85. Gems from Deivathin Kural-Vedic Religion-My Mission (Part 1)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – An extremely important chapter and a mini autobiography by Sri Maha Periyava. In this chapter Periyava mentions the purpose of his Avatara in a subtle manner. HH talks about why he chose to come to cities instead of staying in villages, how he was received, and what is ‘Real Uthsavam, Kanabhishekam, Peetarohahanam, for him. A chapter that really melts our hearts…..

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Hema Sukumaran for the translation. Rama Rama


என் காரியம் (Part 1)

நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்து கொண்டு, பூஜையைப் பண்ணிக் கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதேயில்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே ரொம்பக் குறைச்சலாக இருக்க வேண்டும் என்றுதான் என் அபிப்ராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதைதான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.

ஆதலால், நீங்கள் நிறையப் பணம் தருகிறீர்கள் என்பதற்காக நான் ஏகாந்தத்தைவிட்டு இங்கே டவுன்களுக்கு வரவில்லை. என்னிடத்தில் உங்களுக்கு நிரம்ப அன்பு, பக்தி இருக்கிறது. நீங்கள் கூப்பிட்டு நான் சம்மதித்து வந்திருப்பதில் உங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனாலும், நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது, அந்த ஆசை நிறைவேறியதில் சந்தோஷப்படுவது இரண்டும் உங்கள் காரியம். பட்டணங்களுக்கு நான் வந்திருப்பதில் என் காரியம் ஒன்று இருக்கிறது. அது என்ன?

என்னவென்றால், பிராம்மணர்கள் வேதத்தை விடக்கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேதரக்ஷணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு பண்ணவேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன். நம்முடைய மதத்தின் சகல சித்தாந்தங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் மூலமாக, வேராக இருக்கிற வேதம் இந்தத் தலைமுறையோடு நசித்துவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று அழுத்தங்கொடுத்துச் சொல்லத்தான் வந்தேன்.

அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை, தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மசால்ஜி (சேவகன்) யாகப் பிராம்மணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள சமஸ்தப் பிரஜைகளுக்கும் எதிர்கால வாரிசுகளுக்கும் (posterity) இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது.

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, ‘தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்’. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. ‘விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகி விடாதீர்கள்’ என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

பட்டணங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறீர்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டணங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன்; உங்களையும் சிரமப்படுத்துகிறேன்!

நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் ‘வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.

எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.

வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.

_____________________________________________________________________________

My Mission (Part 1)

I can live in seclusion in some village peacefully doing Pooja and meditation. To run a matam there is no need for so much of money that you are offering here in this city. My opinion is matam should have very limited man and money power. Its power and wealth lies in the character of the head of the matam.

Therefore I have not come here leaving solitude because you are giving money. You have lots of love and devotion towards me. My coming here accepting your invite makes you all very happy. But your desire of having me here and feeling happy about is your outlook. I have a mission in coming to the cities. What is that?

The reason for my being here to is to tell the Brahmins not to discard Vedas and to make some arrangements to protect it. I want to emphasize that you have to make arrangements to see that vedas which is the root for all the doctrines of our religion and way to lead life should not get obliterated after this generation.

The doctrines of Veda which is there from time immemorial should always shine in its original form.  Brahmin should be the holder of the lamp- the light. This is his compulsory duty towards the entire present generation and also for posterity. Brahminism is not meant to celebrate its supremacy and to have command over others. It is a peon to hold the lantern of Vedas to guide the society. I have come to cities to appeal to the Brahmin community not to extinguish the light and enclose the present and future in darkness.

Only in cities thousands gather.  Sitting somewhere remotely and conveying to a few who inturn inform others is a round about route; Instead I am now able to communicate directly. With this purpose in mind I come to cities even though there are hindrances here in observing the strict disciple of the matam. The crowd is much more than I had expected. I am also troubled and also trouble you.

You spend so much to erect shamiyanas at various places to hear my speeches and attend in-spite of many difficulties. Without pin pointing your mistakes and hurting your feelings I can speak; but my mind does not permit me.

After accepting your money,  if I go without telling what is good for you, the society and the world then I feel it is absolutely of no use. That is why I repeat, “Protect Vedas, follow the ancient Dharma”. Whether I have the power to make you do it or not,  I am able to make you hear my talk at-least repeatedly asking you all to do it. I have come to make you lend me your ears for as long as I can make it.

Kanakabishekam and Peetarohana Uthsavam is performed for me in a grand manner. Behind that is your great affection . A committee is appointed and collections are made. People worked over night. But do you contemplate how this would be continued for the forth coming Aachayas of the matam? If there is no Vedas, then why do we require Matamm and Mataathipathi (Head of the Matam)? So show the enthusiasm exhibited for my Kanakabishekham and Peetarohanam towards Veda Rakshnam and have committee and collections for that as well.


It is alright if Veda Rakshana cannot be assigned as livelihood for the next generation. Arrange for classes daily for an hour on Veda and its practices for children starting from the age of eight and have it continued further for a period of ten years. This is the real Kanakabishekam and Uthsavam (celebrations) for me.

 



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. He rejuvenated Vedas. HaraHara Sankara JayaJaya Sankara

Trackbacks

  1. 86. Gems from Deivathin Kural-Vedic Religion-My Mission (Part 2) – Sage of Kanchi

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading