளில்கூட எலக்ட்ரிக் கரென்ட் ஓடிக் கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் நம் ஸயன்டிஸ்ட்கள் கண்டுபிடித்திருக்கிறார்களென்றால் இதை எத்தனையோ ஆயிரம் வருஷம் முந்தியே நம் சாஸ்திரக்காரர்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் நம்மிடம் சேர்கிற மின்ஸார சக்தி வெளியே போகாமல் bad conductor -களாலான [மின்சாரத்தைக் கடத்தாதவையான] வஸ்துக்கள், உபகரணங்கள் முதலியவற்றையும், மின்ஸார சக்தியை கிரஹித்துக் கொள்ளும் good conductor -களாலான [மின்சாரக் கடத்துவிகளாலான] உபகரணங்கள், பாத்திரங்கள் முதலியவற்றையும் சொல்லியிருக்கிறார்கள். உட்காருகிற மணை மாதிரியே யாகத்தில் ஹோமத்துக்குப் பிரயோஜனப்படுகிற கரண்டி bad conductor -ஆன மரத்தாலானதாகத்தான் இருக்க வேண்டும். மறு திசையில் செப்புப் பாத்திரம், செப்பு விக்ரஹம், பட்டு வஸ்திரம் முதலியன good conductor -கள். –  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

It is indeed astonishing to know that our ancestors knew so many matters including the electro magnetic theory. The entire world is charged with electricity. If the scientists have discovered only recently that the human body and even the human thoughts are charged with electricity, our ancestors knew this fact thousands of years ago. They had distinguished between good and bad conductors of electricity among vessels and other objects to ensure that the electricity gathered in us is not let out. Like the wooden platform (mania) used for sitting while performing the rituals should be made of wood which is a bad conductor, the ladles used during the homams should also be made of wood. On the other hand the copper vessels, copper deities, and silk clothes (used during rituals) are good conductors.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Our Conductor knew about everything including electricity .

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading