Sri Periyava Mahimai Newsletter July 04 2009 (Part 1)


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Two fine incidents where our Periyava showers his grace to devotees.

Many Jaya Jaya Sankara to Smt. Savitha Narayan for the Tamizh typing and Shri B. Narayanan Mama for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (4-7-2009)

தன் அபார கருணையினால் பரப்பிரம்ம சொரூபமான சாட்சாத் ஈஸ்வரரே உலகம் உய்யப் பரப்பிரம்ம ரிஷியாம் சுகமுனிவரின் மேன்மையோடு கூடிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் திருஅவதாரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இப்பெரும் மகிமையினாலேயே பக்தர்கள் மனதில் அவர்கள் நினைப்பதையெல்லாம் அதிசயமாகத் தானும் அறிவதாய்த் தன்னையும் அறியாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா வெளிப்படுத்திய சம்பவங்கள் பல உண்டு. புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி என்ற பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்றாகிறது.

இந்த பக்தை ஸ்ரீ மஹாபெரியவாளை அடிக்கடி தரிசிக்கும் பாக்யத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை தரிசிக்கச் செல்லும்போதும்  ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பிக்க வெவ்வேறு காணிக்கைககளைக் கொண்டு போவதில் பக்தைக்கு சந்தோஷம்.

இப்படி ஒரு முறை தரிசிக்கப் புறப்படும் போது “இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலையைக் கொண்டு போனால் என்ன?” என்ற எண்ணம் தோன்றியது. அதேபோல் அருகம்புல்லை பக்தியோடு சேகரித்து மாலையாகத் தொடுத்து ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் ஆக அமைத்து மிக அழகாக பெரிய மாலையாகச் செய்து வைத்தார்.

அடுத்தநாள் ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்குச் சென்றபோது  அங்கு ஸ்ரீ பெரியவா பக்தர்களிடம் பேசி அருளிக் கொண்டிருந்தார். இந்த பக்தை,  தான் கொண்டு சென்ற அருகம்புல் மாலையோடு கொஞ்சம் கல்கண்டையும் சேர்த்து இரண்டு பொட்டலங்களாக ஸ்ரீ மகானின் முன்னே வைத்து சமர்ப்பித்து நின்றார்.

ஏனோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அந்த இரண்டு பொட்டலங்களையும் ஓரமாகத் தள்ளி வைத்துவிட்டார். அவைகளில் என்ன இருக்கிறதென்று  பார்க்கவில்லை. பொட்டலங்களை மீறி உள்ளே இருந்தவைகளும் கண்ணுக்குப் புலப்படவில்லை.

ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஞானக் கண்ணுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு பக்தை ஸ்ரீ பெரியவா முன்னே ஒருப்பக்கமாக நின்றபடி  தரிசித்துக் கொண்டிருந்தார்.

காலை எட்டு மணியிலிருந்து பத்து மணியானது அப்போது ஒரு பெண்மணி ஸ்ரீபெரியவாளை  தரிசிக்க வந்தாள். அப்பெண்மணியின் கையில் ஒரு வெள்ளிக் கவசம்! ஆம் பிள்ளையாருடைய கவசம். ஸ்ரீ பெரியவாளின் உத்தரவுப்படி அந்தப் பெண்மணியின் ஊர் கோயில் பிள்ளையாருக்கு மிக நேர்த்தியான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டிருந்தது தான் அந்த வெள்ளிக்கவசம்! ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹத்திற்காக அதைக் கொண்டு வந்திருந்தார்.

ஸ்ரீ பெரியவா அந்தக் கவசத்தை வாங்கித் தன் மடியில் வைத்திக் கொண்டார்.

பக்கத்தில் இருந்த கைங்கர்யம் செய்பவரை “அதை எடு” என்று இரண்டு மணி நேரமாக என்னவென்றும் பார்க்காமல் ஓரமாய் ஒதுக்கி வைத்திருந்தப் பொட்டலங்களை எடுக்கச் சொன்னார்.

பக்தை ராதாராமமூர்த்தியைத் தவிர அங்கு சுற்றிலுமிருந்த எந்த பக்தருக்கும் அந்தப் பொட்டலத்தில் இருப்பது என்ன என்று தெரியாது. அதை ஸ்ரீ பெரியவா பிரிக்கச் சொன்னபோதுதான் வெள்ளிப் பிள்ளையார் கவசத்திற்கே சொல்லிவைத்தாற்போல் உள்ளேயிருந்து அந்த அருகம்புல் மாலை!

இதில் அதிசயம் என்னவென்றால் பொட்டலத்தில் என்ன இருக்கிறதென்று ஸ்ரீ பெரியவா கேட்கவுமில்லை பார்க்கவுமில்லை. ஆனால் அது பிள்ளையாருக்கு உரிய மாலை என்பது போல் அதை எப்படிச் சேர்ப்பித்தாரோ!

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்கு ஸ்ரீ பெரியவா சாத்தியபோது கச்சிதமாக அந்த பிள்ளையாருக்கே அளவெடுத்துச் செய்ததுபோல் அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தைத் தன் திருமார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலாபுறமும் திரும்பித் திரும்பி ஸ்ரீ பெரியவா தரிசனம் கொடுக்கையில் எல்லா பக்தர்களும் ஆனந்தித்தாலும் இருவருக்கு மட்டும் அது மிக பிரத்யேகமாக இருந்தது.

எங்கிருந்தோ புதுக்கோட்டை ராதா என்ற பக்தையின் மனதில் ஸ்ரீ பெரியவாளுக்கு இச்சமயம் அருகம்புல் மாலையைச் சமர்ப்பிக்கத் தோன்ற, வேறொரு பக்தை அதே சமயம் வெள்ளிப் பிள்ளையார் கவசத்தைக் கொண்டுவந்து ஸ்ரீ பெரியவாளிடம் அனுக்ரஹம் பெற வந்து நிற்க, பொட்டலத்தில் என்ன இருக்கிறதென்று தெரியாதவர்போல் திருநாடகமாடும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அந்த இரு பக்தைகளின் மனப்பூர்வ பக்திக்குத் தன் வல்லமையை வெளிப்படுத்திக்காட்டிப் பூர்ண அனுக்ரஹம் பொழிந்துவிட்டார்.

உலகில் எல்லா இயக்கங்களுக்கும் தன் அபார கருணையே காரணம் என்பதை இந்த சம்பவத்தினால் ஸ்ரீ பெரியவா வெளிப்படுத்தி அருளியுள்ளார்.

முன் எப்போதும் ஸ்ரீ பெரியவாளைப் பற்றிக் கேட்டறியாத, பார்த்தறியாத ஒரு பாமர பக்தனுக்கு அந்த மாபெரும் தெய்வம் அருளியுள்ள ஒரு அதிசய சம்பவம்.

விழுப்புரம் பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு நரிக்குறவன். அவன் குடும்பத்தில் ஏதோ தீராதப் பிரச்சனை. இவனுக்கு மனம் வெறுத்துப் போனது. தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்துவிட்டான்.  அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டான். அடுத்து அங்கு வரும் ரயிலின் முன் விழ வேண்டுமென்ற தீர்மானம்.

இப்படி எண்ணியபடி ஸ்டேஷன் ஓரத்தில் ஓரு இடத்தில் தூங்கிப் போனவனுக்கு ஒரு ஆபூர்வ சொப்பனம். யாரோ ஒரு சாமியார் போன்ற ஒரு தோற்றம் தெரிந்தது. அந்த சாமியார் “  நீ சாக வேண்டாம்! என்னை வந்து பார்” என்று சொல்லுவது போலிருந்தது. திடுக்கென்று விழித்துக் கொண்டான். முன்பு இல்லாதிருந்த புத்துணர்ச்சி அவனுள் ஏற்பட்டிருந்தது. தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

ஆனால் இவனுக்கோ கனவில் காட்சித் தந்த சாமியார் யார் என்பதுத் தெளிவாகத் தெரியவில்லை. தனது வாழ்க்கை முறையில் எந்த சாமியாரிடமும் போவதோ, இன்னின்ன சாமியார்கள் இருக்கிறார்களென்று விபரம் அறிவதோ சிறிதேனும் அவசியமில்லாத நாடோடி ஜனக் கூட்டத்தின் ஒருவனால், இந்தக் கனவில் வந்த சாமியார் யார் என்பதை  யூகிக்க முடியவில்லை.

இருந்தாலும் அபூர்வமாய் தன் கனவில் தோன்றிக் காப்பாற்றியுள்ள அந்த முனிவரை எங்கேயாவது பார்க்கும் வாய்ப்பு கிட்டாதா என்ற ஏக்கம் அந்த பாமரபக்தனை ஆட்டுவித்தது. தன் கையில் பல நாட்களாக அணிந்திருந்த ஒரு தங்க மோதிரத்தை விற்றுக் காசாக்கிக் கொண்டான். ஒவ்வொரு ஊராய் அலைந்தான். அங்கங்கே திரிந்து பல சாமியார்களையும் பார்த்துவிட்டான். ஆனால் கனவில் தோன்றியக் காருண்யரை அவர்களிடம் காண இயலவில்லை.

மீண்டும் மீண்டும் அலைந்தான். பலனில்லை.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த ஏகாம்பரகுப்பம் என்ற இடத்தில் அருளிக் கொண்டிருந்த சமயம், அந்த பாமரனுக்கும் ஸ்ரீ மகானின் அருள் பெரும் சமயம் கிட்டியது.

ஒரு மாலைப் பொழுதில் அந்தப் பக்கம் திரிந்த பாமரபக்தன் ஸ்ரீ பெரியவாளெனும் பரமேஸ்வரரைப் பார்த்துவிட்டான்.

“ஒ சாமி! இதே சாமிதான்! என்னை நீ தானே வரச்சொன்னே! வெளியே வா” என்று தெய்வத்தைக் கண்டுவிட்ட குதூகலத்தோடு கூச்சலிட்டுக் கத்தினான்.

விடாமல் இவன் குரல் கொடுக்க, பரம காருண்ய மூர்த்தியாம் ஸ்ரீ பெரியவா, ராஜம்மாள் என்ற பக்தையை அழைத்து “நீ போய் அந்த ஆளை என்னென்று விசாரித்து ஆகாரம் ஏதாவது சாப்பிடக்கொடு. நான் நாளைக்கு அவனைப் பார்க்கிறேன்” என்று அனுப்பினார்.

ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று “நீ யாரப்பா உனக்கு சாப்பாடு தரேன். உன்னை சாமி காலையிலேப் பார்த்துப் பேசுவாங்க” என்றாள்.

“ஆமாம் தாயி! நான் ரெண்டு பெண்டாட்டிக்காரன். ரெண்டு பேர் கூடவும் சண்டை. மூணாவது ஒரு பெண்ணைக் கட்டிக்கிட்டேன். அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைச்சதைப் பார்த்துட்டேன். மனசு உடைஞ்சுபோய் செத்துப்போகலாம்னு இருந்தேன். அப்போ இதே சாமியார்தான் கனவிலே வந்துக் காப்பாத்தி என்னை வந்து பார்னு சொன்னாங்க” என்று கண்ணீருடன் விவரித்தான். கேட்ட பக்தைக்கு வியப்பு! ஸ்ரீ பெரியவாளின் அருள் எங்கெல்லாமோ வியாபித்திருக்கிறதே என்று நினத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில் அந்த நரிக்குறவனுக்கு ஸ்ரீ பெரியவா வெளியே வந்துக் காட்சி அருளினார்.

“சாமி! உன்னைப் பார்த்தா என் தாய் மாதிரி இருக்கு. உன்கூடவே இருந்துடறேன். போற இடத்தில் எல்லாம் குப்பையைக் கூட்டறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறினான்.

“நீ கவலைப்படாம ஊருக்குபோ! இனிமே எல்லாரும் நல்லபடியா நடப்பாங்க. என்னக் கஷ்டம் வந்தாலும் என்னை நினைச்சுக்கோ. எல்லாம் சரியாப்போகும்” என்று ஆசிர்வதித்துப் பழங்களைத் தந்து, அங்கிருந்தோரிடம் பணம் வசூல் செய்து அவனுக்குக் கொடுக்கச் சொல்லி வலிய ஆட்கொண்டப் பாமர பக்தனை அனுப்பிவைத்தார் கருணாமூர்த்தி.

இப்படி ‘நான் இருக்கிறேன்’ என்று அருளும் மாபெரும் தெய்வத்தைப் பற்றிக் கொண்டு சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் பெற்று பாக்கியம் அடைவோமாக.

—  கருணை தொடர்ந்து பெருகும்.
                                                                    ஒரு துளி தெய்வாமிருதம்

சமய விதிகளில் சில லௌகீகத்தில் அசௌகரியம் உண்டாக்குகின்றன. இதைக் காரணம் காட்டி சீர்திருத்தக்காரர்கள் சாஸ்திரங்களை மாற்றுகிறார்கள். நம் சாஸ்திரங்கள் சமூக வாழ்வை லௌகீகமாக மட்டும் கருத்தில் கொண்டவையல்ல. மனிதன் சம்ஸாரத்திலிருந்து மீள்வதற்கு வழி சொல்வதே சாஸ்திரத்தின் லட்சியம்.

ஆத்ம க்ஷேமத்தையே லட்சியமாக வைத்து லௌகீக வாழ்வுக்கு விதிகள் செய்து தருகிறபோது இவ்விதிகளை மாற்ற முடியாது. இகலோகத்தில் பலவித அசௌகரியங்களை அனுபவித்தாவது பரலோகம் போவதற்கு சாஸ்திரங்கள் உபாயம் சொல்கிறது. ஆகையால் அவைகளை உலக ரீதியில் நமது சௌகரியப்படி மாற்றுவது நியாயமல்ல.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

___________________________________________________________________________

      (VAyinAl  unnaipparavidum  adiyEn  paduthuyar  kalaivAy  PAsupathA  ParanjudarE)

                      THE  GREATNESS  OF  SRI  SRI  SRI   MAHA PERIAVA. (04—07—2009).

SAksAt  Eswaran,  who  is  ParBrahma  swaroopam,  has  incarnated  as  Sri  Sri  Sri  MahAperiavAl  with  all  the  greatness  of  SukaBrahma  Rishi, to  protect  this  world.

There  are  many  incidents, where  Sri  MahAperiavA  has  revealed  that  He  knew  what  His   devotees  had  in  their  mind.  The  experience  of  a  woman  devotee,  Smt.  Radha  Ramamurthy  stands  as  evidence  to   this.

This  devotee  used  to  have   Sri  PeriavA  Dharsan  very  often.  She  derived  happiness  by  taking  a  variety  of  offerings  to  Sri  Periava   whenever  she  went   for  His  Dharsan.

Once  during  one  of  her  visits,  she  thought  of  making  a  garland  of  ‘Arukam  Pul’ (a    variety  of  lengthy  grass,  which  is  considered  very  special  for  Lord  Ganesha)  and  taking  it  as  an  offering.  Accordingly,  She  made  a  big,  beautiful    garland   of  the  ‘Arukam  Pul’  with  a  border   of ‘Arali’  flower (Nerium  Oleander).

When  she  went  for  PeriavA  Dharsan  the  next  day,  Sri  PeriavA  was  blessing  the  devotees.  The  lady  kept  the  packet  of  the  garland  along  with  another  packet  of  sugar  candy  in  front  of  Him  and  stood  at  a  distance.

But,  Sri  PeriavA,  for  some  reason,  pushed   the  two  packets    away  from  Him.  He  did  not  even  see  what  were  inside  those  two  packets.  But  the  devotee  was  sure that  there  was  nothing  that  was  not  visible  to  the  third  eye  of  Sri  MahaperiavA,  and  waited  there  without  moving.

The  time  was  10  A.M.  Another  lady  came  there  to  have  Sri  PeriavA  Dharsan.  There  was  a  silver  shield  in  her  hands.  Yes,  a  shield   in  the  form  of  PillaiyAr!  The  silver  shield  was  made  for  the  PillaiyAr   idol  in  the  temple  of  her  native  place  as  per  instructions  from  Sri  PeriavA.  She  had   brought  it  there  to   get  Sri  PeriavA’s  Anugraham.

Sri  PeriavA  took  it  and  kept  it  in  His  lap.  He  then  asked  the  attendant  to  bring  the  two  packets  which  were  kept  aside,  to  Him.

None  other  than  the  devotee  Smt.Radha  Ramamurty  knew  what  were  inside   the  packets.  When  Sri  PeriavA  asked  the  packet  to  be  opened,  only  then  everyone  saw  the  garland  made  of  ‘Arukam  Pul’,  looking  as  if  it  was  made  exactly  to  suit  the  silver  shield  of  PillaiyAr !

The  surprising  thing  was  Sri  PeriavA  neither  saw  nor  asked  anyone,  what  was  inside  the  packet.  But   how  did   He  know  that  the  garland  was  made  for  PillaiyAr  shield   and   took  it  out  at  the  right  time?

When  Sri  PeriavA  put  the  garland  around  the  PillaiyAr,  it  looked  perfectly  made  for  that  shield !  When  Sri  PeriavA  placed  the  shield  on  His  chest  and  looked  all  around,  all  those  who  had  gathered  there  were  filled  with  joy.  But,  for  two  of  them  that  sight  was  special.

How  did  it occur  to  the  devotee  Radha  from  Pudukkottai  that  she  should  make  a  garland  of  ‘Arukam  Pul’  for  offering  to  Sri  PeriavA?    How,  at  the  same  time,  another  devotee  was  to  bring  the  silver  PillaiyAr  shield  to  Sri  PeriavA  for  His  Anugraham ?  And  Sri  PeriavA  also  enacted  a  drama  as  if  He  did  not  know  what  was  inside  the  packet  and  thus  showered  His  blessings  on  the  two  devotees  for  their  devotion  which  emanated  from  their  hearts.

By  this  Sri  PeriavA  has  revealed  that  His  abundant  compassion  was  the  reason  behind  all  those  acts  happening  in  this  world.

Here  is  another  incident  where  the   great  Almighty  had  blessed  a  poor  devotee  whom  He  had  never  seen  or  heard  about.

There  lived  a  nomad in  a  village  near  Vizhuppuram.  There  was  an  unresolved  problem  in  his  family.  He  was  highly  depressed  and  frustrated.  He  decided  to  end  his  life.  He  came  to  the  village  railway  station  and  lay  in  a  corner.  His  decision  was  to  jump  before  the  next  train  that  was  due  there.  He  just  dozed  off  and  in  his  sleep  he  had  a  strange  dream.  He  saw  someone  looking  like  a  sage.  The  sage  was  telling  him,  “Do  not  end  your  life;  come  and  see  me”.  He  woke  up  and  found  himself  to  be  very  energetic  unlike  before.  He  gave up   his  suicide  attempt  and  left  the  place.

But  he  did  not  know  who  that  ‘SAmiyAr’  was  who  came  in  his  dream.  Being  one  among  the  nomad  community,  as  per  their  life  style,   there  was  no  need  for  him  to  know  about  any  ‘SAmiyAr’,  let  alone  going  and  seeing  any  of  them;  so  he  was  not  even  able  to  make  a  guess  about  this  ‘SAmiyAr’  who  appeared  in  his  dream.

But  the  craving  to  see  that  ‘SAmiyAr’  who  came  in  his  dream  and  saved  his  life  took  control  of  his  mind  totally.  He  sold  a  golden  ring  which  he  had  been  wearing  for  quite  a  long  time  and  got  some  money.  He  went  about  from  place  to  place,  all  over  in  search  of  that  ‘SAmiyAr’,  but  none  he  saw  matched  the  appearance  of  the  one  who  appeared  in  his  dream.

He  continued  his  search,  but  in  vain.

Sri Sri  Sri  MahaperiavA  was  camping  in  a  village  by  name  EkAmbarakkuppam  near  VEloor(Vellore).  The  time  had  come  for  the  poor  nomad  to  get  His  Dharsan.

One  evening,  the  nomad  who  was  wandering  that  side,  saw  Sri  PeriavA,  the  SAksAt  ParamEswaran.

“Oh !  Sami !  The  same  Sami  only !  You  only  asked  me  to  come,  is  it  not?  Then  come  out!”—he  shouted  with  the  extreme  joy  of  having  sighted  God  Himself!

When  he  continued  with  his  shouting,  Sri  PeriavA,  the  epitome  of  compassion  called  a  devotee  by  name  Rajammal  and  asked  her  to  give  him  some  food  and  tell  him  that  He  would  see  him  the  next  day.

Rajammal  went  and  told  him, “I  will  give  you  some  food.   Sami  will  see  you  tomorrow  and  talk  to  you.”

“AmAm  ThAyi ! (yes,  mother).  I  had  two  wives.  I  quarreled  with  both  of  them  and  married  a  third  one.   One  day,  I  saw  her  also  adding  poison  to  my  food.  I  got  totally  dejected  and  decided  to  end  my  life.  At  that  time  this  ‘SAmiyAr’  only  came  in  my  dream  and  saved  me;  He  only  asked  me  to  come  and  see  Him”—He  narrated  the  whole  affair  with  tears  rolling  down  his  cheeks.  The  devotee  who   heard  all  this  was  amazed   where  all  the  kindness  of  Sri  PeriavA  had  spread!

Next  day  morning,  Sri  PeriavA  came  out  and  gave  him  Dharsan.

“Sami !  I  am  seeing  my  mother  in  you !  I  will  stay  with  you  only.  Wherever  you  go,  I  will  sweep  and  clean  the  place.”—said  he  with  tears.

“Return  to  your  place  without  any  worry  whatsoever !  They  will  all  become  normal  and  be  good  to  you.  Whenever  you  have  any  difficulty,  think  of  me;  everything  will  be  fine.”—–saying  these  kind  words,  Sri  PeriavA  gave  him  fruits  and  blessed  him.  He   also  asked  the  persons  near  him  to  collect  some  money  from  everyone  and  give  him.

Let  us  all  surrender  to  this  epitome  of  compassion  who  always  says, “I  am  here”  and  be  prosperous.

COMPASSION  WILL  CONTINUE………

                                                                   A  DROP  OF  DIVINE  NECTAR.

Some  rules  of  the  religion  create  some  inconveniences  in  this  worldly  life.  The  reformists  change  the  ‘SAstrAs’,  pointing  to  these (inconveniences).  Our  SAstrAs  never  consider  our  social  life  purely  as  a  material  one.  The  objective  of  SAstrAs  is  to  guide  us  in  getting  out  of  this  materialistic  life.

When  rules  are  made  for  the  material  life  with  the  sole  objective  of  achieving  ‘Atma  KshEmam’,  such  rules  cannot  be  changed.  SAstrAs  tell  us  the  ways,  to  reach  the  other  world,  even  if  we  have  to  go  through  inconveniences  in  this  material  world.  Hence  it  is  not  good  justice(fair)  to  change   them    according  to  our  materialistic  conveniences.

(PAduvAr  pasi  theerppAi  ParvuvAr  pini  kalaivAy) – DEvAram  by  Sundaramurthy  Swamigal.





Categories: Devotee Experiences

Tags: ,

3 replies

  1. guruve sharanam, yendrum thangal paadaravindum thunai.

  2. மஹாபெரிவாளின் மஹிமையை எல்லா பக்தர்களின் அனுபவங்களைப் எழுத்தோவியமாய்கொணர்வதற்க்கு இந்த 73 ஆண்டுகள் போதாது. அவர் மேலும் பக்தர்களின் மனதில் பக்தி மார்கத்தை சூக்க்ஷம்மாக வழி நடத்துகிறார் அவர் வழி நடப்போம்

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha prabho.Janakiraman Nagapattinam

Leave a Reply to Janakiraman. NagapattinamCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading