எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும்!

Karpagambal_Kapaleeswarar

மிகப்பெரிய தமிழறிஞர் கி.வா.ஜவை (கி.வா.ஜகந்நாதன்) அறியாதவர்கள் இருக்க முடியாது. அவருடைய மருகமளான திரிபுரசுந்தரி ஒரு முறை காஞ்சி மஹா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார்.

மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மஹா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி.

மஹா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கை பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார்.

தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசீர்வதித்து விட்டு “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே?” என்று கேட்டார் மஹா பெரியவா.

“மயிலாப்பூர்லதான் பெரியவா.” – திரிபுரசுந்தரி.

“மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”

“ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள்ன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்” என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.

“கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?”

“எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுன்னு என் மாமனார் (கி.வா.ஜ) சொல்வார்.

“பலே… நான் ஒண்ணு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ” என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கி பேச ஆரம்பித்தார்.

“உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ணின புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே.

இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம். தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அது போல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துடுவா” என்று மகா பெரியவர் சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீரி சொரிந்தனர்.

மஹா பெரியவர் தொடர்ந்தார்: “எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். உன்னை தரிசிச்சிண்டே இருக்கணும்’னு அவகிட்ட கேட்டுக்கோ. அவளோட பார்வையில யாரும் பசியோட இருக்கறதை பாத்துண்டு இருக்க மாட்டா. மயிலாப்பூர்ல இருக்கற பிச்சைக்காரா, நாய்கள் போன்ற அனைவருக்கும் கற்பகாம்பாள்தான் சாப்பாடு போடறா” என்று மஹா பெரியவா முடித்ததும், கண்களில் நீர் கசிய “பெரியவா” என்று பெரும்குரலெடுத்து மீண்டும் அந்த மகானை வணங்கினார் திரிபுரசுந்தரி.

ஸ்ரீகற்பகாம்பிகை தாயே போற்றி!போற்றி!
ஸ்ரீகபாலீச்வரா போற்றி!போற்றி!
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.



Categories: Devotee Experiences

4 replies

  1. I forwarded this particular post about Mahaperiyava and Mylapore to my friend through Whatsapp. Three to four days later, he very happily informed me via Whatsapp that his daughter, after completing training at Bangalore, has been posted at Mylapore branch of a private bank.
    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  2. Hare Krishna. I feel that other devotees should also get the benefit of HHH Mahaperiava’s anugraham. Therefore, I share all the posts. However, of late, the photos which are there at the beginning are not coming in the sharings. Will be grateful if this aspect is looked into.

    My hunch is that all devotees of HHH Mahaperiava should get the advise and benefit out of them.

    Hare Krishna.

  3. Maha Peryiavaa can only throw light on petty people like us who are ignorant and sometimes doubt God’s presence or their grace

    Maha Peryiavaa Saranam for opening my eyes and heart

    I have been blessed to have seen Maha Peryiavaa and felt his Godliness so whatever words that comes from him is Deivam vakku for me

  4. Yes, hunger fire is cooled at Mylapore by Street stalls and messes further the place famous for coffee and butter and ghee.

Leave a Reply

%d bloggers like this: