83. Gems from Deivathin Kural-Vedic Religion-Why Should Protection of Vedas be a Life-Time Job? (Part 6-Final)

Jaya Jaya Sankara Hara Hara Sankara –  Can people from other caste chastise Brahmins for coming to other professions? If so, what reason? This is where Periyava stands way above as Sarveswaran compared to mere mortals. Why is Periyava most dissatisfied with Brahmin community and what should we do to turn this around? Should Vedic Study be mixed or be part time like other professions? A fitting judgement by Sri Periyava to close this remarkable chapter.

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri.R.Sridhar for the translation. Rama Rama

Click  HERE for Part 5 of this chapter.

வேதரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்? (Part 6-Final)

இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தனி மரியாதை எதிர்பார்த்தானானால், இவனை துவேஷிக்கத்தான் வேண்டும்; ஆனால், துவேஷமும் தூஷணையும் நியாயமானதாக இருக்கவேண்டும். இவன் தன் தர்மத்தை விட்டதற்காகத் தூஷிக்க வேண்டுமே ஒழிய வேத தர்மமே தப்பு என்று அந்த பெரிய மூலதனத்தையே தூஷிக்கக்கூடாது. அந்த தர்மத்தை பிராம்மணன் மேற்கொண்டு நடத்துவதற்குத்தான், மற்றவர்கள் சகாயம் செய்ய வேண்டும். லோகம் நன்றாக இருக்க வேண்டுமானால், வேத ரக்ஷணம் நடக்கத்தான் வேண்டும்; இதையே பாரம்பரியத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கத்தான் வேண்டும் என்ற மனப்பான்மையை மற்றவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிராம்மணன் வேதத்தை விட்டதுபோல் மற்றவர்களும் வைதிக மதத்தில் நம்பிக்கையை விட்டுவிட்டால், அப்புறம் இவனை அவர்கள் துவேஷிப்பது நியாயமே இல்லை. வேதம் வேண்டாம் என்றால் அப்போது இவன் தன் தர்மத்தை-குலத் தொழிலை விட்டதுதான் சரி என்றாகி விடுகிறது. அந்தத் தொழில் போனபின் இவன் ஜீவனோபாயத்துக்கு வேறு தொழில் செய்துதானே ஆக வேண்டும். எனவே, இவன் மற்றவர்களுக்குப் போட்டியாக வந்துதான் ஆக வேண்டும்! ஆகையால், ‘வேத தர்மமும் கூடாது; ஆனால் பிராம்மணன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது; இரண்டையும் எதிர்ப்போம்’ என்றால் அது பகுத்தறிவு இல்லை. வேதம் தப்பானது; வேதத்தைவிட வேண்டும் என்று சொன்னால் அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு வருகிறவனை வெறுப்பது நியாயமே இல்லை. ஒரு நாய் நரிகூட பட்டினி கிடந்து பார்க்கக் கூடாது என்பதுதான் மனுஷ்ய தர்மம். எல்லா மதங்களும் சொல்கிற தர்மம் இது. ஒரு மதமும் வேண்டாம் என்பவர்களும்கூட இப்படிப்பட்ட அன்பையும் தியாகத்தையும் சொல்லாமலிருக்கமாட்டார்கள். எனவே ஒருத்தனுக்குப் பாரம்பரியத் தொழிலும் கூடாது; அவன் வேறு தொழிலுக்கும் வரக்கூடாது, அவன் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை.

பிராம்மணனை உண்மையான பிராம்மணனாக வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கப் பண்ணுவதே மற்றவர்கள் செய்ய வேண்டிய பெரிய உபகாரம். முன்பெல்லாம் நானே கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பிராம்மணர்கள், ‘நானும் நீயும் ஒன்றாகி விடலாம்’ என்று சொல்லிக் கொண்டு சேரிக்குப் போவார்கள். சேரி ஜனங்களோ, ‘வேண்டாம், வேண்டாம்! நீ உன் காரியத்தையே செய்து கொண்டிரு. அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது, இங்கே வராதே’ என்று சொல்லித் தங்கள் ஆஸ்தியான பானைகளைப் போட்டு உடைத்து அவர்களை வரமுடியாதபடி பண்ணுவார்களாம். காரியத்தில் பிரிந்திருந்தாலும், சமூகத்தில் கலந்து பழகாவிட்டாலும், மனசில் அன்புடன் அவரவரும் தங்கள் தொழிலைச் செய்து கொண்டு, பொது நலனைப் பேணவேண்டும் என்ற உணர்வு இந்த அளவுக்கு அதி சாமானியமான ஜனங்களுக்குக்கூட இருந்திருக்கிறது.

இப்போதும்கூட பொது ஜனங்கள் எல்லோருக்கும் உள்ளூற வைதிக சிரத்தையும் ஆஸ்திக்ய புத்தியும் போகவே இல்லை – அது போகவே முடியாது – என்பதுதான் என் அபிப்பிராயம். துவேஷப் பிரச்சாரம் இருக்கிறதே என்றால் அது ஏதோ அரசியல் (political) காரணத்துக்காக நடக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், வேதம், அதன் சடங்குகள் வைதிக ஆச்சாரங்கள் எல்லாவற்றிலும் மக்களுக்குப் பயபக்தியும் விசுவாசமும் இருக்கவே செய்கின்றன. பிராம்மணன் மட்டும் கொஞ்சம் நேராகிவிட்டால் போதும். எல்லாத் துவேஷமும் போயே போய்விடும். மற்றவர்கள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவன் ஸ்வதர்ம உணர்ச்சியுடன் சாகவும் துணிய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இவன் எதிர்பார்க்காவிட்டாலும் அப்படிப்பட்ட துர்க்கதிக்கு இவனை நம் சமூகம் ஒரு நாளும் விடாது என்பதுதான் என் நம்பிக்கை. விட்டாலும் பரவாயில்லை என்று இவன் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கட்சி. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, உபசரித்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, அவர்கள் நலனுக்காக இவன் வேதத்தைக் காப்பாற்றத்தான் வேண்டும்.

இத்தனை நாள் பிராம்மண சமூகத்துக்குச் சொல்கிறேனே இது மற்ற சமுதாயத்தாரையும் உத்தேசித்துத்தான். அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களும் தெரிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறார்கள். விளக்கிச் சொன்னால் நம்பிக்கையோடு எடுத்துச் கொண்டு நன்றாக அநுஷ்டிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் எனக்கு நானே அதற்கான யோக்கிதையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். பிராமண சமூகம் எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. மடத்தில் வைதிக அநுஷ்டானங்கள் நிறைய இருப்பதால் வேதத்துக்காக என்றே ஏற்பட்ட ஜாதியிடம் எனக்கு நிறைய பாத்தியதை இருப்பதாக – தப்பாகவோ, சரியாகவோ – ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டாகியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நான் மற்றவர்களுக்கு தர்மோபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவர்கள் அன்போடு பணிவோடு சிரத்தையோடு அதை எடுத்துக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, இன்னொரு கேள்வியும் அவர்களுடைய மனசுக்குள் தோன்றலாம். “இவரை ரொம்பவும் ஆசிரயிக்கப்பட்ட பிராம்மணர்கள் ஒருவிதத்திலும் திருந்தக்காணோமே! இதே நிலையில் நமக்கு உபதேசம் பண்ண வந்துவிட்டாரே!” என்று தோன்றலாம். வாஸ்தவத்தில் எனக்கு எல்லாரும் ஒன்றுதான். பார்க்கப்போனால், பரம ஸ்ரேயஸ்கரமான வேதத்தை விட்டுவிட்ட பிராம்மணனிடம்தான் எனக்கு அதிருப்தி ஜாஸ்தி. இருந்தாலும், லோக அபிப்பிராயப்படி பிராம்மணர்கள் ஏதோ எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருப்பதாக ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம், ‘வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள்’ என்று ஓயாமல் ஒழியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் கொஞ்சத்தில் கொஞ்சமாவது பிராம்மணர்களான நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான், மற்றவர்களிடம் அவரவருக்கான தர்மங்களைச் சொல்வதற்கு எனக்கு வாய் இருக்கும். நல்லவைகளைத் தெரிந்து கொண்டு செய்வதற்கு ஆசையாக இருக்கிற மற்ற சமூகத்தார்களுக்கு நான் எனக்குத் தெரிந்த தர்மங்களைச் சொல்வதற்கு பிராம்மணர்கள்தான் சகாயம் செய்ய வேண்டும்-கூடிய மட்டும் நான் சொல்கிற வேத ரக்ஷணம்-கர்மாநுஷ்டானம் இவற்றை அநுசரிப்பதால்.

சகல ஜனங்களும்-ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும். பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு தாழ்வு எண்ணமேயில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தே ஆக வேண்டும். ‘மற்ற தொழில்கள் பாரம்பரியமாக வருவதில் நன்மையிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வேதரக்ஷணம் என்று தனி ஜீவிய காலத் தொழில் ஒன்று எதற்காக இருக்க வேண்டும்?’ என்ற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினேன். இப்போது, முடிக்கிறபோது, மற்ற எந்தத் தொழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றுக்கொன்று கலந்தாலும் கலக்காவிட்டாலும் வேதரக்ஷணம் என்பதுதான் நிச்சயமாக ஒரு தனித் தொழிலாக இருக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது.

_______________________________________________________________________________

Why Should Protection of Vedas be a Life-Time Job? (Part 6-Final)

If the present day if a Brahmin clamours for exclusive respect, then he needs to be abused and hated. But this hatred or abuse should conform to some principles. The Brahmin could be abused for leaving his Dharma but we should not say that the Veda-Dharma itself is wrong and abuse that root-principle itself. All the other communities should help the Brahmins to uphold the Vedic Dharma. All communities should develop the mentality that if the mankind is to prosper then the Vedic Dharma should be upheld and we need a set of people who take the Vedic Study as a full-time profession.

If others lose their faith in Vedas, just like the Brahmins left the Vedic way of life, then there is no justification in abusing the Brahmins alone. If they say we don’t need the Vedas then it only justifies the Brahmin’s action of discarding his Vedic way of life.  When he discards his Vedic-Profession the Brahmin has to look out for some other profession for his living there by competing with other communities. So claiming that ‘Veda-Dharma should go, but the Brahmin should not come to other profession. We will oppose both’. This is not a rational argument.  If they claim that Veda is to be discarded, then a person who moves from that profession (Veda-dharma) to another, should not be hated.

The Human ideal is that no living being should go hungry. Every religion advocates this. Even the agnostics extol the qualities of love and sacrifice. So it should not be said that ‘a person should not follow his ancestral profession, and also he should not move to another profession, and has to die of starvation’.

The biggest help one can do is to ensure that the Brahmin community sticks to its true profession of nurturing the Vedas. I have also heard of some incidents where a few Brahmins will go to the slum saying that ‘you and I can become one’. But the people in the slums used to break their mud pots, which were their only possessions, on the way and prevented these Brahmins from entering their slums, claiming ‘No. No. You mind your business (Veda Dharma). Only that is good for both of us. Don’t come here’. Though there were separated by professions and not mixing freely in the society, each followed their profession devotedly with love in their heart. Even the man in the lowest strata of society had this feeling of social welfare to such an extent.

Even today, the common man has not lost his trust in Vedas and God. My opinion is that this trust will never go. All the Prejudiced propaganda going on is only because of some political compulsions. Internally the common man has faith and devotion to Vedas, Vedic Dharma, and all other orthodox rituals (stipulated by the Vedas). If only the Brahmins could reform themselves then all these hatred and prejudice would go away. I had earlier said that the Brahmin, without expecting the support of others, should be even prepared to die for his goal (Swadharma). But in reality even if the Brahmin does not expect support from others, I believe, that the society will not leave him in lurch. Even if the Society discards him, the Brahmin should be firm on upholding Veda Dharma. Whatever others may think or abuse or support him, he should uphold the Veda-Dharma for the welfare of the entire mankind.

All these days whatever I have been telling the Brahmin community is keeping in mind other communities also. There are lots of Dharmas which should be taught to other communities and they are also eagerly waiting to learn the same. If it is explained properly they will follow the same with faith and devotion. But before teaching others I myself wanted to ensure the credibility of the teacher.

There is general feeling that the Brahmin-community owes me their loyalty. As there are lots of Vedic-related rituals in the Sri Matam, there is an opinion, rightly or wrongly, that I have interest in that community which is meant for upholding the Vedic-Dharma.  In this situation if I start preaching to others, even if they listen to my lectures with humility and faith, a question could arise in their mind. They may think ‘He has not been able to reform the Brahmins in whom he has interest but has now come to give us sermons’.

Actually all are equal to me. In-fact I am more dissatisfied with the Brahmins for abandoning the Vedas which are supremely beneficial to the Mankind. Still as everyone feels that the Brahmin community is loyal to me, I have been continuously telling them ‘Start practicing the Vedic Dharma in all earnestness’. Only if you (Brahmins) start putting into practice even a little of what is said, only then I will have the moral standing to tell others of their respective Dharmas. The other communities are waiting to hear about the good practices and follow them. For that I will need the Help of the Brahmin community, provided they follow the Vedic Dharma and the rituals, to the extent possible.

All mankind and living things should be happy. Every community must adhere to their respective Dharma, which are meant only for mutual wellbeing, without any superiority/inferiority feelings. The Vedas should be with one community, for the welfare and prosperity of the mankind. Initially I had raised a query ‘There could be some benefit in all professions practiced traditionally (by one particular community). But why should Veda-Dharma be a life-time profession?’ Now after all these discussions, I conclude, ‘Even if other professions exist or not, even if they mutually merge or not, the (study and propagation of) Veda-Dharma must be a separate profession.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading